இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Wednesday, August 26, 2009

தமிழ்மணம் ஐந்தாண்டுகள் - காசியின் கேள்விகளும் என் பதில்களும்

தமிழ்மணம் தளத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி பதிவர் காசி அவர்களின் கேள்விகளுக்கு நான் அனுப்பிய பதில்களை இங்கு தந்துள்ளேன்

முக்கிய விஷயங்கள்
  • இது பதிவர் காசி அவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் என்பதால், அவருக்கு தெரியும் என்று எனக்கு தெரிந்த விஷயங்கள் குறித்து நான் விரிவாக எழுதியிருக்கமாட்டேன் உ
  • உதாரணம் TUNE. TUNE என்றால் Tamil Unicode New Encoding (TUNE) மோசார்ட்டும், ரஹ்மானுன் போடுவது அல்ல
  • இது போல் பல விஷயங்கள் (தெளிவில்லாமல்) இருக்கலாம்.
  • சந்தேகம் இருந்தாலோ, புரியவில்லை என்றாலோ மறுமொழியில் கேளுங்கள். விளக்குகிறேன்
கேள்விகள் நீலநிறத்திலும், பதில்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன

// 1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா?//
கண்டிப்பாக இல்லை
இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றே நினைக்கிறேன்

//கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?//

  • முதலில் ஒருங்குறி குறித்து ஒரு முடிவிற்கு வர வேண்டும்
  • TUNE வேண்டுமா, இல்லையா என்று திட்ட வட்டமாக முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் கீழ்க்கண்டவைகளை செய்ய முடியும்
  • அதன் பிறகு தமிழகத்திற்கும் இருக்கும் உலாவியங்களில் கண்டிப்பாக ஒருங்குறியில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும் என்று சட்டம் இயற்ற அரசை கேட்டுக்கொள்ள வேண்டும்
  • அனைத்து அரசு அலுவலகங்களில் இருக்கும் கணினிகளிலும் ஒருங்குறியில் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும்
  • 2010 அரசு சார் திட்டங்கள் குறித்த தளங்கள் ஒருங்குறியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசை சட்டம் இயற்ற கேட்டுக்கொள்ள வேண்டும்
  • விக்கிபிடியா போன்ற தன்னார்வலர் திட்டங்களை அரசு பள்ளிகளில் / தனியார் பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும். முடிந்தால் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்
  • கல்லூரி மாணவர்கள் project செய்யும் போது அதில் 30 அல்லது 50 சதம் தமிழில் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர அரசை கேட்கலாம்
// 2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).//

ஒவ்வொன்றாக பார்ப்போம்

  • மின்னஞ்சல் - ஓரளவிற்கு முன்னேறியுள்ளோம்
  • குறுஞ்செய்தி - இல்லவே இல்லை
  • மின்னரட்டை - டிவிட்டரில் நடப்பதை அரட்டை என்று எடுத்தால் அங்கு தமிழ் நன்றாகவே பாவிக்கப்படுகிறது
  • அதே போல் வலைத்தளங்களின் மறுமொழிகளில் (கும்மி / மொக்கை) அரட்டை என்று எடுத்தால் - அரட்டையில் தமிழ் வந்து விட்டது என்றே சொல்லலாம்
  • மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); - வரவில்லை. இதற்கு முதலில் TUNE பிரச்சனையை தீர்க்க வேண்டும்
  • அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) - சில அரசாணைகள் தமிழில் வருகின்றன. ஆனால் ஒருங்குறியில் இல்லை
  • அரசின் அங்ககளில் தமிழில் சேவை பெறுதல் குறித்து - தமிழ் ஆர்வலர்கள் அரசை நிர்பந்திக்க வேண்டும்
  • இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்). -- இதழ்களில் ஓரளவு முன்னேறி இருக்கிறோம் என்றே நினைக்கிறேன்
  • அரசின் தமிழ் தளங்கள் குறித்த சில விபரங்கள் (இதில் எத்தனை குறித்து உங்களுக்கு முன்னரே தெரியும் !!)
  • நில பதிவேடுகள் குறித்த தமிழ் நிலம் மென்பொருள் தமிழில் உள்ளது 200க்கு மேற்பட்ட தாலுக்காகளில் 3 கோடி நில உட்பிரிவு தொடர்பான தகவல்களும், 2 கோடி நில உரிமையாளர்கள் குறித்த தகவல்களும் தமிழில் உள்ளன
  • அரசின் பதிவுத்துறையின் STAR திட்டம் தமிழில் உள்ளது
  • 450 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தமிழ் தான்
  • வில்லங்க சான்றிதழல்கள் தமிழில் வழங்கப்படுகின்றன
  • 1.8 கோடி குடும்ப அட்ட விபரங்கள் தமிழில்
  • 4 கோடி வாக்காளர் விபரங்கள் தமிழில்
  • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தமிழகத்தில் நடந்த 3800+ கிராமங்களிலும் தமிழில் நடைமுறைப்படுத்தப்பட்டது
  • நகர சிவில் நீதிமன்றங்களில் தமிழிலேயே கணினி பயன்படுத்தப்படுகிறது
  • http://www.tn.gov.in/tamiltngov/ தளம் தமிழில்
  • http://www.tamilvu.org தளத்தில் தமிழ்
  • அந்த தளத்தில் தமிழின் பல இலக்கியங்கள் உள்ளன http://www.tamilvu.org/library/libindex.htm தளத்தில் பார்க்கலாம் (பின் குறிப்பு : மதுரைத்திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு தமிழ் இலக்கியங்களை http://www.infitt.org/pmadurai/ தளத்திலும் பார்க்கலாம்)
// 3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?//

ஆங்கில விக்கியில் நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதை படியுங்கள் http://www.ularal.com/wak/ அதன் பிறகு இந்த சுட்டி படியுங்கள்
http://kuzhali.blogspot.com/2009/06/tami-wikipedia.html தமிழில் அந்த அளவு நிலைமை மோசமில்லை

தமிழ் விக்சனரியில் நாம் பிற இந்திய மாநிலத்தவர்கள் அனைவரும் பொறாமைப்படும் இடத்தில் முன்னேறி இருக்கிறோம். அதற்கு காரணமான சுந்தர், ரவி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் !!

மற்றப்படி பார்த்தால்

2005க்கு பிறகு தமிழ் இணையத்தில் வேகமாக பரவியதற்கு - அதுவும் ஒருங்குறி பரவியதற்கு இரண்டு காரணங்களை நான் கூறுவேன்

  • விக்கிபிடியா
  • தமிழ்வலைத்தளங்கள் மற்றும் அவற்றை ஒருங்கிணைத்த தமிழ்மணம் - இதில் உங்களின் பங்கும் இருக்கிறது
அதே வலைத்தளங்கள் போலல்லாம் தனித்தளங்கள் (sites) வளரவேண்டிய அவசியம் இருக்கிறது

// 4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?//
  • முதலில் ஒருங்குறி குறித்து ஒரு முடிவிற்கு வர வேண்டும்
  • TUNE வேண்டுமா, இல்லையா என்று திட்ட வட்டமாக முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் கீழ்க்கண்டவைகளை செய்ய முடியும்
  • அதன் பிறகு தமிழகத்திற்கும் இருக்கும் உலாவியங்களில் கண்டிப்பாக ஒருங்குறியில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும் என்று சட்டம் கொண்டுவருவேன்
  • அனைத்து அரசு அலுவலகங்களில் இருக்கும் கணினிகளிலும் ஒருங்குறியில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டுவருவேன்
  • அரசு தகவல்கள் அனைத்தும் ஒருங்குறியில் மட்டுமே இருக்க வேண்டும்
  • 2010 அரசு சார் திட்டங்கள் குறித்த தளங்கள் ஒருங்குறியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசை சட்டம் இயற்றப்படும்
  • விக்கிபிடியா போன்ற தன்னார்வலர் திட்டங்களை அரசு பள்ளிகளில் / தனியார் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும். பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்
  • கல்லூரி மாணவர்கள் project செய்யும் போது அதில் 50 சதம் தமிழில் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
  • geocities இருக்கும் தமிழ் தளங்களை காக்க வேண்டும் (இது தற்சமயம் மிக மிக முக்கியம்)
// 5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன?//
  • மிக ஆரோக்கியமான சூழல் !! (ஒரு சில [தனிமடலில் இருந்த வார்த்தை தணிக்கை செய்யப்படுகிறது] தவிர்த்து :) :) )
  • பிற பாரத மொழிகளை விட தமிழ் இணையத்தில் பரவலாக இருப்பதற்கு காரணம் தமிழ் வலைப்பதிவுகளே என்பது என கருத்து
//புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?//
  • உங்களுக்கு இயல்பாக வரும் நடையில் எழுதுங்கள்
  • உங்களுக்கு இயல்பாக வரும் விஷயங்களை எழுதுங்கள்
  • தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் எழுதாதீர்கள்
  • தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டு எழுதுங்கள்
  • கும்மி / மொக்கை தவிருங்கள்
  • மாற்று கருத்து வந்தால் - உங்கள் நிலையை தெளிவாக எடுத்து கூறுங்கள்
  • content is king - தரம் இருந்தால் அதிகம் வாசகர்கள் வருவார்கள்
  • பத்திரிகைகளின் இணையதளங்களிலிருந்து வெட்டி ஒட்டாதீர்கள்
  • அடுத்தவர்கள் பதிவுகளை வெட்டி ஒட்டாதீர்கள் !!
// 6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?//
  • சேவையில் குறைபாடுகள் இல்லை. நடுநிலைமை நன்றாகவே உள்ளது
//வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?//
  • தமிழ்வெளி போல் கருவிப்பட்டை இல்லாமல் திரட்ட வேண்டும்
  • சிறிது வெளித்தன்மை இருக்க வேண்டும் - உதாரணம் http://blog.thamizmanam.com/archives/181 இதில் நான் கூறியது 
//இம்முடிவைச் செயல்படுத்துகையில் தவறுதலாக ஏதேனும் பதிவு நீக்கப்பட்டால், மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளவோ தொடர்ந்தும் விலக்கவோ உரிமையைத் தமிழ்மணம் தக்க வைத்துக் கொள்கிறது. //
நல்லது
அதற்கு இந்த பதிவு இந்த காரணத்திற்காக நீக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று ஒரு (பட்டியல்) லிஸ்ட் (இந்த பதிவிலேயே இன்னொரு இடுகையாக) போட்டால் எளிது
அந்த பட்டியலை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம். அதன் பிறகு பதிவை நீக்குவது அல்லது தொடர்வது என்று முடிவு எடுத்தபின்… நீக்க வேண்டிய பதிவுகளை நீக்குவது நடைமுறையில் சிக்கல் குறைவான வழி என்று தோன்றுகிறது
  • இது போல் எப்பொழுதும் எதையாவது செய்து விட்டு விளக்கம் அளிப்பதற்கு பதில் விளக்கம் அளித்து விட்டு செய்தால் நடைமுறை பிரச்சனைகளை / விமர்சணங்களை குறைக்கலாம் என்று நினைக்கிறேன்
  • கருவிப்பட்டையில் இருக்கும் தொழிற்நுட்ப கோளாறுகளை களைந்தால் நலம் - சில இடுகைகளை இணைக்க முடிவதில்லை
வேறு விஷயங்களை தோன்றுபோது இற்றைப்படுத்துகிறேன்

இந்த வார்த்தை (இற்றைப்படுத்து) தமிழில் புழங்குவது வலைத்தளங்களின் வெற்றி தானே !! :) :)

26 மறுமொழிகள்:

மஞ்சூர் ராசா said...

நல்ல பதில்கள்.

அத்திரி said...

இம்புட்டு மேட்டர் இருக்கா.....

T.V.Radhakrishnan said...

அடேங்கப்பா!!!!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஓட்டுக்கள் போட்டுவிட்டேன்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அதில் தமிழ்மண ஓட்டு மட்டுமே பதிவானது..,

twitter_karthi_kamahade said...

1) மாணவர்கள் / படிக்கும் பாடத்திட்டம்
2) தனியார் கம்பனிகள் பங்கு
3) தனிநபர் ஈடுபாடு
4) அரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆணை .

மேல உள்ள நான்கு வியங்களும் சேர்ந்துதான் தமிழை அடுத்த கட்டத்திற்கு வலை தளத்திலோ இல்லை ..நடைமுறை வாழ்விலோ கொண்டு செல்ல ஈயலும்.

பொதுவில்,நாம் நெறைய எழுத வேண்டும்.( தமிழில்)

K.S.Nagarajan said...

//உதாரணம் TUNE. TUNE என்றால் Tamil Unicode New Encoding (TUNE) மோசார்ட்டும், ரஹ்மானுன் போடுவது அல்ல//

ச.. ச.. மோசார்ட்டும், ரஹ்மானும் போடுவது TUNE அல்ல என்பதுதான் எல்லாருக்கும் தெரியுமே.. ராஜா போட்டாத்தான் அது TUNE :-)

சரி.. ஆரம்பிங்க!

முரளிகண்ணன் said...

நல்ல கேள்விகள்

தெளிவான பதில்கள்

கிருஷ்ணமூர்த்தி said...

நம்ம காப்டன் விசயகாந்து கணக்கா, நிறையப் புள்ளி விவரமெல்லாம் கொடுத்திருக்கீங்க!

பூரிச்சுப்போய் விசிலடிச்சு அதாங்க தமிழ்மணத்துல ஓட்டளிக்கறது, ஆதரவு தெரிவிக்கலாம்னா, நமக்கு விசிலடிக்க வராது!

உபயோகமான சிந்தனைக்கு, சில விஷயங்களைத் தொட்டிருக்கிறீர்கள். எனது வாழ்த்துக்கள்!

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

புருனோ Bruno said...

//மஞ்சூர் ராசா said...
நல்ல பதில்கள்.
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்

புருனோ Bruno said...

//அத்திரி said...
இம்புட்டு மேட்டர் இருக்கா.....
//

இதை விட நிறையவே இருக்கு

புருனோ Bruno said...

//T.V.Radhakrishnan said...
அடேங்கப்பா!!!!!

மறுமொழி எண் 3 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 8/26/2009 9:24 PM
//

????

பாராட்டா, நக்கலா என்று தெரியவில்லை சார் :) :)

புருனோ Bruno said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுக்கள் போட்டுவிட்டேன்.
//

நன்றி தல

புருனோ Bruno said...

//அதில் தமிழ்மண ஓட்டு மட்டுமே பதிவானது..,
//

பிற புக்மார்ங்கிங் தளங்களில் இணைக்கவில்லை தல

புருனோ Bruno said...

//1) மாணவர்கள் / படிக்கும் பாடத்திட்டம்
2) தனியார் கம்பனிகள் பங்கு
3) தனிநபர் ஈடுபாடு
4) அரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆணை .

மேல உள்ள நான்கு வியங்களும் சேர்ந்துதான் தமிழை அடுத்த கட்டத்திற்கு வலை தளத்திலோ இல்லை ..நடைமுறை வாழ்விலோ கொண்டு செல்ல ஈயலும்.

பொதுவில்,நாம் நெறைய எழுத வேண்டும்.( தமிழில்//

உண்மைதான் சகா

புருனோ Bruno said...

//ச.. ச.. மோசார்ட்டும், ரஹ்மானும் போடுவது TUNE அல்ல என்பதுதான் எல்லாருக்கும் தெரியுமே.. ராஜா போட்டாத்தான் அது TUNE :-)

சரி.. ஆரம்பிங்க!//

சரி பாஸ் . . . நீங்க சொன்னா சரிதான்

புருனோ Bruno said...

//நல்ல கேள்விகள்

தெளிவான பதில்கள்
//

நன்றி பாஸ் !!

புருனோ Bruno said...

//கிருஷ்ணமூர்த்தி said...
நம்ம காப்டன் விசயகாந்து கணக்கா, நிறையப் புள்ளி விவரமெல்லாம் கொடுத்திருக்கீங்க!

பூரிச்சுப்போய் விசிலடிச்சு அதாங்க தமிழ்மணத்துல ஓட்டளிக்கறது, ஆதரவு தெரிவிக்கலாம்னா, நமக்கு விசிலடிக்க வராது!

உபயோகமான சிந்தனைக்கு, சில விஷயங்களைத் தொட்டிருக்கிறீர்கள். எனது வாழ்த்துக்கள்!

மறுமொழி எண் 11 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 8/27/2009 12:07 PM
//

நன்றி சார்

புருனோ Bruno said...

கோலம் !!

வாழ்த்துக்கள் சார் !!

கண்டிப்பாக பங்கேற்கிறேன்

நர்சிம் said...

கலக்கல் தலைவரே..பிரம்மாண்டம்.

புருனோ Bruno said...

//கலக்கல் தலைவரே..பிரம்மாண்டம்.//

நன்றி தல

Anonymous said...

Hi Dr Bruno.
Now the loyalty has gone to Tamilish to a large extent and they have outgrown Tamilmanam smartly in an year's time. Why this happened? Check this

புருனோ Bruno said...

//Hi Dr Bruno.
Now the loyalty has gone to Tamilish to a large extent and they have outgrown Tamilmanam smartly in an year's time. Why this happened? Check this//

தெரியல சார்

(நாயகன் பாணியில் வாசித்துக்கொள்ளுங்கள்)

Anonymous said...

//Hi Dr Bruno.
Now the loyalty has gone to Tamilish to a large extent and they have outgrown Tamilmanam smartly in an year's time. Why this happened? Check this//

தெரியல சார்

(நாயகன் பாணியில் வாசித்துக்கொள்ளுங்கள்)//

Ha ha! Ungalukku theriyum valaiyulaka arasiyal. Aanaalum solla maateengareenga. Enna kaaranam. Sonnaa ungalaiyum kattam kattividuvaarkal! Ithuthaan Why Tamilmanam is beaten by Tamilish endra kelvikku pathil! Tamilish dont play much politics and hence Bloggers have gone there and the hits from Tamilish is much much more than what tamilmanam has given to bloggers.

So i would like to say,
"Mudiyala Doctor Mudiyala !" (Vadivelu paaniyil vaasithukkollungal!)

புருனோ Bruno said...

//Ha ha! Ungalukku theriyum valaiyulaka arasiyal. Aanaalum solla maateengareenga. Enna kaaranam. Sonnaa ungalaiyum kattam kattividuvaarkal! Ithuthaan Why Tamilmanam is beaten by Tamilish endra kelvikku pathil! Tamilish dont play much politics and hence Bloggers have gone there and the hits from Tamilish is much much more than what tamilmanam has given to bloggers.

So i would like to say,
"Mudiyala Doctor Mudiyala !" (Vadivelu paaniyil vaasithukkollungal!)//

மிக்க நன்றி சார்

தமிழிஷ் Tamilish நடத்துவது யார்

அவரது பெயர் iல் ஆரம்பித்து shல் முடியும் என்கிறார்களே

உண்மையா

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...