-oOo-
- தடுப்பூசி போடப்படவில்லை என்றால் கடந்த 20 வருடங்களில் 1100000 குழந்தைகள் மரணமடைந்திருப்பார்கள் (இந்த தொகை 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த IMR, BR மற்றும் தற்பொழுதைய IMR, BR மூலம் கணக்கிடப்பட்டுள்ளது)
- தடுப்பூசியினால் கடந்த 20 வருடங்களில் மரணமடைந்த குழந்தைகள் 4 (இதற்கு முன்னர் 80களில் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாததால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன)
ஊசி போட்டவுடன் ஒருவர் மரணமடைகிறார் என்றால் என்னென்ன காரணங்கள் இருக்கலாம்
- மருந்தில் தவறு
- ஊசி போடப்பட்ட முறையில் தவறு
- நபரின் தவறு - அது ஊசியுடன் சம்பந்தம் இல்லாத மரணம்
- அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி
மருந்தில் தவறு
இது குறித்து அனைவருக்கும் தெரியும்.
- ஒன்று மருந்து கெட்டு போயிருக்க வேண்டும்
- அல்லது தவறான மருந்தை அந்த புட்டியில் அடைத்திருக்க வேண்டும்
-oOo-
ஊசி போடப்பட்ட முறையில் தவறு
- விஷங்கள் அனைத்தும் சரியான அளவில் மருந்தே
- மருந்துக்ள் அனைத்தும் தவறான அளவில் விஷமே
- அளவிற்கு மிஞ்சினால் அமுதும் விஷமாகும்
- எனவே ஒரு மருந்தை தவறான அளவில் ஊசிமூலம் செலுத்தினால் விஷமாகும். (இது செவிலியரின் கடமை)
- அதே போல் அளவு சரியாக இருந்தாலும் செலுத்தும் முறை சரியாக இருக்க வேண்டும் (இது குறித்து ஒரு சிறு விளக்கம் இந்த பதிவின் பின்னூட்டத்தில் உள்ளது) (இது செவிலியரின் கடமை)
- அதை விட முக்கியம் சரியான மருந்தை செலுத்த வேண்டும். (இது செவிலியரின் கடமை)
- அதே போல் மருந்து காலவாதியாக வில்லை என்று பார்த்து விட்டு தான் செலுத்த வேண்டும். (இது செவிலியரின் கடமை)
- மருந்து சரியான முறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் (இது மருந்தாளுனரின் கடமை)
ஊசி போடப்படும் நபரின் இயல்பான மரணம் :
இந்த காரணம் உங்களில் பலருக்கு வித்தியாசமாக தெரியலாம். சிலருக்கு கோபம் ஏற்படுத்தலாம். ஆனாலும் இது கூட முக்கிய காரணம்.
- உதாரணமாக தமிழகத்தில் சுமார் 6,00,00,000 நபர்கள் இருக்கிறார்கள்.
- இதில் வருடந்தோரும் சுமார் 480000 மரணமடைகிறார்கள். (இதில் சுமார் 63250 மரணங்கள் ஒரு வயதிற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள்)
- தினமும் 1315 நபர்கள் மரணமடைகிறார்கள். (இதில் சுமார் 173 மரணங்கள் ஒரு வயதிற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள்)
- சென்னையில் மட்டும் தினமும் சுமார் 220 பேர் மரணமடைகிறார்கள்.
அதே போல் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கப்பட்ட நாளிலும் இவ்வாறு இயல்பாக மரணமடையும் நான்கு 80 வயது நபர்களை காட்டி அது மாத்திரையினால் தான் மரணம் என்று பொய் பிரச்சாரம் நடந்தது.
சமீபத்தில் (அதாவது 2008 டிசம்பரில்) போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதால் குழந்தைகள் மரணம் என்று வதந்தி பரவியது நினைவிருக்கலாம். அது முற்றிலும் வதந்தியே
அப்படியென்றால் இந்த நோயால் இத்தனை பேர் மரணம் என்று வரும் செய்திகள் அனைத்தும் பொய்தானா
இல்லை. அப்படி ஒரேயடியாக ஒதுக்க முடியாது !!
ஆனால் இன்ப்ளுயென்சா H1N1னிலால் மரணம் ஏற்படலாம். நாளது தேதி வரையில் தமிழகத்தில் 8.5 லட்சம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7518 பேருக்கு ஆய்வகங்கள் மூலம் பரிசோதனை செய்ததில் 205 பேருக்கும் இன்ப்ளுயென்சா H1N1(பன்றிக்காய்ச்சல்) இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் 148 பேர் குணமடைந்துள்ளனர். 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூவர் இறந்திருக்கிறார்கள்
சென்றவருடம் திருவள்ளூரில் தடுப்பூசி போட்டதால் மூன்று குழந்தைகள் இறந்ததாக வந்த செய்தி உண்மையே !!
ஏன் இப்படி இயல்பான மரணங்களுக்கு காரணம் கற்பிக்கப்படுகின்றன
இதற்கு காரணங்கள் பல
- ஊடகங்கள் : எதையாவது எழுதி பரபரப்பை உண்டாக்கும் சில பத்திரிகைகள். அவைகளை தூக்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சில ஆங்கில செய்மதி தொலைகாட்சி நிறுவனங்கள்.
- அரசு வழங்கும் உதவித்தொகை : இவ்வாறு பொய் கூறினால் அரசின் உதவித்தொகை கிடைக்கும் என்பதால் தேவையில்லாமல் மரணத்திற்கு சம்பந்தமில்லாத அரசு நிறுவனத்தை இழுக்கிறார்கள். முதலில் சுகாதார துறை மட்டுமே இது போன்ற புரட்டுகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் பிற துறைகளும் பாதிக்கப்படுவதை கண்டு நாங்கள் வியந்து போயிருக்கிறோம் (சமீபத்தில் தீ பிடித்ததால் தொலைக்காட்சி வெடித்ததா, தொலைக்காட்சி வெடித்ததால் தீ பிடித்ததா என்று ஐ.ஐ.டி பேராசிரியர்கள் முதல் அனைவரும் ஆராய்ச்சி செய்ததை அறிந்திருப்பீர்கள்)
அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி
- இது குறித்து பலர் அறிந்திருக்க மாட்டீர்கள் (ignorance)
- அது போல் நான் சொல்லும் தகவல்களை நீங்கள் படித்த பின் நம்பாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது (non acceptance)
- ஏனென்றால் அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி என்பது மூலம் நாம் அனைவரும் மரணத்திற்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதும் உணவு மூலம் / காற்றில் உள்ள மரகந்தம் மூலம் கூட நீங்கள் மரணமடைய வாய்ப்பு உள்ளது என்றால் அதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது
- பிற ஊசிகளை விட தடுப்பூசிகள் போடும் போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு அதிகம்
ஆனால் தற்பொழுது “நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளின் படி சோதிக்கப்பட்ட ஒரு மருந்தை” “அனைத்து விதிகளின் படியும் ஊசிமூலம் செலுத்தினால் கூட” “ஆரோக்கியமாக தோற்றமளிக்கும் ஒருவர்” மரணமடைய வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் அனாபிலாக்ஸிஸ் அல்லது ஹைபர்சென்சிடிவிட்டி
ஊசிபோட்ட ஒருவர் மரணமடைந்தாலே அது தவறான மருந்தின் மூலம் தான், அல்லது தவறாக ஊசி போட்டதில்தான் என்று தவறான நினைப்பு பரவி வருகிறது.
இதற்கு சில அரைவேற்காடு கட்டுரைகளுடன் / பேட்டிகளுடன் வரும் பத்திரிகைகள் முக்கிய காரணம்.
ஒவ்வாமை / அனாபிலாக்சிஸ் தான் காரனம் என்றால் தடுப்பூசியை நிறுத்த வேண்டியது தானே.
தடுப்பூசியினால் மட்டுமல்ல சாதாரண ஊசி, ஏன் சில வகை காய்கறிகள் கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். ஒவ்வாமையை முழுவதும் தடுக்க முடியாது.
மனித உடம்பு என்பது கருவியில் உருவாக்கப்படுவதில்லை.
- உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
- ஆனால் ஒருவரின் உடல் போல் மற்றொருவரின் உடல் இருக்காது.
- ஒரே தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் 20 தொலைக்காட்சி பெட்டிகளில் ஒரு பெட்டி 230 வால்ட் வரை வேலை செய்கிறது 276 வால்டில் வெடிக்கிறது என்றால் மீதி 19 தொலைக்காட்சி பெட்டிகளும் 276வது வால்டில்தான் வெடிக்கும்
- ஆனால் மனித உடல் அப்படி அல்ல.
- ஒவ்வொரு நபரின் எடை வேறு.
- ஒவ்வொரு நபரின் உயரம் வேறு.
- ஒவ்வொரு நபரின் இரத்த அழுத்தம் வேறு.
- ஒவ்வொரு நபரின் தோல் நிறம் வேறு.
- அதே போல் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களும் வேறு
- உங்களுக்கு பெனிசிலின் ஒவ்வாமை என்றால் அடுத்தவருக்கு செப்ட்ரான் உவ்வாமை. எனக்கு மெட்ரோடினசால் ஒவ்வாமையாக இருக்கலாம்.
- அதே போல் 99,999 நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு மருந்தை செலுத்தியவுடன் அது ஒத்துக்கொள்ளாமல் 1,00,000வது நபர் மரணமடையலாம்.
-oOo-
சரி, தடுப்பூசி போடாவிட்டால் குழந்தைகளுக்கு என்னத்தான் நோய் வரப்போகிறது
-oOo-
மேலே நீங்கள் பார்த்த படங்கள் அனைத்தும் தடுப்பூசி பரவலாக போடப்படுவதற்கு முன் இருந்த நிலைமை
-oOo-
தற்பொழுது
- பெரிய அம்மை (ஸ்மால் பாக்ஸ்) உலகில் அறவே கிடையாது
- தட்டம்மை (மீசீல்ஸ்) சில குழந்தைகளை பாதித்தாலும் அதனால் யாரும் குருடாவதில்லை
- போலியோவினால் ஒரு குழந்தை நடக்க முடியாமல் போனது 15 வருடங்களுக்கு முன்னர் தான்
- தடுப்பூசி போடப்படவில்லை என்றால் கடந்த 20 வருடங்களில் 1100000 குழந்தைகள் மரணமடைந்திருப்பார்கள் (இந்த தொகை 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த IMR, BR மற்றும் தற்பொழுதைய IMR, BR மூலம் கணக்கிடப்பட்டுள்ளது). அது தவிர பிற குழந்தைகள் தான் மேலே இருக்கும் படங்களில் இருப்பது போல் பாதிக்கப்படுபவர்கள்
- தடுப்பூசியினால் கடந்த 20 வருடங்களில் மரணமடைந்த குழந்தைகள் 4 (இதற்கு முன்னர் 80களில் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாததால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன)
-oOo-
முதலில் எழுதியது : 27 ஆகஸ்டு 2009மீள்பதிவு : 12 சூலை 2010
கேள்விகளை கேட்கலாம் !!








59 மறுமொழிகள்:
ஊசி போட்டா வலிக்குதே. அதை தடுக்க மருத்துவ உலகம் என்ன முயற்சி எடுத்து இருக்கு ?? :௦)-
நல்ல கட்டுரை சார்.
உண்மையிலயே ஒரு கேள்வி. குழந்தைங்களுக்கு ஊசியின் வலி அதிகமா இருக்காதா ? பொறந்த குழந்தை ஊசி போட்டா ரொம்ப அழாதா ?
//ஊசி போட்டா வலிக்குதே. அதை தடுக்க மருத்துவ உலகம் என்ன முயற்சி எடுத்து இருக்கு ?? :௦)-//
தற்சமயம் பெரும்பாலான மருந்துகளை மாத்திரையாகவே சாப்பிடலாம்
இன்சுலின் போன்ற சில மருந்து பொருட்கள் மட்டுமே ஊசிவழியாக செலுத்த வேண்டி உள்ளது
ஆனால் பொது மக்களிடம் ஊசி தான் சிறந்த வைத்தியம் என்றும் மாத்திரை என்பது தரம் தாழ்ந்தது என்றும் (சிரை வழி திரவம் - அதாவது குளுகோசு தான் மிக சிறந்த வைத்தியம்) என்றும் தவறான நம்பிக்கை உள்ளது
அதனால் தான் அரசு மருத்துவமனைகளில் தாராளமாக ஊசி போடுகிறார்கள்
எந்த மருத்துவராவது ஊசி போடாமல் மாத்திரை எழுதி கொடுத்தால் ஊர் மக்கள் வெகுண்டெழுந்து விடுவார்கள்
//உண்மையிலயே ஒரு கேள்வி. குழந்தைங்களுக்கு ஊசியின் வலி அதிகமா இருக்காதா ? பொறந்த குழந்தை ஊசி போட்டா ரொம்ப அழாதா ?//
மேலுள்ள புகைப்படங்களை பாருங்கள்
ஒரு பத்து நிமிடம் உடல் வலி பெரிதா அல்லது காலம் முழுவதும் அம்மை தழும்புகளுடன் வாழ வேண்டிய மன வலி பெரிதா ??
உண்மை சார். டாக்டர் நீங்க எப்படியோ ஊசி போட்டு இவளுக்கு / இவனுக்கு நாளைக்குள்ள வியாதிய குணப்படுதிடுங்க. இது தான் நம்ப மக்கள் டாக்டர் கிட்ட போனவுடன சொல்றது ! நீங்க சொல்ற பாயிண்ட் மிக சரியே.
ஆனா என்னோட ரெண்டாவது கேள்வி சீரியஸ் கேள்வி. குட்டி குழந்தைங்க ஊசி போட்டா ஒரு சின்ன சிணுங்கல் மட்டும் தான். அதுனால தான் ரொம்ப வலிக்காதா அவங்களுக்குன்னு கேட்டேன். (நமக்கு வலிக்கும் அளவு கூட !)
டாக்டரிடமிருந்து வழக்கம் போல ஒரு அருமையான பதிவு
//உண்மையிலயே ஒரு கேள்வி. குழந்தைங்களுக்கு ஊசியின் வலி அதிகமா இருக்காதா ? பொறந்த குழந்தை ஊசி போட்டா ரொம்ப அழாதா//
மணி உங்க வேதனை புரியுது.ஹயக்கிற்கு கொஞ்சம் வலித்தாலும்..குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் ஆயிற்றே!..வேண்டுமானால் டாக்டரிடம் நீங்கள் போக வேண்டாம்.பிரியாவை அனுப்புங்கள்.
டாக்டர் உங்கள் கட்டுரைகள் அனைத்தும் பயனுள்ளவை. மிக்க நன்றிகள்.
டாக்டர் குழந்தைகளுக்கு ஊசி போடும் போது வலிக்காமல் இருக்க ஸ்டிக்கர் போன்ற ஒன்றை குறிப்பிட்ட இடத்தில் அரை மணி நேரத்துக்கு முன்னர் ஒட்டிவிடுகிறார்கள். டாக்டர் அது போல பெரியவர்களுக்கும் உண்டா?
Suvi
France
//ஆனா என்னோட ரெண்டாவது கேள்வி சீரியஸ் கேள்வி. குட்டி குழந்தைங்க ஊசி போட்டா ஒரு சின்ன சிணுங்கல் மட்டும் தான். அதுனால தான் ரொம்ப வலிக்காதா அவங்களுக்குன்னு கேட்டேன். (நமக்கு வலிக்கும் அளவு கூட !)//
வலி என்பது ஒவ்வொரு நபருக்கு நபர் மாறுபடும் ஒன்று (மனவலி, உடல்வலி இரண்டுமே)
சிலருக்கு அதை தாங்கும் சக்தி அதிகம் (increases pain threshold)
சில குழந்தைகளுக்கு வலி தாங்கும் சக்தி அதிகமிருக்கலாம்
சில குழந்தைகளுக்கு வலி தாங்கும் சக்தி குறைவாக இருக்கலாம்
ஏனென்றால் மனித உடம்பு என்பது கருவியில் உருவாக்கப்படுவதில்லை.
சொட்டு மருந்து ஊற்றுவதற்கே அழும் குழந்தைகள் இருக்கிறார்கள். காலை இழுத்து கட்டினால் கூட சிறிது சிணுங்கி விட்டு விட்டு விடும் குழந்தைகளும் இருக்கிறார்கள்
ஆக இதை பொது படுத்துதல் சிரமமே
//T.V.Radhakrishnan said...
டாக்டரிடமிருந்து வழக்கம் போல ஒரு அருமையான பதிவு//
நன்றி சார் :) :)
//டாக்டர் குழந்தைகளுக்கு ஊசி போடும் போது வலிக்காமல் இருக்க ஸ்டிக்கர் போன்ற ஒன்றை குறிப்பிட்ட இடத்தில் அரை மணி நேரத்துக்கு முன்னர் ஒட்டிவிடுகிறார்கள். டாக்டர் அது போல பெரியவர்களுக்கும் உண்டா?//
பெரியவர்களுக்கும் உண்டு. அதே ஸ்டிக்கர் தான் !! தூய தமிழில் ஓட்டும்பட்டை அல்லது இசிடிக்கரு !!
hypersentivity yeppadi kandupidikkarathu ?
MBBS Doctors have ten per cent concession in base railway fares in all classes any number of times. The doctor has to give an undertaking that they will render medical assistance to needy passengers.
//hypersentivity yeppadi kandupidikkarathu ?//
ஒவ்வாமை பரிசோதனைகள் இருக்கின்றன. அதை செய்யலாம்
//MBBS Doctors have ten per cent concession in base railway fares in all classes any number of times. The doctor has to give an undertaking that they will render medical assistance to needy passengers.//
வெறும் உறுதிமொழி மட்டுமல்ல
கூடவே தேவைப்படும் பல சாதனங்களையும் சேர்த்து கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. கிட்டத்தட்ட ஒரு பெட்டி நிறைய தூக்கி செல்ல வேண்டும்
2003ஆம் ஆண்டிலிருந்தே இந்த விதிமுறை இருக்கிறது
ஏன் தொடர்வண்டியில் அவர்கள் முதலுதவி பெட்டி வைப்பதில்லை என்ற கேள்விக்கு இதுவரையில் விடையில்லை
2003ல் நான் இந்த 10 சதம் பயன்படுத்திவந்தேன். தற்சமயம் ஒரு தனிப்பெட்டியை கூடவே எடுத்து செல்லும் சிரமம் இருப்பதால் பயன்படுத்துவதில்லை
Respected sir,
Please update yourself with new information.
you had to take a box full of prescribed medicine like tablets, etc. earlier. Now that rule has been modified.
It is enough that the doctor render medical assistance using the first aid box/ or equivalent available with the coach attendant, etc.
Please check with railway authorities.
Many doctors don't know that the earlier rule has been modified to their advantage long ago.
it seems you are one of them.
but as i know you, you will be happy to correct yourself and inform your fraternity so that all doctors benefit instead of fearing the consequences.
ப்ருனோ, தடுப்பு ஊசி குழந்தைகளுக்கு மட்டும் தானா ? அதிலும் வேறு வேறு மருத்துவர் பல வகையான ஊசி வகைகளை சொல்கிறார்கள் . எல்லா ஊசியும் போடவேண்டுமா ? ப்ளீஸ், எல்லா நோ யும் போங்கனும்ன எல்லா ஊசியும் போடவேண்டு. என்று சொல்லதெர்கள் . அரசு மருத்துவமனை எந்த ஊசி வகைகளை கட்டாயம் ; எந்த ஊசி வகைகளை காசு இருந்தால் போட்டுகொள்ளலாம் என்று சொல்ரர்கள். அதே போல் .. சத்து ஊசி என்று சில வகைகளை மருத்துவர் சொல்கிறார்கள் அது என்ன ? நன்றி - கார்த்தி
நன்றி
நிறைய புரிதல்களைத் தந்த பதிவு. இருப்பினும் சில மருத்துவர்கள் வழக்கமான தடுப்பூசிகளை போட்ட பின்னரும், கூடுதல் தடுப்பூசிகளை போடச் சொல்லுவது ஏன்.
அதன் விலையும் கூடுதல். உதாரணமாக, என் மகளுக்கு நான் சமீபத்தில் கூடுதல் தட்டம்மை தடுப்பூசி டாக்டர் சொன்னதனால் போட்டேன். விலை ரூ.1400/-
காரணம் கேட்டதற்கு டாக்டர், வெயில் காலத்தில் இது போன்ற நோய்கள் நிறைய குழந்தைகளைத் தாக்கும்,அதைத் தடுக்கவே இது என்று சொன்னார். மேலும் நிறைய குழந்தைகள்
பாதிக்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்படுவதாகவும் சொன்னார்.
வழக்கமாக போடும் தடுப்பூசிகளிலேயே இது போன்ற நோய்களுக்கான தடுப்பு இருக்காதா, ஏன் இது போன்ற சிறப்பு கூடுதல் தடுப்பூசிகள். இது போன்ற ஊசிகள்
அரசாங்க மருத்துவமனைகளில் போடப்படுவதில்லையே ஏன்? விலை கூடுதலாக இருப்பதால் ஏழைக்குழந்தைகளுக்கு இது போன்ற தடுப்பூசிகள் கிடைக்கப் பெறாதே.
அது போன்ற குழந்தைகளுக்கு கிடைக்க அரசு வழி வகை செய்யாதா?
//you had to take a box full of prescribed medicine like tablets, etc. earlier. Now that rule has been modified.//
தகவலுக்கு நன்றி
தற்சமயம் உள்ள விதிகள் குறித்து சுட்டி தாருங்கள்
//ப்ருனோ, தடுப்பு ஊசி குழந்தைகளுக்கு மட்டும் தானா ? அதிலும் வேறு வேறு மருத்துவர் பல வகையான ஊசி வகைகளை சொல்கிறார்கள் . எல்லா ஊசியும் போடவேண்டுமா ? ப்ளீஸ், எல்லா நோ யும் போங்கனும்ன எல்லா ஊசியும் போடவேண்டு. என்று சொல்லதெர்கள் . அரசு மருத்துவமனை எந்த ஊசி வகைகளை கட்டாயம் ; எந்த ஊசி வகைகளை காசு இருந்தால் போட்டுகொள்ளலாம் என்று சொல்ரர்கள். அதே போல் .. சத்து ஊசி என்று சில வகைகளை மருத்துவர் சொல்கிறார்கள் அது என்ன ? நன்றி - கார்த்தி
//
ஹையா !! அடுத்த பதிவு எழுத மேட்டர் ரெடி :) :) :)
//வழக்கமாக போடும் தடுப்பூசிகளிலேயே இது போன்ற நோய்களுக்கான தடுப்பு இருக்காதா, ஏன் இது போன்ற சிறப்பு கூடுதல் தடுப்பூசிகள். இது போன்ற ஊசிகள்
அரசாங்க மருத்துவமனைகளில் போடப்படுவதில்லையே ஏன்? விலை கூடுதலாக இருப்பதால் ஏழைக்குழந்தைகளுக்கு இது போன்ற தடுப்பூசிகள் கிடைக்கப் பெறாதே.
அது போன்ற குழந்தைகளுக்கு கிடைக்க அரசு வழி வகை செய்யாதா?
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்
தனி இடுகையில் பதில் தருகிறேன்
சமீப காலங்களில் நோய்கள் மீடியாக்கள் மூலமாகத்தான் சீக்கிரம் பரவுகின்றன..இதனை தடுக்க இதுபோன்ற பதிவுகள் அவசியம்.. கலக்குங்க தல..
//
தகவலுக்கு நன்றி
தற்சமயம் உள்ள விதிகள் குறித்து சுட்டி தாருங்கள்//
http://www.indianrail.gov.in/form_doctor_conc.html
http://www.indianrail.gov.in/conc_forms.html
http://www.indianrailways.gov.in/deptts/commercial/comm_30-2k3.htm
//சமீப காலங்களில் நோய்கள் மீடியாக்கள் மூலமாகத்தான் சீக்கிரம் பரவுகின்றன..இதனை தடுக்க இதுபோன்ற பதிவுகள் அவசியம்.. கலக்குங்க தல..
//
நன்றி பாஸ்
நீங்களும் எழுத ஆரம்பிங்க !!
தொடர்வண்டி பயணம் குறித்த தகவல்களுக்கு நன்றி
எனக்கு விதிகள் மாற்றப்பட்டது தெரியாது
வேலைப் பளுவின் மத்தியிலும் சிரத்தையுடன் எழுதப்பட்ட விஷயங்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
தாணு
congratulations
தல... தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
:)
தோழன்
பாலா
வெற்றிக்கு வாழ்த்துகள்
தமிழ்மண விருது தொடர் வெற்றிக்கு வாழ்த்துகள் டாக்டர்..
/வேலைப் பளுவின் மத்தியிலும் சிரத்தையுடன் எழுதப்பட்ட விஷயங்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
தாணு
மறுமொழி எண் 28 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 12/29/2009 10:11 PM
//
நன்றிகள் பல
//Dr.Rudhran said...
congratulations
//
நன்றி சார்
//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
தல... தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
:)
தோழன்
பாலா
//
நன்றி தல
//திகழ் said...
வெற்றிக்கு வாழ்த்துகள்
மறுமொழி எண் 31 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 1/17/2010 9:20 AM
//
நன்றி பாஸ்
//தமிழ்மண விருது தொடர் வெற்றிக்கு வாழ்த்துகள் டாக்டர்..
மறுமொழி எண் 32 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 1/17/2010 12:30 PM
P//
நன்றி பாஸ்
தமிழ்மணம் விருது(களு)க்கு வாழ்த்துக்கள் டாக்டர்:)!
// ராமலக்ஷ்மி said...
தமிழ்மணம் விருது(களு)க்கு வாழ்த்துக்கள் டாக்டர்:)!
1/20/2010 6:06 PM//
நன்றி மேடம்
நல்ல கட்டுரை விரிவான விளக்கங்கள்
ஸ்மால் ரெக்கொஸ்ட் சார் ப்ளீஸ் அந்த குழந்தைகள் படம் ஒரு மாறியான ஃபீலா இருக்கு எடுத்துடுவீங்களா?
//நல்ல கட்டுரை விரிவான விளக்கங்கள்//
நன்றி சார்
//ஸ்மால் ரெக்கொஸ்ட் சார் ப்ளீஸ் அந்த குழந்தைகள் படம் ஒரு மாறியான ஃபீலா இருக்கு எடுத்துடுவீங்களா? //
தடுப்பூசி போடப்படாத காலங்களில் குழந்தைகள் எவ்விதமான பாதிப்புக்கானார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த படங்கள் தேவை.
அதனால் இந்த படம் அவசியம் என்றே நினைக்கிறேன்
மருத்துவருக்கு வணக்கமும் வாழ்த்துகளும்.... பயனுள்ள தகவற்செறிவு!!
செவிலியர் கடமை, மருந்தாளுநர் கடமை.... அடுத்து மருத்துவர் கடமை வருதுன்னு நினைச்சி ஏமாந்து போனேனுங்க மருத்துவரே!!
//மருத்துவருக்கு வணக்கமும் வாழ்த்துகளும்.... பயனுள்ள தகவற்செறிவு!!//
நன்றி சார்
//செவிலியர் கடமை, மருந்தாளுநர் கடமை.... அடுத்து மருத்துவர் கடமை வருதுன்னு நினைச்சி ஏமாந்து போனேனுங்க மருத்துவரே!! //
உங்களை போல் பலரும் ஏமாந்து போகிறார்கள் சார்
மருந்துச்சீட்டில் சரியான மருந்தை சரியான அளவில் எழுதுவது தான் மருத்துவர் கடமை சாரே
சீட்டில் மருத்துவர் சரியாக எழுதியதை சரியாக போட வேண்டியது செவிலியரின் கடமை தான் சாரே
இதில் மருத்துவரின் கடமை இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது ஏமாற்றமே சாரே
vicarious liability என்று ஒன்று உள்ளது. அது தனி
நல்ல தகவல்கள் டாக்டர்.
தடுப்பூசி என்பதே வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் என்று படித்திருக்கிறேன். அது உண்மையா?
மேலும் தற்பொழுதைய நாகரீகத்தில் கலக்காத (அந்தமான்/அமேசான்/காலஹாரி பகுதிகளில் வாழும்) சில பூர்வகுடி மக்களுக்கு போலியோ போன்ற நோய்கள் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறதா?
1000 வருடங்களுக்கு முன் மக்களை அதிகம் பலிவாங்கியது (குறிப்பாக இந்தியாவில்) எந்த மாதிரியான வியாதிகள்?
இனி இந்த தடுப்பூசிகள் எண்ணிக்கை கூடுமா? குறையுமா?
அவசியமான கட்டுரை
பல நடைமுறை சந்தேகங்களை தெளிவு படுத்தியிருக்கிறீர்கள்
//தடுப்பூசி என்பதே வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் என்று படித்திருக்கிறேன். அது உண்மையா?
//
சில தடுப்பூசிகள் வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள்
சில தடுப்பூசிகள் இறந்து போன கிருமிகள்
சில தடுப்பூசிகள் வெறும் புரதங்கள்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
//
மேலும் தற்பொழுதைய நாகரீகத்தில் கலக்காத (அந்தமான்/அமேசான்/காலஹாரி பகுதிகளில் வாழும்) சில பூர்வகுடி மக்களுக்கு போலியோ போன்ற நோய்கள் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறதா? //
சோதித்து பார்த்தால் தான் தெரியும்
//மேலும் தற்பொழுதைய நாகரீகத்தில் கலக்காத (அந்தமான்/அமேசான்/காலஹாரி பகுதிகளில் வாழும்) சில பூர்வகுடி மக்களுக்கு போலியோ போன்ற நோய்கள் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறதா? //
சில தீவுகளில் பாம்புகள் கிடையாது. எனவே அங்கு பாம்பு கடி மருந்து தேவையில்லை
சில தீவுகளில் ரேபிஸ் கிடையாது. எனவே அங்கு நாய் கடித்தால் தடுப்பூசி போட வேண்டாம்
தகவலுக்காக :) :)
//1000 வருடங்களுக்கு முன் மக்களை அதிகம் பலிவாங்கியது (குறிப்பாக இந்தியாவில்) எந்த மாதிரியான வியாதிகள்?//
தெரியவில்லை
இங்கு சரியான புள்ளிவிபரங்கள் இல்லையே
//இனி இந்த தடுப்பூசிகள் எண்ணிக்கை கூடுமா? குறையுமா? //
கூடும் என்றே நினைக்கிறேன்
மனிதனை சாகடிக்க கூடிய நோய்களின் எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால் தடுப்பூசிகளின் எண்ணிக்கை கூட வேண்டுமல்லவா
//அவசியமான கட்டுரை //
நமநயு
அருமையான தகவலுக்கு நன்றி டாக்டர்
ரொம்ப எளிமையா தெளிவா எழுதியிருக்கீங்க நன்றி டாக்டர்
வணக்கம் டாக்டரே ... அருமையான பதிவு ...
ஏனோ மணிரத்தினம் சினிமா விமர்சனமும் ...நீங்கள் முன்பே எழுதிய இந்த நல்ல பதிவுக்கு, வார்த்தைகள் மட்டுமே மாற்றி போட்டு, உண்மை சிறிதும் இல்லாமல் படித்த வேறு ஒரு பதிவு மனதில் வந்து போகிறது
//அரசு வழங்கும் உதவித்தொகை : இவ்வாறு பொய் கூறினால் அரசின் உதவித்தொகை கிடைக்கும் என்பதால் //
என்னது?பொய் சொன்னால் உதவித்தொகையா???புதிய தகவல் இது!
டாக்டர்!இரண்டு விதமான அம்மையையும் பொதுவாக Small fox என்றே அழைக்கிறார்கள் என நினைக்கிறேன்.
மேலும் முகம்,உடல் முழுவதையும் சேதப்படுத்தும் பெரிய அம்மை இப்பொழுது இல்லாமல் போனாலும் அம்மைக்கிருமிகள் முழுவதுமாக அழிந்து விடவில்லை.ஒரு குழந்தைக்கு ஒட்டிய அம்மை விளையாடிய குழந்தைகள் நான்கைந்துக்கு அடுத்தடுத்து வந்து விட்டது.முன்பு மாதிரி தனிமைப்படுத்தல் போன்றவை இல்லாமல் மருந்து தடவிய சில தினங்களில் அம்மை காணாமல் போவது மருத்துவத்தின் மகத்தான முன்னேற்றம்.
ஆழ் கட்டுரைக்கு நன்றி.
நல்ல கட்டுரைங்க.
Dear Bruno,
Useful article.
I have one clarification
three weeks before I take H1N1 vaccine since I'm travel too much.
But now I read few articles and some websites says it is dangerous and may cause severe harm to the people.
Please clarify.
Thank you
for follow up
Post a Comment