உலகின் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா சிம்பொனி அமைத்தது உண்மையே என்று என்னை சொல்ல வைக்க முடியாது என்று முடிவு செய்து என் பெயரில் அவர்களே சொல்கிறார்கள் !!
என்னத்த சொல்ல !!
அன்பின் பதிவுலகமே...
இப்பொழுதுதான் என்னைப்பற்றி முரளி கண்ணன் எழுதினார்.அப்பொழுதே நினைத்தேன்..ஏதாவது ஏடாகூடம் நடக்கும் என்று..
ஏனெனில் என்னோடான கருத்துமோதல்கள் பற்றி பதிவுலகம் நன்கறியும். ஆனால் மெத்த படித்தவர்களிடமிருந்து இதை எதிர்ப்பார்க்கவில்லை.
புருனோவுக்கு ஒன்றும் தெரியாது என்று ஒருவர் சொன்னால்..
நான் ஏதாவது எதிர்வினையோ கருத்தோ சொல்லலாம்.அதுதான் முறை.
ஆனால்..
நான் புருனோ..எனக்கு ஒன்றும் தெரியாது என்று என் பெயரில் சிலர் கருத்து சொல்வது கீழ்த்தரமானது. அதர் ஆப்ஷனில் நடந்துகொண்டிருந்த தொல்லை இப்பொழுது அதராப்ஷன்பிளாக்காக பரிமாணம் பெற்றுள்ளது.
தங்கள் திறன் மேல் நம்பிக்கையில்லாதவர்கள் தான் போலிகளின் பின்னால் ஒளிவார்கள் என்பது நாடறியும்
இதைப் பற்றி கருத்துக் கூற ஒன்றுமில்லை..
ஏனெனில் இவ்வளவு தூரம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து நன்றாக வடிவமைத்தவர் அல்லது அமைத்தவர்கள் (குழு?) உண்மையிலேயே படித்தவர்களாகத்தான் இருக்கவேண்டும்.
படித்த கல்வியே அவர்களை நெறிப்படுத்தவில்லை என்பதின் வெளிப்பாடே இந்த செயல்.
இதில் என் கருத்தைக் கேட்டா திருந்தியோ அல்லது வருந்தியோ விடப் போகிறார்கள்.. (இவர்களை தொடர்ந்து வாசிப்பவர்களை நினைத்தேன். ஒரே நேரத்தில் சிரிப்பும் வருகிறது. கவலையாகவும் இருக்கிறது)
இன்று எனது மறுமொழி ஒன்று என் பெயரில் வேறு ஒரு போலி புரோபைல் உருவாக்கப்பட்டு சில இடுகைகளில் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது
என் வருத்தமும் இந்த பதிவின் நோக்கமும் ஒன்றே..... அது போலி. அதில் இடம்பெறும் கருத்துகளுக்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்பதை தெரிவிக்கவே..
கருத்துகளை மறுத்தாலும் நாகரீகம் மறக்காத
அதே
புருனோ.
73 மறுமொழிகள்:
கருத்து மோதலில் தோல்வி அடைந்தவர்கள் ஒப்புக் கொள்ளலாம். இல்லையெனில் விலகிக் கொள்ளலாம்.
இது கோழைத்தனம்.
தோற்றால் சத்தமின்றி ஒதுங்கிக் கொள்பவன் மனிதன்
தோற்றதை ஒப்புக் கொள்பவன் பெரிய மனிதன்
இம்மாதிரி வேலைகளில் ஈடுபடுபவன்?
ஆரட்டோரியாவை சிம்பொனி என்று மோசடி செய்து ஊரை ஏமாற்றியவ்ர்களை துதிப்பவர்களிடம் இருந்து போலி புரோபைல் உருவாக்குவது போன்ற தரம்தாழ்ந்த செயல்கள் வருவது இயல்பு தானே !!
சரக்கிருக்கிறவர்கள் ஆஸ்கார் வங்குவார்கள் அல்லது பதிவு எழுதுவார்கள்
சரக்கில்லாதவர்களுக்கு போலி புரோபைலும் போலி சிம்பொனியும் துனை !!
வாழ்க வளமுடன் !!
இளையராஜாவுடன் இசை முடிந்து விட்டது என்று நினைப்பவர்கள் 90களின் செத்த மூளை.
மதனின் வசனம்தான் ஞாபகம் வருகிறது.
தாஜ்மஹால் இடிஞ்சு போச்சுன்னா காதலே உலகத்தில இல்லையின்னு ஆயிடுமா?
இளையராஜாவை மதிக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை மட்டம் தட்டுவது தவறான வழியையே காட்டும்.
//இம்மாதிரி வேலைகளில் ஈடுபடுபவன்?
//
விடுங்க சார்
தன்னை விட புகழ் பெறும் ஒரு இளைஞனை பற்றி “கிரிக்கெட் ஆட்டத்தில் ஆடும் கவர்ச்சி நடிகை” என்று ஒரு பெரிய மனிதர் நாகரிமற்று விமர்சிக்க வில்லையே
அவரது அடிவருடிகளிடம் என்ன நாகரிகத்தை எதிர்பார்க்க முடியும், இதைத்தவிர
அப்படி சொன்னவரை அதன் பிறகு கிரிக்கெட் ஆடவும் அணியில் சேர்க்க ஆளில்லை, கவர்ச்சி ஆட்டம் ஆட கூட முடியவில்லை
அவரால் முடிந்தது
ஸ்டெடியத்தில் ஜூஸ் விற்றது தான்
அதில் கண்றாவி என்னவென்றால் வெறும் தண்ணீரை ஜூஸ் என்று விற்று ஊரை ஏமாற்றினார் அவர் :) :) :)
இந்தப் பதிவையும், உங்க பின்னூட்டங்களையும் படிச்சா, போலி புரொபைல் நியாயமானதுதான்னு நினைக்க வேண்டியிருக்கு :-)
--ஒரு இசைஞானியின் ரசிகன்!!
மறுமொழி பெற
//இந்தப் பதிவையும், உங்க பின்னூட்டங்களையும் படிச்சா, போலி புரொபைல் நியாயமானதுதான்னு நினைக்க வேண்டியிருக்கு :-)
--ஒரு இசைஞானியின் ரசிகன்!!//
ஓஹோ
அந்த போலி நீங்கள் தானா
சரி சரி
நான் மட்டுமில்லே. அதிஷாவும் கூட்டு. :-)
நானும் இளையராஜாவின் இசைக்கு தீவிர ரசிகன்தான்.. அதுக்காக இந்த போலி ப்ரொஃபைல், போலி கமெண்ட் எல்லாம் போட்டு என்ன சாதிக்கப்போறாங்களோ?
எதுக்கும் உங்க பதிவு எல்லாத்தையும் ஒரு பேக் அப் எடுத்து வெச்சுகுங்க.. :))))
//
யுவகிருஷ்ணா said...
நான் மட்டுமில்லே. அதிஷாவும் கூட்டு. :-)
//
மங்குமம்.. இந்த வாரம்..
சைபர் க்ரைம் குறித்து தொடர் எழுதும் ஒரு பிரபல பதிவர் தானே சைபர் க்ரைமில் இறங்கி உள்ளாரா? திடுக்கிடும் தகவல்.. :)))
//
எதுக்கும் உங்க பதிவு எல்லாத்தையும் ஒரு பேக் அப் எடுத்து வெச்சுகுங்க.. :))))
//
:) :) :)
உங்களுக்கு ஒன்று தெரியுமா
இளையராஜாவை பற்றி நான் என் பதிவில் எழுதுவது இது தான் முதல் முறை
எழுதியது அனைத்தும் (பிறர் பதிவுகளில்) மறுமொழிகள் தான் :) :)
என்ன மனிதர் நீங்கள்... அல்லது மனிதப் பிறவியே இல்லையா...
ஆரட்டோரியோவை அவர் எந்த காலத்தில் சிம்பொனி என்று சொன்னார்?
வலைநோயாளிகளுள் முதன்மையான நபர் நீர் என்பதற்கு மிகச் சரியான உதாரணமாக இந்தப் பதிவைத் தந்திருக்கிறீர்கள்...
இசை இளையராஜாவோடு முடிந்து போகாது என்பதை அனைவரும் அறிவார்கள்...
ஆனால் நல்ல கலைஞனை, மூன்று பத்து ஆண்டுகளுக்குமேல் நல்ல இசையால் தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்தவரை நீங்கள் பாராட்டாவிட்டால் ஒன்றும் முழுகிப் போகாது... தூற்றாமலாவது இருந்து தொலையுங்கள்... பல ரசிக இதயங்களின் சாபங்களிலிருந்தாவது தப்பிக்கலாம்!
....சரீய்ய்ய்ய்ய... உண்மையிலலேயே உங்க பிரச்சினை என்ன?
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.
Let us see, how long he will write.
//ஆரட்டோரியோவை அவர் எந்த காலத்தில் சிம்பொனி என்று சொன்னார்?//
சொல்லவில்லையா
அப்படியென்றால் நான் வேறு யாரையோ சொன்னதாக தானே அர்த்தம்
உங்களுக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகிறது
//...சரீய்ய்ய்ய்ய... உண்மையிலலேயே உங்க பிரச்சினை என்ன? //
அது கூட தெரியாமல் தான் இவ்வளவு திட்டா.
என்ன கொடுமை சார் இது
நல்லவர் ; சாபம் ; போன்ற adjectives எப்போதுமே ஆரோகியமான விவாதத்திற்கு சரி பட்டு வராது .
இன்று, புருனோ விற்கு , நாளை உங்களுக்கும் ஒரு "fictious blogging " பிரச்னை வரலாம்.
அனானி களுக்கு பதில் சொலவே கஷ்டம். இதில் "fictious blogging " எப்படி எடுத்துக்கொள்வது ?
அதையே உங்கள் பின்னோட்டத்தில் கருத்துக்களாய் பதிவு செய்யுங்கள்.
மொக்கை போடுறது , ராஜா நல்லவர் வல்லவர் என்பதை உங்கள் பக்கங்கில்
எழு(எழவு)துங்கள்
///முரளிகண்ணன் said...
கருத்து மோதலில் தோல்வி அடைந்தவர்கள் ஒப்புக் கொள்ளலாம். இல்லையெனில் விலகிக் கொள்ளலாம்.
இது கோழைத்தனம்.
தோற்றால் சத்தமின்றி ஒதுங்கிக் கொள்பவன் மனிதன்
தோற்றதை ஒப்புக் கொள்பவன் பெரிய மனிதன்
இம்மாதிரி வேலைகளில் ஈடுபடுபவன்?///
repeateyy
முருகன் சத்தியமா நான் ஒரு மூணு நாளா ஊர்ல இல்லை.. அதனாலதான் கமெண்ட்டு போடலை.. விஷயம் என்னன்னும் தெரியலை..!
போலி பின்னூட்டமா? டாக்டர் பேர்லயா..?
ஸோ, டாக்டர் வலையுலகில் பெரிய மனுஷன் ஆயிட்டார்..!
வரிசையை வந்து தண்ணி ஊத்திட்டு மொய் வைச்சுட்டுப் போங்கப்பா..!
//நல்லவர் ; சாபம் ; போன்ற adjectives எப்போதுமே ஆரோகியமான விவாதத்திற்கு சரி பட்டு வராது . //
:) :)
T.V.Radhakrishnan சார்
நன்றி சார்
//போலி பின்னூட்டமா? டாக்டர் பேர்லயா..?
ஸோ, டாக்டர் வலையுலகில் பெரிய மனுஷன் ஆயிட்டார்..!
//
அது தானே அண்ணாச்சி
உங்க தம்பி உங்களைப்போல் ஆக வேண்டாமா
//சைபர் க்ரைம் குறித்து தொடர் எழுதும் ஒரு பிரபல பதிவர் தானே சைபர் க்ரைமில் இறங்கி உள்ளாரா? திடுக்கிடும் தகவல்.. :)))
//
சூப்பரு !
என்னத்தச் சொல்ல? எண்ணத்தச் சொன்னா இப்பிடியா?
//என்னத்தச் சொல்ல? எண்ணத்தச் சொன்னா இப்பிடியா? //
வார்த்தை விளையாட்டு சூப்ப்ர் :) :)
புரூனோ சார், என்ன ஆச்சு?
இளையராஜா பற்றிய தங்களது எண்ணங்களை ஒரு பதிவாக போட்டீர்களேயானால் தங்களுடன் வாதிடுவதற்கு ஏதுவாக இருக்கும்!
//அமர பாரதி :
புரூனோ சார், என்ன ஆச்சு? //
தங்கள் தரப்பு வாதத்திற்கு வலுவில்லாததால் போலிபுரோபைல் உருவாக்கியுள்ளனர் சிலர் !!
//இளையராஜா பற்றிய தங்களது எண்ணங்களை ஒரு பதிவாக போட்டீர்களேயானால் தங்களுடன் வாதிடுவதற்கு ஏதுவாக இருக்கும்!//
1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
3. இந்தி பாடல் கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ராஜா. இந்தி பாட்டுக்களை கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களை கூட தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ரஹ்மான்
4. ராஜாவால் வெற்றி பெற முடியாத இந்தி திரையுலத்தை கூட ஆக்கிரமித்தவர் ரஹ்மான்
5. ராஜாவை எந்த சர்வதேச இசையமைப்பாளரும் இசையமைக்க அழைக்கவில்லை. ரஹ்மானை அழைத்தார்கள்
6. அதே போல் இந்தியாவிலேயா ராஜா மட்டும் தான் சிறந்தவர் என்றும் ரஹ்மான், நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான் என்று கூறுவது தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது
புருனோ Bruno said...
//இளையராஜா பற்றிய தங்களது எண்ணங்களை ஒரு பதிவாக போட்டீர்களேயானால் தங்களுடன் வாதிடுவதற்கு ஏதுவாக இருக்கும்!//
1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
3. இந்தி பாடல் கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ராஜா. இந்தி பாட்டுக்களை கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களை கூட தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ரஹ்மான்
4. ராஜாவால் வெற்றி பெற முடியாத இந்தி திரையுலத்தை கூட ஆக்கிரமித்தவர் ரஹ்மான்
5. ராஜாவை எந்த சர்வதேச இசையமைப்பாளரும் இசையமைக்க அழைக்கவில்லை. ரஹ்மானை அழைத்தார்கள்
6. அதே போல் இந்தியாவிலேயா ராஜா மட்டும் தான் சிறந்தவர் என்றும் ரஹ்மான், நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான் என்று கூறுவது தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது
//
யாரோ எதையோ சொல்லிவிட்டு போகிறார்கள் , நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்பது ஏன் என்று புரியவில்லை. எனக்கு இளையராஜாவின் இசையும், ரகுமானின் இசையும் பிடிக்கும், ஆனால் அந்த மனிதர்கள் பற்றி எனக்கு எந்தக்கவலையும் இல்லை.
//நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்பது ஏன் என்று புரியவில்லை.//
:) :)
//எனக்கு இளையராஜாவின் இசையும், ரகுமானின் இசையும் பிடிக்கும், ஆனால் அந்த மனிதர்கள் பற்றி எனக்கு எந்தக்கவலையும் இல்லை. //
:) :)
[
1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
3. இந்தி பாடல் கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ராஜா. இந்தி பாட்டுக்களை கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களை கூட தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ரஹ்மான்
4. ராஜாவால் வெற்றி பெற முடியாத இந்தி திரையுலத்தை கூட ஆக்கிரமித்தவர் ரஹ்மான்
5. ராஜாவை எந்த சர்வதேச இசையமைப்பாளரும் இசையமைக்க அழைக்கவில்லை. ரஹ்மானை அழைத்தார்கள்
6. அதே போல் இந்தியாவிலேயா ராஜா மட்டும் தான் சிறந்தவர் என்றும் ரஹ்மான், நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான் என்று கூறுவது தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது
]
ரிப்பீட்டு... :)
இதத்தன் நானும் சொல்லிக்கிடு இருக்கேன். எனக்கு ராஜாவும் இசை புடிக்கும் அதே நேரத்தில் ரஹ்மான் இசையும் புடிக்கும். ராஜாவின் "ராஜ ராஜ சோழன்" எப்ப கேட்டாலும் எனக்கு சலித்ததில்லை. ஆனால், இங்கு உள்ளவர்கள் ராஜாதான் கிங் மத்தது எல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொன்னா... இதுதான் எனக்கும் புடிக்கலை புடிக்கலை புடிக்கலை. :D
//1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
3. இந்தி பாடல் கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ராஜா. இந்தி பாட்டுக்களை கேட்டுக்கொண்டிருந்த இந்திக்காரர்களை கூட தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ரஹ்மான்
4. ராஜாவால் வெற்றி பெற முடியாத இந்தி திரையுலத்தை கூட ஆக்கிரமித்தவர் ரஹ்மான்
5. ராஜாவை எந்த சர்வதேச இசையமைப்பாளரும் இசையமைக்க அழைக்கவில்லை. ரஹ்மானை அழைத்தார்கள்
6. அதே போல் இந்தியாவிலேயா ராஜா மட்டும் தான் சிறந்தவர் என்றும் ரஹ்மான், நௌஷாத், ஃபதேக் அலிகான், பர்மன், தியாகராஜ பாகவதர் எல்லோரும் அவருக்குக்கீழேதான் என்று கூறுவது தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது//
Can't agree more. :)
தங்களிடம் முதலில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் மருத்துவரே. உண்மையாக அது போலி என்று நான் நினைக்கவேயில்லை. அதனால் தான் அந்த பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்தேன். அப்போது ஒரு சந்தேகம் இருந்தது. சரி பார்க்காமல் விட்டது என் தப்புதான்.
அந்த பின்னூட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.
தாங்கள் என்னை தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
//இதத்தன் நானும் சொல்லிக்கிடு இருக்கேன். எனக்கு ராஜாவும் இசை புடிக்கும் அதே நேரத்தில் ரஹ்மான் இசையும் புடிக்கும். ராஜாவின் "ராஜ ராஜ சோழன்" எப்ப கேட்டாலும் எனக்கு சலித்ததில்லை.//
வழிமொழிகிறேன்
// ஆனால், இங்கு உள்ளவர்கள் ராஜாதான் கிங் மத்தது எல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொன்னா... இதுதான் எனக்கும் புடிக்கலை புடிக்கலை புடிக்கலை. :D
//
வழி மொழிகிறேன்
//Can't agree more. :)//
நன்றி பாஸ்
//தங்களிடம் முதலில் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் மருத்துவரே. உண்மையாக அது போலி என்று நான் நினைக்கவேயில்லை. அதனால் தான் அந்த பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்தேன். அப்போது ஒரு சந்தேகம் இருந்தது. சரி பார்க்காமல் விட்டது என் தப்புதான்.
அந்த பின்னூட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.
தாங்கள் என்னை தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
//
புரிந்துணர்வுடன் செயல்படுவதற்கு நன்றி சார் :)
:) இளைய ராஜாவை தெய்வமாக நினைக்கிறவங்களுக்கு உங்கள் பின்னூட்டங்கள் எரிச்சல் ஏற்படுத்தி இருக்கலாம்.
பெரியாரையும் அண்ணாவையும் விமர்சிக்காத விமர்சனமா ? இளைய ராஜா இசை தவிர்த்து என்னவிதமான சமூக சாதனை புரிந்தார் என்று தெரியவில்லை. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லும் அளவுக்கு அவரும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்ததில்லை. புறக்கணித்தால் திமுரு புடித்தவன் என்று வெளிப்படையாக பலரும் விமர்சிப்பார்கள் என்பதற்காக ரகுமானுக்கு நடத்திய பாராட்டில் கலந்து கொண்டார். மற்றபடி அவர் ரகுமானின் இசையை படுமோசமாகவே இதுவரை விமர்சித்து வந்திருக்கிறார். கோலங்கள் (குஷ்பு, ஜெயராம் நடித்த படம்) என்று ஒரு படம் அதில் ரகுமானின் பாம்பே பட இசையை மும்பையில் இரு இடத்தில் நடக்கும் காட்சியில் அந்த பாடல் கேட்பது போல் ரீரெக்கார்டிங்கில் பயன்படுத்தி இருப்பார், ஆகா ரகுமானின் இசையைக் கூட படத்தில் பயன்படுத்தி இரகுமானைப் மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறாரே என்று படம் பார்க்கும் போது நினைத்தேன். அப்பறம் அதன் அரசியலைப் பார்த்தால் அந்த காட்சி சிவப்பு விளக்கு பகுதியை சித்தரிக்கும் காட்சி, ரகுமான் பாட்டெல்லாம் எங்கே பாடுது பாருங்க.....என்று ஆடியன்ஸுக்கு உணர்த்தத்தான் பயன்படுத்தினார் என்று தெரிந்தது. கோலங்கள் படம் சிடியில் கிடைத்தால் வாங்கிப் பாருங்கள்
இளைய இராஜா இசை ஞானி. ஒப்புக் கொள்ளலாம் தயக்கமே இல்லை. ஆனால் அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதையும், அவரை விமர்சனம் செய்பவர்களை தூற்றுவதும் அறிவார்ந்த செயலே இல்லை.
வைரமுத்து என்கிற ஒரு கவிஞரை ஈகோவால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கி வைத்திருப்பவர் தான் இளையராஜா, அதற்காக வைரமுத்து வீழ்ந்துவிடவும் இல்லை. வைரமுத்துவுடன் இணைந்து இசைத்த இசை போன்று தொடர்சியான நினை கூறத்தக்கப் பாடல்களை இளையராஜா கொடுப்பதும் குறைந்துவிட்டது. இவையெல்லாம் ஒப்புக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று.
இளையராஜாவை பிடிக்காதவர்கள் ரகுமானைப் போற்றுகிறார்கள் என்பது ஏற்க இயலாத குற்றச் சாட்டு, இரகுமான் மீது எந்த ஒரு மீடியாவும் அவதூறுக்குக் கூட களங்கம் கற்பித்தது இல்லை, இத்தனைக்கும் அவரும் 20 ஆண்டுகளாக இசை உலகில் கொலொச்சி வருகிறார்.
சம்பந்தப்பட்டவர்களின் இசையைப் பற்றி பேசாமல் அவர்களைப் பற்றிப் பேசுவதுதான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். எனக்கு ரஹ்மான் இசை பிடிக்கும், இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும்.. அவ்வளவே.. அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் எப்படி என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.
சரவணபவன் அண்ணாச்சி எத்தனை மோசமானவரா இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, சரவணபவனில் நான் சாப்பிடுகிற இட்லி வெந்திருக்கிறதா என்பது பற்றிதான் நான் கவலைப்பட முடியும்.. :))))
//, ரகுமான் பாட்டெல்லாம் எங்கே பாடுது பாருங்க.....என்று ஆடியன்ஸுக்கு உணர்த்தத்தான் பயன்படுத்தினார் என்று தெரிந்தது. //
ஆகா !!
//சரவணபவன் அண்ணாச்சி எத்தனை மோசமானவரா இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, சரவணபவனில் நான் சாப்பிடுகிற இட்லி வெந்திருக்கிறதா என்பது பற்றிதான் நான் கவலைப்பட முடியும்.. :))))//
விலையை பற்றி கூட கவலை உண்டு தானே !!!
//சரவணபவன் அண்ணாச்சி எத்தனை மோசமானவரா இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, சரவணபவனில் நான் சாப்பிடுகிற இட்லி வெந்திருக்கிறதா என்பது பற்றிதான் நான் கவலைப்பட முடியும்.. :))))//
ஒரு வேலை சரவணபவன் அண்ணாச்சி இட்லி என்று ஏமாற்றி கூறி புண்ணாக்கு தந்தால் ஏற்றுக்கொள்வீர்களா
வாய்ப்புக்கு அலையும் இந்த நாய் இங்கே எதையும் குலைக்காது வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடுகின்றது.
இசைஞானி,இசைப்புயல் ரெண்டுபேரும் பாத்துக்கங்க...நான் இந்தப் பக்கம் வரவே இல்லை :)
//வாய்ப்புக்கு அலையும் இந்த நாய் இங்கே எதையும் குலைக்காது வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடுகின்றது.
இசைஞானி,இசைப்புயல் ரெண்டுபேரும் பாத்துக்கங்க...நான் இந்தப் பக்கம் வரவே இல்லை :)//
சரி டைமிங் சார் :) :) :) மிகவும் ரசித்தேன்
//விலையை பற்றி கூட கவலை உண்டு தானே !!!
//
சரவணபவன் விலையைப்பற்றித் தனி இடுகையே போட்டவர் அண்ணன் வெண்பூ :)
(டேய்..அப்துல்லா!வேணாம்..ஓடிடு..இது இரத்தபூமி)
டாக்டர் அண்ணே உங்களை தனிப்பட்ட முறையில் அறிந்ததால் உங்கள் பெயரில் போலி என்பது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கின்றது.
கருத்துவேறு,நட்புவேறு என்பது ஏன் சிலருக்குப் புரிவதில்லை??
//கருத்துவேறு,நட்புவேறு என்பது ஏன் சிலருக்குப் புரிவதில்லை??//
ஏன் என்ற காரணம் எனக்கும் தெரியவில்லை
தங்கள் பெயரில் போலி profileஆ ..ஒண்ணுமே புரியல உலகத்திலே..இசை உங்ககிட்டயும் இருக்கு..என்கிட்டயும் இருக்கு..இசைஞாநியோ இசைபுயலோ யார்கிட்ட இருந்து வந்தா என்ன.. நல்ல இசையை ரசிப்போம்.. கருத்து மாறுபாடின் காரணமாக போலி ப்ரோபிலே உருவான மாதிரி எனக்கு தெரியவில்லை..உங்களின் popularity காரணமாக இருக்குமோ? உஷார் நண்பரே..
//..இசை உங்ககிட்டயும் இருக்கு..என்கிட்டயும் இருக்கு..இசைஞாநியோ இசைபுயலோ யார்கிட்ட இருந்து வந்தா என்ன..//
நல்ல கருத்து தல !!
1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
டாக்டர் முத இரண்டு வரியிலேயே அவரை பற்றி சொல்லிட்டிங்களே... ஒரு வேளை எல்லா வரியிலும் அவர் புகழ் பாடனும்னு நினைக்கறாங்களோ????
மற்றபடி கோவியார் கருத்தை வழி மொழிகின்றேன்..
<<<
கோலங்கள் (குஷ்பு, ஜெயராம் நடித்த படம்) என்று ஒரு படம் அதில் ரகுமானின் பாம்பே பட இசையை மும்பையில் இரு இடத்தில் நடக்கும் காட்சியில் அந்த பாடல் கேட்பது போல் ரீரெக்கார்டிங்கில் பயன்படுத்தி இருப்பார், ஆகா ரகுமானின் இசையைக் கூட படத்தில் பயன்படுத்தி இரகுமானைப் மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறாரே என்று படம் பார்க்கும் போது நினைத்தேன். அப்பறம் அதன் அரசியலைப் பார்த்தால் அந்த காட்சி சிவப்பு விளக்கு பகுதியை சித்தரிக்கும் காட்சி, ரகுமான் பாட்டெல்லாம் எங்கே பாடுது பாருங்க.....என்று ஆடியன்ஸுக்கு உணர்த்தத்தான் பயன்படுத்தினார் என்று தெரிந்தது. கோலங்கள் படம் சிடியில் கிடைத்தால் வாங்கிப் பாருங்கள்
>>>
இப்படி இருந்தா அது அறியாமைனால் வந்து இருக்கும்.
<<<
இளையராஜாவை பிடிக்காதவர்கள் ரகுமானைப் போற்றுகிறார்கள் என்பது ஏற்க இயலாத குற்றச் சாட்டு, இரகுமான் மீது எந்த ஒரு மீடியாவும் அவதூறுக்குக் கூட களங்கம் கற்பித்தது இல்லை, இத்தனைக்கும் அவரும் 20 ஆண்டுகளாக இசை உலகில் கொலொச்சி வருகிறார்.
>>>
சூப்பர் கோவி சார் :)
50.
இதெல்லாம் கவனிக்காதீங்க சார். கொஞ்ச நாள் குரைச்சிட்டு ஓடிப் போயிடுவாங்க.
நீங்க ஃபார்முக்கு வாங்க சார்...
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
//வைரமுத்து என்கிற ஒரு கவிஞரை ஈகோவால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கி வைத்திருப்பவர் தான் இளையராஜா,//
ரஹ்மானும் வைரமுத்துவோடு முறுக்கிக் கொண்டு தெனாலி படத்துக்கு முழுவதுமாக புதியவர்களைக் கொண்டு பாடல் எழுத வைக்கவில்லையா?
எனவே திறமை உள்ள இடத்தில் இது போன்ற சம்பவங்கள் நிறைய நடப்பது சகஜம்.
டாக்டர் சார்! உங்கள் பெயரிலும் போலியா! கண்டிப்பாக நீங்கள் ஒரு பிரபல்யமான பதிவரே! வாழ்த்துக்கள்.
நானும் இளையராஜாவின் இசைக்கு ஒரு வெறி பிடித்த ரசிகன். ஆனால் அவர் ஒருவர் தான் இசையமைப்பாளர் என்று சொல்ல மாட்டேன். அவ்ருக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானையும் பிடிக்கும். இளையராஜாவோடு இசை முடிந்துவிட்டது என்றால்.. உலகம் அழிந்துவிட்டது என்று அர்த்தம்.. ஏனென்றால் உலகத்தில் ஒன்று போய் ஒன்று வ்ந்துகொண்டேயிப்ப்பதுதான் சுழ்ல் வாழ்கை.. இது எங்கேனும் நின்று விட்டால் அவ்வளவுதான்..
பதிவையும் படிச்சிப்புட்டேன், மறுமொழிகளையும் படிச்சிப்புட்டேன். ஏதாவது எழுதுன்னு கை துறுதுறுங்குது..
இளையராஜா மேதை. தமிழ் சினிமாவுல கிட்டத்தட்ட 15 வருசமா தனியா ஒரு பெரிய சிம்மாசனம் போட்டு உக்காந்திருந்தாரு.
அப்படிப்பட்டவரை அந்த சிம்மாசனத்துல இருந்து இறக்கிவிட ஒருத்தரால முடியுதுன்னா, அவர் மாமேதையா தான இருக்கனும்?
எனக்கு இளையராஜாவும் பிடிக்கும், ஏ.ஆர்.ரஹ்மானும் பிடிக்கும். கண்ணதாசனையும் பிடிக்கும் வைரமுத்துவையும் பிடிக்கும். அது என்னவோ தெரியலை சார், இளையராஜா ஃபேனா இருந்தா ரஹ்மானைத் திட்டனும். கண்ணதாசன் ஃபேனா இருந்தா வைரமுத்துவை திட்டனும்னே ஒரு கூட்டம் திரியுது.
உலகம் அழியிரதுக்குள்ளயாவது திருந்துங்கப்பா. நல்லது எங்க இருந்தாலும் பாராட்டுங்க. ஆஸ்கர் மேடையில தமிழ் பேசுனதுக்காவது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு தனி விருது கொடுத்திருக்கனும் தமிழக அரசு.
ராஜா ரகுமான் இருவருமே என்னை பொறுத்தவரை மிக சிறந்த இசை கலைஞர்கள். ராஜாவிற்கு வியாபார நுணுக்கம் புலப்படவில்லை. ராகங்களில் என் ஞானம் கம்மி என்றாலும் , அனைத்து தாள நடைகளிலும் மிக சிறப்பான இசையை தந்தவர் ராஜா. ரகுமான் கம்மியான மெட்டுகளை அமைத்திருந்தாலும் இந்தியில் போட்டதை தமிழில் கொடுத்து தன இசையை சரியாக வ்யாபாரம் செய்ய தெரிந்தவர். ஜெய் ஹோ பாடலை விட ருக்குமணி ருக்குமணி பாடல் சிறந்தது. ரகுமான் அதே போல் அனைத்து genre களையும் மிக சிறப்பாக கையாள்கிறார் . இந்துஸ்தானி அவருக்கு அனாயாசமாக வருகிறது , கவ்வாலி கசல் போன்றவைகளை மிக நுணுக்கத்தோடு கையாள்வதால் அவரை ஹிந்தி இசையுலகம் வரவேற்கிறது. ஆனால் ராஜா அளவிற்கு தமிழ் கிராமிய இசை தளும்பும் பாடல்களை ரகுமானால் கொடுக்க முடிந்ததில்லை. மேற்க்கத்திய பாணி இசைகள் காலத்துகேர்ப்ப மாறும். ராஜா அவர் காலத்தில் சிறந்ததை கொடுத்தார் , ரகுமான் அவருடைய காலத்தில் !
பி.கு : ஒரு க்விஸ் , ரகுமான் தான் இசையமைக்காத படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் அது என்ன ?
பி.பி.கு : அய்யோ ஒரு வார்த்த கூட பதிவுக்கு சம்பந்தமே இல்லையே :D
//கருத்துகளை மறுத்தாலும் நாகரீகம் மறக்காத
அதே
புருனோ.
// இதை நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரியனுமா? விடுங்க தலைவரே இவிங்க இப்படிதான் கொஞ்ச நாளில் அடங்கிடுவானுங்க!
HI
This link has few accolades for rahman from Americans. Thought might be good to site here
http://cyrilalex.com/?p=460
"பெரியாரையும் அண்ணாவையும் விமர்சிக்காத விமர்சனமா ? இளைய ராஜா இசை தவிர்த்து என்னவிதமான சமூக சாதனை புரிந்தார் என்று தெரியவில்லை"
Highly irrelevant. This is abt music. Why someone should do சமூக சாதனை to become good mucisian?
Sundar
இளையராஜாவின் இசை எத்தனை உயரமோ அத்தனை உயரம் அவரது ஈகோ. ரஹ்மானின் இசை அவரது குணம் அளவுக்கு உயர்ந்ததல்ல.
http://kgjawarlal.wordpress.com
டாக்டர் சார்..
பதிவுக்குத் தொடர்பில்லாத ஒரு பின்னூட்டம்..
உங்கள் சேவை இங்கு இன்னும் கொஞ்சம் தேவைப்படுது...
ஹிந்தி கற்பது பாவச்செயலா?
புதுசா 3 பேர் வந்துருக்காங்க....
:P
// ஒரு வேளை எல்லா வரியிலும் அவர் புகழ் பாடனும்னு நினைக்கறாங்களோ????//
தெரியல சார் :)
//மற்றபடி கோவியார் கருத்தை வழி மொழிகின்றேன்..//
கருத்திற்கு நன்றி சார்
//<<<
இளையராஜாவை பிடிக்காதவர்கள் ரகுமானைப் போற்றுகிறார்கள் என்பது ஏற்க இயலாத குற்றச் சாட்டு, இரகுமான் மீது எந்த ஒரு மீடியாவும் அவதூறுக்குக் கூட களங்கம் கற்பித்தது இல்லை, இத்தனைக்கும் அவரும் 20 ஆண்டுகளாக இசை உலகில் கொலொச்சி வருகிறார்.
>>>
சூப்பர் கோவி சார் :)
//
:) :)
//இதெல்லாம் கவனிக்காதீங்க சார். கொஞ்ச நாள் குரைச்சிட்டு ஓடிப் போயிடுவாங்க.
நீங்க ஃபார்முக்கு வாங்க சார்...//
நேற்று உங்கள் பதிவில் இருந்த பார்ம் போதாதா....
பிருத்வி இஸ்துகினு பூட்டான் மறந்து விட்டதா
//டாக்டர் சார்! உங்கள் பெயரிலும் போலியா! கண்டிப்பாக நீங்கள் ஒரு பிரபல்யமான பதிவரே! வாழ்த்துக்கள்.
//
நன்றி சார்
//நானும் இளையராஜாவின் இசைக்கு ஒரு வெறி பிடித்த ரசிகன். ஆனால் அவர் ஒருவர் தான் இசையமைப்பாளர் என்று சொல்ல மாட்டேன். அவ்ருக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானையும் பிடிக்கும். இளையராஜாவோடு இசை முடிந்துவிட்டது என்றால்.. உலகம் அழிந்துவிட்டது என்று அர்த்தம்.. ஏனென்றால் உலகத்தில் ஒன்று போய் ஒன்று வ்ந்துகொண்டேயிப்ப்பதுதான் சுழ்ல் வாழ்கை.. இது எங்கேனும் நின்று விட்டால் அவ்வளவுதான்..
//
வழிமொழிகிறேன்
//இளையராஜா மேதை. தமிழ் சினிமாவுல கிட்டத்தட்ட 15 வருசமா தனியா ஒரு பெரிய சிம்மாசனம் போட்டு உக்காந்திருந்தாரு.
அப்படிப்பட்டவரை அந்த சிம்மாசனத்துல இருந்து இறக்கிவிட ஒருத்தரால முடியுதுன்னா, அவர் மாமேதையா தான இருக்கனும்?//
இதைத்தான் நான் சொன்னேன் !!
//எனக்கு இளையராஜாவும் பிடிக்கும், ஏ.ஆர்.ரஹ்மானும் பிடிக்கும். கண்ணதாசனையும் பிடிக்கும் வைரமுத்துவையும் பிடிக்கும்.//
எனக்கும் தான் !!
//பி.கு : ஒரு க்விஸ் , ரகுமான் தான் இசையமைக்காத படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் அது என்ன ? //
தெரியல சார்
சொல்லுங்க
குசும்பன் சார்
நன்றி :) :)
சுந்தர் சார்
சுட்டிக்கு நன்றி
//இளையராஜாவின் இசை எத்தனை உயரமோ அத்தனை உயரம் அவரது ஈகோ. ரஹ்மானின் இசை அவரது குணம் அளவுக்கு உயர்ந்ததல்ல.//
அசத்தல் !!
//டாக்டர் சார்..
பதிவுக்குத் தொடர்பில்லாத ஒரு பின்னூட்டம்..
உங்கள் சேவை இங்கு இன்னும் கொஞ்சம் தேவைப்படுது...
ஹிந்தி கற்பது பாவச்செயலா?
புதுசா 3 பேர் வந்துருக்காங்க....
:P
//
இதோ வந்துட்டேன் !!!
ப்ருனோ சார் , க்விஸ் தப்பா கேட்டுட்டேன். ஐ யாம் வெரி சாரி பதில் பியா ஹாஜி அலி பிசா படத்திலிருந்து என்று நினைத்து கொண்டேன். தவறு , அந்த படத்தில் மத்த எல்லா பாடல்களுக்கும் அணு மாலிக் இசை. அப்பாடல் மட்டுமே ரகுமான். இப்போ தான் பார்த்தேன்
Apologies!
//ப்ருனோ சார் , க்விஸ் தப்பா கேட்டுட்டேன். ஐ யாம் வெரி சாரி பதில் பியா ஹாஜி அலி பிசா படத்திலிருந்து என்று நினைத்து கொண்டேன். தவறு , அந்த படத்தில் மத்த எல்லா பாடல்களுக்கும் அணு மாலிக் இசை. அப்பாடல் மட்டுமே ரகுமான். இப்போ தான் பார்த்தேன் //
தகவலுக்கு நன்றி சார் :)
Post a Comment