இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

பிருத்வி சம்புக்தாவை இஸ்துகினு பூட்டான் / நூட்டன் பூமி புட்ச்சு இயிக்கும் போர்ச கண்டுக்கினார் - சென்னை தமிழில் பள்ளி பாட நூல்கள் எழுத வேண்டிய அவசியம்

சென்னை தமிழ் கற்பது பாவச்செயலா

சிறிது சிந்தித்து பார்த்தால் தமிழர்கள் அனைவரும் சென்னைக்கு வரும் அவசியம் இருக்கிறது. 

உறவினர்கள் / நண்பர்கள் திருமணம், வேலை, வியாபாரம் என்று ஏதாவது காரணத்திற்காக சென்னைக்கு வருவது அவசியமே


அது மட்டுமல்ல, அரசு வேலையில் சேர வேண்டுமென்றால் சென்னைக்கு வரவேண்டியது அவசியம். தலைமை செயலகத்தில் மனு அளிக்க வேண்டுமென்றாலும் சென்னைக்கு வர வேண்டும்

திரைப்பட கதாநாயகன் ஆக விரும்புபவர்கள், திரைப்பட இயக்குனராக விரும்புபவர்கள், பத்திரிகை நடத்த விரும்புபவர்கள், பத்திரிகைகளில் எழுதுபவர்கள், என்று பல தரப்பட்ட மக்களும் சென்னைக்கு வருவது அவசியம் 

இது மட்டுமல்ல, பல விளையாட்டு போட்டிகளில் பங்குபெறுபவர்களும் சென்னைக்கு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது
பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் சொந்த ஊரை தாண்டி சென்னை செல்லும், தாம்பரத்தில் இருக்கும் மேம்பாலத்தை தாண்டிச்செல்லும் ஒருவர் சென்னைத்தமிழ் தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

சென்னைக்கு முதலில் வந்த போது நான் அனுபவித்திருக்கிறேன். தாம்பரத்தை தாண்டி வந்து விட்டால், சென்னைத்தமிழ் மட்டுமே மொழியாக இருக்கிறது. சென்னைத்தமிழ் என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் சென்னை முழுவதும் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

சென்னையில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை சென்னைக்கு வந்து போக வேண்டிய அவசியம் இருக்கும்அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். 

நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பொது மொழியான ஆங்கிலத்தையே கற்கலாமே, சென்னைத்தமிழ் எதற்கு? என்ற வாதமும் கூடவே வருகிறது. ஆங்கிலம் கற்பதற்கு யார் தடை விதித்தார்கள்? தாராளமாக கற்கலாம். சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது போலவே, சென்னைக்கு வருபவர்களுக்கு, தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களோடு பேச சென்னைத்தமிழ் அவசியமாகிறது.

ஆனால் தமிழர்களில் எத்தனை பேருக்கு சென்னை தமிழ் தெரிகிறது.. மிக மிக குறைவே என்பது வருத்தப்படவேண்டிய விஷயம் அல்லவா


நம் அரசியல் வாதிகளை பாருங்கள். அவர்கள் குழந்தைகள் எல்லாரும் சென்னைத்தமிழ் நன்றாக பேசுகிறார்கள். ஆனால் மற்றவர்களை சென்னை தமிழ் படிக்கவிடாமல் ஒரு தலைமுறையே சென்னைக்கு வந்தால் கஷ்டப்பட வேண்டியுள்ளது


தாய் மொழி தவிர பிற மொழிகள் கற்றுக்கொள்வது தவறா? பாவச் செயலா? அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், கற்றலுக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா? கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் கற்கட்டும், அதை தடுக்கக்கூடாது.
இதற்கெல்லாம் என்ன தீர்வு -- > பள்ளி பாடபுத்தகங்கள் அனைத்து சென்னைத்தமிழிலேயே எழுதப்பட வேண்டும்
அப்படி எழுதினால் அனைவரும் சென்னை தமிழ் நன்றாக கற்பார்கள். சென்னைக்கு ஒரு நாளோ இரு நாட்களோ வந்து போகும் போது கவலைப்படவேண்டியதில்லை !!
நான் சென்னைக்கு வந்த போது சென்னை தமிழ் தெரியாமல் கஷ்டப்பட்டேன்
அதனால் நான் அனுபவித்த கஷ்டத்தை யாரும் அனுபவிக்க கூடாது என்பதற்காகவே அனைவரும் சென்னை தமிழ் கற்க வேண்டும் என்று கூறுகிறேன் ; பாடப்புத்தகங்கள் அனைத்தும் சென்னை தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்று வலியுருத்துகிறேன்
உதாரணமாக புவிஈர்ப்பு விசை என்பதற்கு பதிலாக “பூமி புட்சு இய்க்கும் போர்ஸ்” என்று தான் அறிவியல் பாட நூல்களில் எழுதப்பட வேண்டும்


அசோகர் ரோட்டுக்கு அந்தாண்ட மரம் நட்டுக்கினா என்று சரித்திரப் பாடப்புத்தகங்களில் எழுதப்பட வேண்டும்
இப்படி எல்லாம் பாடப்புத்தகங்களில் மாற்றுவதன் மூலம்
தலைமைச்செயலகத்தில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும், திரைப்படத்தில் நடிக்க, திரைப்ப்டங்களை இயக்க, வருபவர்களும் சென்னை வந்தால் கவலைப்பட தேவையில்லை
ஒரேயடிகாக சென்னைத்தமிழை ஒதுக்கி தள்ளாமல் பள்ளி பாடப்புத்தகங்களை சென்னைத்தமிழில் எழுதுவதில் உள்ள சாதக பாதகங்கள் அலசப்பட வேண்டும்
சென்னை தமிழை படிக்கவிடாமல் ஒரு தலைமுறையே பாழ் பட்டு கிடக்கிறதே.. ஐயகோ.. இந்த கொடுமையை நான் எங்கே போய் சொல்வேன்
சென்னைக்கு ஒரு முறையாவது வந்திருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் சென்னை தமிழ் தேவை என்று கூறுவார்கள்
அது தெரியாததால் பெற்ற சிரமங்களையும் பட்டியலிடுவார்கள்
உங்களுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். பள்ளியில் சென்னைத்தமிழை பாடமாக கற்காத உங்களுக்கு சென்னையில் எவ்வளவு சிரமங்கள்
நினைக்கவே பதறுகிறதே சார் !!
அது தான் சொல்கிறேன் : பிருத்வி சம்புக்தாவை இஸ்துகினு பூட்டான் என்றே பள்ளி வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட வேண்டும்
இந்த இடுகையை வாசித்து உங்களுக்கு முழுவதும் புரியவில்லை என்றால் பதிவர் பீர் அவர்களின் ஹிந்தி கற்பது பாவச்செயலா? என்ற இடுகையை வாசிக்கவும்


இந்த இடுகையை பாராட்ட விரும்பினால் கூடவே இதை விட அருமையாக எழுதப்பட்டிருக்கும் பதிவர் ரவியின் F இடுகையையும் பாராட்டுங்களேன்

50 மறுமொழிகள்:

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//பீர் ஊத்தி இட்லி துன்ற பழக்கம் உண்டா நைனா//

இன்னா மேட்டரு, மெர்சா கீது, புரில

மறுமொழி எண்
ஜெகதீசன் said...

நல்ல இடுகை சார்....

சென்னைத் தமிழ் வேண்டாம் என்று சொல்பவர்கள் எல்லாம் இதுவரை செங்கல்பட்டைத் தாண்டியிருக்கமாட்டார்கள்.. செங்கல்பட்டைத் தாண்டி வந்தவர்களுக்குத் தான் தெரியும் சென்னைத் தமிழ் கற்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று..

மறுமொழி எண்
ஜெகதீசன் said...

முதல்முறையாக நான் சென்னை சென்ற போது ஒருவரிடம் "அண்ணே புதுப்பேட்டைக்கு எப்படிப் போகனும்?" என்று கேட்டேன்...
அவர் திடீரென்று என் சட்டையைப் பிடித்துக் கொண்டு "இங்கிலாந்துக்காரன் இங்கிலிப்பீஸ் பேச்றான்.. தமிழ்க்காரன் மெட்ராஸ்த்தமிழ் பேசனும்"*** அப்படின்னு சொல்லீட்டு "இன்னாப்பா நீ மதுரக்காரனா?" என்று கேட்டார்... பின் சென்னைத் தமிழிலேயே வழி சொல்லிவிட்டுப் போய்விட்டார்...

*** இந்த வாக்கியத்தை அவர் சென்னைத் தமிழில் சொன்னார்... எனக்கு சென்னைத்தமிழ் இன்னும் சரியாகத் தெரியாததால் அவர் சொன்னதை அப்படியே என்னால் எழுதமுடியவில்லை...
:)

மறுமொழி எண்
பீர் | Peer said...

சென்னை தமிழை பள்ளி பாடத்தில் விருப்ப பாடமாக வைத்தால், (அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றால்) நான் படிக்கத்தயார். என்னைப் பொருத்த வரை அது ஒரு தகவல் தொடர்பிற்கான மொழி மற்றுமே,(நான் இதில் அரசியலோ இனமோ பார்க்கவில்லை) சென்னை தமிழை கற்பதால் என் தாய் தமிழ் மறந்துவிடவும் மாட்டேன்.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//சென்னைத் தமிழ் வேண்டாம் என்று சொல்பவர்கள் எல்லாம் இதுவரை செங்கல்பட்டைத் தாண்டியிருக்கமாட்டார்கள்.. செங்கல்பட்டைத் தாண்டி வந்தவர்களுக்குத் தான் தெரியும் சென்னைத் தமிழ் கற்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று..
//

ஹி ஹி ஹி

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//சென்னை தமிழை பள்ளி பாடத்தில் விருப்ப பாடமாக வைத்தால், (அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றால்) நான் படிக்கத்தயார்.//

நீங்கள் இந்தியை கூட படிக்கத்தயாரானவர் சார். எனவே நீங்கள் தயாராவதில் வியப்பில்லை

மற்றவர்களின் நிலையையும் யோசித்து பாருங்கள்

//என்னைப் பொருத்த வரை அது ஒரு தகவல் தொடர்பிற்கான மொழி மற்றுமே,(நான் இதில் அரசியலோ இனமோ பார்க்கவில்லை) சென்னை தமிழை கற்பதால் என் தாய் தமிழ் மறந்துவிடவும் மாட்டேன்.//

:) :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

// மணிகண்டன் said...
யாருக்கு இந்த பதிவு ?//

நக்கல், நையாண்டி, பகடி ஆகியவற்றில் ஆர்வம் / விருப்பம் இருப்பவர்களுக்கு

மறுமொழி எண்
கோவி.கண்ணன் said...

:)

கருணாநிதி பேரன் ஹிந்தி படித்துவிட்டான், வேண்டாமுனு சொன்ன நாங்க பாதிக்கப்பட்டோம் னு ஒரு கூட்டம் எப்போதும் சொல்லும், என்னவோ கருணாநிதியைத்தான் இவர்கள் எல்லோரும் உதாரண புருஷனாக வைத்திருந்தது போல் பேசுவதைப் பார்க்கும் போது புல் அரிக்கிறது.

கருணாநிதி மனைவி சாய்பாபா காலில் விழுந்துட்டார் நீங்களும் போய் விழுங்கடா என்று சொல்ல முயற்சிக்கிறாங்களான்னு தெரியல.

நாட்டுல கருணாநிதி மட்டும் தான் அறிவாளின்னு இவங்களே சர்டிபிகேட் கொடுக்கிறாங்க.

ஐயா சாமி முடியல

மறுமொழி எண்
யாத்ரீகன் said...

இப்போதான் இத படிக்க முடிஞ்சது ... :-))))))))))))))))))))

சரித்திரம்,பூகோளம்,அறிவியல் இவற்றை சென்னைத்தமிழில் படித்திருந்தால் கட்டாயம் எல்லோரும் இல்லாவிடில், குறைந்தபட்சம் நான் வெறுக்காமல் இரசித்து படித்திருப்பேன்.. அய்யகோ நாடு ஒரு பெரும் விஞ்ஞானியை இழந்துவிட்டதே !!!!

மறுமொழி எண்
யாத்ரீகன் said...

இப்போதான் இத படிக்க முடிஞ்சது ... :-))))))))))))))))))))

சரித்திரம்,பூகோளம்,அறிவியல் இவற்றை சென்னைத்தமிழில் படித்திருந்தால் கட்டாயம் எல்லோரும் இல்லாவிடில், குறைந்தபட்சம் நான் வெறுக்காமல் இரசித்து படித்திருப்பேன்.. அய்யகோ நாடு ஒரு பெரும் விஞ்ஞானியை இழந்துவிட்டதே !!!!

மறுமொழி எண்
அட பேரா முக்கியம்? said...

கலக்கீடிங்க டாக்டர். அந்த லிங்க்க்கு (பீர்) போறதுக்கு முன்னாடி செம கடுப்பாய்டுச்சு.
என்னடா டாக்டருக்கு நட்ட கழட்டி விட்டுடாங்களான்னு பயந்துட்டேன்.

பட்டய கெளப்பீடிங்க போங்க... சூப்பர்.

நிற்க.
அந்த பஞ்சு தலையன்(ர்). ஆரம்பத்துல இருந்தே சரி இல்லீங்க. காத்தடிச்சு கோபுரத்து மேல போன இலை மாதிரி மந்திரி ஆய்டார். என்னென்னமோ பேசறார். சரி, பேப்பர்ல தினம் பேரு வர ஏதாவது பேசனுமில்ல.

முந்தி எல்லாம் எவனாவது Hindi is our national language அப்படின்னு ஆரம்பிக்கற எடத்துல எல்லாம் செமத்தியா கடுப்பாய்டுவேன். இப்பல்லாம், போடா போய் வேலையப் பாருடா but whatever you say, there is no place for Hindi in Tamilnadu ன்னு சொல்லிட்டு அந்த இடத்த விட்டு நகந்துடறது. அவனுங்க கிட்ட பேசி பிரயோஜனம் இல்லைங்க.

எது எப்படியோ,
இந்த பதிவும், அங்க பீர போட்டு தர்ம சாத்து சாத்துனதும் அட்டகாசம். வாழ்த்துக்கள்.

மறுமொழி எண்
Dr.ராம் said...

இந்தி பட்ச்சா என்னாமே தப்பு..நாங்கோ கண்டி இந்தி உசார் பண்ணோம்! டில்லிகாரன் தாராந்துருவான் .யாரும்மே அது இந்தி .. அவுன வரச்சொல்லு .. நானா அவுனானு பாத்துடலாம்.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
புரியறவங்களுக்கு புரியாம இருக்காது;

புரியாதவங்களுக்கு புரியாது.
//

அசத்துறீங்க தல

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//சரித்திரம்,பூகோளம்,அறிவியல் இவற்றை சென்னைத்தமிழில் படித்திருந்தால் கட்டாயம் எல்லோரும் இல்லாவிடில், குறைந்தபட்சம் நான் வெறுக்காமல் இரசித்து படித்திருப்பேன்.. அய்யகோ நாடு ஒரு பெரும் விஞ்ஞானியை இழந்துவிட்டதே !!!!
//

ஐயகோ ஐயகோ :) :) :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//கலக்கீடிங்க டாக்டர். அந்த லிங்க்க்கு (பீர்) போறதுக்கு முன்னாடி செம கடுப்பாய்டுச்சு.
என்னடா டாக்டருக்கு நட்ட கழட்டி விட்டுடாங்களான்னு பயந்துட்டேன்.

பட்டய கெளப்பீடிங்க போங்க... சூப்பர்.
//

நன்றி பாஸ்

//முந்தி எல்லாம் எவனாவது Hindi is our national language அப்படின்னு ஆரம்பிக்கற எடத்துல எல்லாம் செமத்தியா கடுப்பாய்டுவேன்//

அது national language இல்லயே தல :) :) :)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//இந்தி பட்ச்சா என்னாமே தப்பு..நாங்கோ கண்டி இந்தி உசார் பண்ணோம்! டில்லிகாரன் தாராந்துருவான் .யாரும்மே அது இந்தி .. அவுன வரச்சொல்லு .. நானா அவுனானு பாத்துடலாம்.//

அண்ணா திட்டுறதுன்னா தனியா திட்டுங்கண்ணா... ஒண்ணுமே புரியல

மறுமொழி எண்
Dr.ராம் said...

ஒண்ணும் இல்ல தல.. சென்னை தமிழ் முயற்சி செய்தேன்.. இதுவே என்னால முடியல.. இதுல இந்தி வேறயா...

மறுமொழி எண்
ராஜா | KVR said...

சூஊஊஊப்பர் சார் :-) - நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது, ஆனா புரியவேண்டியவங்களுக்குப் புரியணுமே ;-)

மறுமொழி எண்
Maximum India said...

டாக்டர்!

உங்க அப்ப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

எனக்கும் மெட்ராஸ் தமிழ் கற்றுக் கொள்ள ஆசைதான். சென்னை பக்கம் அதிகம் வந்தது இல்லை என்பதால் வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

என்னைப் போன்று மும்பையில் இருப்பவர்களுக்கும் ஏதேனும் தபால் வழி கல்வியை அறிமுகப் படுத்துங்களேன்.

:-)

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//சூஊஊஊப்பர் சார் :-) //
நன்றி சார்

//- நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது, ஆனா புரியவேண்டியவங்களுக்குப் புரியணுமே ;-)//
புரிய வைத்து விடுவோம்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//என்னைப் போன்று மும்பையில் இருப்பவர்களுக்கும் ஏதேனும் தபால் வழி கல்வியை அறிமுகப் படுத்துங்களேன்.
//

:) :) :)

மறுமொழி எண்
பீர் | Peer said...

//Maximum India said...
.... என்னைப் போன்று மும்பையில் இருப்பவர்களுக்கும் ஏதேனும் தபால் வழி கல்வியை அறிமுகப் படுத்துங்களேன். //

:)))

மறுமொழி எண்
சின்ன அம்மிணி said...

நான்கு மாதங்களுக்கு முன்பு அலுவல வேலையாக டாக்ஸியில் செல்ல நேரிட்டது. ஓட்டுனர் ஒரு பஞ்சாபிக்காரார். படித்திருந்தும் ஆங்கிலம் சரியாக பேசத்தெரியாததால் ஓட்டுனராக மூன்று வருடம் இருக்கிறார். தமிழர்கள் இந்தி படிக்காமல் ஆங்கிலம் கற்றுக்கொள்வதால் இங்கே எளிதாக வேலை தேடிக்கொள்கிறார்கள் என்றார். இந்தி என்று கதறும் ஆட்களுக்கு உங்கள் பதிவு நகைச்சுவையோடு அது தேவையில்லை என்று சொல்கிறது.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

// தமிழர்கள் இந்தி படிக்காமல் ஆங்கிலம் கற்றுக்கொள்வதால் இங்கே எளிதாக வேலை தேடிக்கொள்கிறார்கள் என்றார். //

பீர் சார்

கேட்கிறதா

கேட்கிறதா

கேட்கிறதா

மறுமொழி எண்
கோவி.கண்ணன் said...

//// தமிழர்கள் இந்தி படிக்காமல் ஆங்கிலம் கற்றுக்கொள்வதால் இங்கே எளிதாக வேலை தேடிக்கொள்கிறார்கள் என்றார். //

பீர் சார்

கேட்கிறதா

கேட்கிறதா

கேட்கிறதா//

இந்தியில் மொழி பெயர்த்து சொல்லுங்க. புரிஞ்சிப்பார். :)

மறுமொழி எண்
பீர் | Peer said...

கேட்டுகிட்டுதான் சார் இருக்கு...

ஹிந்தி படிக்காமல் ஆங்கிலம் படிப்பவர்கள் எளிதாக வேலை தேடிக்கொள்கிறார்கள்...

ஆங்கிலத்துடன் ஹிந்தியும் சேர்த்து படிப்பவர்களுக்கு?

மறுமொழி எண்
சின்ன அம்மிணி said...

இந்தப்பதிவு ரெண்டும் சொல்லும் இந்தி திணிப்பு செய்வதை

http://ponnusamypalani.blogspot.com/2009/09/blog-post_02.html

http://nunippul.blogspot.com/2009/08/blog-post.html

மறுமொழி எண்
Anonymous said...

very simple reasonsIf it is not complasary 90% students wont study. no body will give guidance also

only few cities
MAS,CBE,TRY,salem,erode, madurai (???), tiruppoor coming to my view. that even other than MAS vat a clerk / attender earns ?

even in MAS will it support another 1 crore people in 10 yearsjabalpur, places around ahmedabad, nashik,aurangabad,indore,raipur even Rajasthan many places are seeing industrial revolutions. The opprtunity should be availed. punjab. haryana satellite cities of delhi etc -- list keeps going onwhy at our cost - 1 teacher per school(high school) is it a cost??

do we study hindhi to say hindhi is a national language?? to say hindhi is classical language ?? to say hindhi is rich in culture ?? to say hindu - hundusthan - hindhi ?? for our - vayitru pilaippu to create more oppertunities

why north indian people not learning tamil in schools -- to see opportunity இன் TN
who gujarathi (having guj as mother tong and studying hindi as 3 rd language)
who maratti having maratti as mother tonge (,,,,,)
who odissa having odissi as MTwho punjabi having punjabi as 3rd
who marwadi having marwari as mt
who sindhi having sindhi as mt
who kashmiri having urdu as mt
(though similarity there)only 2 states - bihar and UP having advantage as hindi as mother tongue
whether we like or not hindhi has spread for most of the parts. English alone wont acquire opportunities though tamil is doin better in bangalore, (i dint have any problem with tamil from auto to bank, bus etc), hindi is equally doing good. and i hope karnatka also hindi is optional language in schools. (why I left AP . from warangal / vijayawada itself fluent hindhi along telugu starts. the cost of sri venkateswara temple is estimated more than 10 crore rupees in ahmedabad built by telgu people)
any how sorry for wasting your time- ready அடி vaanga. ...
AK

if more identi required - pls inform i ll mail my contact - dont know whether cen.gov employee can comment such national issue

மறுமொழி எண்
Anonymous said...

வணக்கம். நான் வலைப்பதிவை படித்து மட்டுமே வருகிறேன். இதுவரை பின்னூட்டம் எதுவும் இட்டதில்லை (1 medical query earlier). அதிலும் டாக்டர் சார் பதிவுக்கு என்றவுடன் தேவையா என்றே யோசித்து , சரி இவர் கிட்டே நாமும் நாலு சாத்து வாங்கிக்குவோம். இருப்பது அஹமதாபாத் 17varudam மொழி தெரியாத ஊரில் என்ன கஷ்டம் பட்டிருப்போம் எல்லாருக்கும் தெரியும். ரயிலில் இருந்து நள்ளிரவில் இறங்கியவுடன் ஆட்டோ பிடிக்க .... சரி சொந்த கதை வேண்டாம் எல்லாம் உங்கள் ஊகத்திற்கே ...ஒருவழியா ஹிந்தி குஜராத்தி (?) எல்லாம் கற்று நலமே குஜராத்தில் ஹிந்தி தாய் மொழி இல்லை . இரண்டு மொழி களுக்கும் ரொம்ப ஒற்றுமை ஒன்றும் கிடையாது ஆனால் அனைவரும் ஹிந்தி கட்டாயம் இதே நிலைமை தான் கிட்டத்தட்ட மராட்டி (மகாராட்டிரம் ) பஞ்சாபி காஷ்மிரி ஏன் ஒரிசா மேற்கு வங்கம் என பல அனைவரும் மூன்றாவது ஒரு கல்லை கட்டி கொண்டுதான் ஓடுகிறார்கள் (ஏன் கேரளா டச் இல்லை - விரிவாக கீழே )

அஹமதாபாதில் மலையாளிகள் கிட்ட தட்ட 4 லட்சம் பேர். அனைவருக்கும் குஜராத்தி தெரிகிறதோ இல்லையோ ஹிந்தி உடன் எந்த பிரச்னை யும் இல்லாமல் சுகமே . சென்னை மா நரகத்தில் (ஆம்) பனிரண்டு வகுப்பு அல்லது சாதாரண டிகிரி முடித்தால் என்ன சம்பளம் கிடைக்கும் எவ்வளவு தூரம் பயணம் செய வேண்டும் எப்படிப்பட்ட தரமான இருப்பிடம் இருக்கும் - சாதாரண பேச்சிலர் வாழ்க்கைகூட ... என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும் இங்கு மொத்த அஹ்மதாபாத் நகரமே இப்போதைக்கு இருபது கிலோ மீட்டரில் முடிந்து விடும். ௨000 ரூபாயில் ஓரளவுக்கு வீடும் பத்து கிலோ மீட்டரில் சாதரண கிளார்க் மூன்று ஆண்டுகளில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ராஜவாழ்க்கை இல்லை தான் . ஆனால் சென்னை யை விட நிச்சயமாக வாழ்க்கை தரம் நன்றாகவே இருக்கும். இந்த நிலைமை கிட்ட தட்ட குஜராத் முழுவதும் - ராஜ்கோட் பரோடா, சூரத் (மற்றொரு நரகம் -- ஸ்டில் பெட்டெர் ), பாவ்நகர் நகரங்களின் தொழில் அளவு உங்கள் ஊகத்திற்கே ...இன்னும் hariyaana punjab etc are there -- rajasthan கூட தொழில் valarchiyil yengengum மலையாளிகளே --

ஏன் எளிய காரணம் -- ஹிந்தி கட்டாயம் தமிழகத்தில் இன்றைய இளைஞர்களின் எண்ணிக்கை என்ன ? அனைவருக்கும் (enjineeyar டாக்டர் தொழில் படிப்பு வேண்டாம் விட்டு விடுவோம் மற்றவர் ) இன்னும் பத்து வருடத்தில் தமிழகத்தில் மட்டும் வேலை kuduthu viduvoma ..பஞ்சாபி குஜராத்தி மராட்டி vangaali அனைவரும் ஊரில் வேலை இல்லையா -- raiyilai பிடி yengo சென்று ஏதோ வேலை ஏன் -- அனைவரும் ஹிந்தி கட்டாயம் -- bruno : yaar ungalai hindhi padikka வேண்டாம் yendrarkal - ishtam ullavarkal padikkattume-- ayya இளம் வயதில் அறிவு yenge இருந்து வரும்?

yengalukkuthan கழக kanmanikal வழி கட்டு kirarkale - post officil சென்று thar poosi azhi yendru பள்ளியில் தமிழ் padithal (sambandam இல்லாமல் katrathu தமிழ் cinema ninaivukku varukiradhu) தமிழ் ayyakkal தான் தமிழ் yuir மூச்சு - yendru கற்று கொடுக்கிறார்களே

yaar வீட்டு kasil ஹிந்தி valarkka வேண்டும் - நம் veettu kaasil தான் - viruppamo இல்லையோ ஹிந்தி 70 % நம் naattil உள்ளது . ஹிந்தி இல்லாவிட்டால் andhravai thanda முடியாது - pls leave professional courses.

இல்லை yengalukku tamilum aangilamum போதும் - தமிழ் நாடு sorkka puri இன்னும் 5 கோடி பேரை கூட vala வைக்கும் என்று doctor போன்ற sindhipavargalum koorinal makilchiye - என்னை mannikkavum - naan கூறிய அனைத்தும் thavaranvai - naan ஒரு ஹிந்தி adivarudi - manvarkalai மேலும் ஒரு sumaikku aalakkukiren ---

oh my god 1 hour over..
shud attend some blog workshops for tamil typing -- now english

மறுமொழி எண்
கோவி.கண்ணன் said...

//பீர் | Peer said...

கேட்டுகிட்டுதான் சார் இருக்கு...

ஹிந்தி படிக்காமல் ஆங்கிலம் படிப்பவர்கள் எளிதாக வேலை தேடிக்கொள்கிறார்கள்...

ஆங்கிலத்துடன் ஹிந்தியும் சேர்த்து படிப்பவர்களுக்கு?
//

உங்களைப் போன்ற எக்ஸ்ட்ரா நானெலெஜ் எக்சப்சன்களை விட்டுவிட்டால் மற்றவர்கள் ஆங்கிலத்தையும் இந்தியையும் ஒழுங்க படிக்க மாட்டாங்க.

5 பாடம் இருக்கிற இடத்தில் 6 பாடம் இருந்தால் சுமாராக படிக்கும் மாணவனின் நிலை ?

மறுமொழி எண்
சின்ன அம்மிணி said...

சகோதரர் பீர்,
ஒரு மொழியைக்கற்க அதை பல வருடங்கள் பாடமாக கற்க வேண்டியதில்லை. அவசியம் நேரிட்டால் குறைந்த அளவு நாட்களில் கற்றுக்கொண்டு விடலாம். இன்றைக்கு தொலைக்காட்சிகளிலும் பல சேனல்கள் உள்ளன. அவ்வப்போது அதைப்பார்த்தாலே நீங்கள் அறியவிரும்பிய மொழியை அறிந்து கொள்ளலாம். அப்படி இருக்க வலிய நம் மீது அரசு ஒரு மொழியை கட்டாயமாக்குதல் அவசியம் இல்லை. இந்தியை நான் விரும்புவதால் மட்டுமே படிக்கவேண்டுமே தவிர கபில் சொல்கிறார் என்பதால் கட்டாயப்பாடமாக படிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

மறுமொழி எண்
சின்ன அம்மிணி said...

//
ஆங்கிலத்துடன் ஹிந்தியும் சேர்த்து படிப்பவர்களுக்கு?//

பீர் சார், அவர் இந்தி படித்த அளவுக்கு ஆங்கிலம் படிக்கவில்லை.மேலும் அவர் தமிழர்கள் பஞ்சாபி படிக்காமல் ஆங்கிலம் படித்ததனால் என்றும் சொல்லவில்லை. சொல்ல வருவது புரிந்ததா உங்களுக்கு :)

மறுமொழி எண்
Anonymous said...

வணக்கம். நான் வலைப்பதிவை படித்து மட்டுமே வருகிறேன். இதுவரை பின்னூட்டம் எதுவும் இட்டதில்லை (1 medical query earlier). அதிலும் டாக்டர் சார் பதிவுக்கு என்றவுடன் தேவையா என்றே யோசித்து , சரி இவர் கிட்டே நாமும் நாலு சாத்து வாங்கிக்குவோம்.
இருப்பது அஹமதாபாத் 17varudam

மொழி தெரியாத ஊரில் என்ன கஷ்டம் பட்டிருப்போம் எல்லாருக்கும் தெரியும். ரயிலில் இருந்து நள்ளிரவில் இறங்கியவுடன் ஆட்டோ பிடிக்க .... சரி சொந்த கதை வேண்டாம் எல்லாம் உங்கள் ஊகத்திற்கே ...
ஒருவழியா ஹிந்தி குஜராத்தி (?) எல்லாம் கற்று நலமே

குஜராத்தில் ஹிந்தி தாய் மொழி இல்லை . இரண்டு மொழி களுக்கும் ரொம்ப ஒற்றுமை ஒன்றும் கிடையாது ஆனால் அனைவரும் ஹிந்தி கட்டாயம்

இதே நிலைமை தான் கிட்டத்தட்ட மராட்டி (மகாராட்டிரம் ) பஞ்சாபி காஷ்மிரி ஏன் ஒரிசா மேற்கு வங்கம் என பல அனைவரும் மூன்றாவது ஒரு கல்லை கட்டி கொண்டுதான் ஓடுகிறார்கள் (ஏன் கேரளா டச் இல்லை - விரிவாக கீழே )

அஹமதாபாதில் மலையாளிகள் கிட்ட தட்ட 4 லட்சம் பேர். அனைவருக்கும் குஜராத்தி தெரிகிறதோ இல்லையோ ஹிந்தி உடன் எந்த பிரச்னை யும் இல்லாமல் சுகமே .

சென்னை மா நரகத்தில் (ஆம்) பனிரண்டு வகுப்பு அல்லது சாதாரண டிகிரி முடித்தால் என்ன சம்பளம் கிடைக்கும் எவ்வளவு தூரம் பயணம் செய வேண்டும் எப்படிப்பட்ட தரமான இருப்பிடம் இருக்கும் - சாதாரண பேச்சிலர் வாழ்க்கைகூட ... என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும்

இங்கு மொத்த அஹ்மதாபாத் நகரமே இப்போதைக்கு இருபது கிலோ மீட்டரில் முடிந்து விடும். ௨000 ரூபாயில் ஓரளவுக்கு வீடும் பத்து கிலோ மீட்டரில்
சாதரண கிளார்க் மூன்று ஆண்டுகளில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ராஜவாழ்க்கை இல்லை தான் . ஆனால் சென்னை யை விட நிச்சயமாக வாழ்க்கை தரம் நன்றாகவே இருக்கும். இந்த நிலைமை கிட்ட தட்ட குஜராத் முழுவதும் - ராஜ்கோட் பரோடா, சூரத் (மற்றொரு நரகம் -- ஸ்டில் பெட்டெர் ), பாவ்நகர் நகரங்களின் தொழில் அளவு உங்கள் ஊகத்திற்கே ...
இன்னும் hariyaana punjab etc are there -- rajasthan கூட தொழில் valarchiyil
yengengum மலையாளிகளே -- ஏன் எளிய காரணம் -- ஹிந்தி கட்டாயம்

தமிழகத்தில் இன்றைய இளைஞர்களின் எண்ணிக்கை என்ன ? அனைவருக்கும் (enjineeyar டாக்டர் தொழில் படிப்பு வேண்டாம் விட்டு விடுவோம் மற்றவர் )
இன்னும் பத்து வருடத்தில் தமிழகத்தில் மட்டும் வேலை kuduthu viduvoma ..

பஞ்சாபி குஜராத்தி மராட்டி vangaali அனைவரும் ஊரில் வேலை இல்லையா -- raiyilai பிடி yengo சென்று ஏதோ வேலை ஏன் -- அனைவரும் ஹிந்தி கட்டாயம் --

bruno : yaar ungalai hindhi padikka வேண்டாம் yendrarkal - ishtam ullavarkal padikkattume
-- ayya இளம் வயதில் அறிவு yenge இருந்து வரும்? yengalukkuthan கழக kanmanikal வழி கட்டு kirarkale - post officil சென்று thar poosi azhi yendru

பள்ளியில் தமிழ் padithal (sambandam இல்லாமல் katrathu தமிழ் cinema ninaivukku varukiradhu) தமிழ் ayyakkal தான் தமிழ் yuir மூச்சு - yendru கற்று kodukkirarkale
yaar வீட்டு kasil ஹிந்தி valarkka வேண்டும் - நம் veettu kaasil தான் - viruppamo இல்லையோ ஹிந்தி 70 % naattil உள்ளது . ஹிந்தி இல்லாவிட்டால் andhravai thanda முடியாது - pls leave professional courses.

இல்லை yengalukku tamilum aangilamum போதும் - தமிழ் நாடு sorkka puri இன்னும் 5 கோடி பேரை கூட vala வைக்கும் என்று doctor போன்ற sindhipavargalum koorinal makilchiye - என்னை mannikkavum - naan கூறிய அனைத்தும் thavaranvai - naan ஒரு ஹிந்தி adivarudi - manvarkalai மேலும் ஒரு sumaikku aalakkukiren
---
oh my god 1 hour over.. shud attend some blog workshops for tamil typing -- now english

மறுமொழி எண்
Anonymous said...

very simple reasons

If it is not complasary 90% students wont study. no body will give guidance also

only few cities MAS,CBE,TRY,salem,
erode, madurai (???), tiruppoor coming to my view.

that even other than MAS vat a clerk / attender earns ?
even in MAS will it support another 1 crore people in 10 years

jabalpur, places around ahmedabad, nashik,aurangabad,indore,raipur even Rajasthan many places are seeing industrial revolutions. The opprtunity should be availed. punjab. haryana satellite cities of delhi etc -- list keeps going on

not only clerickal - marketing, technical, plumber, even teacher

(1 small news - in ahmedabad south indian teachers are respected. if any of the readers have got any relative in guj, know maths / english very well, un-employed, pack ur luggage and proceed - stay back for 3 months / learn hindi / start carrer as tution teacher / 1000 rs per subject / per month - that even 3-4 classes a week
))))
why at our cost - 1 teacher per school(high school) is it a cost??
do we study hindhi to say hindhi is a national language?? to say hindhi is classical language ?? to say hindhi is rich in culture ?? to say hindu - hundusthan - hindhi ??

for our - vayitru pilaippu

to create more oppertunities

why north indian people not learning tamil in schools -- to see oppertunity in TN

who gujarathi (having guj as mother tong and studying hindi as 3 rd language)

who maratti having maratti as mother tonge (,,,,,)

who odissa having odissi as MT
who punjabi having punjabi as MT
who marwadi having marwari as MT
who sindhi having sindhi as MT
who kashmiri having urdu as MT (though similarity there)
only 2 states - bihar and UP having advantage as hindi as mother tongue


whether we like or not hindhi has spread for most of the parts. English alone wont acquire opportunities
though tamil is doing better in bangalore, (i dint have any problem with tamil from auto to bank, bus etc during my recent visit ), hindi is equally doing good. and i hope karnatka also hindi is optional language in schools. (why I left AP . from warangal / vijayawada itself fluent hindhi along telugu starts. the cost of sri venkateswara temple is estimated more than 10-20 crore rupees in ahmedabad built by telgu people)


any how sorry for wasting your time
- ready அடி vaanga

ak

if more identi required - pls inform i ll mail my contact - dont know whether cen.gov employee

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//ஹிந்தி படிக்காமல் ஆங்கிலம் படிப்பவர்கள் எளிதாக வேலை தேடிக்கொள்கிறார்கள்...

ஆங்கிலத்துடன் ஹிந்தியும் சேர்த்து படிப்பவர்களுக்கு?//

புரியவிலை
இங்கிலாந்தில் அப்படி படிக்கிறார்களா

மறுமொழி எண்
புருனோ Bruno said...

// அனைவரும் மூன்றாவது ஒரு கல்லை கட்டி கொண்டுதான் //

அப்படி இருக்கும் போது இந்திக்காரர்கள் மட்டும் ஒரே கல்லுடன் இருப்பது நியாயமா

அனைவருக்கும் இரு கற்கள் என்பது தானே ஒருமைப்பாட்டின் சித்தாந்தம்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//சென்னை மா நரகத்தில் (ஆம்) பனிரண்டு வகுப்பு அல்லது சாதாரண டிகிரி முடித்தால் என்ன சம்பளம் கிடைக்கும் எவ்வளவு தூரம் பயணம் செய வேண்டும் எப்படிப்பட்ட தரமான இருப்பிடம் இருக்கும் - சாதாரண பேச்சிலர் வாழ்க்கைகூட ... என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும் //

இன்று இங்கு வந்து பணிபுரியும், உத்திரபிரதேச, பீகாரி நபர்களிடம் கேட்டு சொல்கிறேன்

சரியா

அல்லது நீங்களே அவர்களிடம் கேட்டுக்கொள்ளலா

அவர்களுல்லு உத்திரபிரதேசத்தில் வேலை வாய்ப்பு இல்லையா

அப்படி இருந்தால் ஏன் இங்கு வருகிறார்கள் என்று நீங்களே கேளுங்களேன்

சந்தேகம் இருந்தால் இந்தி நமது தேசிய மொழி :-) என்ற சுட்டியையும் படித்து பாருங்கள்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//இன்னும் பத்து வருடத்தில் தமிழகத்தில் மட்டும் வேலை kuduthu viduvoma ..//

தெரியவில்லை :) :)

ஆனால் இன்று வடமாநிலங்களில் இருந்து வந்து தென்மாநிலங்களில் பணிபுரிவர்களின் எண்ணிக்கை இங்கிருந்து வடமாநிலங்களில் பணி புரிவதை விட அதிகம் என்றே நினைக்கிறேன்

1996க்கு பிறகு கூட்டனி ஆட்சியில் தென் மாநிலங்களின் கை உயர்ந்து இங்குள்ளவர்கள் அமைச்சராகி இங்கு தொழில் வளர்ந்ததன் பிண்ணனியை இங்கு நினைவு படுத்துகிறேன்

தவறிருந்தால் திருத்தவும்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//சின்ன அம்மிணி said...
இந்தப்பதிவு ரெண்டும் சொல்லும் இந்தி திணிப்பு செய்வதை

http://ponnusamypalani.blogspot.com/2009/09/blog-post_02.html

http://nunippul.blogspot.com/2009/08/blog-post.html
//

மிக்க நன்றி :) :) :)

மறுமொழி எண்
Maximum India said...

டாக்டர் சார்! டைம் கிடைக்கும் போது இங்கே கொஞ்சம் வாருங்கள்.

நன்றி.

http://sandhainilavaram.blogspot.com/2009/09/blog-post_03.html

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...