அமெரிக்க அதிபருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை சென்னையில் (காசு கொடுத்தால்) கிடைக்கிறது !!
காத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காத பொது சுகாதார மேலாண்மை கூட நாகை மக்களுக்கு சுனாமிக்கு பின் (காசு கொடுக்காமலே) கிடைத்தது.
ஆனால்
அமெரிக்காவில் ஒரு சாதாரண மரம் வெட்டும் தொழிலாளி மரம் வெட்டிக்கொண்டிருந்த போது அவர் மீது மரம் விழுந்து விட்டது என்றால் அவருக்கு கிடைக்கும் அவசர சிகிச்சை - உடனடியாக ஒரு பிணியாளர் ஊர்தி (சீருந்து அல்லது உலங்கு வானூர்தி - ஹெலிகாப்டர்), பிணியாளர் ஊர்தியிலேயே சுவாச சிகிச்சை, இரத்தம் அல்லது பிற திரவங்கள் ஏற்றுதல் போன்றவை இங்கு (பாரதத்தில்) ஒரு சாலை விபத்தில் சிக்கிக்கொண்டால் அம்பானிக்கு கூட கிடைத்ததில்லை :( :( :(
முதல்வரோ, பிரதமரோ வந்தால் அங்கு பிணியாளர் ஊர்தி (என்ற பெயருடன் வாகனம்) ஒன்று இருக்கும். ஆனால் அந்த வாகனத்திற்கும் பிற வாகனகங்ளுக்கும் வெளியில் எழுதியிருக்கும் பெயரை தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது
இது நாள் வரை நாம் பிணியாளர் ஊர்திகளை ஒரு “வாகனமாகத்தான்” (நோயாளியை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற) பயன்படுத்தினோமே தவிர பிணியாளர் ஊர்தியில் சிகிச்சை என்பது கிடையாது
மிக சமீபகாலங்களில் தான் சில தனியார் மருத்துவமனைகளில் முழு வசதிகளுடன் பிணியாளர் ஊர்திகள் வாங்கப்பட்டன.
-oOo-
பிணியாளர் ஊர்தியில் அவசர சிகிச்சைக்கு தேவை யான கருவிகள் இருந்தால் போதுமா, அதை யார் உபயோகிப்பார் ? ஓட்டுனரா....
துரதிருஷ்டவசமாக இது நாள் வரை பிணியாளர் ஊர்தியில் பயிற்சி பெற்றவர் கிடையாது.
மேலே நாடுகளில் ஈ.எம்.டி - எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னிசியன் - அவசர கால மருத்துவ நுட்பனர் என்று தனியாக நபர்கள் உண்டு,.
அவர்கள் முதலுதவியில் மட்டுமே பயிற்சி பெற்றிருப்பார்கள். நமது நாட்டில் இது நாள் வரை அப்படி கிடையாது.
ஒன்று ஒட்டுனர் மட்டுமே இருப்பார். அல்லது அவசர சிகிச்சை அளிக்க போதிய பயிற்சி இல்லாத எப்.என்.ஏ அல்லது எம்.என்.ஏ போன்றவர்கள் இருப்பார்கள். சில இடங்களில் செவிலியர் இருப்பார்கள் (செவிலியரின் பணி மருத்துவமனையிலும் தேவைப்பட்டால் அன்று அவரி பிணியாளர் ஊர்தியில் இருக்க மாட்டார்). அன்று விபத்தில் சிக்குபவர் பாடு திண்டாட்டம் தான்.
-oOo-
இந்த நிலையை மாற்றி முதன் முதலில் ஆந்திராவில் எம்ரி நிறுவனத்தின் மூலம் அவசர கால பிணியாளர் ஊர்தி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ராஜசேகர ரெட்டிதான்
அவர் அறிமுகப்படுத்திய திட்டத்தின் சிறப்புகள்
1. முற்றிலும் இலவசம்
2. ஒரே எண் 108 - எந்த தொலைபேசியிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம் (நடைமுறைபடுத்தப்பட்ட பின்)
3. பிணியாளர் ஊர்தியிலேயே வைத்தியம் ஆரம்பம்
4. கட்டுப்பாட்டு அறையில் உள்ள மருத்துவரிடம் (ஊர்தி பணியாளர்) சந்தேகம் கேட்கலாம்.
5. மாநிலம் முழுவதும் ஒரே கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்
6. ஒட்டுனர் மற்றும் மருத்துவ நுட்பனருக்கு பணியில் சேரும் பொழுது பயிற்சி மட்டும் அதன் பின்னும் தொடர்ந்து பயிற்சி (6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடம் ஒரு முறை)
7. ஒரு ஓட்டுனரோ அல்லது மருத்துவ நுட்பனரோ விடுப்பு அல்லது வார ஓய்வு அல்லது பயிற்சியில் இருந்தாலும் ஊர்தி சேவை பிற பணியாளர்களை வைத்து தொடர்ந்து நடக்கும்
-oOo-
அது மட்டுமல்ல, அமெரிக்க அதிபருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை சென்னையில் (காசு கொடுத்தால்) கிடைக்கிறது என்று எழுதியிருந்தேன் அல்லவா
அதை மாற்றியவர் அவர்தான் !!
ஆரோக்யஸ்ரீ என்ற திட்டத்தின் மூலம் புற்றுநோய், நரம்பு தொடர்பான நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், தீப்புண்கள், விபத்து ஆகிய நோய்களுக்கு இலவச சிகிச்சை கிடைக்க செய்து, மருத்துவத்துறையில் மலர்ச்சியை ஏற்படுத்தியதும் அவர்தான்
-oOo-
- கல்வி என்பது பணக்காரர்களுக்கும், மேல்தட்டு மக்களுக்கும் மட்டும் உரித்தான சொத்து, என்பதை காமராஜர் - எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டம் மாற்றி, கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது என்று மலர்ச்சியை ஏற்படுத்தியதை போல், ஏழை என்பதால் ஒருவருக்கு கல்வி கிடைக்காத நிலை கிடையாது என்ற நிலை போல்
- ஏழை என்பதால் ஒருவனுக்கு உடல்நலம் மறுக்கப்படாது, கிடைக்காமல் இருக்காது, சுகாதாரம், மற்றும் தரமான சிகிச்சை என்பது பணக்காரர்களுக்கு மட்டும் உரித்தான் சொத்து அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது என்ற நிலையை ஏற்படுத்தியவர் ராஜசேகர ரெட்டி
-oOo-
அவர் அறிமுகப்படுத்திய இரு நல்ல திட்டங்களையும், உடனடியாக ஆராய்ந்து தமிழகத்தில் சுகாதார துறையில் கொண்டு வந்து விட்டனர்
-oOo-
அஞ்சலி :( :(





15 மறுமொழிகள்:
Thanks for the post...
May his soul rest in peace
அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவோம்..,
நல்ல பதிவுங்க.
பிணியாளர் ஊர்தி?
ஆம்புலன்ஸ் என்றே சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
நல்ல பதிவு.
அன்னாருக்கு அஞ்சலி
அவரால் ஆரம்பிக்கப்பட்ட அவசரகால பிணியாளர் ஊர்தியாலும் அவருக்கு அவசரகாலத்தில் பயனளிக்கமுடியவில்லை :(
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
ஆழ்ந்த அஞ்சலி.
He is ok perosn, but he is not Mahaatham gaandhi or ambedkar type.
His father was a MP and murdered opposition leaders. His elder bother did arrack business and became MLA.
Even YSR was involved with Satyam scam.
He too have the habit of making his son as MP.
This 108 ambulance service EMRI concept was implemented by Satyam Raju.
அண்ணாருக்கும், அவருடன் மறைந்தவர்களுக்கும் அஞ்சலிகள்.
ஆந்திர முதல்வருக்கு அஞ்சலி சில அரசியல் தகவல்களுடன்… http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_7206.html.
மிக அருமையான முதல் அமைச்சரை இழந்துவிட்டோம்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்ளுகின்றேன்.
இவ்வளவு சிறந்த தலைவரை இழந்தது மிகப் பெரிய வருத்தம். நாட்டிற்கும் மிகப் பெரிய இழப்பு. பல புதிய திட்டங்கள் பற்றி ஆலோசனை சொல்ல தான் ரஜசேகர ரெட்டியை அதிகம் நம்பியதாக பிரதமரும் சொல்லி இருக்கிறார்.முன்பே தெரிந்த தகவலாக இருப்பினும் விவரமாக எழுதியதற்கு நன்றி டாக்டர்.
சரியான அஞ்சலி தலைவரே.
இதய அஞ்சலி!
தொடர்பதிவுக்கு அழைக்கப் பட்டுள்ளீர்கள்.. நன்றி
நான் வாசித்தவரையில் ரெட்டியின் மரணத்திற்காக எழுதப்பட்ட அஞ்சலி கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கது. நன்றி டாக்டர்.
ஆந்திர முதல்வரும் , அவர் கூட இறந்தவர்களுக்கும் அஞ்சலி ...அன்னா பிறந்த நாள் விழாவுக்கு முக்கிய விருந்தினராக வர இருந்தவர் ..
ஒரு இடத்துல ஒரு செய்தி படிச்சேன், எவ்ள உண்மையின்னு தெரியலை ...
YSR ,,ரெண்டாவது முறையா பதவி எடுத்து கரெக்டா 108 நாள் கழிச்சு இறந்தார் ...அவருடைய உடலும் அந்த காட்டில் இருந்து...108 ஆம்புலன்ஸ்ல தான் கொண்டு வந்தாங்களாம்.
Does not the Aarogyashri scheme has its own share of controversies, being that health insurance scheme to benefit the private hospitals and their not so well thought of PPP initiatives.
Would appreciate a detailed write-up on Aarogyashri schemes, if you have a comprehensive knowledge about the scheme.
Post a Comment