அண்ணே, நம்ம ஊருல முருகன் ஸ்வீட் ஸ்டாலுன்னு திறந்திருக்காங்களாமே, போய் பாத்தீங்களா
ஆமாம் தம்பி, புதுசா வந்திருக்கு, கலர் கலரா இருக்கு, இனிப்பு நல்லாயிருக்கு,
அப்படியா
ஆமாம், சுத்தமான நெய்யிலதான் செய்றாங்களாம்
அட
டேஸ்ட் எல்லாம் சூப்பர்
அப்படியா
விலை கூட அதிகமில்லையாம், ஆனா....
ஆனா என்னன்னே
ஆனா, இனிப்புக்குள்ள விஷம் இருக்குன்னு சொல்றாங்கப்பா. அதான் யோசனையா இருக்கு
அடப்போங்கன்ன, இனிப்புக்குள்ள விஷம் இருந்தா என்ன கேடு
என்ன தம்பி இப்படி சொல்ற
நான் மட்டுமான்ன சொல்றேன், நம்ம டேபிள் சங்கர் இருக்காருல்ல
யாரு, புதுசா ஸ்வீட் கடை ஆரம்பிக்க போறாரே அவரா
ஆமாம் அவருதான், அவரு கூட என்ன சொல்றார் பாருங்க
ஒரு ஸ்வீட்டை பற்றி அந்த கடை முதலாளியோ, சமையல்காரரோ, விற்பவரோ உட்கார்ந்து யோசிக்காத பிரச்சனைக்ளை, பாயிண்டுகளை அந்த ஸ்வீட்டில் அவர் சயனைட்டை நுழைக்கிறார், ஆசிட்டை நுழைக்கிறார் என்று எதையாவது அதற்குள் நுழைத்து ஆக வேண்டிய கட்டாயத்தில், உட்கார்ந்து யோசித்து பதிவெழுதுவது, அது அந்த இசம், இந்த இசம் என்று எழுதுவது.. ஏன் என்று எனக்கு புரியவில்லை. நான் ஒரு பாமரன்.. என்னை போன்று கடையில் ஸ்வீட் வாங்கும் பாமரன்களுக்கு, ஸ்வீட் கலரா இருக்கா இலலையா? என்பதே முக்கியமாய் இருக்கும். அப்படியிருக்க, தேவையில்லாமல், உள்ளிருக்கும் சயனைட், ஆர்சனிக் பற்றியெல்லாம் எழுதி ஏன் தனிமனித தாக்குதல் நடத்தி, ஒரு புதிய கலவரத்தை உண்டாக்குகிறார்கள். என்றே புரியவில்லை.அடப்பாவி, அப்படியா சொல்றார்,
அது மட்டுமில்லன்ன, நம்ம படகுக்காரர் கூட
உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு ஸ்வீட் விற்கிறார்கள். இரண்டு வாங்கி சாப்பிடுகிறீர்கள். அதை ரசிக்கிறீர்கள். பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற இரண்டு கோணங்களுக்கு மேல், மூன்றாவது கோணமாய் அதில் என்ன இருக்கிறது என்று அலசி ஆராய்கிறீர்கள்.
ஆராய்ந்ததன் பயனாக உங்களுக்குக் கிடைத்ததெல்லாம் அதிர்ச்சிகள்தான். அதிலிருக்கும் சாயம், வெறும் சாயமல்ல, .. அது ஆர்சனிக் என்கிறீர்கள். இசம் என்கிறீர்கள். ஆசிட் என்கிறீர்கள். விஷம் தெரிகிறது, வன்மம் தெரிகிறது என்கிறீர்கள். நீங்கள் மெத்தப்படித்தவர்கள்.
எங்களுக்கு ஸ்வீட்டுடன் காம்பிமெண்டாக கோக் கிடைக்குமா , இல்லை வெறூம் தண்ணிதானா என்ற விவாதம்தான் ஓடுகிறது மனதில். நாங்கள் அறிவிலிகள்.
ஸ்வீட் வாங்கி முடிந்ததும் என் வாகனத்தை பிற வாகனங்கள் மோதாமல் எடுக்க முடியுமா, வீட்டுக்கு வரும்போது ஏதோ வாங்கிவரச் சொன்னாளே என்றெல்லாம் கேள்விகளோடு வெளிவருகிறோம் நாங்கள். இடையே ஸ்வீட் தந்த சில தித்திப்புகளின் நினைவுகள் இதம் தருகிறது எங்களுக்கு. நீங்கள் அதையெல்லாம் விடுத்து, வேறேதோ சிந்தனைகளில் உங்கள் நிகழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முன்னர் நடந்த நிஜ நிகழ்வுகளும், ஸ்வீட்டில் இருப்பது என்ன என்று யோசித்து யோசித்து கடை முதலாளி, சமையல்காரர், விற்பவர், சாப்பிட்டவர், விமர்சனம் எழுதினவன் என்று போட்டுத் தாக்குகிறீர்கள். தாக்குவது என்று தீர்மானித்தபின் நாசூக்காவது மண்ணாவது. இருக்கவே இருக்கிறது வார்த்தைகள். வந்து விழுகின்றன உங்களுக்கென்றே....
எங்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை.
நாங்கள் சொல்வது பொதுப்புத்தி. அதாவது அதிகமான பேரால் ஏற்றுக் கொள்ளப்படுவது பொதுப்புத்தி. அதை எதிர்ப்பதே அறிவுஜீவித் தனம். அது எங்களுக்கு வாய்க்கவில்லை. இதையே வேறுவிதமாய் சொல்வதானால் எல்லாவற்றிலும் நேர்சிந்தனையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது பொதுப்புத்தி. இல்லை அதில் எதாவது விஷம் இருக்கிறதா என்றும் நான் பார்ப்பேன் என்பது உங்கள் இசங்களும், தத்துவார்த்த சிந்தனைகளும் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அல்லது தானாய் உங்களுக்கு அமைந்த வரம். எங்களுக்கு அது கைகூடி வரவில்லை. நாங்கள் சாபம் பெற்றவர்கள்.
ன்னுதான் சொல்றார்
இப்ப என்ன பண்னனுங்கிற
அடப்போங்கன்ன, ஸ்வீட்டுக்குள்ள விஷம் இருந்தா கண்டுக்கக்கூடாதுன்னு இவங்களாம் சொல்றாங்கள்ள.. நம்ம டேபிள் சங்கர் இதே தொழில் இருக்கிறவருண்ணா... அவர் என்ன சொல்றார். விஷம் இருக்கான்னு ஏன் பாக்குறீங்க. இருந்தா என்ன, கலர் நல்லாயிருந்தா, சுத்தியிருக்கிற அலுமினிய பேப்பர் நல்லாயிருந்த ஸ்வீட்டை சாப்பிட சொல்றார்..... படகுகாரர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா... கிட்டத்தட்ட ஐநூறு பேர் அவர் படகுல போறாங்க (இன்றைய கணக்கு படி 469) ... அவர் கூட என்ன சொல்றார் பாருங்க.... ஸ்வீட்டில விஷம் இருந்தா பரவாயில்லை. நாம ஸ்வீட் வாங்க கடை முன்னால வண்டிய பார்க் பண்ணும் போது அதை யாரும் இடிக்காதது தான் முக்கியமுன்னு சொல்றார்..... பிறகு நீங்க ஏன் வருத்தப்படுறீங்க.... ஸ்வீட் இனிப்பாக இருக்கான்னு பாக்குறது நேர் சிந்தனை / பொது புத்திங்கீறார். அதில் விஷம் இருக்கான்னு பாக்குறது தப்புங்கிறார்.....பிறகு என்ன...பொது புத்திபடியே செய்ய வேண்டியது தான். சாப்பிட்டுட்டு கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் அவஸ்தைப்பட வேண்டியது தான்
-oOo-
மிட்டாய் கடையில் மிட்டாய்களின் மேல் ஈ வரக்கூடாது என்று
- பூச்சி மருந்து அடிப்பது நகைச்சுவை நடிகர் என்றால் அது காமெடி.
- ஆனால் அதையே ஒரு கதாநாயகன் செய்வது........ என்னத்த சொல்ல .....
- பழம் தருபவன் நண்பன்
- விஷம் தருபவன் எதிரி
- பழத்தினுள் விஷத்தை மறைத்து தருபவன்...... துரோகி
- பழம் என்று காய்ந்து போன கொட்டையை ஏமாற்றி விற்பது ... மோசடி / பிராடு (ஹி ஹி ஹி இந்த கடைசி பாய்ண்ட் மட்டும் வேற விஷயம்.... புரியவில்லை என்றால் அதிகம் குழம்பிக்கொள்ளாதீர்கள்)
2004ல் ரஜினி ஒரு படத்திற்கு பூஜை போட்டு விளம்பரம் தந்தார். வார்த்தைகள் ஞாபகம் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட - என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று. அதே பாணியில் சொல்வதானால்
- விஷம் தருபவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறேன்.
- பழம் தருபவர்களிடமிருந்தும், (உள்ளே விஷம் இருக்கிறாதா என்று) பழத்தை ஆராயக்கூடாது என்று சொல்பவர்களிடமிருந்தும், இறைவா, எங்களை காப்பாற்று
71 மறுமொழிகள்:
கொஞ்ச நாளா அதிகம் காணறதில்ல..
//என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று. //
சூப்பர்...
ஜக்குபாய் முடிச்சு, நந்தினி கதையிலிருந்து எடுக்கப் பட்டிருக்கும்போல தல...,
ஜக்குபாய் சொல்வதுதான் இறைவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்
ரொம்ப டெரராக இருக்கு.
வெல்கம் பேக் டாக்டர்.
ஆரம்பமே அதிரடியா இருக்கு.
மத்ததெல்லாம் புரிஞ்சிடுச்சு. அதென்ன விமர்’சணம்’?
//T.V.Radhakrishnan said...
கொஞ்ச நாளா அதிகம் காணறதில்ல..
//
வேலை அதிகம் சார்
பீர் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஜக்குபாய் முடிச்சு, நந்தினி கதையிலிருந்து எடுக்கப் பட்டிருக்கும்போல தல..., //
அசத்துறீங்க தல
//கோவி.கண்ணன் said...
ரொம்ப டெரராக இருக்கு.//
நீங்க காமன் மேனா.... பயமா இருக்கு !!!
//முரளிகண்ணன் said...
வெல்கம் பேக் டாக்டர். ஆரம்பமே அதிரடியா இருக்கு.//
:) :)
//ILA(@)இளா said...
மத்ததெல்லாம் புரிஞ்சிடுச்சு. அதென்ன விமர்’சணம்’?//
எழுத்துப்பிழை தலைவரே
Kalakkal
////ILA(@)இளா said...
மத்ததெல்லாம் புரிஞ்சிடுச்சு. அதென்ன விமர்’சணம்’?//
எழுத்துப்பிழை தலைவரே//
நாங்க வேற மாதிரி நினைச்சுட்டோம்
//Pot"tea" kadai said...
Kalakkal//
நன்றி தலைவரே
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
////ILA(@)இளா said...
மத்ததெல்லாம் புரிஞ்சிடுச்சு. அதென்ன விமர்’சணம்’?//
எழுத்துப்பிழை தலைவரே//
நாங்க வேற மாதிரி நினைச்சுட்டோம்//
என்ன மாதிரி ?
//மதியம் வெள்ளி, //
காலைலயே மதியம்னு வருதே சார்...
கருத்துகளை கச்சிதமாக எடுத்து வைத்துள்ளீர்கள். புரிபவர்களுக்குப் புரிந்தால் சரி!
:-))
//பரிசல்காரன் said...
//மதியம் வெள்ளி, //
காலைலயே மதியம்னு வருதே சார்...
//
ஆம். கவனிக்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி பாஸ்
//பரிசல்காரன் said...
கருத்துகளை கச்சிதமாக எடுத்து வைத்துள்ளீர்கள். புரிபவர்களுக்குப் புரிந்தால் சரி!
:-))
//
புரிந்ததா ??? :)
பரிசல்காரன் said...
கருத்துகளை கச்சிதமாக எடுத்து வைத்துள்ளீர்கள். புரிபவர்களுக்குப் புரிந்தால் சரி!
அது சரி...
நாங்கள் பார்த்துக்கொள்கிறேன்.
இதென்ன...டாக்டர் யாரையெல்லாம் கூட்டு சேர்க்கின்றீர்கள்..?
லேசா புரியறா மாதிரி இருக்கு...
ஏன் வம்பை வாங்கி நட்பை இழக்கனுமா...என்றுதான்....
:-)
//டேபிள் சங்கர் //
//படகுக்காரர்//
போன்றவர்கள் மாதிரி ஸ்வீட் ஸ்டாலுக்கு போய் வந்து அம்பிகாபதி எழுதிய இடுகைதான்
விமர்சணம் என்று நினைத்துவிட்டோம்
//உரையாடல் போட்டிக்கு அனுப்பப்படாத கற்பனை உரையாடல்//
:))
டாக்டர் ஸார்..
வந்துட்டீங்களா..? நீங்களும் வராம கொஞ்சம் போரடிச்ச மாதிரி இருந்தது..!
டேபிள்.. புரியுது.. அது யாரு படகுகாரர்..?
ரஜினியின் அந்தப் படம் ஜக்குபாய்.. அதைத்தான் இப்போ சரத்குமாரை வைச்சு எடுத்திருக்காங்க..
அந்த இலக்கிய சந்திப்பில் அன்பை பரிமாறிக் கொண்ட பதிவர்கள் யாரோ..?
கிண்டலா? அல்லது உண்மையா?
/என்னை போன்று கடையில் ஸ்வீட் வாங்கும் பாமரன்களுக்கு, ஸ்வீட் கலரா இருக்கா இலலையா? என்பதே முக்கியமாய் இருக்கும்.
அப்படியிருக்க, தேவையில்லாமல், உள்ளிருக்கும் சயனைட், ஆர்சனிக் பற்றியெல்லாம் எழுதி ஏன் தனிமனித தாக்குதல் நடத்தி, ஒரு புதிய கலவரத்தை உண்டாக்குகிறார்கள். என்றே புரியவில்லை. //
எப்போது ஒரு பொது புத்திக்காரனுக்கோ, பாமரனுக்கோ, நீங்கள் சொல்லும் ஏதும் புரியவில்லை ஏறவில்லை, எனும்போதே அது நீங்கள் சொல்கிறார்போல் உள்ள அறிவுஜீவிகளுக்கு மட்டுமே புரிகிற சமாச்சாரம்தான். அதை பற்றி பாமரனான ஆட்களுக்கு என்ன கவலை.
அது சரி யாரு அது டேபிள் சங்கர்..?:)
/அடப்போங்கன்ன, ஸ்வீட்டுக்குள்ள விஷம் இருந்தா கண்டுக்கக்கூடாதுன்னு இவங்களாம் சொல்றாங்கள்ள.. நம்ம டேபிள் சங்கர் இதே தொழில் இருக்கிறவருண்ணா... அவர் என்ன சொல்றார். விஷம் இருக்கான்னு ஏன் பாக்குறீங்க. இருந்தா என்ன, கலர் நல்லாயிருந்தா, சுத்தியிருக்கிற அலுமினிய பேப்பர் நல்லாயிருந்த ஸ்வீட்டை சாப்பிட சொல்றார்..... //
அவரு அப்படி சொல்லவேயில்லைண்ணா.. அவருக்கு நீங்க சொல்ற இசம் எல்லாம் புரியாத பாமரனா இருந்திருப்பாரு. அப்போ அறிவு ஜீவிகளின் வேலை என்னண்ணா.. அதுல விஷம் இருக்குன்னு நிருபிக்கணும். நீங்க நிருப்பிக்கிற விஷயஙகளை பாமரனும், புரிஞ்சிட்டு ஏத்துக்கிற மாதிரி புருவ் பண்ணனும். அப்பத்தான் அவன் நம்புவான்.
நம்ம பயக எல்லாம் காட்டு பயத்தான்.. அவன் எல்லாம் மெல்லமாத்தான் வருவான்.. (தேவர்மகன் சிவாஜி டோனில் படிக்கவும்.)
என்ன டாக்டர் திடிரெனு பொங்கி எழுந்துட்டிங்க...
சரி சரி அந்த பதிவர்கள் யாருன்னு எனக்கு மட்டும் எஸ் எம் எஸ் பண்ணுங்க..
ரொம்ப நாளா ஆளைக் காணோமே....மருத்துவம் பார்க்கறதை விட்டுட்டு ரிஸர்ச் செய்யப்போயிட்டீங்களா?
இனிப்பை ஆராய்ஞ்சதைத்தான்.....
அடிதடியோட விமரிசையாப் பதிவர் சந்திப்பு நடந்துச்சா?
// துளசி கோபால் said...
ரொம்ப நாளா ஆளைக் காணோமே....மருத்துவம் பார்க்கறதை விட்டுட்டு ரிஸர்ச் செய்யப்போயிட்டீங்களா?//
இவரின் புத்தகங்களால் பல மருத்துவர்களுக்கு அரசு வேலையும், பலருக்கு மேல் படிப்பிற்கு இடமும் கிடைத்திருக்கிறது.
கடைசி பத்திக்கு மட்டும் :-(
சோக்க எழுதி இருக்கிங்க டாக்டர்
//கலர் நல்லாயிருந்தா, சுத்தியிருக்கிற அலுமினிய பேப்பர் நல்லாயிருந்த ஸ்வீட்டை சாப்பிட சொல்றார்// :)
//எப்போது ஒரு பொது புத்திக்காரனுக்கோ, பாமரனுக்கோ, நீங்கள் சொல்லும் ஏதும் புரியவில்லை ஏறவில்லை, எனும்போதே அது நீங்கள் சொல்கிறார்போல் உள்ள அறிவுஜீவிகளுக்கு மட்டுமே புரிகிற சமாச்சாரம்தான். அதை பற்றி பாமரனான ஆட்களுக்கு என்ன கவலை.
//
அதைத்தானே சாமி இங்கும் கூறியுள்ளார்கள் :) :)
மறுபடியும் வாசித்து பாருங்கள்
//கும்க்கி said...
பரிசல்காரன் said...
கருத்துகளை கச்சிதமாக எடுத்து வைத்துள்ளீர்கள். புரிபவர்களுக்குப் புரிந்தால் சரி!
அது சரி...
//
:) :)
//கும்க்கி said...
நாங்கள் பார்த்துக்கொள்கிறேன்.
இதென்ன...டாக்டர் யாரையெல்லாம் கூட்டு சேர்க்கின்றீர்கள்..?
//
இது கூடவா தெரியவில்லை :) :)
//Prabhu Rajadurai said...
:-)
//
நன்றி சார்
//போன்றவர்கள் மாதிரி ஸ்வீட் ஸ்டாலுக்கு போய் வந்து அம்பிகாபதி எழுதிய இடுகைதான்
//
அது தான் தல.... :) :) இது முழுக்க முழுக்க ஸ்வீட் ஸ்டால் பற்றியது தான்
//ஜோ/Joe said...
//உரையாடல் போட்டிக்கு அனுப்பப்படாத கற்பனை உரையாடல்//
:))
//
நன்றி சார்
//வந்துட்டீங்களா..? நீங்களும் வராம கொஞ்சம் போரடிச்ச மாதிரி இருந்தது..!
//
நீங்கள் இருதீர்ந்களே அண்ணா
//கிண்டலா? அல்லது உண்மையா?
//
முதல் வரியை பார்த்தீர்களா !!
//அவரு அப்படி சொல்லவேயில்லைண்ணா..//
சரி, விஷம் இருக்கு என்று பார்க்க வேண்டுமா, வேண்டாமா - ஸ்வீட் பற்றி டேபிள் என்ன சொல்கிறார் ??
//என்ன டாக்டர் திடிரெனு பொங்கி எழுந்துட்டிங்க...//
சும்மாத்தான்
//சரி சரி அந்த பதிவர்கள் யாருன்னு எனக்கு மட்டும் எஸ் எம் எஸ் பண்ணுங்க..//
அக்னிப்பார்வையும் புருனோவும் - முதல் வரியை திரும்ப படிக்கவும்
//அடிதடியோட விமரிசையாப் பதிவர் சந்திப்பு நடந்துச்சா?//
கற்பனையில் !!
முதல் வரியை மறந்து விட்டீர்களா ??
//கடைசி பத்திக்கு மட்டும் :-(//
முதல் பத்திக்கு ???
கற்பனை உரையாடலில் கூட எதை எழுதவேண்டும், எதை எழுத கூடாது என்று சக பதிவர்களை கட்டுப்படுத்தும் முதன்மை பதிவர் மற்றும் பிரபல எழுத்தாளர் லக்கி அவர்களே, இது உங்களுக்கே நியாயமா :) :)
//மணிகண்டன் said...
கிசுகிசுவை எடுத்து விட்டுடுங்க ப்ருனோ. வேதனையா இருக்கு.//
தல. இது கற்பனை கதை தல
//jackiesekar said...
சோக்க எழுதி இருக்கிங்க டாக்டர்//
நன்றி பாஸ்
//Robin said...
//கலர் நல்லாயிருந்தா, சுத்தியிருக்கிற அலுமினிய பேப்பர் நல்லாயிருந்த ஸ்வீட்டை சாப்பிட சொல்றார்// :)//
நன்றி சார்
'ஆழ்ந்து ' வாசிச்சுக்கிட்டே போனதுலே முதல் வரி மனசில் இருந்து கழண்டுபோயிருச்சு!:-))))
ஒருநிமிச(ம்) மயக்க ஊசி?
டாக்டரில்லையா? :-))))
என்கிட்டே அந்த பழத்தை மூன்று மடங்கு விலை வைத்து விற்று விட்டார்கள்... ஆவ்வ்வ்வ்வ்...
//'ஆழ்ந்து ' வாசிச்சுக்கிட்டே போனதுலே முதல் வரி மனசில் இருந்து கழண்டுபோயிருச்சு!:-))))
ஒருநிமிச(ம்) மயக்க ஊசி?
டாக்டரில்லையா? :-))))
//
:) :) :) :)
//என்கிட்டே அந்த பழத்தை மூன்று மடங்கு விலை வைத்து விற்று விட்டார்கள்... ஆவ்வ்வ்வ்வ்...//
விஷம் இலவச இணைப்பா ??
எதோ தொடர்புடைய பதிவு ஒன்று என்று தெரிகிறது டாக்டர்! :-(
கலக்கல்ஸ் :)
நான் பாமரன், சாமானியன் என்று மீண்டும் உறுதி செய்கிறேன் ;-)
புருனோ!! எழுதுங்க நிறைய!!
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
- சென்னைத்தமிழன்
டாக்டர் சார்... ஒண்ணும் புரியலையே..? :(
எனக்கு வயசாகிடுச்சோ! :(
I can't agree with you more than that
//Vijayashankar said...
எதோ தொடர்புடைய பதிவு ஒன்று என்று தெரிகிறது டாக்டர்! :-(
//
எதுவென்று தெரிகிறதா சார்
//enRenRum-anbudan.BALA said...
கலக்கல்ஸ் :)
நான் பாமரன், சாமானியன் என்று மீண்டும் உறுதி செய்கிறேன் ;-)//
:)
//தேவன் மாயம் said...
புருனோ!! எழுதுங்க நிறைய!!
//
நன்றி சார்
//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
டாக்டர் சார்... ஒண்ணும் புரியலையே..? :(
எனக்கு வயசாகிடுச்சோ! :(//
!!
//உறையூர்காரன் said...
I can't agree with you more than that
//
நன்றி சார்
Dr.(Buru)No,
பெயரைக் கேட்டாலே பலருக்கு
'டெரராக' அதிருது ! :)
நல்லோருக்கு 'மருதநாயகம்' பெயரைப் போல்
வீரத்தை விளைவிக்குது !
தல மேல இருக்கிற நாலஞ்சையும் பிச்சுக்க வச்சிட்டீங்களே .. ஆனா ஒண்ணு மட்டும் புரிஞ்சி போச்சு.. நான் பொதுப்புத்தி, அறிவு ஜீவி ரெண்டும் இல்லைன்னு .. ஏதாவது புரிஞ்சாதானே!
Post a Comment