அப்படியென்றால் தற்போதைய வேலை நேரம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. என்னவாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்...தொடர்ந்து படிக்கும் முன்னர் என்னாக இருக்கும், ஒரு அரசு மருத்துவம் வாரம் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது என்று ஒரு நிமிடம் நீங்களே ஊகித்து / யோசித்து பாருங்கள்... இனி தொடர்ந்து படிக்கலாம்
ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்
இவர்கள் இருவரும் காலை 8 முதல் மாலை 5 வரை பணியில் இருக்க வேண்டும்.
அதன் பிறகு ஒருவர் மாலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை 8 வரை பணியில் இருந்து விட்டு தொடர்ந்து மாலை 8 மணி வரை களப்பணி செய்ய வேண்டும்
அதாவது
மருத்துவர் 1, மருத்துவர் 2 என்று எடுத்துக்கொண்டால்
மருத்துவர் 1 பணி நேரம் - வாரத்திற்கு 99 மணி நேரம்
- திங்கள் காலை 8 முதல் செவ்வாய் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
- புதன் காலை 8 முதல் வியாழன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
- வெள்ளி காலை 8 முதல் சனி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
- செவ்வாய் மாலை 5 முதல் புதன் காலை 8 வரை - 15 மணி நேரம்
- வியாழன் மாலை 5 முதல் வெள்ளி காலை 8 வரை - 15 மணி நேரம்
- சனி மாலை 5 முதல் திங்கள் காலை 8 வரை - 39 மணி நேரம்
- செவ்வாய் காலை 8 முதல் புதன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
- வியாழன் காலை 8 முதல் வெள்ளி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
- சனி காலை 8 முதல் திங்கள் மாலை 5 வரை - தொடர்ந்து 57 மணி நேரம்
- திங்கள் மாலை 5 முதல் செவ்வாய் காலை 8 வரை - 15 மணி நேரம்
- புதன் மாலை 5 முதல் வியாழன் காலை 8 வரை - 15 மணி நேரம்
- வெள்ளி மாலை 5 முதல் சனி காலை 8 வரை - 15 மணி நேரம்
பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால்
மாநிலம் | வேலை நேரம் |
கேரளா | 9 am முதல் 1 pm / 2 முதல் 3 pm. அழைப்பு பணி கிடையாது |
கர்நாடகம் | 9 am முதல் 1 pm / 2 முதல் 4.30 pm. அழைப்பு பணி கிடையாது |
மத்திய அரசு நிறுவனங்கள் | பிற மத்திய அரசு அலுவலகங்களை போலவே. அழைப்பு பணி கிடையாது |
தமிழகம் | வாரத்திற்கு 123 மணி நேரம் |
அதே நேரம் பிற மாநிலங்களின் ஊதியம்
மாநிலம் | பணியில் சேரும் போது | ஊதிய விகிதம் மற்றும் ஊதிய உயர்வு | ||
1 | 2 | 3 | ||
ஆந்திர பிரதேசம் | உதவி மருத்துவர் 11250 | உதவி குடியுரிமை மருத்துவர் 14300 8 வருடம் கழித்து | குடியுரிமை மருத்துவர் 17035 16 வருடத்தில் | இணை இயக்குனர் 18355 காலியிடம் பொருத்து |
கர்நாடகம் | மருத்துவ அலுவலர் 14050 | மூத்த மருத்துவர் அலுவலர் 15200 6 வருடத்தில் | உதவி முதன்மை மருத்துவ அலுவலர் 18150 13 வருடத்தில் | இணை இயக்குனர் 23200 |
கேரளா | உதவி மருத்துவர் 11910-19350 | குடியுரிமை மருத்துவர் 16650- 23200 8 வருடத்தில் | துனை இயக்குனர் 23200 – 31150 16 வருடத்தில் | கூடுதல் இயக்குனர் 25400 – 33100 காலியிடம் பொருத்து |
தமிழகம் | உதவி மருத்துவர் 8000 | மூத்த உதவி மருத்துவர் 9100 காலியிடம் பொருத்து - சுமார் 17 வருடம் கழித்து | குடியுரிமை மருத்துவர் 10000 காலியிடம் பொருத்து - சுமார் 20 வருடம் கழித்து | மூத்த குடியுரிமை மருத்துவர் 12000 காலியிடம் பொருத்து - சுமார் 22 வருடம் கழித்து |
இந்த வேலை நேரம் தற்சமயம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
இந்த அரசாணையின் படி வேலை நேரம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது
மூன்று மட்டும் அதற்கும் குறைவான மருத்துவர்கள் பணிபுரியும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரின் வேலை நேரம்
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
- மாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை - தொற்றுநோய், உணவுநஞ்சேறல், தடுப்பூசி பாதிப்புகள், பேரிடர் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டும் அழைப்பு சுழற்சி பணி
- காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை - நிலைய பொறுப்பு மருத்துவ அலுவலர் + 1 / 2 மருத்துவர்கள்
- மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை - ஒரு மருத்துவர்
- இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை - ஒரு மருத்துவர்
மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் மட்டும் 24 மணிநேரமும் ஒரு மருத்துவர் கட்டாயம் பணியில் இருப்பார்






7 மறுமொழிகள்:
ஓட்டுப் போட்டாச்சு தல
//scan 2ம் பக்கத்தில் 1.30க்கு மேல் எப்படி பணி செய்வது என்பது பற்றி எதுவும் தெரியவில்லையே தலைவரே
//
தல
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை புற நோயாளிகள் பிரிவு செயல்படும்
அதிக வேலை நேரத்திற்கு அரசை மட்டுமே குறை சொல்லவும் முடியாது இல்லையா புருனோ? எத்தனை பேர் கிராமங்கள் பணிபுரிய தயாராக இருக்கிறார்கள்?
அதே நேரம் ஆட்கள் இல்லை என்று கூறி இருப்பவர்களை பிழிவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒரு முட்டையா? கோழியா? பிரச்சினை என்று நினைக்கிறேன்.
//அதிக வேலை நேரத்திற்கு அரசை மட்டுமே குறை சொல்லவும் முடியாது இல்லையா புருனோ?//
வேறு யாரை குறை கூறுகிறீர்கள்
//எத்தனை பேர் கிராமங்கள் பணிபுரிய தயாராக இருக்கிறார்கள்?//
இருக்கும் காலியிடங்களை விட பல மடங்கு அதிகம் பேர்
கட்டாய சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் இடுகையை வாசியுங்கள் உங்களுக்கு உண்மை புரியும் :) :)
//இது ஒரு முட்டையா? கோழியா? பிரச்சினை என்று நினைக்கிறேன்.//
உங்கள் ஊகம் தவறு. இதில் பிரச்சனை என்ன என்பது குன்றில் மேல் இருக்கும் விளக்கு போல் தெளிவான விஷயம்
சந்தேகம் இருந்தால் கேட்கவும்
ஓட்டு போட்டாச்சு தல
ரொம்ப நாளா ஆள காணோமே தல..
Post a Comment