இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Saturday, October 17, 2009

மருத்துவத்தில் ரகசியங்கள் மற்றும் ரகசியங்களுக்கு விலக்குகள்

பிணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போதோ, அல்லது பிற சமயங்களிலோ எனக்கு தெரியவரும் விபரங்களில், வெளியிடப்படக்க்கூடாதவைகளை நான் வெளியிடமாட்டேன்
- ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி(யின் ஒரு ப்குதி)

ஒரு நோயாளி பற்றியோ அவரது நோயை பற்றியோ விபரங்களை மருத்துவர் வெளியிடக்கூடாது என்பது மிக முக்கிய விதிமுறையாகும். இது குறித்து சில விஷயங்கள்
  • நோயாளியின் அனுமதியின்றி மருத்துவர் நோயாளி குறித்த விபரங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தக்கூடாது
  • நோயாளி 18 வயதிற்கு மேற்பட்டவர் என்றால் அவரது பெற்றோரிடம் தெரிவிக்கக்கூட நோயாளியின் அனுமதி வேண்டும்
  • கணவன் மனைவி என்றால் கூட ஒருவர் பற்றிய விபரங்களை அடுத்தவரிடம் அனுமதியில்லாமல் தெரிவிக்க கூடாது
  • ஒரு பணியாளருக்கு சிகிச்சை அளிக்க அவரது முதலாளி பணம் செலுத்தினால் கூட அந்த பணியாளரின் அனுமதி இன்றி அந்த முதலாளிக்கு நோயின் விபரங்களை தெரிவிக்க கூடாது
  • அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த விதி பொருந்தும்
  • விசாரணை கைதிகளின் நோய் குறித்த விபரங்களை அவர்களது அனுமதியில்லாமல் காவல்துறையினரிடம் தெரிவிக்க முடியாது. ஆனால் தண்டனை அளிக்கப்பட்டு விட்டால் அந்த நோயாளியின் உடல் நிலை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க நோயாளியின் அனுமதி தேவையில்லை
  • மருத்துவ கட்டுரைகள் எழுதப்படும் போது நோயாளியின் பெயர் மாற்றப்படவேண்டும் / மறைக்கப்படவேண்டும்.
இது போல் விதிகள் இருக்கும் நேரத்தில் சிறப்புரிமை கருத்துப்பரிமாற்றம் (Privileged Communication) அதாவது நோயாளியின் அனுமதியின்றியே மருத்துவர் அந்த நோய் குறித்த விபரங்களை வெளியிடக்கூடிய சூழல்கள் சிலவும் உள்ளன
  • தொற்றுநோய்கள் : உதாரணமாக ஒரு உணவக சமையல்காரர் / உணவு பரிமாறுபவர் டைபாய்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். (அவர் சமையல் செய்வதின் மூலம் அல்லது பரிமாறுவதன் மூலம் பல நூறு பேர்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளதால்) மருத்துவர் அவரை ஒரு வாரம் விடுப்பு எடுக்க கூறுகிறார். ஆனால் சமையல்காரர் தனது பணியை தொடர்ந்து செய்தால் அந்த நிலையில் பொது நலன் கருதி மருத்துவர் தகவலை வெளியிடலாம்
  • அறிவிக்கப்பட்டுள்ள தொற்று நோய்கள் : மருத்துவரிடம் சிகிச்சை பெறும் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ள தோற்று நோய்களில் ஏதாவது ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தகவலை மருத்துவர் அதிகாரிகளிடம் தெரிவிக்க நோயாளியின் அனுமதி தேவையில்லை (உதாரணம் ஒருவருக்கு பரிசோதனையின் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அந்த விபரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டும்)
  • சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் என்ற சந்தேகம் இருந்தால் :  உதாரணம் ஒருவர் வயிற்றில் துப்பாக்கி குண்டுடன் / கத்திக்குத்துடன் வந்தால் காவல்துறையினரிடம் தெரிவிக்க நோயாளியின் அனுமதி தேவையில்லை
  • பணியில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் : உதாரணமாக ஒருவருக்கு நிறக்குருடு (நிறங்களை பிரித்து பார்ப்பதில் பிரச்சனை) என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர் நிறங்களை அடையாளம் காண வேண்டிய ஒரு தொழிலில் (உதாரணம் ஓட்டுனர்) இருந்தால், அதனால் பலரும் பாதிக்கப்படலாம் என்ற பட்சத்தில் மருத்துவர் அந்த தகவலை அந்த நபர் பணிபுரியும் இடத்திற்கு வெளியிடலாம்.
  • பிணியாளரின் நலன் கருதி : உதாரணமாக தற்கொலை எண்ணம் கொண்டவர் என்றால் அந்த நோயை பற்றி மட்டும் பெற்றொரிடம் தெரியப்படுத்த அனுமதி தேவையில்லை. ஆனால் தற்கொலை எண்ணம் கொண்டவரின் புகை பிடிக்கும் பழக்கத்தை அவரது பெற்றொரிடம் தெரியப்படுத்துவது தவறு !
  • நீதிமன்றங்களில் விசாரணைகளின் போது அல்லது பிற வழக்கு விசாரணைகளின் போது

19 மறுமொழிகள்:

Prabhu Rajadurai said...

டாக்டர்,

இப்படி முந்திக்கிட்டீங்களே! இந்த மேதாவிலாசத்தைப் பாருங்க!!

”தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக எல்லா அரசியல் கட்சித் தலைவர்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டையும் தரும்படி கேட்டு எங்கே விண்ணப்பிப்பது என்று யாராவது தயவுசெய்து தெரிவியுங்கள்!

http://www.keetru.com/dheemtharikida/index.php”

Anonymous said...

Dear Dr,

Then what about medical transcription. Those drs in america, specifically informs all details of the patents and their illness. Is it against the law???

Prabhu Rajadurai said...

டாக்டர்,

எங்கே இவ்வாறு விரிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று கூற முடியுமா?

Code of Ethics Regulations, 2002ல் சுருக்கமாகத்தானே இந்த ஒழுங்கினைப் பற்றி கூறப்பட்டுளளது.

அடுத்து,நீங்கள் privileged communication என்பதற்கு எதிர்மறையான அர்த்தம் கொடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

privileged communication என்பவை அனுமதி பெறாமல் வெளியிடப்படமுடியாத தகவல் பரிமாற்றங்கள். உதாரணமாக, இந்திய சாட்சி சட்டம் பிரிவு 126ல் கூறப்படுவது போல (http://www.vakilno1.com/bareacts/indianevidenceact/CHAPTER9/S126.html)

Prabhu Rajadurai said...

”சதாம் எவ்வளவு கொடூரமான கொலைகாரராக இருக்கட்டும். அவர் ஒரு மனிதர். தனது உடல், தன்னைப் பற்றிய விபரங்களின் மீது முழு உரிமை உண்டு. உதாரணமாக அவருக்கு ஒரு நோய் இருக்கிறது. அதை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் வைத்திருக்க அவருக்கு முழு உரிமை உண்டு. அமெரிக்கா தனது சோதனைகளை எந்த அளவில் நிறுத்திக் கொண்டது என்பது யாருக்குத் தெரியும்? சதாம் தன் உடலைப் பற்றி ரகசியமாக வைத்திருக்க விரும்பியிருக்கும் சில விஷயங்கள் தற்போது அவரது அனுமதியின்றியே ஜியார்ஜ் புஷ் கையில் இருக்கும் வாய்ப்பு உண்டு...”
http://marchoflaw.blogspot.com/2006/07/ii.html

வெண்பூ said...

நல்ல தேவையான தகவல்கள். ஆனால் இதை எல்லா டாக்டர்களும் பின்பற்றுகிறார்களா புருனோ? உதாரணமாக பிணியாளர் எந்த வயதுடையவராக இருந்தாலும் பிரச்சினையை முதலில் டாக்டர் சொல்வது உடன் வந்தவருடன்தான், இல்லையா?

..:: Mãstän ::.. said...

உறுதிமொழி நல்லாத்தான் இருக்கு, ஆனால் எவ்வளவு மருத்துவர்கள்
ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி பின்பற்றுகிறார்கள்???

எல்லாம் காசு... சில பேர் அப்படிதானே இருக்கிறார்கள், இல்ல இல்ல பல பேர். மருத்துவம் சேவை என்பது மாறி தொழில் என்று மாறி விட்டது.

டாக்டர், நீங்க மூளையை பற்றி அதன் இடது முளை செயல்பபடுகளை பற்றியும் விளக்கமாக பதிவு போட முடியுமா?

Dr.ராம் said...

உறுதிமொழியை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நினைத்தாலும் நமது சூழலில் அது முடியாது என்றே தோன்றுகிறது..எத்தனை உறவினர்கள் (கவனிக்கவும்.. நோயாளிகள் அல்ல) மருத்துவர்கள் தங்களிடம் சரியாக விளக்கம் கூறுவதில்லை என்று கோபம் கொள்கின்றனர்? ..நோயாளிகளை விட கூட வருபவர்களிடம் விளக்கம் சொல்வதுதான் கடினமான பணி.. இல்லையா ப்ருனோ சார்.

புருனோ Bruno said...

//இப்படி முந்திக்கிட்டீங்களே! இந்த மேதாவிலாசத்தைப் பாருங்க!!//

:) :)

//அடுத்து,நீங்கள் privileged communication என்பதற்கு எதிர்மறையான அர்த்தம் கொடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். //

இருக்கலாம். ஆனால் சரியான விளக்கம் எனக்கு புரியவில்லை. நீங்கள் விளக்கினால் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்கிறேன்

126. Professional communications - No barrister, attorney, pleader or vakil, shall at any time be permitted, unless with his client's express consent to disclose any communication made to him in the course and for thee purpose of his employment as such barrister, pleader, attorney or vakil, by or on behalf of his client, or to state the contents or condition of any document with which he has become acquainted in the course and for the purpose of his professional employment or to disclose any advice given by him to his client in the course and for the purpose of such employment.

Provided that nothing in this section shall protect from disclosure -

1. Any communication made in furtherance of any illegal purpose,

2. Any fact observed by any barrister, pleader, attorney or vakil, in the course of his employment as such showing that any crime or fraud has been committed since the commencement of his employment.

It is immaterial whether the attention of such barrister, pleader, attorney or vakil was or was not directed to such fact by or on behalf of his client.

Explanation - The obligation stated in this section continues after the employment has ceased.

Illustrations

(a) A, a client, says to B, an attorney - "I have committed forgery and I wish you to defend me."

As the defense of a man known to be guilty is not a criminal purpose, this communication is protected from disclosure.

(b) A, a client, says to B, and attorney - "I wish to obtain possession of property by the use of forged deed on which I request you to sue."

The communication being made in furtherance of criminal purpose, is not protected from disclosure.

(c) A, being charged with embezzlement retains B, an attorney to defend him, In the course of the proceedings B observes that an entry has been made in A's account book, charging A with the sum said to have been embezzled, which entry was not in the book at the commencement of his employment.

This being a fact observed by B in the course of his employment showing that a fraud has been committed since the commencement of the proceedings, it is not protected from disclosure.


புரியவில்லை.... மேலும் விளக்க முடியுமா

புருனோ Bruno said...

//http://marchoflaw.blogspot.com/2006/07/ii.html//

சுட்டிக்கு நன்றி

புருனோ Bruno said...

//Then what about medical transcription. Those drs in america, specifically informs all details of the patents and their illness. Is it against the law???//

உங்கள் கேள்வியை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை

மேலும் விபரம் அளிக்க முடியுமா

புருனோ Bruno said...

//நல்ல தேவையான தகவல்கள். ஆனால் இதை எல்லா டாக்டர்களும் பின்பற்றுகிறார்களா புருனோ? உதாரணமாக பிணியாளர் எந்த வயதுடையவராக இருந்தாலும் பிரச்சினையை முதலில் டாக்டர் சொல்வது உடன் வந்தவருடன்தான், இல்லையா?//

அதற்கு அந்த நபர் (நோயாளி) அனுமதி அளிக்க மறுத்தும் மருத்துவர் கூறினால் தான் தவறு.

புருனோ Bruno said...

//உறுதிமொழி நல்லாத்தான் இருக்கு, ஆனால் எவ்வளவு மருத்துவர்கள்
ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி பின்பற்றுகிறார்கள்??? //

எண்ண முடியாத அளவு

புருனோ Bruno said...

//எல்லாம் காசு...//
மருத்துவர்கள் இலவசமாக தொழில் பார்த்தால் அவர்களது குடும்ப செலவை யார் அளிப்பார்கள்

// சில பேர் அப்படிதானே இருக்கிறார்கள், இல்ல இல்ல பல பேர். மருத்துவம் சேவை என்பது மாறி தொழில் என்று மாறி விட்டது.//

மருத்துவர்கள் இலவசமாக தொழில் பார்த்தால் அவர்களது குடும்ப செலவை யார் அளிப்பார்கள்

ஏன் மருத்துவர் பனம் வாங்காமல் இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லுங்கள்

புருனோ Bruno said...

//.நோயாளிகளை விட கூட வருபவர்களிடம் விளக்கம் சொல்வதுதான் கடினமான பணி.. இல்லையா ப்ருனோ சார்.
//

உண்மைதான் தல

Prabhu Rajadurai said...

நீங்கள் சிறப்புரிமை கருத்துப்பரிமாற்றம் என்று குறிப்பிடுவது, நோயாளியின் அனுமதியின்றி மருத்துவரால் தகவல் அளிக்கக் கூடிய உரிமை.

ஆனால் சிறப்புரிமை கருத்துப்பரிமாற்றம் என்பது நீங்கள் குறிப்பிடுவதின் எதிர்ப்பதம். அதாவது ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரரின் அனுமதியின்றி அவர் தன்னிடம் கூறியதை, நீதிமன்றத்தின் முன் சாட்சியாக கூட கூற முடியாது. இதையே பிரிவு 126ல் கூறுவது.

அது போலவே, கணவன் மனைவிக்கிடையேயான கருத்துப் பரிமாற்றமும், இந்த வகைக்குள் வரும். சில விதிவிலக்குகள் உள்ளன.

எனவே, privileged communication என்பது வெளியிடப்பட முடியாத பரிமாற்றங்கள்...வெளியிடப்பட முடியும் பரிமாற்றங்கள் அல்ல.

புருனோ Bruno said...

//எனவே, privileged communication என்பது வெளியிடப்பட முடியாத பரிமாற்றங்கள்...வெளியிடப்பட முடியும் பரிமாற்றங்கள் அல்ல.//

!!!

அப்படியென்றால் சட்டம் சார் மருத்துவ புத்தகங்களின் ஏன் இந்த பதத்தை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை

Prabhu Rajadurai said...

Can you please quote a sentence from your medico-legal book, wherein the phrase 'privileged communication' finds a place...

As the name suggests, it refer to those communications, which by their nature are privileged to be kept as a secret.

புருனோ Bruno said...

//As the name suggests, it refer to those communications, which by their nature are privileged to be kept as a secret.//

அப்படித்தான் தோன்றுகிறது

நான் தான் தவறுதலாக புரிந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்

//Can you please quote a sentence from your medico-legal book, wherein the phrase 'privileged communication' finds a place...//
புத்தகத்தில் இருக்கும் வரிகளை எழுதுகிறேன். சிறிது அவகாசம் தாருங்கள்

♠புதுவை சிவா♠ said...

டாக்டர்,

ஒருவர் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்தால் அவரைப்பற்றி மருத்துவர்கள் அவரின் குடும்பத்தாரை அடுத்து யாரிடம் இந்த உண்மைகளை சொல்ல வேண்டும்?

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...