ஒரு தனியார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலிருக்கும் மூவர், அவர்களின் அதிகாரி அளித்த ஒரு விருந்தில் கலந்து கொள்ள சீருந்தில் சென்றுள்ளார்கள். சீருந்தை ஓட்டுனர் கோவர்த்தனன் வைத்யா ஓட்டி சென்றுள்ளார்மேலும் வாசித்து எரிச்சலடைய முழு விபரமும் உள்ள சுட்டி இங்குள்ளது
அவருக்கு சிறிது நெஞ்சு வலி இருந்துள்ளது. கூப்பரேஜ் அருகில் வரும் போது வலியானது அதிகரித்து நெஞ்சில் சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கவே, அவர் வண்டியை நிறுத்தியுள்ளார். நிறுத்திய சில நொடிகளில் அவர் வண்டியிலியே சாய்ந்து விழுந்துள்ளார். அவரது கதவை திறந்து அவரை வெளியே தள்ளி, அவரை நடைமேடையில் அமர வைத்து விட்டு, அந்த மூவரும் சீருந்தை கிளப்பி சென்றுள்ளனர்
அவரது நல்ல நேரம், விஜய சேகர் என்ற தொலைகாட்சி நிறுவனத்தில் பணிபுரிபவர் அந்த பக்கம் வந்துள்ளார். அதை விட நல்ல நேரம் அவரிடம் ஆஸ்ப்ரின் மருந்து இருந்துள்ளது. அதை அளிக்க வேண்டும் என்று அவரது மனைவிக்கு தெரிந்துள்ளது
விஜய சேகரும், அவரது மனைவியும், ஆஸ்பிரின் மருந்தை அளித்து விட்டு உடனடியாக வைத்யாவை மருத்துவமனைக்கு விஜயின் சீருந்தில் அழைத்து சென்றுள்ளனர்
புனித ஜார்ஜ் மருத்துவமனயில் வைத்யாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேலும் காலதாமதம் ஆகியிருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடிந்திருக்காது என்று கூறியுள்ளனர்
சேகரின் மனைவி அந்த மூவரையும் தொலைபேசியில் அழைத்து கேட்ட போது “அவருக்கு வெளிக்காற்று கிடைத்தால் நன்றாக ஆகிவிடுவார்” என்று விட்டு விட்டு சென்றதாக கூறியுள்ளனர்.
இவ்வளவையும் கூறும் மிட்-டே இதழ், அந்த மூவரின் பெயரையோ அவர்களின் நிறுவனத்தின் பெயரையோ கூறாதது ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே



36 மறுமொழிகள்:
நம்மள மாதிரி சாமான்யர்களின் உயிர் இங்கே *யிருக்கு சமம்னு இன்னொரு தடவை நிருபிச்சிருக்காங்க. எனக்கென்ன என்று போகாமல் சமயத்தில் உதவிய விஜய் சேகரும், அவர் மனைவியும், புனித ஜார்ஜ் மருத்துவமனைக்கும் பாராட்டுகள்..
பணத்திற்காக பிணத்தைத்தின்னும் நாய்கள் இருக்கட்டும் ஒரு ஓரமாய்.
கூமுட்டப்பசங்க
**
காப்பாற்றிய அந்த நல்ல மனிதர்கள் வாழ்க!!
**
நெஞ்சுவலிக்கு ஆஸ்பிரின் முதலுதவிக்காக கொடுக்கலாம் என்ற மருத்துவத்தகவலுக்கு நன்றி.
சமயத்தில் உதவிய விஜய் சேகரும், அவர் மனைவியும், புனித ஜார்ஜ் மருத்துவமனைக்கும் பாராட்டுகள்..
//இவ்வளவையும் கூறும் மிட்-டே இதழ், அந்த மூவரின் பெயரையோ அவர்களின் நிறுவனத்தின் பெயரையோ கூறாதது ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே//
??????????????
ஆஸ்ப்ரின் தகவல் புதிது.
காரணங்களெல்லாம் “ப்குப்பில்”தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்பு,அகிம்சை,மனிதம் இவற்றிக்கெல்லாம் அர்த்தம் கேட்கும் காலம் வந்துவிட்டதோ என தோன்றுகிறது.
நரகங்களில் உள்ள உண்மையான மனித முகங்களில் மூன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
சக மனிதன் சாக கிடக்கும்போது கடந்து செல்லும் இவர்களை போன்றவர்களுக்கு கசையடி போன்ற தண்டனைகள்தான் பொருத்தம்....ஹூம்.
ரொம்ப கொடுமையா இருக்குங்க. மனித உயிர் அவ்வளவு மலிவா போயிடுச்சுங்களா அவங்களுக்கு..
இவங்க எல்லாம் மனித ஜன்மமே கிடையாதுங்க.. எல்லாம் பேய்கள்.
//இவ்வளவையும் கூறும் மிட்-டே இதழ், அந்த மூவரின் பெயரையோ அவர்களின் நிறுவனத்தின் பெயரையோ கூறாதது ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே//
பெரும்பாலான மீடியா அதிபர்களும், நிர்வாகிகளும் இந்த அதிகாரிகளையே நல்லவர்கள் என்று சொல்லக்கூடியவர்களே. இவர்களிடம் எந்த அறத்தையும் எதிர்பார்க்கமுடியாது.
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே
:(
//மிட்-டே இதழ், அந்த மூவரின் பெயரையோ அவர்களின் நிறுவனத்தின் பெயரையோ கூறாதது ஏன் //
ஊடகங்களுக்கு சமூக அக்கறை குறைந்து வருகிறது..
ஆஸ்பிரின் எப்போதும் கையில் வைத்து கொள்வது நல்லதா டாக்டர்!
ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அட்டாக் வரலாம் தானே!
நிறுவனத்திற்கு ஒரு பிரச்சனை என்னும்போது கண்டிப்பாக ஓடிவிடக்கூடியவர்களே இந்த ஆட்கள்...,
தொழிற்சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் அங்கே?
உப்புச்சப்பில்லாத பிரச்சனைக்கெல்லாம் கொடி உயர்த்துபவர்கள் இதற்கெல்லாம் என்ன சொல்கிறார்கள்?
Mid Day பத்திரிகையெல்லாம் படிப்பதுண்டா..?
பணக்காரர்கள் பணக்காரர்கள்தான் ஸார்..!
இப்போது அந்த மூன்று அதிகாரிகளுடன் மிட் டே பத்திரிகை ஓனரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..!
இந்த ஆஸ்பிரின் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நேரம் இருந்தால் அது எங்கெல்லாம் நம் உடலில் வேலை செய்கிறது என்று எழுதுங்களேன்.
அல்சர், போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆஸ்பிரின் சாப்பிடுவதால் வேறு சில ரத்தக்கசிவு பிரச்சனை ஏற்பட்டு இறக்கக்கூடும் என்று கேள்விப்பட்டேன்.
பல இருதய நோயாளிகள் low dose ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள் டாக்டர்கள். அதனால் என்ன side effect வரும் வாய்ப்பு உள்ளது ?
இதையெல்லாம் எதிர்பார்த்துதான் மெக்காலே நூறு வருடத்திற்கு முன்பாகவே ‘whoever does any act rashly or negligently as to endanger human life or personal safety of others, shall be punished' என்று இ.த.ச.பிரிவு 336ல் எழுதி வைத்துள்ளாரோ?
தெரியவில்லையே ?
கடைசி ட்விஸ்ட் உண்மையில் புரியவில்லை...நீங்களாவது சொல்லுங்களேன் ?
playing devils advocate -
What if the driver said, 'dear sirs, i am not feeling well, please drop me on the sideway and take the car'.
what if the the party these guys were going to was a critical life-changing event for these guys.
i think calling it as 'party' was to sensationalize the whole incident.
it is sad, that a ill person is left on the sidewalk unattended, but that doesn't qualify to tag these guys as 'worse than hitlers' ;)
my 2 1/2 cents.
// what if the the party these guys were going to was a critical life-changing event for these guys. //
life changing? whose? and life changing for all three of them at the same time? remember, that driver has a teenage girl and a wife - if something would have happened to the driver, its these people's lives thats changed forever in a dimension unimaginable to you and me.
not to tag them as hitlers? what if the driver is someone u know personally? say ur father. would ur statement be the same?
//வெண்பூ said...
நம்மள மாதிரி சாமான்யர்களின் உயிர் இங்கே *யிருக்கு சமம்னு இன்னொரு தடவை நிருபிச்சிருக்காங்க. எனக்கென்ன என்று போகாமல் சமயத்தில் உதவிய விஜய் சேகரும், அவர் மனைவியும், புனித ஜார்ஜ் மருத்துவமனைக்கும் பாராட்டுகள்..
//
அதே தான் தல
Naming them may result in defamation case and unless the driver is willing to testify against them it is difficult to win the case.
"Naming them may result in defamation case"
What a responsible press!
It is ok to name a woman as a prostitute but not to charge a man as negligent.
பெயரைப் போட இப்போ
தெல்லாம் பயப்படுகிறார்கள். ஏனென்றால் சமீபத்தில் சில
நடிகைகளின் போட்டோவைப் போட்டு ஓரு பத்திரிகை பட்டபாடு உங்களுக்குத் தெரியும்.
//"Naming them may result in defamation case"
What a responsible press!
It is ok to name a woman as a prostitute but not to charge a man as negligent.
//
வழிமொழிகிறேன்
வெண்பூ சார், கல்வெட்டு சார், T.V.Radhakrishnan சார், தருமி சார், கும்க்கி சார், இராகவன் நைஜிரியா சார்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
சுந்தரராஜன் சார்
:) :) :)
தீப்பெட்டி சார்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வால்பையன்
ஆஸ்பிரின் எப்போதும் கையில் வைத்து கொள்வது நல்லதா டாக்டர்!
நல்லது தான் சார்
SUREஷ் (பழனியிலிருந்து) said...
நிறுவனத்திற்கு ஒரு பிரச்சனை என்னும்போது கண்டிப்பாக ஓடிவிடக்கூடியவர்களே இந்த ஆட்கள்...,
நல்ல கருத்து தல
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
Mid Day பத்திரிகையெல்லாம் படிப்பதுண்டா..?
உங்கள் பதிவை விட நீளம் கம்மி தானே சார்
வஜ்ரா said...
இந்த ஆஸ்பிரின் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்
Prabhu Rajadurai said...
:) :)
செந்தழல் ரவி said...
தெரியவில்லையே ?
கடைசி ட்விஸ்ட் உண்மையில் புரியவில்லை...நீங்களாவது சொல்லுங்களேன் ?
சுந்தரராஜன் சாரின் பதிலை பாருங்கள்
SurveySan said...
playing devils advocate -
:( :(
முகமூடி said...
நல்ல பதில் சார்
நர்சிம் தல நன்றி
Anonymous said...
உங்களுக்கு பதில் வந்து விட்டது பாருங்கள்
ramalingam said...
பெயரைப் போட இப்போ
தெல்லாம் பயப்படுகிறார்கள். ஏனென்றால் சமீபத்தில் சில
நடிகைகளின் போட்டோவைப் போட்டு ஓரு பத்திரிகை பட்டபாடு உங்களுக்குத் தெரியும்.
உங்களுக்கும் பதில் வந்து விட்டது பாருங்கள்
////இவ்வளவையும் கூறும் மிட்-டே இதழ், அந்த மூவரின் பெயரையோ அவர்களின் நிறுவனத்தின் பெயரையோ கூறாதது ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே//
??????????????
//
சுந்தரராஜன் சாரின் பதிலை பாருங்கள் சார்
Post a Comment