இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

வழித்தடங்கள் : 06 நவம்பர் 2009 : அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சைகளும், தமிழர் வாழ்வில் திரைப்படங்களும்

சாதனை 
சென்ற வாரம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூளை மரணம் ஏற்பட்டவரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அவரது சிறுநீரகங்கள் இருவருக்கும் - ஒன்று அரசு பொது மருத்துவமனை பிணியாளர் ஒருவருக்கும் மற்றொன்று ஸ்டான்லி (இசுடானுலி) மருத்துவமனை பிணியாளர் ஒருவருக்கும்- பொருத்தப்பட்டு இரண்டு சிறுநீரகங்களும் நன்றாக இயங்கி வருகின்றன. கண்கள் இரண்டும் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இருவருக்கு பார்வையும் இருவருக்கு மறுவாழ்வும் கிடைத்திருக்கின்றன

சென்ற வருடம் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஹிதேந்திரனின் இதயம் பெறப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதே போல் இந்த முறை அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட்டு அரசு பொது மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடந்து முடிந்து விட்டது. ஸ்டான்லி (இசுடானுலி) மருத்துவமனையில் மூன்று பேருக்கு கல்லீரல்மாற்று மருத்துவ சிகிச்சை நடந்து முடிந்து விட்டது

இந்தியாவிலேயே மாநில அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை எல்லாம் நடப்பது தமிழகத்தில் தான்

தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் இந்தியாவின் பிற மாநிலங்களை விட பல மடங்கு உயர்ந்திருப்பது நாம் அறிந்ததே. இப்பொழுது சிறப்பு சிகிச்சை அளிப்பதிலும், நாம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னேறி வருகிறோம்

-oOo-

திரைப்படமும் பேச்சுவழக்கு தமிழும்
அண்மையில் ஒரு நண்பர் குறுஞ்செய்தியில் “அழைக்கலாமா” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் அந்த நேரம் பணியில் இருந்ததால், குறுஞ்செய்தி அனுப்புங்கள் என்று பதிலனுப்பினேன். அவரும் “கையில் ஆணி, என்ன செய்யலாம்” என்று அடுத்த குறுஞ்செய்தி அனுப்பினார்.

“அலுவலகத்தில் நிறைய ஆணி பிடுங்கி விட்டீர்களா” என்று நக்கல் அடிக்கலாம் என்று நினைத்தேன். அந்த குறுஞ்செய்தியை தட்டச்சு செய்வதற்குள் ஏதோ அவசர வேலை வந்து விட்டதால் (அதாவது ஆணி பிடுங்க வேண்டியிருந்ததால்) முடியவில்லை !!

யோசித்து பார்த்தால், தமிழ் திரையுலகம் (ஆணி பிடுங்குவது போல்) பல சொற்தொடர்களை நம்மிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறது

தங்கமணி என்ற சொல் மனைவியை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இது எதிலிருந்து ஆரம்பித்தது. அக்னி நட்சத்திரம் படத்திலிருந்தா, அல்லது வேறு மூலமா ??

ஏதாவது காரியத்தை “சொதப்பு”பவர்களை “மேண்டில் வேலை பார்த்துட்டான்” என்று கூறுகிறோமே…. இந்த சொல் புழக்கத்திற்கு வர காரணம் கவுண்டமணியும் செந்திலும் தானா ?? ... (படம் வைதேகி காத்திருந்தாள் என்று நினைக்கிறேன்)

ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்தி காரியம் சாதிப்பவர்களை பார்த்து “சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறான்” என்ற சொல்லும் பழக்கம் வந்தது துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து தானா ??

மன்னார் அண்ட் கம்பெனி என்றால் என்ன என்பது தெரியாதவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்

இது போன்ற சொற்களின் / சொற்தொடர்களின் முழு பட்டியலை முரளி கண்ணன் விரைவில் நீரோடையில் அளிப்பார் என்று நினைக்கிறேன்

-oOo-
கனவு, நம்பிக்கை, நிதர்சணம்
பலரும் இடுகை எழுதிவிட்டு கடைசியில் கவிதை ஒன்றை இணைக்கிறார்கள். எனக்கு கவிதை எல்லாம் எழுத வராததால் அதற்கு வாய்ப்பில்லை. தப்பித்தீர்கள். எனவே இலவச இணைப்பாக நான் வடிவமைத்த படங்கள் ஏதாவது சேர்த்து விடலாம் என்று நினைக்கிறேன்

இது 2001ஆம் ஆண்டு நான் வடிவமைத்த படம் (போட்டோஷாப் 5ஆ, 6ஆ என்று சரியாக ஞாபகம் இல்லை). எங்கள் கல்லூரி ஆண்டு மலரின் முன் அட்டையில் இடம் பெற்றது




அடுத்த படம் புத்தகத்தின் முதல் பக்கம் (அப்துல் கலாம் கனவு காண சொல்லும் முன்னரே நாங்கள் கனவு காண சொல்லிவிட்டோம் !!)



இராபர்டு கோத்தர்தின் வரிகளுடன் நிறைவு செய்கிறேன்
எதையும் இயலாதது என்று தீர்மானிப்பது கடினம்
ஏனென்றால் நேற்றைய கனவுதான் இன்றைய நம்பிக்கை
அதுவே நாளைய நிதர்சனம்

12 மறுமொழிகள்:

மறுமொழி எண்
மணிவண்ணன் said...

//ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்தி காரியம் சாதிப்பவர்களை பார்த்து “சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறான்” என்ற சொல்லும் பழக்கம் வந்தது துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து தானா ??//

இது ரொம்ப பழசு. படத்தில் இருந்து வந்தது கிடையாது.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//இது ரொம்ப பழசு. படத்தில் இருந்து வந்தது கிடையாது.//

தகவலுக்கு நன்றி பாஸ்

மறுமொழி எண்
ரவிசங்கர் said...

தமிழக அரசு மருத்துவமனை சாதனைகளைக் கண்டு மகிழ்ச்சி. அப்பல்லோ, CMC க்கு எல்லாம் பிற மாநிலங்களில் இருந்து மக்கள வருவது போல், தமிழக அரசு மருத்துவமனைகளுக்கும் மருத்துவச் சுற்றுலா வருகிறார்களா? அப்படி வந்தால் ஏற்றுக் கொள்கிறீர்களா?

**

தமிழரும் திரைப்படங்களும்

மறுமொழி எண்
Sammy said...

//தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் இந்தியாவின் பிற மாநிலங்களை விட பல மடங்கு உயர்ந்திருப்பது நாம் அறிந்ததே. இப்பொழுது சிறப்பு சிகிச்சை அளிப்பதிலும், நாம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னேறி வருகிறோம்
//


நல்ல தகவல்,பாராட்டுகள்.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//தமிழக அரசு மருத்துவமனை சாதனைகளைக் கண்டு மகிழ்ச்சி. அப்பல்லோ, CMC க்கு எல்லாம் பிற மாநிலங்களில் இருந்து மக்கள வருவது போல், தமிழக அரசு மருத்துவமனைகளுக்கும் மருத்துவச் சுற்றுலா வருகிறார்களா? அப்படி வந்தால் ஏற்றுக் கொள்கிறீர்களா? //

1. முன்னர் ஆந்திராவில் இருந்து அதிக அளவில் வந்து கொண்டிருந்தார்கள். தற்சமயம் ஆரோக்யஸ்ரீ திட்டம் வந்த பின் எண்ணிக்கை குறைந்து விட்டது

2. பிற மாநிலத்தவர்களுக்கு சிகிச்சை இலவசம் கிடையாது. எனவே அவர்களில் பலர் இங்கு யாராவது சொந்தக்காரர்களின் முகவரி அளித்துவிடுவதால், சரியான எண்ணிக்கை பெறுவது கடினம்

மறுமொழி எண்
S. Krishnamoorthy said...

”இசுடானுலி” வேண்டாமே! மொழியின் நோக்கமே கருத்துப் பரிமாற்றத்தினத் தெளிவுறவே மொழிந்திடுதல்.
கிருஷ்ணமூர்த்தி

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//”இசுடானுலி” வேண்டாமே! மொழியின் நோக்கமே கருத்துப் பரிமாற்றத்தினத் தெளிவுறவே மொழிந்திடுதல்.
கிருஷ்ணமூர்த்//

கூடவே ஸ்டான்லி என்றும் எழுதியிருக்கிறேனே சார்

மறுமொழி எண்
குசும்பன் said...

//இது 2001ஆம் ஆண்டு நான் வடிவமைத்த படம் (போட்டோஷாப் 5ஆ, 6ஆ என்று சரியாக ஞாபகம் இல்லை).//

டாக்டர் படிக்கும் அக்கா மகனுக்கு லேப்டாப் ஒன்று இப்பொழுது வாங்கி கொடுத்தேன்,(உங்களை அம்மாவாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்த பொழுது சந்திச்சு இருக்கான்) அவனிடம் கொடுத்துவிட்டு நான் சொன்னது, மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை காமிச்சேனே நினைவு இருக்கா அவரு டாக்டர் மட்டும் இல்ல கம்ப்யூட்டர் பிஸ்த்து அவரை மாதிரி இதை யூஸ் செய்ய கத்துக்க என்றேன். போட்டோ ஷாப் தெரிஞ்சவங்க கூட இதுபோல் டிசைன் எபக்ட்ஸ் எல்லாம் கொடுத்து செய்வது கஷ்டம் தலைவரே! அருமையாக இருக்கு.

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//போட்டோ ஷாப் தெரிஞ்சவங்க கூட இதுபோல் டிசைன் எபக்ட்ஸ் எல்லாம் கொடுத்து செய்வது கஷ்டம் தலைவரே! அருமையாக இருக்கு.

மறுமொழி எண் 11 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 11/19/2009 2:48 PM
Post a Comment
//
நன்றி தலைவரே
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் :) :)

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...