பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
- பயணங்கள் Payanangal - புருனோ Bruno : * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க
- ஸ்மைல் பக்கம் - லிவிங் ஸ்மைல் : என் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்
பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
- பயணங்கள் - புருனோ Bruno : மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்
- உண்மைத்தமிழன் - உண்மைத் தமிழன் : என் இனிய சுஜாதா
- பயணங்கள் - புருனோ Bruno : தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை
- பல்சுவை! - SP.VR. SUBBIAH : Star Posting செட்டிநாட்டு வீடுகள்
அந்த சமயம், பிரபல எழுத்தாளர் பரிசல்காரன் அவர்கள் மறுமொழியில்
வாழ்த்துகள் டாக்டர்..
அள்ளீட்டீங்க போங்க!
எந்தப் பிரிவுல கலந்துக்கலாம்.. எந்தப் பதிவ முன்மொழியலாம்னு எவ்ளோ தூரம் யோசிச்சிருப்பீங்கன்னு தெரியுது!
ஒரு பதிவப் போட்டு தெரிவியுங்க,... இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்!!என்று கூறியிருந்தார். அப்பொழுதே எழுதவேண்டும் என்று நினைத்து பல காரணங்களால் தாமதமாகியது
தற்சமயம் “2009 ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகள்” குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்ற வருடம் இந்த விருது வழங்கப்பட்ட போது கடை பிடிக்கப்பட்ட அதே நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளபடியால், விதிகள் குறித்து (நான் புரிந்து கொண்டவகையில்) சில கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
தமிழ்மணம் விருதுகள் குறித்த சில விதிகளை மட்டும் எடுத்து, அது குறித்த சில கருத்துக்களை பதிகிறேன் / பகிர்கிறேன்
பொறுப்பு துறப்பு : இது அனைத்தும் என் கருத்துக்களே. தமிழ் மண நிர்வாகத்தின் கருத்துக்கள் அல்ல. நான் தமிழ்மணம் நிர்வாகத்துடன் எனக்கு பதிவர் என்பதை தவிர எந்த சம்மந்தமும் கிடையாது
உதாரணங்களுக்கு எனது இடுகைகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளேன்
விதி : தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.
- இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த விருது தனிப்பட்ட நபருக்கானது அல்ல. ஒரு வலைப்பதிவிற்கு மொத்தமாக ஆனது கிடையாது. இந்த விருதுகள் குறிப்பிட்ட இடுகைக்கு உரியதே.
- அப்படியென்றால், உங்களது பல இடுகைகள் மொக்கையாக இருந்தாலும் கூட நன்றாக இருக்கும் இடுகைக்காக நீங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
- எனவே கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்.
- மூன்று இடுகைகளை பரிந்துரையுங்கள்.
- வாசித்து வாக்களியுங்கள்.
- மொத்தம் மூன்று இடுகைகளை பரிந்துரைக்கலாம். மூன்றும் வெவ்வேறு பிரிவாக இருக்க வேண்டும்.
- எந்த இடுகையை பரிந்துரைப்பது என்று சிறிது சிந்தித்து பரிந்துரையுங்கள்
- எந்த பிரிவிற்கு பரிந்துரைப்பது என்பதையும் யோசித்து பரிந்துரைக்க வேண்டும்
- இது குறித்து மேலும் விரிவாக கீழே விலக்கியுள்ளேன்
- எனவே நீங்கள் பரிந்துரைக்கும் இடுகை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமென்றால் பதிவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். (அவர்களது அறிவிற்கோ அல்லது உணர்ச்சிக்கோ அல்லது இரண்டிற்குமோ!!)
- எனக்கு எனது / உங்களுக்கு உங்கள் அனைத்து இடுகையும் பிடித்திருக்கலாம் (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா). ஆனால் அனைவருக்கும் நமது அனைத்து இடுகையும் பிடித்திருக்க வேண்டும் என்பது அவசியம் அல்லவே
- ஒரு இடுகையை பரிந்துரைப்பதற்கு முன்னர், அது பதிவர்களுக்கு பிடித்த இடுகையா என்று பார்த்து விட்டு பரிந்துரைப்பது நல்லது.
- பரிந்துரைக்கப்படும் இடுகையின் கருப்பொருள் / கூறப்படும் கருத்துக்கள் :
- தமிழ் பதிவுலகம் என்பது ஒரே சீரான தன்மையுடையது அல்ல. பல்வேறு வகையினரு, பல்வேறு அரசியல் சார்பு நிலையுடையவர்களும், பல்வேறு பணியில் இருப்பவர்களும் நிறைந்திருக்கிறார்கள். அதே நேரம், இதில் பெரும்பாண்மை என்பது அனைத்து பிரிவிலும் இருக்கிறது. உதாரணமாக பதிவர்களில் ஆண்கள் அதிகம், பெண்கள் குறைவு. ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகம். ஆங்கிலம் தெரியாதவர்கள் குறைவு. பட்டதாரிகள் அதிகம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிகம் [அலுவலக கணினியில் பார்ப்பவர்கள் அதிகம் :) :) :) ]
- இந்த மக்கள் வாழ்க்கைக் கணக்கியல் (டெமொகிராபி) என்பது உங்கள் இடுகைக்கு கிடைக்கும் வாக்கில் பிரதிபலிக்கும்.
- உதாரணமாக ஆப்பிள் மரத்திற்கு என்ன உரம் வைக்க வேண்டும் என்பதை விட கணினி திரையை தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சலை தவிர்ப்பது எப்படி என்ற இடுகை அதிக வரவேற்பை பெரும் !! ஆப்பிள் மரத்திற்கு உரம் வைப்பது குறித்து எழுதுவது தவறா என்று கேட்காதீர்கள். கண்டிப்பாக எழுதுங்கள். தமிழ் வலையுலகிற்கு உங்கள் பங்களிப்பு அவசியம். அந்த இடுகை கண்டிப்பாக பலருக்கும் பயன் பெறும். ஆனால் அது பரிசு பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனது பல இடுகைகள் வெகு ஜன ரசனைக்கு வெகு தொலைவில் இருப்பவையே. நான் எழுதுவதில் தயங்குவதே இல்லை.
- தொழில் முறை நடுவர்கள் / அல்லது அந்த துறையை சார்ந்த போட்டி என்றால் அது போன்ற இடுகைகளை சமர்ப்பிக்கலாம்.
- இது போல் அனைவரும் வாக்களிக்கும் போட்டியில் “வெகு ஜன ரசனை”யை பிரதிபலிக்கும் இடுகைகளே வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் என்பது கசப்பான உண்மை. உண்மை கசக்கும். உண்மை சூடும் !!
- எனவே நீங்கள் உங்கள் இடுகையை பரிந்துரைக்கும் முன்னர் தெரிந்து கொள்ள வேண்டிய / க்வனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் : பரிந்துரைக்கப்படும் உங்கள் இடுகையின் கருப்பொருள் / மையக்கருத்து பலருக்கு பிடித்திருக்க வேண்டும் / பயன்பட வேண்டும் :
- உதாரணமாக வலைப்பதிவர்களில் அரசு ஊழியர்கள் குறைவு. எனவே எனது ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் - 5 - பயணப்படி மற்றும் தினப்படி இடுகையை நான் பரிந்துரைத்து, அதற்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்க முடியுமா. அந்த இடுகையில் இருப்பது சரியாக தகவல்கள். அந்த இடுகையை எழுதியதில் எனது உழைப்பு இருக்கிறது. ஆனால் இந்த இரு காரணங்களுக்காக அது தமிழ் பதிவர்கள் அனைவரையும் கவர வேண்டும் என்று அவசியம் இல்லையே. ஒரு வேளை அரசு ஊழியருக்களுக்கான வலைப்பதிவு போட்டி என்றால் அந்த இடுகை வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் :) :)
- இதே அளவு கோலை, அரசியல், திரைப்படம், சமூகம் போன்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தி பாருங்கள். (திரைப்படம் குறித்த மற்றொரு உதாரணம் கீழே உள்ளது).
- அடுத்து கவனத்தில் கொள்ள வேண்டியது : காலத்தை தாண்டி நிற்கும் தலைப்புகள் / கருத்துக்கள் அதிக வரவேற்பை பெறும்
- சில இடுகைகள் எழுதப்பட்ட நேரம் பயங்கர பிரபலமாகும். உங்களை கவர்ந்திருக்கும். ஆனால் பல மாதங்கள் கழித்து இன்று வாசித்து பார்த்தால் அதில் சிறப்பாக ஒன்றும் இருப்பது போல் தெரியாது.
- அது போன்ற இடுகைகள் வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு என்பது என கருத்து : உதாரணம் : புள்ளியியல், குட்டை பாவாடை, ஏ.ஐ.ஐ.எம்.எஸில் 49 குழந்தைகளின் மரணம் – ஊடகங்களில் சொல்லப்படாத உண்மை என்ன என்ற இடுகைக்கு 2008 ஆகஸ்ட் மாதம் இருந்த வரவேற்பு இன்று இருக்காது அல்லவா
- அதே போல் நக்கல் / நையாண்டி இடுகைகள் என்றால் அவை பலருக்கும் புரிய வேண்டியது அவசியம்
- பரிந்துரைக்கும் இடுகையில் நக்கல் / நையாண்டி இருந்தால் அது பலருக்கும் (பெரும்பாண்மையானவர்களுக்கு) புரிய வேண்டியது அவசியம். கீழுள்ள இரண்டு இடுகைகளுமே நையாண்டி செய்பவை தான். இதில் எது உங்களுக்கு புரிகிறது
- விமர்சனங்களை விமர்சிப்பவர்களை விமர்சித்தொரு விமர்சனம் !!
- இது விமர்சிப்பவர்களை விமர்சித்தவர்களை பகடி செய்து எழுதப்பட்டது என்பதை பெரும்பாலாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.
- இரண்டாவது கற்பனை கதை
- இந்த கதை எதை கூறுகிறது என்று உங்களுக்கு புரிகிறதா (ஜிம்மி என்று பெயர் இருந்தும் கூட) இன்றைய காலகட்டத்தில் இது போன்ற இடுகைகள் பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வெல்லும் வாய்ப்பு அதிகமில்லை. இந்த இரண்டாவது இடுகையை பொருத்த வரை தமிழ்வெளி நிர்வாகம் மட்டும் நடுவர் என்றால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது வேறு விஷயம் :) :)
- அடுத்த விஷயம், ஒரே தலைப்பில் / ஒரே விஷயம் குறித்து எழுதப்பட்ட இடுகைகளில் கூட சில இடுகைகள் அதிகம் பதிவர்களை கவரும். சிலவற்றிற்கு வரவேற்பு இருக்காது
- ஒரு குறிப்பிட்ட இடுகை பல பதிவர்களுக்கு பிடித்ததா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றுகிறதா - வெகு எளிதான நடைமுறை உள்ளது. மறுமொழிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்.
- உதாரணமாக இதில் இரண்டு இடுகைகளுமே ஊர்/வாழ்வு நினைவோடைகள் என்ற பிரிவிற்கு பொருத்தமானதே. இந்த இரண்டில் எதை பரிந்துரைக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் (இது உதாரணம் மட்டும் தான். இதில் ஒரு இடுகை 2008ல் எழுதப்பட்டதால் அதை போட்டிக்கு பரிந்துரைக்க முடியாது என்பது வேறு விஷயம்)
- மருத்துவம் குறித்த இந்த இரு கட்டுரைகளில் (அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள் பிரிவில்) இந்த இரண்டு இடுகைகளில் எதை பரிந்துரைத்தால் வெற்றி அடுத்த கட்ட செல்ல வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறீர்கள்.
- மேலே கூறியவை உதாரணங்கள் தான். இதிலிருந்து எந்த இடுகைகளை பரிந்துரைத்தால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்
- ஒரு வழியாக நீங்கள் பரிந்துரைக்க வேண்டிய இடுகையை / இடுகைகளை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். சில இடுகைகளை ஒரே பிரிவில் தான் பரிந்துரைக்க முடியும். பல இடுகைகள் பல பிரிவுகளில் பரிந்துரைக்க தக்கவாறே உள்ளன. அப்படி பல பிரிவுகளுக்கு பொருத்தமான் இடுகை என்றால்...
- அடுத்த கேள்வி, ஒரு இடுகையை எந்த பிரிவில் பரிந்துரைப்பது என்று எப்படி முடிவு செய்வது ??
- ஒரு போட்டியில் வெற்றி வாய்ப்பு என்பது அதில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமையும். ஒரு பிரிவில் இரண்டு பேர் மட்டும் பங்கு பெற்றால் கட்டாயம் பரிசு உண்டுதானே.
- 2008 விருதுகளின் போது பங்கு பெற்ற இடுகைகளின் எண்ணிக்கை இது தான். (புள்ளி விபரங்கள் சேர்த்து வைப்பது எப்படியெல்லாம் பயன்படுகிறது பாருங்கள் :) :) ) இந்த வருடம் எண்ணிக்கை அதிகரித்தாலும், விகிதாச்சாரத்தில் அதிகம் மாற்றம் இருக்காது என்றே எண்ணுகிறேன்
- படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை) : 150
- காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்) : 42
- நூல், திரைப்படம் அறிமுகம்/திறனாய்வுகள் : 54
- அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள் : 61
- பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் : 96
- செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் : 61
- அரசியல், சமூக விமர்சனங்கள் : 84
- பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள் : 25
- ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள் : 18
- தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் : 40
- நகைச்சுவை, கார்ட்டூன் : 58
- சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் : 66
- இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் கடமை :) :) (அல்லது திறமை) குதிரையை ஆற்றங்கரை வரை தான் கொண்டு செல்ல முடியும் !! என்று ஒரு பழமொழி உள்ளது
- பதிவர்களில் பெண்கள் குறைவு. ஆனால் வாசகர்களில் அந்த அளவு குறைவாக இருக்காது. அதே போல் வாசகர்களில் அனைத்து பிரிவினரும் உள்ளனர் (என்றே நினைக்கிறேன்)
- எனவே உங்களது இடுகை இரண்டாவது கட்டத்திற்கு வந்த பிறகு வெற்றி பெற வேண்டுமென்றால், அது வாசகர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து பரிந்துரையுங்கள். உதாரணமாக பதிவர்களில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் குறைவு. ஆனால் வாசகர்களில் அதிகம் இருக்கலாம். எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பிடிக்காத இடுகை ஒன்று பதிவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாவது கட்டத்திற்கு வந்தாலும் வாசகர்களால் நிராகரிக்கப்படும் வாய்ப்பே அதிகம்
- பதிவின் நீளம் : பெரும்பாலான பதிவர்கள் அனைத்து பதிவுகளையும் படிப்பதில்லை (விதிவிலக்குகளை விட்டு விடுவோம்). வாசகர்கள் அப்படி அல்ல. எனவே அவர்கள் அதிகம் இடுகைகளை படிக்க விழைவார்கள். ஆக மிகப்பெரிய்ய்ய்ய்ய்ய...... இடுகைகள் வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு என்றே எண்ணுகிறேன்
- பொதுவாகவே பதிவில் எழுதும் போது எழுத்துப்பிழை, சந்திப்பிழை போன்றவற்றை தவிர்ப்பது நலம். (இந்த அறிவுரையை கூற எனக்கு தகுதி இருக்கிறதா என்பது வேறு விஷயம் !!) குறைந்த பட்சம், பரிந்துரைக்கும் இடுகையையாவது மறுமுறை வாசித்து பார்த்து இயன்ற அளவு, பிழைகளை திருத்தலாம். நடையை சீர்படுத்த முயலலாம்.
- சுருங்க சொன்னால், நீங்கள் பரிந்துரைக்கும் இடுகையில் பொருட்குற்றமும் இருக்க கூடாது, சொற்குற்றமும் இருக் கூடாது
- இதில் முக்கியமான விஷயம், நீங்கள் தமிழ்மணத்தில் இணையும் போது அளித்த மின்னஞ்சல் முகவரிக்கே அவர்கள் அனுப்புவார்கள். எனவே உங்களது மின்னஞ்சல் முகவரி மாறியிருந்தால், தமிழ்மணம் நிர்வாகத்திடம் தெரிவியுங்கள்



16 மறுமொழிகள்:
தமிழ்மணத்துல ஆராய்ச்சி கட்டுரைன்னு ஏதாவது ஒரு பிரிவு இருந்தா இந்த இடுகையை சமர்ப்பியுங்கள். முதல் கட்டத்தில் வெற்றி பெறுவது உறுதி :)-
கோனார் நோட்ஸ் படித்த நினைவுகள் வருகிறது. :)
//தமிழ்மணத்துல ஆராய்ச்சி கட்டுரைன்னு ஏதாவது ஒரு பிரிவு இருந்தா இந்த இடுகையை சமர்ப்பியுங்கள். முதல் கட்டத்தில் வெற்றி பெறுவது உறுதி :)-//
இதை விட பொருத்தமான பல இடுகைகள் உள்ளன நண்பரே
ஆராய்ச்சி பிரிவில் வயிற்றில் புலி 1, வயிற்றில் புலி 2,சிலை ஆராய்ச்சி, போன்ற இடுகைகளுக்கு முன்னர் இந்த இடுகையெல்லாம் போட்டி போடவே முடியாது
//வழக்கறிஞர் சுந்தரராஜன் said...
கோனார் நோட்ஸ் படித்த நினைவுகள் வருகிறது. :)
//
:) :)
புரூனோ, நீங்க போன முறை 3 கட்டுரை தரவேண்டிய இடத்துல 10 கட்டுரையை சப்மிட் பண்ணி போங்காட்டம் ஆடி கெலிச்சதை தாழ்மையுடன் நினைவு படுத்துகிறேன்... இந்த முறை அவ்வாரு செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்
//புரூனோ, நீங்க போன முறை 3 கட்டுரை தரவேண்டிய இடத்துல 10 கட்டுரையை சப்மிட் பண்ணி போங்காட்டம் ஆடி கெலிச்சதை தாழ்மையுடன் நினைவு படுத்துகிறேன்...//
ஐயா அனானி, விதிமுறைகளை கவனித்தீர்களா.
தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும்.
எனவே
இடுகைத்தொடர் என்றால் அதில் ஒன்றிற்கு மேற்பட்ட கட்டுரைகள் இருக்கும் என்பதை அடிப்படை அறிவுள்ள, மனபிறழ்வு இல்லாத யாரும் அறிந்து கொள்வார்கள்
// இந்த முறை அவ்வாரு செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்//
இந்த முறையும் இடுகை தொடரை (அதாவது பல கட்டுரைகளை) பரிந்துரைப்பது எனது சுய விருப்பம் என்று கூறுகிறேன்
டாக்டரய்யா இடுகை தொடரெல்லாம் சரிதான் ஆனால், 3 கேட்டகரிகளுக்குள் மட்டுமல்லவா அவை இருந்திருக்க வேண்டும். மற்றவர்களெல்லாம் மூன்றோடு நிறுத்தினர் நீங்களோ அனைத்து கேட்டகரியிலும் அளித்தீர் அதானால் உங்கள் வெற்றி வாய்ப்பு பன்மடங்கு கூடியது.
ஒரு வலைப்பதிவு மூன்று பிரிவுகளில் போட்டி போட முடியும் என்று விதி இருந்தது தெரியும் தானே
இரண்டு வலைப்பதிவுகள் என்றால் ஆறு பிரிவுகளிலும், மூன்று வலைப்பதிவுகள் என்றால் 9 பிரிவுகளிலும், 4 வலைப்பதிவு என்றால் 12 பிரிவிலும் போட்டியிடுவது விதிமுறைகளுக்கு உட்பட்டதே
ஒரு இடுகைத்தொடர் என்பது பல இடுகைகளை கொண்டது என்பதை புரிந்து கொண்டீர்களா
//டாக்டரய்யா இடுகை தொடரெல்லாம் சரிதான் ஆனால், 3 கேட்டகரிகளுக்குள் மட்டுமல்லவா அவை இருந்திருக்க வேண்டும். மற்றவர்களெல்லாம் மூன்றோடு நிறுத்தினர் நீங்களோ அனைத்து கேட்டகரியிலும் அளித்தீர் அதானால் உங்கள் வெற்றி வாய்ப்பு பன்மடங்கு கூடியது.//
அப்படியா
12 பிரிவுகளிலும் நான் எந்த எந்த இடுகைகளை சேர்த்தேன் என்று கூறுங்கள் பார்ப்போம்
முக்கியமாக
பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள்
ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள்
நகைச்சுவை, கார்ட்டூன்
சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
ஆகிய பிரிவுகளில் எனது இடுகைகள் இருந்ததா என்று தெரிந்து கொள்ள ஆசை
நீங்க எத்தனையில இணைச்சீங்க என்னன்ன இணைச்சீங்கன்னு நீங்க வச்சிருக்குற மாதிரி நான் வச்சுக்க முடியுமா? என்னளவுல வரைக்கும் நீங்க 3 பிரிவுக்கு மேல இணைச்சது போங்காட்டம்...போங்காட்டம் போங்காட்டம்.. அது கூட உங்க பதிவுக்கு தேடித்தேடி நான் ஓட்டு போட்டதனால எனக்கு தெரிஞ்சது.
உங்க வாக்குமுலத்துப்படி நீங்க தோராயமா 8 பிரிவுல கொடுத்திருக்கீங்க... ஐயா தமிழ்மணம் நிருவாகி... பாத்தீங்களா???????
//நீங்க எத்தனையில இணைச்சீங்க என்னன்ன இணைச்சீங்கன்னு நீங்க வச்சிருக்குற மாதிரி நான் வச்சுக்க முடியுமா?//
குற்றம் சாட்டுபவர் நீங்கள் நீங்கள் தான் ஆதாரம் தர வேண்டும்
// என்னளவுல வரைக்கும் நீங்க 3 பிரிவுக்கு மேல இணைச்சது போங்காட்டம்...போங்காட்டம் போங்காட்டம்..//
முதலில் நான் 12 பிரிவுகளிலும் இணைத்தேன் என்பதை நிருபியுங்கள். அதன் பிறகு வைத்துக்கொள்ளலாம்
பெயர் மாற்றி இருவேறு இடங்களிலிருந்து மறுமொழி போட்டால் நீங்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதா.
ஐ.பி.கள் சொல்லிவிட்டதே
//அது கூட உங்க பதிவுக்கு தேடித்தேடி நான் ஓட்டு போட்டதனால எனக்கு தெரிஞ்சது.//
இதை நம்ம வேண்டுமா
//உங்க வாக்குமுலத்துப்படி நீங்க தோராயமா 8 பிரிவுல கொடுத்திருக்கீங்க... ஐயா தமிழ்மணம் நிருவாகி... பாத்தீங்களா???????//
ஐயா அனானி
பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்
நான் 4 பிரிவு உதாரணம் அளித்தேன் என்றால் அதை தவிர பிற பிரிவுகளுக்கு அளித்தேன் என்ற உங்கள் லாஜிக் அசர வைக்கிறது
இப்பொழுது புரிகிறது ஏன் உங்களால் ஒரு வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை என்று. (இவ்வளவு “புத்தி கூர்மை” உள்ளவரை வேலை வைக்க இதை அளவு “புத்தி கூர்மை” உள்ளவரை தவிர பிறரால் முடியாது)
இந்த பிரிவுகள் குறித்து நான் எழுதுவதே இல்லை என்பதால் அதை ஒரு உதாரணத்திற்கு கேட்டேன்
இம்முறையும் விருதுகள் அள்ள வாழ்த்துக்கள்.
மூன்றை இரண்டாக்கிவிட்டார்களே, பத்துக்குள்ளயாவது வரமுடியுமான்னு கொஞ்சம் திகிலாத்தான் இருக்குது. உங்கள் இந்தப்பதிவு நாமினேஷன்களை தேர்வு செய்ய உதவும் டாக்டர்.!
அப்புறம் ஏன் அனானிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்களா?
//பீர் | Peer said...
இம்முறையும் விருதுகள் அள்ள வாழ்த்துக்கள்.//
நன்றி சார்
//அப்புறம் ஏன் அனானிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்களா?
மறுமொழி எண் 14 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 11/13/2009 10:44 PM //
புரிகிறது !!! :)
Post a Comment