மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் :
- இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
- தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் சிறிதும் தொடர்பு கிடையாது.
- அதை போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம்
- தாய்க்கு தண்ணீரே தராமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள் பல. அதில் முக்கிய பிரச்சனை தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது
- தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் (ஜூஸ், இளநீர், மோர், நீராகாராம் எதுவென்றாலும்) குடித்தால் போதும். குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்
மூட நம்பிக்கை 2 : குளுக்கோஸ் ஏறும் போது தண்ணீர் குடிக்க கூடாது:
- இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று யூகிப்பது எளிது தான்.
- அந்தக்காலத்தில் பொதுவாக வாய் வழியாக சாப்பிட முடியாத நிலைகளிலேயே சிரைவழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்.
- அந்தக்காலத்தில் அதிகம் நடை பெற்றது வயிற்றுப்புண், அல்லது குடல் பூண் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சைகளே
- எனவே அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு வாய்வழியாக உணவு அளிக்கப்பட்டிருக்காது. சிரைவ்ழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்
- எனவே சிரை வழி திரவம் ஏற்றினாலே வாய்வழியாக உணவு உட்கொள்ளக்கூடாது என்ற மூட நம்பிக்கை வந்து விட்டது.
- ஆனால் இன்றோ பல மருந்து பொருட்களும் சிரை வழி ஏற்றப்படுகிறது
- அப்படி இருக்கும் போது அதை கூட சிரை வழி திரவம் என்று நினைத்துக்கொண்டு, தாயை பட்டினி போடும் “புத்திசாலிகள்” பலர் இருக்கிறார்கள்
- சிரை வழி திரவங்கள் ஏறிக்கொண்டிருந்தாலும் கூட, மருத்துவர் அனுமதித்தால், சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்திற்கு பிறகு தாராளமாக தண்ணீர் குடிக்கலாம். -
- அதெல்லாம் அந்த காலம்.
- இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பி விடும்.
- அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை
- அப்படியெல்லாம் இல்லை.
- இப்பொழுதும் சிலருக்கு பொது மயக்கம் அளிக்கப்படுகிறது (அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றை பொருத்து)
- தாய்ப்பாலின் அளவிற்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
- சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் அளவு ஒன்றுதான். Quantity is the same
- தாய்ப்பாலின் அளிக்கும் நாட்களுக்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
- சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் சுரப்பது என்பதும் ஒன்று தான் Duration of Lactation is the same
இல்லை ஒரு சம்பந்தம் இருக்கிறது.
- சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்க தேவையான ஆக்ஸிடோசின் இரத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்து விடும்
- அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்பு காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்து விடும்
அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் : குழந்தை பிறந்த உடன் குழந்தையை தாய்ப்பால் தர வேண்டும்
மூட நம்பிக்கை 7 : ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த முறை கட்டாயம் சிசேரியன் தான்
- பல வகை காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுகிறது.
- இதில் சில காரணங்கள் அடுத்த முறையும் வரலாம். Recurrent causes
- வேறு சில காரணங்கள் அடுத்த பிரசவத்தில் திரும்ப இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை Non Recurrent
- எனவே அடுத்த பிரசவம் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
- இதில் பொது விதி கிடையாது
மூட நம்பிக்கை 8 : சிசேரியன் செய்தால் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கும் !!
- இதை யார் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாக கூறப்படுகிறது :( :(
- இதில் பிரச்சனை என்னவென்றால் இதுவரை இதை யாரும் மறுத்து ஆராய்ச்சி கட்டுரை எழுதவில்லை
சந்தேகங்களை கேட்கலாம். பதிலளிக்கத்தயார் :) :)
45 மறுமொழிகள்:
//தண்டுவட ஊசிதான். யாருக்கும் பொது மயக்கம் அளிக்கப்படுவது இல்லை//
இதனால் எனக்குத் தெரிந்த பலருக்கும் பக்கவிளைவுகள் இருப்பதாகக் கூறுகிறார்களே. அது உண்மையா? இந்த முறையில் ஏதாவது பிரச்சினையுண்டா?
நன்றி மருத்துவரே.. நல்ல உபயோகமான தகவல்கள்.
மிகவும் உபயோகமான த்கவல்கள்.. மிக்க நன்றி :)
நல்ல தகவல்கள், நன்றி...
இதில் வொர்ஸ்ட் பார்ட் என்னவென்றால். வேண்டாம் விடுங்கள். நல்லதே நினைப்போம்.
பாயின்ட் நம்பர் 7- எனக்கு மருத்துவ காரணங்கள் எல்லாம் தெரியாது. நீங்கள் சொல்வதை முழுவதும் நம்புகிறேன். ஆனால் statistics இதற்கு சாதகமாக இருக்கிறதா ? பலரும் சொல்வதால் கேட்கிறேன்.
பாயின்ட் நம்பர் 8 - ஒருவேளை ராசி / நட்சத்திரம் பார்த்து நேரம் முடிவு எடுக்கறாங்க போல. அதை வச்சி பொறக்கற குழந்தை புத்திசாலின்னு சொல்றாங்களோ என்னவோ :)-
பயனுள்ள தகவல். நன்றி
**
"சில மருத்துவமனைகள் ராசிக்காரர்கள்.. சிசேரியன் செய்யாமலேயே சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வைப்பார்கள்" என்கிறார்களே.. மற்ற மருத்துவமனைகள் காசுக்கு ஆசைப்பட்டு சிசேரியன் செய்கிறார்களா அல்லது இவர்கள் risk எடுத்து சுகப் பிரசவம் பார்க்கிறார்களா..
சட்டச் சிக்கல்கள் காரணமாகவே சிசேரியனை நாடுவதாக நீங்கள் முன்பு விளக்கி இருக்கிறீர்கள்.
நல்ல உபயோகமான தகவல்கள்
போட்டியில் வெல்ல வாழ்த்துகள் !
:)
IS THERE ANY SIDE EFFECT AFTER CESERIAN BIRTH?
ஒரு மருத்துவரிடம் நேரடியாக கேட்டு தெளிவடைந்தது போல் இருந்தது
தங்கள் கருத்து நன்றாக உள்ளது
பகிர்வுக்கு நன்றி! :-)
http://ammakalinpathivukal.blogspot.com/2009/11/blog-post_17.html - இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்!
மிக முக்கியமான இடுகை தலைவரே. நன்றி.
உபயோகமான பதிவு புருனோ சார். Hope it will benefit many.
நல்ல பதிவு புரூனோ சார்..
வாழ்த்துக்கள்.
//இதனால் எனக்குத் தெரிந்த பலருக்கும் பக்கவிளைவுகள் இருப்பதாகக் கூறுகிறார்களே. அது உண்மையா?//
என்ன பக்கவிளைவுகள்
// இந்த முறையில் ஏதாவது பிரச்சினையுண்டா?//
எல்லா முறைகளிலும் பிரச்சனைகள் உண்டு
//இராகவன் நைஜிரியா said...
நன்றி மருத்துவரே.. நல்ல உபயோகமான தகவல்கள்.
//
நன்றி சார்
//சுடுதண்ணி said...
மிகவும் உபயோகமான த்கவல்கள்.. மிக்க நன்றி :)//
நன்றி சார்
//நல்ல தகவல்கள், நன்றி...
இதில் வொர்ஸ்ட் பார்ட் என்னவென்றால். வேண்டாம் விடுங்கள். நல்லதே நினைப்போம்.
//
பரவாயில்லை சொல்லுங்கள்
//பாயின்ட் நம்பர் 7- எனக்கு மருத்துவ காரணங்கள் எல்லாம் தெரியாது. நீங்கள் சொல்வதை முழுவதும் நம்புகிறேன். //
:)
//ஆனால் statistics இதற்கு சாதகமாக இருக்கிறதா ?//
எதற்கு
// பலரும் சொல்வதால் கேட்கிறேன்.//
:) :)
//மணிகண்டன் said...
பாயின்ட் நம்பர் 8 - ஒருவேளை ராசி / நட்சத்திரம் பார்த்து நேரம் முடிவு எடுக்கறாங்க போல. அதை வச்சி பொறக்கற குழந்தை புத்திசாலின்னு சொல்றாங்களோ என்னவோ :)-//
ஹி ஹி ஹி
இது குறித்து கருத்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை :) :)
//"சில மருத்துவமனைகள் ராசிக்காரர்கள்.. சிசேரியன் செய்யாமலேயே சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வைப்பார்கள்" என்கிறார்களே..//
1950களில் அப்படி பலரும் இருந்தார்கள் :) :)
// மற்ற மருத்துவமனைகள் காசுக்கு ஆசைப்பட்டு சிசேரியன் செய்கிறார்களா அல்லது இவர்கள் risk எடுத்து சுகப் பிரசவம் பார்க்கிறார்களா..
//
இவர்கள் ரிஸ்க் எடுத்து சுகப்பிரசவம் பார்க்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு சுகப்பிரசவமும், அறுவை சிகிச்சையும், ஊடக நீதிமன்ற தலையீடும் - ஏன் மருத்துவர்கள் சிசேரியன் செய்கிறார்கள்
என்ற இடுகையை பார்க்கவும்
//T.V.Radhakrishnan said...
நல்ல உபயோகமான தகவல்கள்
//
நன்றி சார் :) :)
//கோவி.கண்ணன் said...
போட்டியில் வெல்ல வாழ்த்துகள் !
:)//
நன்றி பாஸ் :) :)
//மறுமொழி எண் 10
RAJAN said...
IS THERE ANY SIDE EFFECT AFTER CESERIAN BIRTH?
//
சுகப்பிரசவத்தில் இருக்கும் பாதகங்களை விட குறைவுதான்
//பாலாஜி said...
ஒரு மருத்துவரிடம் நேரடியாக கேட்டு தெளிவடைந்தது போல் இருந்தது
தங்கள் கருத்து நன்றாக உள்ளது
//
நன்றி சார்
//சந்தனமுல்லை said...
பகிர்வுக்கு நன்றி! :-)//
நன்றி
//http://ammakalinpathivukal.blogspot.com/2009/11/blog-post_17.html - இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்!
//
உடனடியாக ஒரு குழந்தைகள் நிபுணரிடம் காட்ட வேண்டும்
//நர்சிம் said...
மிக முக்கியமான இடுகை தலைவரே. நன்றி.
//
நன்றி பிரபல எழுத்தாளரே
//RaviSuga said...
உபயோகமான பதிவு புருனோ சார். Hope it will benefit many.
//
நன்றி சார்
//அறிவன்#11802717200764379909 said...
நல்ல பதிவு புரூனோ சார்..
வாழ்த்துக்கள்.
//
நன்றி சார்
////தண்டுவட ஊசிதான். யாருக்கும் பொது மயக்கம் அளிக்கப்படுவது இல்லை//
இதனால் எனக்குத் தெரிந்த பலருக்கும் பக்கவிளைவுகள் இருப்பதாகக் கூறுகிறார்களே. அது உண்மையா? இந்த முறையில் ஏதாவது பிரச்சினையுண்டா?//
முதுகு வலி மற்றும் கால் வலி வருகிறது, அதோடு, தொடர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நடக்கவோ நிற்கவோ முடியவில்லைன்னு சொல்கிறார்கள். இவர்களில் முக்காவாசிப் பேருக்கு உடல் பருமனும் இல்லை. இவங்க இப்டி சொல்றது ஒருத்தரப் பாத்து ஒருத்தர் சொல்றதுமாதிரியா, இல்லை நிஜமாகவே இந்த தண்டுவட ஊசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளா டாக்டர்? இதனால் தண்டுவட பாதிப்பு ஏற்படக் கூட வாய்ப்புள்ளதா? நன்றி
//முதுகு வலி மற்றும் கால் வலி வருகிறது, அதோடு, தொடர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நடக்கவோ நிற்கவோ முடியவில்லைன்னு சொல்கிறார்கள். இவர்களில் முக்காவாசிப் பேருக்கு உடல் பருமனும் இல்லை. இவங்க இப்டி சொல்றது ஒருத்தரப் பாத்து ஒருத்தர் சொல்றதுமாதிரியா, இல்லை நிஜமாகவே இந்த தண்டுவட ஊசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளா டாக்டர்?//
இவங்க இப்டி சொல்றது ஒருத்தரப் பாத்து ஒருத்தர் சொல்றதுமாதிரிதான்
// இதனால் தண்டுவட பாதிப்பு ஏற்படக் கூட வாய்ப்புள்ளதா? நன்றி//
தண்டுவட ஊசியினால் பல பாதிப்புகள் வரலாம். அது எந்த அறுவை சிகிச்சைக்கு தண்டு வட ஊசி என்றாலும் வரும் அதே பாதிப்புகள்
நீங்கள் கூறும் முதுகு வலி, கால் வலி எல்லாம், தண்டு வட ஊசி போடாதவர்களுக்கும் வருகிறதே :) :)
மூட நம்பிக்கைகளைப் போக்கும் நிறைய தகவல்கள். தொடருங்கள் டாக்டர்.
அனுஜன்யா
Situs inversis ஆக இருக்கும் பெண்ணுக்கு நார்மல் டெலிவரி ஆகும் வாய்ப்புகள் இல்லையா?
அறுவை சிகிச்சைதான் மேற்கொள்வார்களா?
ஏனென்றால் ஒரு மருத்துவர் நார்மல் டெலிவரி ட்ரை செய்யலாம் என்றார்கள், மற்றொருவர் சிசேரியன் என்று சொல்லி
கடைசியில் சிசேரியன் தான் ஆனது.
என் போன்றவர்களுக்கு (Situs inversis) நார்மல் டெலிவரி வாய்ப்புகள் குறைவா என்பதை அறிய விரும்புகிறேன்.
//சிசேரியன் செய்தால் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கும் !!
•இதை யார் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாக கூறப்படுகிறது :( :(//
தலைவரே மனைவிக்கு சிசேரியன் முடிஞ்சதும் டாக்டர் சொன்னது,சிசேரியன் என்று கவலைபடாதீங்க, கப் போட்டு, அல்லது ரொம்ப கஷ்டப்பட்டு ட்ரை செஞ்சு பிறக்கும் குழந்தைக்களை விட சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தை ப்ரைட்டா இருக்கும், குழந்தைகளுக்கு அந்த பிரசர் பாதிப்பை கொடுக்கும் என்றார்கள், எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் சரி என்று கேட்டுக்கொண்டேன்.
வழக்கம்போல் பயனுள்ள இடுகை. உங்கள் தளத்திலுள்ள முக்கியமான இடுகைகளை (அனைத்தும்?!) பின்னூட்டத்துடன் புத்தகமாக கொண்டு வரலாமே...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//அனுஜன்யா said...
மூட நம்பிக்கைகளைப் போக்கும் நிறைய தகவல்கள். தொடருங்கள் டாக்டர்.
//
நன்றி சார் :)
//அமிர்தவர்ஷினி அம்மா said...
Situs inversis ஆக இருக்கும் பெண்ணுக்கு நார்மல் டெலிவரி ஆகும் வாய்ப்புகள் இல்லையா?
அறுவை சிகிச்சைதான் மேற்கொள்வார்களா?
ஏனென்றால் ஒரு மருத்துவர் நார்மல் டெலிவரி ட்ரை செய்யலாம் என்றார்கள், மற்றொருவர் சிசேரியன் என்று சொல்லி
கடைசியில் சிசேரியன் தான் ஆனது.
என் போன்றவர்களுக்கு (Situs inversis) நார்மல் டெலிவரி வாய்ப்புகள் குறைவா என்பதை அறிய விரும்புகிறேன்.
மறுமொழி எண் 34 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 11/19/2009 12:57 PM //
சுகப்பிரசவம் என்பது இதயத்திற்கு கடுமையான அழுத்தத்தை (Stress) வேலைப்பளுவை அளிப்பது.
இதயத்தில் hemodynamics மாறி இருக்கும் ஒருவரால் அதை தாங்க முடியுமா என்பது கேள்விக்குறியே
எனவே ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே நல்லது
situs என்று மட்டுமல்ல, எந்த வித பிறவி இதய நோய் என்றாலும் அறுவை சிகிச்சை என்பது நல்ல முடிவே
//தலைவரே மனைவிக்கு சிசேரியன் முடிஞ்சதும் டாக்டர் சொன்னது,சிசேரியன் என்று கவலைபடாதீங்க, கப் போட்டு, அல்லது ரொம்ப கஷ்டப்பட்டு ட்ரை செஞ்சு பிறக்கும் குழந்தைக்களை விட சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தை ப்ரைட்டா இருக்கும், குழந்தைகளுக்கு அந்த பிரசர் பாதிப்பை கொடுக்கும் என்றார்கள், எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் சரி என்று கேட்டுக்கொண்டேன்.//
ஓ ஓ.. இது இப்படி தான் ஆரம்பிக்கிறதோ...
இதையே மாற்றி சொன்னால் வேண்டுமானால் உண்மை
அதாவது சுகப்பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு, நீண்ட நேரம் மூச்சு விட முடியாவிட்டால் குழந்தையில் மூளை பாதிப்படையும் --> இது உண்மை
ஆனால் உங்கள் மருத்துவர் கூறியது ????
//வழக்கம்போல் பயனுள்ள இடுகை. உங்கள் தளத்திலுள்ள முக்கியமான இடுகைகளை (அனைத்தும்?!) பின்னூட்டத்துடன் புத்தகமாக கொண்டு வரலாமே...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//
அனைத்தும் இல்லை தலைவரே !!
மேலும் சிறிது காலம் எழுதினால் தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு துறை மட்டும் என்று இல்லாமல், கலந்து கட்டி எழுதுவதால், ஒரு தலைப்பில் புத்தகத்திற்கு தேர்வு செய்யும் அளவு இது வரை இல்லை என்றே நினைக்கிறேன்.
வசிஷ்டர் வாயால் பட்டம் வாங்கியாகிவிட்டது. இனி என்ன ... 2011 சென்னை புத்தக கண்காட்சிக்கு இப்பொழுதே இலக்கு வைத்து எழுத ஆரம்பிக்க வேண்டியது தான்
நல்ல தகவல்கள், நன்றி...
மறுமொழி அளித்தமைக்கு நன்றி.
//மூட நம்பிக்கை 7 : ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த முறை கட்டாயம் சிசேரியன் தான்//
இது மூட நம்பிக்கை கிடையாது ஆனால் ரிஸ்க் தவிர்பதற்காக டாக்டர்ஸ் தான் இதை தேர்வு செய்றாங்க .
VBAC(vaginal birth after cesarean ) செய்ய மாட்டோம் என்று 90% டாக்டர்ஸ் சொல்றாங்க.
//மூட நம்பிக்கை 7 : ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த முறை கட்டாயம் சிசேரியன் தான்//
இது மூட நம்பிக்கை கிடையாது ஆனால் ரிஸ்க் தவிர்பதற்காக டாக்டர்ஸ் தான் இதை தேர்வு செய்றாங்க .
VBAC(vaginal birth after cesarean ) செய்ய மாட்டோம் என்று 90% டாக்டர்ஸ் சொல்றாங்க.
டாக்டர்,
சிசேரியன் செய்வதால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள இயலாது இது மூட நம்பிக்கையா? (ரெண்டை வெச்சி மெயிண்டேன் செய்றதே பெரிய விஷயம் இதுல அதுக்கு மேல வேணுமான்னு கேக்கப்படாது)
Post a Comment