இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்

குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்
  1. பசும்பாலை விட தாய்ப்பால் பாதுகாப்பானது, சுத்தமானது, சுகாதாரமானது, அதிகம் செலவில்லாதது, குழந்தைக்கு சரியான சூட்டில் கிடைக்கக்கூடியது
  2. குழந்தைக்கு தேவையான முழுமையான உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதும்.கூடுதலாக ஒரு சொட்டு தண்ணீர் கூட தேவையில்லை
  3. தாய்பாலில் கிருமிகளை எதிர்க்கவல்ல பல வேதியல் மற்றும் உயிர் வேதியல் பொருட்கள் உள்ளன. தாய்ப்பால் அளிக்கப்படும் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளை விட குறைவான அளவே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்கள். ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் அளித்தால் வயிற்றுப்போக்கு வராது 
  4. எளிதாக சீரணமாகிறது - குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளால் கூட சீரனிக்க வல்ல உணவு தாய்ப்பாலே
  5. தாய்க்கும் சேய்க்கும் இடையில் பந்தத்தை ஏற்படுத்துகிறது
  6. குழந்தையின் வாய், உதடு, தாடை ஆகிய உறுப்புகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் அளிப்பது முக்கியம்
  7. குழந்தை அதிக எடை பெறுவதை தாய்ப்பால் தடுக்க வல்லது
  8. குழந்தை எடை குறைந்து சவலை குழந்தையாவதையும் தாய்ப்பால் தடுக்க வல்லது
  9. குழந்தையில் இரத்ததில் கால்சியம், மக்னீசியம் போன்ற தாது பொருட்கள் சரியான அளவில் இருப்பதற்கு தாய்ப்பால் உதவுகிறது
  10. குடும்ப கட்டுப்பாட்டில் உதவுகிறது
ஒரு நாள் எவ்வளவு அளிக்க வேண்டும்
450 முதல் 600 மிலி வரை சரியான அளவு என்று கருதப்படுகிறது

எத்தனை மாதங்கள் வரை
18 மாதங்கள் வரை அளிக்கலாம்
முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே போதும்

சிசேரியன் செய்தாலும் அளிக்கலாமா
கீழே பார்க்கவும்
இங்கு பார்க்கவும்

பால் குறைவாக வந்தால் என்ன செய்ய வேண்டும்
தாய் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும்

தாய்ப்பால் அளவை அதிகரிக்க முடியுமா
தாய் போதிய அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம், தாய் தினமும் 4 முதல் 6 கப் பசும்பால அருந்துவதன் மூலம் குழந்தைக்கு போதிய அளவு பால் கிடைக்கும்

6 மாதங்களுக்கு பிறகு என்ன அளிக்க வேண்டும்
6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலை நிறுத்த கூடாது. தாய்ப்பாலுடன் கூடவே பசும்பாலை வழங்க வேண்டும். இப்படியாக படிப்படியாக ஒவ்வொரு பொருட்களாக கூட்டிக்கொண்டு வந்து படிப்படியாக 12 முதல் 18 மாதங்கள் வரை தாய்ப்பாலை மெதுவாக நிறுத்தலாம்

வேலைக்கு போகும் பெண்கள் ??
காலை, மாலை, இரவு தாய்ப்பால் அளிக்கலாம்
பிற நேரங்களின் பாலை பீய்ச்சி எடுத்து (6 மணி நேரம் வரை) குளிர்சாதன கருவியில் (பிரிட்ஜ்) வைத்து  குழந்தைக்கு அளிக்கலாம்

லாக்டோஜன் போன்ற பொருட்கள்
கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். “ காசுக்கு வந்த கேடு” சொல்வார்களே.. அதற்கு ஏற்ற உதாரணம் இது போன்ற பொருட்கள் தான். காசு போனால் கூட பரவாயில்லை. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வர முக்கிய காரணமே இது போன்ற செயற்கை உணவுகள் தான்.

பிற கேள்விகள் / சந்தேகங்கள் ???
மறுமொழியில் கேட்டால் பதிலளிக்கத்தயார்

சிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும்

மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் : 
  • இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
  • தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. 
  • அதை போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம்
  • தாய்க்கு தண்ணீரே தராமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள் பல. அதில் முக்கிய பிரச்சனை தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது
  • தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் (ஜூஸ், இளநீர், மோர், நீராகாராம் எதுவென்றாலும்) குடித்தால் போதும். குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்
மூட நம்பிக்கை 2 : குளுக்கோஸ் ஏறும் போது தண்ணீர் குடிக்க கூடாது: 
  • இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று யூகிப்பது எளிது தான்.
  • அந்தக்காலத்தில் பொதுவாக வாய் வழியாக சாப்பிட முடியாத நிலைகளிலேயே சிரைவழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும். 
  • அந்தக்காலத்தில் அதிகம் நடை பெற்றது வயிற்றுப்புண், அல்லது குடல் பூண் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சைகளே
  • எனவே அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு வாய்வழியாக உணவு அளிக்கப்பட்டிருக்காது. சிரைவ்ழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்
  • எனவே சிரை வழி திரவம் ஏற்றினாலே வாய்வழியாக உணவு உட்கொள்ளக்கூடாது என்ற மூட நம்பிக்கை வந்து விட்டது.
  • ஆனால் இன்றோ பல மருந்து பொருட்களும் சிரை வழி ஏற்றப்படுகிறது 
  • அப்படி இருக்கும் போது அதை கூட சிரை வழி திரவம் என்று நினைத்துக்கொண்டு, தாயை பட்டினி போடும் “புத்திசாலிகள்”  பலர் இருக்கிறார்கள்
  • சிரை வழி திரவங்கள் ஏறிக்கொண்டிருந்தாலும் கூட, மருத்துவர் அனுமதித்தால், சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்திற்கு பிறகு தாராளமாக தண்ணீர் குடிக்கலாம். - 
மூட நம்பிக்கை 3 : சிசேரியன் பண்ணியதும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள்.
  • அதெல்லாம் அந்த காலம். 
  • இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பி விடும். 
  • அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை
மூட நம்பிக்கை 4 :  எல்லாருக்குமே இப்போது தண்டுவட ஊசிதான். யாருக்கும் பொது மயக்கம் அளிக்கப்படுவது இல்லை
  • அப்படியெல்லாம் இல்லை. 
  • இப்பொழுதும் சிலருக்கு பொது மயக்கம் அளிக்கப்படுகிறது (அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றை பொருத்து)
மூட நம்பிக்கை 5 :  சிசேரியன் செய்தால் தாய்ப்பாலில் அளவு குறைவாக இருக்கும்
  • தாய்ப்பாலின் அளவிற்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
  • சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் அளவு ஒன்றுதான். Quantity is the same
மூட நம்பிக்கை 6 :  சிசேரியன் செய்தால் தாய்ப்பால் சிக்கிரம் வற்றி விடும்
  • தாய்ப்பாலின் அளிக்கும் நாட்களுக்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
  • சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் சுரப்பது என்பதும் ஒன்று தான் Duration of Lactation is the same
பால் சுரக்கும் அளவிலோ வேறுபாடு இல்லை, அளிக்கக்படும் நாட்களிலோ வேறுபாடு இல்லையென்றால் சிசேரியனுக்கும் தாய்ப்பாலுக்கும் சம்மந்தமே கிடையாதா
இல்லை ஒரு சம்பந்தம் இருக்கிறது.
  • சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்க தேவையான ஆக்ஸிடோசின் இரத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்து விடும்
  • அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்பு காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்து விடும்
ஆனால் இந்த வித்தியாசம் initiationக்கு தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது

அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் : குழந்தை பிறந்த உடன் குழந்தையை தாய்ப்பால் தர வேண்டும்


மூட நம்பிக்கை 7 :  ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த முறை கட்டாயம் சிசேரியன் தான்
  • பல வகை காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுகிறது. 
  • இதில் சில காரணங்கள் அடுத்த முறையும் வரலாம். Recurrent causes
  • வேறு சில காரணங்கள் அடுத்த பிரசவத்தில் திரும்ப இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை Non Recurrent 
  • எனவே அடுத்த பிரசவம் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 
  • இதில் பொது விதி கிடையாது
மூட நம்பிக்கை 8 :  சிசேரியன் செய்தால் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கும் !!
  • இதை யார் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாக கூறப்படுகிறது :( :(
  • இதில் பிரச்சனை என்னவென்றால் இதுவரை இதை யாரும் மறுத்து ஆராய்ச்சி கட்டுரை எழுதவில்லை 
சந்தேகங்களை கேட்கலாம். பதிலளிக்கத்தயார் :) :)

10 மறுமொழிகள்:

மறுமொழி எண்
Mrs. Paul said...

காலையில் வேலைக்கு போனால் இரவு 8 மணிக்கு திரும்பும் என்னை போன்ற தாய்மார்கள் lactogen தான் கொடுக்க வேண்டியுள்ளது. வேறு என்ன செய்ய முடியும்? My baby is just 4 1/2 month old.

மறுமொழி எண்
Anonymous said...

என் குழந்தை pre term baby, மேலும் முதல் 30 நாள்கள் இன்குபேட்டரில் இருந்ததாலும் தற்போது என் மனைவிக்கு தாய்ப்பால் மிக மிக குறைவாகவே சுரக்கிறது. மருத்துவர்கள் சில மாத்திரைகளை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் தற்போது 68 நாள்கள் ஆகிவிட்டதால் தாய்ப்பால் வர வாய்ப்பு குறைவு என பயமுறுத்துகிறார்கள். இதற்கு வேறு ஏதும் வழிகள் உண்டா?


- மகாராஜன்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//ராமலக்ஷ்மி said...
நல்ல இடுகை டாக்டர். தமிழ்மணம் விருதுக்கு என் வாழ்த்துக்கள்!
//

நன்றி மேடம்

மறுமொழி எண்
Anonymous said...

பயனுள்ள கட்டுரை. மிக்க நன்றி. எனது மனைவிக்கு பால் கட்டி வந்து வலி ஏற்பட்டதால் மருத்துவர் பால் வற்ற மாத்திரை கொடுத்ததின் விளைவாக தற்போது பால் கொடுக்கவில்லை. குழந்தை பிறந்து இன்னும் 3 மாதம் கூட ஆகவில்லை. தாய்ப்பால் பற்றி அதிகம் அறிந்திருப்பதால் மிகவும் கவலையடைந்துள்ளேன். முதல் குழந்தையும் சரியாக தாய்ப்பால் குடிக்கவில்லை. சென்னையில் லேக்டேசன் கண்சல்டன்ட் உள்ளனரா?

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//பயனுள்ள கட்டுரை. மிக்க நன்றி. எனது மனைவிக்கு பால் கட்டி வந்து வலி ஏற்பட்டதால் மருத்துவர் பால் வற்ற மாத்திரை கொடுத்ததின் விளைவாக தற்போது பால் கொடுக்கவில்லை. குழந்தை பிறந்து இன்னும் 3 மாதம் கூட ஆகவில்லை. தாய்ப்பால் பற்றி அதிகம் அறிந்திருப்பதால் மிகவும் கவலையடைந்துள்ளேன். முதல் குழந்தையும் சரியாக தாய்ப்பால் குடிக்கவில்லை. சென்னையில் லேக்டேசன் கண்சல்டன்ட் உள்ளனரா?
//

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையிலேயே நீங்கள் ஆலோசனை பெறலாம்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...