புயலினால் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் விழித்து கொண்டு பரபரப்பாக, ஒழுங்கில்லாமல் அங்கும் இங்கும் ஓடுவதற்கு பதிலாக முதலிலேயே திட்டமிடும் பாணியை தற்சமயம் தமிழக அரசு செய்து வருகிறது என்பது நாகப்பட்டினம் மாவட்ட செய்தி குறிப்பில் இருந்து தெரிய வருகிறது. இயற்கை பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இதை தற்சமயம் எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்
தினமலர் செய்திக்குறிப்பில் இருந்து
நாகை மாவட்ட அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கலெக்டர்
நாகப்பட்டினம் : தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வார்த் புயலாக மாறியதை அடுத்து நாகப்பட்டினத்தில் 3வது வெள்ள அபாய எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வார்த் புயல் வடக்கு நோக்கு நகர்வதாலும், அது நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்பதாலும் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாகப்பட்டினம் கலெக்டர் முனியநாதன் வெளியிட்டுள்ள செய்தியில்:
- புயல் கரையை கடப்பதால் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்;
- இதற்காக அரக்கோணத்தில் இருந்து இயற்கை தடுப்பு படையினர் 120 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்;
- மேலும் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 13 பல்நோக்கு கட்டிடங்களும் மக்கள் தங்குவதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது;
- கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து கருவூலங்கள் மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன;
- மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகளுக்கு விடுமுறையின்றி பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது;
- மேலும் மக்கள் அவசர தேவைக்காக பணம் எடுப்பதற்கு வசதியாக ஸ்டேட் வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் நாளை செயல்படும்;
மாவட்ட ஆட்சித்தலைவர் என்ற சொல் இருக்கும் போது கலெக்டர் என்று பயன் படுத்தும் தினமலரின் தமிழ் பற்றை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை !!!
- அவசர நிலைகளில் பயன்படுத்துவதற்காக அனைத்து தாசில்தார்களிடமும் ரூ.4 லட்சம் வைப்பு நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் வருமுன்னர் அணை போட நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் முனியநாதன் இ.ஆ.ப அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
10 மறுமொழிகள்:
எல்லாம் நடந்த பிறகு நிவாரணம் வழங்குவது தானே வழக்கம், அப்போதுதானே 'எல்லாரையும்' திருப்திப்படுத்த முடியும், இதென்ன புதுசா இருக்கு, எப்படியோ நல்லது நடந்தா சரி
ஓட்டுப் போட்டாச்சு
பள்ளிகளுக்கு விடுமுறை?
சங்கர் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
சுரேஷ் சார்
ஓட்டிற்கு நன்றி
//பள்ளிகளுக்கு விடுமுறை?
//
ஞாயிறு தானே !!
அன்பின் மருத்துவர் புருனோ,
நீங்களுமா பத்திரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து P.R.O வாயிலாக தரப்படும் தகவல்களை உண்மை என நம்புகிறீர்கள் !!!
உங்களுக்கு தெரியுமா? தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள புயல் மற்றும் சுனாமி முன்னெச்சரிக்கை மையங்களின் நிலை? எங்கிட்ட செல்லிட பேசியில் எடுக்கப்பட்ட படங்கள் கூட உள்ளன. (சே வாய் சும்மா இருந்தாலும் கை சும்மா இருக்க மாட்டேங்குது). உங்களை குறை சொல்லவில்லை. நாகயில் இருந்து 330 கி.மீ தூரத்திலுள்ள சென்னையில் வசிக்கும் நீங்கள் தகவலுக்கு நம்பி இருக்கும் ஆதாரங்கள் அப்படிப்பட்டவை. வேறென்னத்தை சொல்ல ?
with care & love,
Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com
//அன்பின் மருத்துவர் புருனோ,
நீங்களுமா பத்திரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து P.R.O வாயிலாக தரப்படும் தகவல்களை உண்மை என நம்புகிறீர்கள் !!!//
இதில் எது பொய் என்று விளக்க முடியுமா. விளக்கினால் ஏற்றுக்கொள்கிறேன்
புயல் கரையை கடப்பதால் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்;
அரசு அதிகாரிகள் விடுப்பில் இருந்தார்களா பணியில் இருந்தார்களா
இதற்காக அரக்கோணத்தில் இருந்து இயற்கை தடுப்பு படையினர் 120 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்;
பட்டனரா.. இல்லையா
மேலும் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 13 பல்நோக்கு கட்டிடங்களும் மக்கள் தங்குவதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது;
திறந்து வைக்கப்பட்டனவா, இல்லையா
//உங்களுக்கு தெரியுமா? தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள புயல் மற்றும் சுனாமி முன்னெச்சரிக்கை மையங்களின் நிலை?//
நீங்கள் கூறினால் தெரிந்து கொள்கிறேன்
// எங்கிட்ட செல்லிட பேசியில் எடுக்கப்பட்ட படங்கள் கூட உள்ளன. (சே வாய் சும்மா இருந்தாலும் கை சும்மா இருக்க மாட்டேங்குது).//
அதை காட்டுங்களேன்.
மேலும் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 13 பல்நோக்கு கட்டிடங்களும் மக்கள் தங்குவதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்வார்களே !!
கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து கருவூலங்கள் மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன;
திறக்கப்பட்டனவா அல்லது மூடி இருந்தனவா
மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகளுக்கு விடுமுறையின்றி பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது;
வந்தார்களா விடுப்பில் இருந்தார்களா
மேலும் மக்கள் அவசர தேவைக்காக பணம் எடுப்பதற்கு வசதியாக ஸ்டேட் வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் நாளை செயல்படும்;
செயல்பட்டனவா, இல்லை வழக்கம் போல், மூடி இருந்தனவா
அவசர நிலைகளில் பயன்படுத்துவதற்காக அனைத்து தாசில்தார்களிடமும் ரூ.4 லட்சம் வைப்பு நிதியாக அளிக்கப்பட்டுள்ளது.
அளிக்கப்பட்டதா இல்லையா
// நாகயில் இருந்து 330 கி.மீ தூரத்திலுள்ள சென்னையில் வசிக்கும் நீங்கள் தகவலுக்கு நம்பி இருக்கும் ஆதாரங்கள் அப்படிப்பட்டவை. வேறென்னத்தை சொல்ல ?//
அன்பின் முனைவர் முகமது இஸ்மாயில்
நான் மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு
நீங்கள் பதிலளித்தால் நான் உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்கிறேன்
நன்றி :) :)
//உங்களை குறை சொல்லவில்லை. நாகயில் இருந்து 330 கி.மீ தூரத்திலுள்ள சென்னையில் வசிக்கும் நீங்கள் தகவலுக்கு நம்பி இருக்கும் ஆதாரங்கள் அப்படிப்பட்டவை. வேறென்னத்தை சொல்ல ?//
அன்பின் முனைவர் முகமது இஸ்மாயில்
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நாங்கள் உண்மையை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்
தெரியாது என்றால் தெரியாது என்று கூறவும். உங்களுக்கு தெரிந்திருந்தால் மட்டுமே ஆம் இல்லை என்று கூறவும்
கேள்வி 1 : புயல் கரையை கடப்பதால் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனரா இல்லையா
கேள்வி 2 : இதற்காக அரக்கோணத்தில் இருந்து இயற்கை தடுப்பு படையினர் 120 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனரா இல்லையா
கேள்வி 3 : மேலும் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 13 பல்நோக்கு கட்டிடங்களும் மக்கள் தங்குவதற்காக திறந்து வைக்கப்பட்டிருந்தனவையா இல்லையா
கேள்வி 4 :
கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து கருவூலங்கள் மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டிருந்தனவையா இல்லையா
கேள்வி 5 : மேலும் 13.12.2009 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகளுக்கு விடுமுறையின்றி பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததா இல்லையா
கேள்வி 6 : மேலும் மக்கள் அவசர தேவைக்காக பணம் எடுப்பதற்கு வசதியாக ஸ்டேட் வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் 13.12.2009 செயல்பட்டனவா இல்லையா
கேள்வி 7 :அவசர நிலைகளில் பயன்படுத்துவதற்காக அனைத்து தாசில்தார்களிடமும் ரூ.4 லட்சம் வைப்பு நிதியாக அளிக்கப்பட்டிருந்ததா இல்லையா
இந்த ஏழு கேள்விகளுக்கு பதிலளித்தால் சென்னையில் இருக்கும் எங்களுக்கு உண்மை தெரியும் அல்லவா
Post a Comment