நான் வலைப்பதிவுலகிற்கு ஏதுவும் செய்யாதவனா ? வலைப்பதிவர் கூட்டம் நடக்கும் மெரினா காந்தி சிலை பகுதியை செப்பனிட்டு நீரூற்று அமைக்கவில்லையா ? மாணவர்கள் பதிவு எழுத வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கணினி வழங்கப்பட்டுளதே ! ப்ளாக்கரில் முதல் முறையாக தமிழில் எழுதியதும் நாம் தானே
-oOo-
இந்த போட்டியில் ஜனநாயகம் வெல்லாது. பணநாயகமே வெல்லும். எனவே நான் பங்கேற்றவில்லை. இணையம் மூலம் வாக்களிப்பதில் முறைகேடுகள் நடப்பதால் வாக்கு சீட்டு மூலமே வாக்களிக்க வேண்டும்
-oOo-
நாங்கள் எழுதும் இடுகையே வெற்றி பெறும். எங்களது பதிவே வெற்றிப்பதிவு
ஆனால்
இந்த முறை மட்டும் அனைவரும் 49-ஒ விற்கு ஓட்டுப்போடுங்கள் !!
[இப்ப எந்த கூட்டனின்னு தெளிவா தெரியவில்லையே. அது தான் :) :) ]
-oOo-
இந்த போட்டியில் கே.ஜி.பி சதி செய்யதிட்டமிட்டிருப்பதாக என்னிடம் ஆதாரம் இருக்கிறது. தக்க நேரத்தில் அதை டெல்லியிலிருந்து வெளியிடுவேன்.
[தமிழ்நாட்டில் எனக்கு ஒரு முறை கிடைத்த வரவேற்பை வாழ்க்கைக்கும் மறக்க முடியாதே. அது தான் டெல்லி :) :) ]
-oOo-
இந்தியாவில் 4,23,456 வலைப்பதிவுகள் இருக்கின்றன. தமிழகத்தில் 1,23,768 பதிவுகள் உள்ளன. அதில் தற்சமயம் எழுதப்படுபவை 76,142. இது தவிர இந்தியாவிற்கு வெளியில் இருந்து எழுதப்படும் தமிழ் பதிவுகள் 67,879. இதில் தமிழ் மணத்தில் இணைந்தவை 1,05,267. இதில் போட்டியில் பங்கு பெறுபவை .. . . . .
(சோடா தரும் கைத்தடி ஒருவர் மெதுவாக ...
அண்ணே, மத்திய அமைச்சராக இருந்து பதிவுலகிற்கு என்ன செய்தாங்கன்னு கேளுங்க அண்ணே...
சும்மாயிருடா... இப்படித்தான் சாலை போக்குவரத்து அமைச்சராக இருந்து என்ன செய்தீங்கன்னு கேட்டேன். மேம்பாலம் போட்டு காட்டிட்டாங்க... பட்டது போதும்)
இதில் போட்டியில் பங்கு பெறுபவை 96,234. இதில் நாங்கள் எழுதியது .. . ..(சோடா தரும் கைத்தடி ஒருவர் மெதுவாக ...
அண்ணே, மத்திய அமைச்சராக இருந்து பதிவுலகிற்கு என்ன செய்தாங்கன்னு கேளுங்க அண்ணே...
சும்மாயிருடா... இப்படித்தான் சாலை போக்குவரத்து அமைச்சராக இருந்து என்ன செய்தீங்கன்னு கேட்டேன். மேம்பாலம் போட்டு காட்டிட்டாங்க... பட்டது போதும்)
-oOo-
நான் எப்ப இடுகை எழுதுவேன். எப்படி எழுதுவேன்னு எனக்கு தெரியாது. ஆனா எழுதுவது மட்டும் நிச்சயம்
|
|
|
v
ஐயா , சாமி, பெரியவர்களே. நான் தெரியாம பேசிபுட்டேன். என்ன மன்னிச்சிருங்க. இனி நான் இப்படி பேசவே மாட்டேன். நல்ல பாடம் படிச்சிக்கிட்டேன். கெஞ்சிக்கேட்டுக்கிறேன். எப்படியாவது எனக்கு ஓட்டு போடுங்க
-oOo-
போட்டி அறிவிப்பு : சொல்லவே இல்லை….
போட்டியில் கலந்து கொள்வது பற்றி : ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி
விதிமுறைகளை படித்தவுடன் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ
பங்கு பெறுவதை பற்றி அறிவிப்பு : நானும் பதிவர் தான். நானும் பதிவர் தான் நானும் பதிவர் தான். போட்டிக்கு போறேன் போட்டிக்கு போறேன்
அனைவரும் பங்கு பெறுகிறார்கள் என்று தெரிந்தவுடன் : கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்கயா
போட்டிக்கான இடுகை தேர்வு : எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்
போட்டிக்கான மற்றவர்களின் இடுகைகளை பார்த்தபின்னர் : இப்பவே கண்ணை கட்டுதே
மற்றவர்களுக்கு அதிக வாக்கு கிடைப்பதை அறிந்தால் : வேண்டாம் வலிக்குது அழுதுடுவேன்
இரண்டாம் கட்டம் : ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு. ஆனா பினிசிங் சரியில்லை
2008 போல் முடிவுகள் தாமதமானால் : வரும் . . . ஆனா வராது !!
தேர்வாகாவிட்டால் : ஐயோ, வடை போச்சே
தேர்வானபின்னர் : ஹையோ ஹையோ. . .
-oOo-
13 மறுமொழிகள்:
ஹா..ஹா..ஹா..!
ஒரே நகைச்சுவைதான் போங்கோ.. :)
//நான் வலைப்பதிவுலகிற்கு ஏதுவும் செய்யாதவனா ? வலைப்பதிவர் கூட்டம் நடக்கும் மெரினா காந்தி சிலை பகுதியை செப்பனிட்டு நீரூற்று அமைக்கவில்லையா ? மாணவர்கள் பதிவு எழுத வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கணினி வழங்கப்பட்டுளதே ! ப்ளாக்கரில் முதல் முறையாக தமிழில் எழுதியதும் நாம் தானே//
நான் மட்டுமா? என் மகள்! என் (மதுரை)பேத்தி! என்று குடும்பமே வலையுலகத் தமிழுக்கு வாழ்க்கையை அர்ப்பணி்த்திருப்பதை தமிழ்கூறும் நல்லுலகமே அறியும்.
எனவே எங்களுக்கான தமிழ்மணம் பரிசுகளை உரியமுறையில் வழங்க வேண்டும் என்று தென்கொரிய தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எங்கள் குடும்பத்திற்கே பரிசா என்று உலுத்தர்கள் சிலர் உச்சாணிக்கொம்பில் அமர்ந்து கேட்கக்கூடும். அந்த தமிழினப் பகைவர்களை உடன்பிறப்பே உனக்கு அடையாளம் காட்டத்தேவையில்லை. அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம் என்று சொன்னாலும் நீ கேட்கப்போவதில்லை. "அவர்களின் பிளாக்-களை ஸ்பாம் என்று குத்திவிடாதே!" என்று நான் சொன்னாலும் நீ கேட்பாயா, கண்மணியே!
ஓட்டுப் போட்டாச்சு..,
(எங்க எப்படி யாருக்குன்னு கேட்க கூடாது..,)
ஹைய்யோ ஹைய்யோ.....
இது நீங்க தேர்வானதுக்கு!!!
ஹாஹா. நல்லாத்தான் 'உக்காந்து' யோசிக்கிறீங்க:-)))))
sema comedy pinniiddiingka
இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பின்னூட்டம் போட வச்சுடறாங்கப்பா..சூப்பர் டாக்டர்..
தல சான்சே இல்ல! செம கலக்கல்
இரண்டாம் பகுதி அய்யோ அய்யோ...
கலக்கல் டாக்டர்! :-)
சூப்பர் டாக்டர்
'ஆணியே புடுங்க வேணாம்', 'பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மென்ட் வீக்கு' இதையும் சேர்த்திருக்கலாம் டாக்டர்.
Hilarious
அனுஜன்யா
அருமை :)
கலக்கல் டாக்டர்.. அதிலயும் அந்த மேம்பால மேட்டர் தூள்... :)))
நல்லா இருக்கு!!!
Post a Comment