இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Wednesday, January 21, 2009

காலுறை நாற்றமடிக்காமல் இருக்க வழிமுறை என்ன

தமிழ்நாடு போன்ற வெப்ப நாடுகளில் சப்பாத்து  அணியும் பலருக்கும் இருக்கும் பிரச்சனை இரு நாட்களில் காலுறை நாற்றமடிப்பது தான்

காலுறை நாற்றத்திற்கு காரணம் கிருமிகளின் வளர்ச்சியே

இதை தடுக்க இரு வழிமுறைகள் உள்ளன
  1. ஒரு காலுறையை 8 முதல் 12 மணி நேரத்திற்கு மேல் பயன் படுத்தாமல் அடுத்த காலுறையை மாற்றி விடுவது (அதிகம் வியர்க்கும் நபர்களுக்கு 8 மணி நேரம் - குறைவாக வியர்வை என்றால் 12 மணி நேரம்)
  2. தினமும் காலுறை அணிந்த பின், சப்பாத்து அணியும் முன்னர் விரல் பகுதியில் மேல் பக்கம் ஒரு சொட்டு, பாதப்பக்கம் ஒரு சொட்டு மற்றும் குதிகால் பக்கம் ஒரு சொட்டு என்று ஒவ்வொரு காலிலும் மூன்று சொட்டுக்கள் டெட்டால் விட்டு விடுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தை
இது போல் ஒவ்வொரு காலிலும் மூன்று சொட்டு டெட்டால் விடுவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் வராது

இதை தினமும் செய்ய வேண்டும். டெட்டால் என்று மட்டுமல்ல, சாவ்லான் போன்ற கிருமி நாசினிகளை கூட பயன்படுத்தலாம்

Sunday, January 04, 2009

முதலை ஏன் உணவு உட்கொள்ளும் பொழுது கண்ணீர் வடிக்கின்றது !!

முதலை சாப்பிடும் போது கண்ணீர் விடுகிறது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ள செய்தி. ஆனால் அந்த முதலை அழவில்லை !!

இது குறித்து நம் இலக்கியவாதிகள் புகுந்து விளையாடி விட்டனர்

13ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் பார்தோலோமேயசு அங்கிலிகசு என்பவர், முதலை மனிதனை கண்டால் அவனை சாப்பிட்டு விட்டு அழும் என்று எழுதினார்

ஈட்டி ஆட்டு துரை (shakespeare என்ற ஆங்கில ஆசிரியரின் பெயரை எழுத்து பிழையில்லாமல் எழுத shake spear e என்ற mnemonicஐ சொல்லித்தந்த எங்கள் பள்ளி ஆங்கில ஆசிரியர் அருட்தந்தை ஆஸ்வால்ட் ஞாபகத்திற்கு வருகிறார்) தனது ஒத்தெல்லோ நாடகத்தில்
O devil, devil!
If that the earth could teem with woman's tears,
Each drop she falls would prove a crocodile.
Out of my sight!
என்று எழுதி முதலையின் விழி சுரப்பி நீருக்கு புதிய அர்த்ததை அளித்து விட்டார்

அதன் பின்னர் முதலைக்கண்ணீர் என்ற பதம் பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டது. ஒருவருக்கு தொந்தரவு அளித்து விட்டு அதன் பிறகு வருத்தப்படுவது போல் செயல்படும் செயலை குறிக்க இந்த பதம் ப்ரவலாக பயன்படுத்தப்படுகிறது

தமிழில் இதை விட எளிதில் புரிய கூடிய சொற்தொடர்கள் உள்ளன
  • ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
  • பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது
போன்ற சொற்தொடர்கள் குறிப்பதும் இது போன்ற செயல்பாடுகளைத்தான்

சரி இப்பொழுது முதலை ஏன் கண்ணீர் விடுகிறது என்று பார்க்கும் முன்னர் மனிதன் உணவு உண்ணும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

நம் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் தானியங்கு நரம்பு மண்டலம் (அ) பரிவு நரம்பு மண்டலம் என்று ஒன்று உள்ளது (இது போல் பூள் நரம்பு; மைய நரம்பு மண்டலம்; மையநரம்புத்தொகுதி; மையநரம்புமண்டலம், சுற்றியநரம்புத்தொகுதி; புறநரம்பு மண்டலம் ஆகியவும் நரம்பு மண்டலத்தின் பகுதிகளே)

இந்த தானியங்கு நரம்பு மண்டலத்தில் இரு பிரிவுகள் உள்ளன
இவை இரண்டும் எதிரெதிர் செயல்களை செய்ய கூடியவை

உதாரணமாக பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா விரிவடையும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் கண்களின் பாப்பா சுருங்கும்

பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு அதிகரிக்கும். அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் இதய துடிப்பு குறையும்

பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும் அனுபரிவு மண்டலம் தூண்டப்பட்டால் உணவு பாதை மற்றும் குடலுக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

பரிவு மண்டலம் தூண்டப்பட்டால் வியர்வை அதிகரிக்கும்

சுருங்க கூறினால் வேட்டைக்கு செல்லும் போது, யாரையாவது துரத்தும் போது, யாராவது உங்களை துரத்தும் போது, கடன் கொடுத்தவரை பார்க்கும் போது இயங்க வேண்டியது பரிவு நரம்பு மண்டலம். வீட்டில் நிம்மதியாக சாப்பிடும் போது இயங்க வேண்டியது அனுபரிவு நரம்பு மண்டலம்

அனுபரிவு நரம்பு மண்டலம் இயங்கினால் உமிழ்நீர் மற்றும் உணவு பாதை, குடல் ஆகியவற்றிலுள்ள உணவை செறிக்கும் திரவங்கள் அதிகம் சுரக்கும். பரிவு நரம்பு மண்டலம் தூண்டப்பட்டால் வாய் உலர்ந்து விடும். ஐஸ்கிரீமை பார்த்தவுடன், அல்லது பிரியாணி வாசம் காற்றில் வரும்போது நாக்கில் எச்சில் ஊற காரணம் அனுபரிவு நரம்பு மண்டலம். வாடிக்கையாளரிடம் கூறிய நேரத்தில் வேலையை முடிக்காமல் இருக்கும் போது பேச வேண்டி வந்தால் நாக்கு உலர்ந்து போவதற்கு காரனம் பரிவு நரம்பு மண்டலம் :)  (ஐஸ்வர்யா ராயை பார்த்து ஜொள்ளு விடுவது, சிறிது அதிகம் மிரண்டால் சிறுவர்கள் அந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது போன்றவையும் இதற்கு தொடர்புடையவையே. அது குறித்து பின்னர் விரிவாக விளக்குகிறேன்)

சரி. இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்

அனுபரிவு நரம்பு மண்டலத்தின் நரம்புகள் மூளையில் பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மையம் என்று அழைக்கப்படும் நரம்பு மையங்களில் (Nuclei) இருந்து துவங்குகின்றன

மனித உடலில் இந்த பொது உடலுள்ளுறுப்புக்குரிய அகல் நரம்பு மண்டலத்தில் கீழ்க்காணும் நரம்பு மையங்கள் இருக்கின்றன
  • எடிங்கர் வெஸ்ட்பால் நரம்பு மையம் (Edinger Westphal Nucleus) அல்லது உதவி விழியிக்க நரம்பு மையம் (accessory oculomotor nucleus)
    • இதிலிருந்து வரும் நரம்பு கண்களில் உள்ள பாப்பாவிற்கு சென்று இந்த மையம் தூண்டப்பட்டால் பாப்பா சுருங்கும்
  • மேலுள்ள உமிழ்நீர் (Superior Salivatory) நரம்பு மையம்
    • இதிலுள்ள நரம்பு மேண்டிபிலுக்கு அடியில் உள்ள உமிழ்நீர் சுரப்பி (Submandibular Salivary Gland) மற்றும் நாக்கின்கீழுள்ள (Sublingual) உமிழ்நீர் சுரப்பி ஆகியவற்றிற்கு செல்கிறது. இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் இவ்விரு சுரப்பிகளிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது
  • கீழுள்ள உமிழ்நீர் (Inferior) நரம்பு மையம்
    • இதிலுள்ள நரம்பு பரோட்டிட் உமிழ்நீர் சுரப்பி சென்று இந்த நரம்பு மையம் தூண்டப்பட்டால் பரோட்டிட் சுரப்பியிலிருந்தும் உமிழ்நீர் சுரக்கிறது
  • கண்ணீர் (Lacrimatory) நரம்பு மையம்
    • இந்த மையத்திலிருந்து நரம்பு கண்ணீர் சுரப்பி செல்கிறது
  • வேகஸ் நரம்பின் பின் (இயக்க) மையம் Dorsal (Motor) Nucleus of Vagus
    • இதிலிருந்து தான் இதயம் முதல் உணவு பாதையில் பெருபகுதி உட்பட நரம்புகள் செல்கின்றன
இதில் முக்கிய விஷயங்கள்
  1. இந்த ஐந்து மையங்களும் ஒரே வகை செல்களிலிருந்து தோன்றியவை
  2. கண்ணீர் நரம்பு மையம் உமிழ்நீர் நரம்பு மையத்திற்கு வெகு அருகில் இருக்கிறது
பிற நரம்பு மையங்கள் குறித்து அறிய வேண்டும் என்று விரும்பினால் இங்கு செல்லலாம் இது தான் சராசரி மனித உடலில் இருக்கும் நரம்புகளின் இயக்கம்.
ஆனால் முதலைகளை பொறுத்த வரை கண்ணீர்மையம், உமிழ்நீர்மையம் ஆகியவை ஒன்றாக இருப்பதால் அவை உணவை உட்கொள்ளும் போது உமிழ்நீருடன் கண்ணீரும் சேர்ந்து சுரக்கின்றது (கூடவே உணவு பாதையில் உணவை செரிக்கும் திரவங்களும்). முதலை என்று மட்டுமல்ல, பொதுவாக ஊர்வன வகையை சேர்ந்த உயிரினங்களுக்கே இப்படி தான். ஆனால் பல்லி, பாம்பு, ஓனான், ஆமை போன்றவைகளின் கண்களை அவை உணவருந்திய பின்னர் யாரும் கவனிக்காததால் முதலை உணவருந்திய உடன் கண்ணீர் சுரப்பது பெரிய விஷயம் ஆகி விட்டது

இதே போல் மனிதர்களிலும் சிலருக்கு முதலைக்கண்ணீர் நோய்குறியீடு (crocodile tear syndrome) என்று ஒன்று உள்ளது. இவர்கள் உணவை சாப்பிடும் போது அதிகம் கண்ணீர் சுரக்கும். பேசியல் நரம்பு பாதிக்கப்பட்டு பின் அது சரியாகும் போது இந்த நரம்புகள் மாறி சேருவதால் வரும் பாதிப்பு இது. அதே போல் ப்ரே நோய்குறியீடு என்று ஒன்று உள்ளது, இதுவும் நரம்பு மாறி சேருவதால் வருவதே

இந்த இடுகை எழுத தூண்டுகோலாக இருந்த இடுகை இது தான்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...