இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

செயற்கை கால் (ஜெய்ப்பூர் கால்), ஊன்றுகோல்கள் இலவச விநியோகம்



மீள்பதிவு, மின்னஞ்சல் மூலம் இந்த தகவல் பலரையும் சென்றடையுமாறு பரவலாக்க வேண்டுகிறேன்

தொடர்பதிவு - A முதல் Z வரை !!

தமிழ்வலையுலகில் அரசியல், சினிமா, கதை என்று பலதுறைகளிலும் கலக்கும் ஆல்ரவுண்டர் “கனவுகளே” மருத்துவர்.சுரேஷ் அவர்களின் அழைப்பை தொடர்ந்து...

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABC s of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.


விதிமுறைகள்
  1. உங்களை அழைத்தவரின் பதிவிற்கு சுட்டி அளிக்கவும்
  2. விதிகளை உங்கள் பதிவில் எழுதுங்கள்
  3. உங்களை பற்றி கூறுங்கள்
  4. நான்கு (அல்லது அதிகமாகவோ) வலைப்பதிவர்களை அழையுங்கள்
  5. அவர்களை அழைத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
  6. ஏற்கனவே அழைக்கப்ட்டவர்களை மீண்டும் அழைப்பதை தவிர்த்து புதியவர்களை அழைக்க பாருங்கள்

The Tag:

  1. A – Available/Single? : Not available :) :) 
  2. B – Best friend? : பலர் இருக்கிறார்கள்
  3. C – Cake or Pie?: கேக் தான். பை என்றால் என்ன ?? 22/7ஐ சாப்பிட முடியுமா ??
  4. D – Drink of choice? : குளிர்ந்த தண்ணீர் / இளநீர்.
  5. E – Essential item you use every day? : பேனா, பந்தம்
  6. F – Favorite color? : பச்சை
  7. G – Gummy Bears Or Worms?: என்னது ??
  8. H – Hometown? : தூத்துக்குடி
  9. I - Internetல் அதிகம் பார்ப்பது - மின்னஞ்சல்
  10. J – January or February? : தமிழ் வருடப்பிறப்பு சனவரிதான்
  11. K – Kids & their names?: தகவல் பாதுகாப்பு !!
  12. L – Life is incomplete without?: பிரச்சனைகள் :)
  13. M – Marriage date ? : தகவல் பாதுகாப்பு !!
  14. N – Number of siblings ? : தகவல் பாதுகாப்பு !!
  15. O – Oranges or Apples ? : ஆரஞ்சுதான்
  16. P – Phobias / Fears ? : Psemaphobia. பொய்யை பார்த்து பயம்
  17. Q – Quote for today ? : Winning is important to me, but what brings me real joy is the experience of being fully engaged in whatever I'm doing.
  18. R – Reason to smile? : மன இறுக்கத்தை குறைத்து கொள்ள
  19. S – Season ? : குளிர்காலம்
  20. T – Tag 4 People?
    • சே.வேங்கடசுப்ரமணியன் http://thogamalaiphc.blogspot.com/
    • குசும்பன் http://kusumbuonly.blogspot.com/
    • எம்.எம்.அப்துல்லா http://mmabdulla.blogspot.com/
    • DR.ராம் http://sakalakaladr.blogspot.com/
  21. U – Unknown fact about me ? : அது சொன்னா அது known fact ஆகிவிடுமா
  22. V – Vegetable you don't like ? : யோசித்து பார்த்தால் ஒன்றும் இல்லை
  23. W – Worst habit ? : சோம்பல்
  24. X – X-rays you've had ? : எண்ணிக்கை ஞாபகம் இல்லை !! வாரம் குறைந்தது 150 :) :)
  25. Y – Your favorite food ? :
    • இது தான் பிடித்தது என்று ஒரு உணவு மட்டும் கிடையாது. சாம்பாரும் பொரித்த மீனும், ரசமும் மாசி கட்லட்டும், சிக்கன் பிரியாணி, மோர் குழம்பும் முட்டை பொரியலும், தயிர்சாதமும் எலுமிச்சை ஊறுகாயும், மற்றும் கீரை, கருவாடு, முட்டை (பாதிஅவித்தது அல்லது ஆப் பாயில்) என்று பல உணவுகள் இருப்பதால் ஒன்றை மட்டும் குறிப்பிட இயலவில்லை
  26. Z - பிடித்த Zen தத்துவம் ஒன்று - புல்லின் இதழையும் புத்தராக பாவித்துக்கொள்



Iம் Zம் என்ன பாவம் செய்தது ?? ஏன் அந்த இரு எழுத்துக்களையும் விட்டு விட்டார்கள். நான் தான் சேர்த்துள்ளேன்

Influenza இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய் - பறவை காய்ச்சல் / பன்றி காய்ச்சல் / Swine Flu Bird Flu

இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய் - பறவை காய்ச்சல் / பன்றி காய்ச்சல் / பற்றி நான் எழுதிய 64 பக்க புத்தகம் இது



28 மே 2009, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் “இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்” (Influenza A(H1N1) Pandemic) என்ற தலைப்பில் எனது உரையும் அதன் பின்னர் தொடர்ந்த கலந்துரையாடலும் ஒலிவடிவில் இங்கே கேட்கலாம்.

மரு.யெ.ச.ராஜசேகர ரெட்டி - அஞ்சலி - மருத்துவத்துறையில் இரு முக்கிய சாதனைகள்

மருத்துவத்துறையில் நாம் வெகுவாக முன்னேறியுள்ளோம்

அமெரிக்க அதிபருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை சென்னையில் (காசு கொடுத்தால்) கிடைக்கிறது !!

காத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காத பொது சுகாதார மேலாண்மை கூட நாகை மக்களுக்கு சுனாமிக்கு பின் (காசு கொடுக்காமலே) கிடைத்தது.

ஆனால்

அமெரிக்காவில் ஒரு சாதாரண மரம் வெட்டும் தொழிலாளி மரம் வெட்டிக்கொண்டிருந்த போது அவர் மீது மரம் விழுந்து விட்டது என்றால் அவருக்கு கிடைக்கும் அவசர சிகிச்சை - உடனடியாக ஒரு பிணியாளர் ஊர்தி (சீருந்து அல்லது உலங்கு வானூர்தி - ஹெலிகாப்டர்), பிணியாளர் ஊர்தியிலேயே சுவாச சிகிச்சை, இரத்தம் அல்லது பிற திரவங்கள் ஏற்றுதல் போன்றவை இங்கு (பாரதத்தில்) ஒரு சாலை விபத்தில் சிக்கிக்கொண்டால் அம்பானிக்கு கூட கிடைத்ததில்லை :( :( :(

முதல்வரோ, பிரதமரோ வந்தால் அங்கு பிணியாளர் ஊர்தி (என்ற பெயருடன் வாகனம்) ஒன்று இருக்கும். ஆனால் அந்த வாகனத்திற்கும் பிற வாகனகங்ளுக்கும் வெளியில் எழுதியிருக்கும் பெயரை தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது

இது நாள் வரை நாம் பிணியாளர் ஊர்திகளை ஒரு “வாகனமாகத்தான்” (நோயாளியை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற) பயன்படுத்தினோமே தவிர பிணியாளர் ஊர்தியில் சிகிச்சை என்பது கிடையாது

மிக சமீபகாலங்களில் தான் சில தனியார் மருத்துவமனைகளில் முழு வசதிகளுடன் பிணியாளர் ஊர்திகள் வாங்கப்பட்டன.

-oOo-

பிணியாளர் ஊர்தியில் அவசர சிகிச்சைக்கு தேவை யான கருவிகள் இருந்தால் போதுமா, அதை யார் உபயோகிப்பார் ? ஓட்டுனரா....

துரதிருஷ்டவசமாக இது நாள் வரை பிணியாளர் ஊர்தியில் பயிற்சி பெற்றவர் கிடையாது.

மேலே நாடுகளில் ஈ.எம்.டி - எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னிசியன் - அவசர கால மருத்துவ நுட்பனர் என்று தனியாக நபர்கள் உண்டு,.

அவர்கள் முதலுதவியில் மட்டுமே பயிற்சி பெற்றிருப்பார்கள். நமது நாட்டில் இது நாள் வரை அப்படி கிடையாது.

ஒன்று ஒட்டுனர் மட்டுமே இருப்பார். அல்லது அவசர சிகிச்சை அளிக்க போதிய பயிற்சி இல்லாத எப்.என்.ஏ அல்லது எம்.என்.ஏ போன்றவர்கள் இருப்பார்கள். சில இடங்களில் செவிலியர் இருப்பார்கள் (செவிலியரின் பணி மருத்துவமனையிலும் தேவைப்பட்டால் அன்று அவரி பிணியாளர் ஊர்தியில் இருக்க மாட்டார்). அன்று விபத்தில் சிக்குபவர் பாடு திண்டாட்டம் தான்.

-oOo-

இந்த நிலையை மாற்றி முதன் முதலில் ஆந்திராவில் எம்ரி நிறுவனத்தின் மூலம் அவசர கால பிணியாளர் ஊர்தி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ராஜசேகர ரெட்டிதான்

அவர் அறிமுகப்படுத்திய திட்டத்தின் சிறப்புகள்

1. முற்றிலும் இலவசம்
2. ஒரே எண் 108 - எந்த தொலைபேசியிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம் (நடைமுறைபடுத்தப்பட்ட பின்)
3. பிணியாளர் ஊர்தியிலேயே வைத்தியம் ஆரம்பம்
4. கட்டுப்பாட்டு அறையில் உள்ள மருத்துவரிடம் (ஊர்தி பணியாளர்) சந்தேகம் கேட்கலாம்.
5. மாநிலம் முழுவதும் ஒரே கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்
6. ஒட்டுனர் மற்றும் மருத்துவ நுட்பனருக்கு பணியில் சேரும் பொழுது பயிற்சி மட்டும் அதன் பின்னும் தொடர்ந்து பயிற்சி (6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடம் ஒரு முறை)
7. ஒரு ஓட்டுனரோ அல்லது மருத்துவ நுட்பனரோ விடுப்பு அல்லது வார ஓய்வு அல்லது பயிற்சியில் இருந்தாலும் ஊர்தி சேவை பிற பணியாளர்களை வைத்து தொடர்ந்து நடக்கும்

-oOo-

அது மட்டுமல்ல, அமெரிக்க அதிபருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை சென்னையில் (காசு கொடுத்தால்) கிடைக்கிறது என்று எழுதியிருந்தேன் அல்லவா

அதை மாற்றியவர் அவர்தான் !!

ஆரோக்யஸ்ரீ என்ற திட்டத்தின் மூலம் புற்றுநோய், நரம்பு தொடர்பான நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், தீப்புண்கள், விபத்து ஆகிய நோய்களுக்கு இலவச சிகிச்சை கிடைக்க செய்து, மருத்துவத்துறையில் மலர்ச்சியை ஏற்படுத்தியதும் அவர்தான்

-oOo-
  • கல்வி என்பது பணக்காரர்களுக்கும், மேல்தட்டு மக்களுக்கும் மட்டும் உரித்தான சொத்து, என்பதை காமராஜர் - எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டம் மாற்றி, கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது என்று மலர்ச்சியை ஏற்படுத்தியதை போல், ஏழை என்பதால் ஒருவருக்கு கல்வி கிடைக்காத நிலை கிடையாது என்ற நிலை போல்
  • ஏழை என்பதால் ஒருவனுக்கு உடல்நலம் மறுக்கப்படாது, கிடைக்காமல் இருக்காது, சுகாதாரம், மற்றும் தரமான சிகிச்சை என்பது பணக்காரர்களுக்கு மட்டும் உரித்தான் சொத்து அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது  என்ற நிலையை ஏற்படுத்தியவர் ராஜசேகர ரெட்டி
-oOo-

அவர் அறிமுகப்படுத்திய இரு நல்ல திட்டங்களையும், உடனடியாக ஆராய்ந்து தமிழகத்தில் சுகாதார துறையில் கொண்டு வந்து விட்டனர்
-oOo-

அஞ்சலி :( :( 

மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றும் கும்பல்

மென்பொருள் நிறுவன ஊழியர்களை ஏமாற்றுவது சுலபம் (காசு நிறைய வைத்திருக்கிறார்கள் செலவழிக்க தயங்க மாட்டார்கள்) என்று நினைத்து இப்பொழுது அடுத்தவரை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் அனைவரும் மென்பொருள் நிறுவனங்களை குறி வைத்திருக்கிறார்கள்

ஊடகங்களில் சில விஷயங்கள் வெளிவந்து நீங்கள் அறிந்திருக்கலாம்.

இது மற்றொரு சம்பவம்

சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அலுவலகத்திற்கு சென்ற சில நபர்கள், தாங்கள் -----------ல் இருந்து வருவதாகவும், ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாக மலிவு விலையில் மொத்தமாக இதய பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்காக விடுப்பு எடுக்க தேவை யில்லை என்றும் அலுவலகத்திலேயே பரிசோதனை செய்யலாம் என்றும், ஒரு நபருக்கு 500 ரூபாய் மட்டும்தான் என்றும், 5 நிமிடங்கள் கூட ஆகாது, இரத்தம் எடுக்க தேவையில்லை, உடனிருக்கும் மருத்துவர் முடிவுகளை உடனடியாக கூறி விடுவார் என்றும் கூறியதில் அங்குள்ள 2000 நபர்களில் 1500க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக சம்மதித்து விட்டதாக தெரிகிறது

அவர்கள் செய்த பரிசோதனை ஈ.சி.ஜி,

பொதுவாக ஒருவருக்கு ஈ.சி.ஜி பரிசோதனை 12 லீடுகளில் செய்யப்படுகிறது. அப்பொழுது தான் அதை முழுமையான சோதனையாக நம்பலாம். ஒரு லீடு மட்டும் என்றால் அது முழுமையான சோதனை ஆகாது !!

உதாரணமாக நீங்கள் வெளியூர் செல்ல வேண்டுமென்றால் வாகனத்தின் நான்கு சக்கரங்களிலும் அதே போல் மாற்றுச் சக்கரத்திலும் (தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் இந்த ஆங்கில சொல்லின் தமிழ் பதங்களை பார்த்த பொழுது அதிர்ந்தது நிஜம். ஆங்கிலத்தில் இப்படி இருப்பதாக தெரியவில்லை) காற்று இருக்கிறதா என்று பார்ப்பீர்களா அல்லது ஒரே ஒரு சக்கரத்தை மட்டும் சோதிப்பீர்களா

ஒரே ஒரு சக்கரத்தை மட்டும் சோதித்து மீதி சக்கரங்களை சோதிக்காமல் போனால் என்னவாகும் :) :) :)

ஆனால் இதய சோதனை என்ற பெயரில் அங்கு ஒரே ஒரு லீடில் மட்டுமே ஈ.சி.ஜி எடுக்கப்பட்டு 500 ரூபாய் வாங்கப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு சோதனை செய்ய ஆகும் நேரம் மற்றும் நுகர்பொருட்களை வைத்து (தாள், பாகு போன்றவை) போன்றவைகளை வைத்து 12 பேர்களுக்கு சோதனை முடித்தவர்களின் புத்திசாலித்தனத்தை என்ன வென்பது

அது மட்டுமல்ல, அந்த ஒரே ஒரு லீடை மாத்திரம் வைத்துக்கொண்டு, பெரும்பாலானவர்களிடம் நீங்கள் “நார்மல்” என்று கூறிவிட்டார்கள்.

அதில் ஒருவர் என்னிடம் பேச்சுவாக்கில் அந்த ஈ.சி.ஜியை காட்டியபோது தான் மீதி 11 லீடுகள் எங்கு என்று கேட்டேன். அவர் இது மட்டும்தான் அளிக்கப்பட்டது என்றார். பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட நிறுவனத்தில் இருக்கும் எனக்கு தெரிந்த ஒருவரை சந்திக்கும் பொழுது இது குறித்து கேட்டால் நாங்கள் அப்படி சோதிப்பது இல்லை. இது போல் பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். பழைய சோதனை முடிவுகளை கொண்டு வந்து ”உங்களிடம் எடுத்தது ” என்று கூறும் பொழுது தவறாக கூறுகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் இது மோசடி போல் உள்ளது என்று நொந்து விட்டார்

இதய சோதனை என்பது ஈ.சி.ஜி மட்டும் அல்ல. அதாவது நீங்கள் வெளியூர் கிளம்பும் பொழுது 5 சக்கரங்களிலும் காற்று இருக்கிறதா என்று மட்டுமா சோதிப்பீர்கள். பெட்ரோல் இருக்கிறதா, மின்கலம் சரியாக இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பீர்கள் அல்லவா, அது போலத்தான் இதய சோதனை என்றால் ஈ.சி.ஜி, டிரட்மில், எக்கோ, இரத்த சோதனைகள் என்று பல இருக்கின்றன

ஒரே ஒரு லீடை மட்டும் வைத்துக்கொண்டு நார்மல் என்று கூறுவது அயோக்கியத்தனம்

இதில் பாதகமான விஷயங்கள்

1. இது போன்ற போலிகளை நம்பி பலர் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது

2. போலிகள் உபயோகித்த நிறுவன பெயரை கொண்ட நிறுவனத்திற்கு கெட்ட பெயர்

3. பண விரயம்

4. நேர விரயம்

முக்கியமான செய்தி
இது போல் “சோதிக்கிறேன்” என்று யாராவது உங்கள் நிறுவனத்திற்கு வந்தால் உஷாராக இருங்கள்.

பின்குறிப்பு 1:
1500 x ரூபாய் 500 = ரூபாய் 7,50,000
அதில் அவர்களுக்கு செலவு 30,000 கூட இருக்காது
மோசடி செய்தவர்களுக்கு கண்டிப்பாக 7 லட்சம் லாபம் தான்

பின்குறிப்பு 2:
இது போல் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் :) :) :) (அனானியாக கூட தெரிவிக்கலாம்)

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...