உரையாடல் போட்டிக்கு அனுப்பப்படாத கற்பனை உரையாடல்
அண்ணே, நம்ம ஊருல முருகன் ஸ்வீட் ஸ்டாலுன்னு திறந்திருக்காங்களாமே, போய் பாத்தீங்களா
ஆமாம் தம்பி, புதுசா வந்திருக்கு, கலர் கலரா இருக்கு, இனிப்பு நல்லாயிருக்கு,
அப்படியா
ஆமாம், சுத்தமான நெய்யிலதான் செய்றாங்களாம்
அட
டேஸ்ட் எல்லாம் சூப்பர்
அப்படியா
விலை கூட அதிகமில்லையாம், ஆனா....
ஆனா என்னன்னே
ஆனா, இனிப்புக்குள்ள விஷம் இருக்குன்னு சொல்றாங்கப்பா. அதான் யோசனையா இருக்கு
அடப்போங்கன்ன, இனிப்புக்குள்ள விஷம் இருந்தா என்ன கேடு
என்ன தம்பி இப்படி சொல்ற
நான் மட்டுமான்ன சொல்றேன், நம்ம டேபிள் சங்கர் இருக்காருல்ல
யாரு, புதுசா ஸ்வீட் கடை ஆரம்பிக்க போறாரே அவரா
ஆமாம் அவருதான், அவரு கூட என்ன சொல்றார் பாருங்க
ஒரு ஸ்வீட்டை பற்றி அந்த கடை முதலாளியோ, சமையல்காரரோ, விற்பவரோ உட்கார்ந்து யோசிக்காத பிரச்சனைக்ளை, பாயிண்டுகளை அந்த ஸ்வீட்டில் அவர் சயனைட்டை நுழைக்கிறார், ஆசிட்டை நுழைக்கிறார் என்று எதையாவது அதற்குள் நுழைத்து ஆக வேண்டிய கட்டாயத்தில், உட்கார்ந்து யோசித்து பதிவெழுதுவது, அது அந்த இசம், இந்த இசம் என்று எழுதுவது.. ஏன் என்று எனக்கு புரியவில்லை. நான் ஒரு பாமரன்.. என்னை போன்று கடையில் ஸ்வீட் வாங்கும் பாமரன்களுக்கு, ஸ்வீட் கலரா இருக்கா இலலையா? என்பதே முக்கியமாய் இருக்கும். அப்படியிருக்க, தேவையில்லாமல், உள்ளிருக்கும் சயனைட், ஆர்சனிக் பற்றியெல்லாம் எழுதி ஏன் தனிமனித தாக்குதல் நடத்தி, ஒரு புதிய கலவரத்தை உண்டாக்குகிறார்கள். என்றே புரியவில்லை.
அடப்பாவி, அப்படியா சொல்றார்,
அது மட்டுமில்லன்ன, நம்ம படகுக்காரர் கூட
உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு ஸ்வீட் விற்கிறார்கள். இரண்டு வாங்கி சாப்பிடுகிறீர்கள். அதை ரசிக்கிறீர்கள். பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற இரண்டு கோணங்களுக்கு மேல், மூன்றாவது கோணமாய் அதில் என்ன இருக்கிறது என்று அலசி ஆராய்கிறீர்கள்.
ஆராய்ந்ததன் பயனாக உங்களுக்குக் கிடைத்ததெல்லாம் அதிர்ச்சிகள்தான். அதிலிருக்கும் சாயம், வெறும் சாயமல்ல, .. அது ஆர்சனிக் என்கிறீர்கள். இசம் என்கிறீர்கள். ஆசிட் என்கிறீர்கள். விஷம் தெரிகிறது, வன்மம் தெரிகிறது என்கிறீர்கள். நீங்கள் மெத்தப்படித்தவர்கள்.
எங்களுக்கு ஸ்வீட்டுடன் காம்பிமெண்டாக கோக் கிடைக்குமா , இல்லை வெறூம் தண்ணிதானா என்ற விவாதம்தான் ஓடுகிறது மனதில். நாங்கள் அறிவிலிகள்.
ஸ்வீட் வாங்கி முடிந்ததும் என் வாகனத்தை பிற வாகனங்கள் மோதாமல் எடுக்க முடியுமா, வீட்டுக்கு வரும்போது ஏதோ வாங்கிவரச் சொன்னாளே என்றெல்லாம் கேள்விகளோடு வெளிவருகிறோம் நாங்கள். இடையே ஸ்வீட் தந்த சில தித்திப்புகளின் நினைவுகள் இதம் தருகிறது எங்களுக்கு. நீங்கள் அதையெல்லாம் விடுத்து, வேறேதோ சிந்தனைகளில் உங்கள் நிகழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முன்னர் நடந்த நிஜ நிகழ்வுகளும், ஸ்வீட்டில் இருப்பது என்ன என்று யோசித்து யோசித்து கடை முதலாளி, சமையல்காரர், விற்பவர், சாப்பிட்டவர், விமர்சனம் எழுதினவன் என்று போட்டுத் தாக்குகிறீர்கள். தாக்குவது என்று தீர்மானித்தபின் நாசூக்காவது மண்ணாவது. இருக்கவே இருக்கிறது வார்த்தைகள். வந்து விழுகின்றன உங்களுக்கென்றே....
எங்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை.
நாங்கள் சொல்வது பொதுப்புத்தி. அதாவது அதிகமான பேரால் ஏற்றுக் கொள்ளப்படுவது பொதுப்புத்தி. அதை எதிர்ப்பதே அறிவுஜீவித் தனம். அது எங்களுக்கு வாய்க்கவில்லை. இதையே வேறுவிதமாய் சொல்வதானால் எல்லாவற்றிலும் நேர்சிந்தனையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது பொதுப்புத்தி. இல்லை அதில் எதாவது விஷம் இருக்கிறதா என்றும் நான் பார்ப்பேன் என்பது உங்கள் இசங்களும், தத்துவார்த்த சிந்தனைகளும் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அல்லது தானாய் உங்களுக்கு அமைந்த வரம். எங்களுக்கு அது கைகூடி வரவில்லை. நாங்கள் சாபம் பெற்றவர்கள்.
ன்னுதான் சொல்றார்
இப்ப என்ன பண்னனுங்கிற
அடப்போங்கன்ன, ஸ்வீட்டுக்குள்ள விஷம் இருந்தா கண்டுக்கக்கூடாதுன்னு இவங்களாம் சொல்றாங்கள்ள.. நம்ம டேபிள் சங்கர் இதே தொழில் இருக்கிறவருண்ணா... அவர் என்ன சொல்றார். விஷம் இருக்கான்னு ஏன் பாக்குறீங்க. இருந்தா என்ன, கலர் நல்லாயிருந்தா, சுத்தியிருக்கிற அலுமினிய பேப்பர் நல்லாயிருந்த ஸ்வீட்டை சாப்பிட சொல்றார்..... படகுகாரர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா... கிட்டத்தட்ட ஐநூறு பேர் அவர் படகுல போறாங்க (இன்றைய கணக்கு படி 469) ... அவர் கூட என்ன சொல்றார் பாருங்க.... ஸ்வீட்டில விஷம் இருந்தா பரவாயில்லை. நாம ஸ்வீட் வாங்க கடை முன்னால வண்டிய பார்க் பண்ணும் போது அதை யாரும் இடிக்காதது தான் முக்கியமுன்னு சொல்றார்..... பிறகு நீங்க ஏன் வருத்தப்படுறீங்க.... ஸ்வீட் இனிப்பாக இருக்கான்னு பாக்குறது நேர் சிந்தனை / பொது புத்திங்கீறார். அதில் விஷம் இருக்கான்னு பாக்குறது தப்புங்கிறார்.....பிறகு என்ன...பொது புத்திபடியே செய்ய வேண்டியது தான். சாப்பிட்டுட்டு கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் அவஸ்தைப்பட வேண்டியது தான்
-oOo-
மிட்டாய் கடையில் மிட்டாய்களின் மேல் ஈ வரக்கூடாது என்று
- பூச்சி மருந்து அடிப்பது நகைச்சுவை நடிகர் என்றால் அது காமெடி.
- ஆனால் அதையே ஒரு கதாநாயகன் செய்வது........ என்னத்த சொல்ல .....
-oOo-
- பழம் தருபவன் நண்பன்
- விஷம் தருபவன் எதிரி
- பழத்தினுள் விஷத்தை மறைத்து தருபவன்...... துரோகி
- பழம் என்று காய்ந்து போன கொட்டையை ஏமாற்றி விற்பது ... மோசடி / பிராடு (ஹி ஹி ஹி இந்த கடைசி பாய்ண்ட் மட்டும் வேற விஷயம்.... புரியவில்லை என்றால் அதிகம் குழம்பிக்கொள்ளாதீர்கள்)
-oOo-
2004ல் ரஜினி ஒரு படத்திற்கு பூஜை போட்டு விளம்பரம் தந்தார். வார்த்தைகள் ஞாபகம் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட - என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று. அதே பாணியில் சொல்வதானால்
- விஷம் தருபவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறேன்.
- பழம் தருபவர்களிடமிருந்தும், (உள்ளே விஷம் இருக்கிறாதா என்று) பழத்தை ஆராயக்கூடாது என்று சொல்பவர்களிடமிருந்தும், இறைவா, எங்களை காப்பாற்று