இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, November 30, 2009

தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்

குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்
  1. பசும்பாலை விட தாய்ப்பால் பாதுகாப்பானது, சுத்தமானது, சுகாதாரமானது, அதிகம் செலவில்லாதது, குழந்தைக்கு சரியான சூட்டில் கிடைக்கக்கூடியது
  2. குழந்தைக்கு தேவையான முழுமையான உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதும்.கூடுதலாக ஒரு சொட்டு தண்ணீர் கூட தேவையில்லை
  3. தாய்பாலில் கிருமிகளை எதிர்க்கவல்ல பல வேதியல் மற்றும் உயிர் வேதியல் பொருட்கள் உள்ளன. தாய்ப்பால் அளிக்கப்படும் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளை விட குறைவான அளவே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார்கள். ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் அளித்தால் வயிற்றுப்போக்கு வராது 
  4. எளிதாக சீரணமாகிறது - குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளால் கூட சீரனிக்க வல்ல உணவு தாய்ப்பாலே
  5. தாய்க்கும் சேய்க்கும் இடையில் பந்தத்தை ஏற்படுத்துகிறது
  6. குழந்தையின் வாய், உதடு, தாடை ஆகிய உறுப்புகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் அளிப்பது முக்கியம்
  7. குழந்தை அதிக எடை பெறுவதை தாய்ப்பால் தடுக்க வல்லது
  8. குழந்தை எடை குறைந்து சவலை குழந்தையாவதையும் தாய்ப்பால் தடுக்க வல்லது
  9. குழந்தையில் இரத்ததில் கால்சியம், மக்னீசியம் போன்ற தாது பொருட்கள் சரியான அளவில் இருப்பதற்கு தாய்ப்பால் உதவுகிறது
  10. குடும்ப கட்டுப்பாட்டில் உதவுகிறது
ஒரு நாள் எவ்வளவு அளிக்க வேண்டும்
450 முதல் 600 மிலி வரை சரியான அளவு என்று கருதப்படுகிறது

எத்தனை மாதங்கள் வரை
18 மாதங்கள் வரை அளிக்கலாம்
முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே போதும்

சிசேரியன் செய்தாலும் அளிக்கலாமா
கீழே பார்க்கவும்
இங்கு பார்க்கவும்

பால் குறைவாக வந்தால் என்ன செய்ய வேண்டும்
தாய் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும்

தாய்ப்பால் அளவை அதிகரிக்க முடியுமா
தாய் போதிய அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம், தாய் தினமும் 4 முதல் 6 கப் பசும்பால அருந்துவதன் மூலம் குழந்தைக்கு போதிய அளவு பால் கிடைக்கும்

6 மாதங்களுக்கு பிறகு என்ன அளிக்க வேண்டும்
6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலை நிறுத்த கூடாது. தாய்ப்பாலுடன் கூடவே பசும்பாலை வழங்க வேண்டும். இப்படியாக படிப்படியாக ஒவ்வொரு பொருட்களாக கூட்டிக்கொண்டு வந்து படிப்படியாக 12 முதல் 18 மாதங்கள் வரை தாய்ப்பாலை மெதுவாக நிறுத்தலாம்

வேலைக்கு போகும் பெண்கள் ??
காலை, மாலை, இரவு தாய்ப்பால் அளிக்கலாம்
பிற நேரங்களின் பாலை பீய்ச்சி எடுத்து (6 மணி நேரம் வரை) குளிர்சாதன கருவியில் (பிரிட்ஜ்) வைத்து  குழந்தைக்கு அளிக்கலாம்

லாக்டோஜன் போன்ற பொருட்கள்
கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். “ காசுக்கு வந்த கேடு” சொல்வார்களே.. அதற்கு ஏற்ற உதாரணம் இது போன்ற பொருட்கள் தான். காசு போனால் கூட பரவாயில்லை. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வர முக்கிய காரணமே இது போன்ற செயற்கை உணவுகள் தான்.

பிற கேள்விகள் / சந்தேகங்கள் ???
மறுமொழியில் கேட்டால் பதிலளிக்கத்தயார்

சிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும்

மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் : 
  • இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
  • தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. 
  • அதை போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம்
  • தாய்க்கு தண்ணீரே தராமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள் பல. அதில் முக்கிய பிரச்சனை தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது
  • தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் (ஜூஸ், இளநீர், மோர், நீராகாராம் எதுவென்றாலும்) குடித்தால் போதும். குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்
மூட நம்பிக்கை 2 : குளுக்கோஸ் ஏறும் போது தண்ணீர் குடிக்க கூடாது: 
  • இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று யூகிப்பது எளிது தான்.
  • அந்தக்காலத்தில் பொதுவாக வாய் வழியாக சாப்பிட முடியாத நிலைகளிலேயே சிரைவழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும். 
  • அந்தக்காலத்தில் அதிகம் நடை பெற்றது வயிற்றுப்புண், அல்லது குடல் பூண் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சைகளே
  • எனவே அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு வாய்வழியாக உணவு அளிக்கப்பட்டிருக்காது. சிரைவ்ழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்
  • எனவே சிரை வழி திரவம் ஏற்றினாலே வாய்வழியாக உணவு உட்கொள்ளக்கூடாது என்ற மூட நம்பிக்கை வந்து விட்டது.
  • ஆனால் இன்றோ பல மருந்து பொருட்களும் சிரை வழி ஏற்றப்படுகிறது 
  • அப்படி இருக்கும் போது அதை கூட சிரை வழி திரவம் என்று நினைத்துக்கொண்டு, தாயை பட்டினி போடும் “புத்திசாலிகள்”  பலர் இருக்கிறார்கள்
  • சிரை வழி திரவங்கள் ஏறிக்கொண்டிருந்தாலும் கூட, மருத்துவர் அனுமதித்தால், சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்திற்கு பிறகு தாராளமாக தண்ணீர் குடிக்கலாம். - 
மூட நம்பிக்கை 3 : சிசேரியன் பண்ணியதும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள்.
  • அதெல்லாம் அந்த காலம். 
  • இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பி விடும். 
  • அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை
மூட நம்பிக்கை 4 :  எல்லாருக்குமே இப்போது தண்டுவட ஊசிதான். யாருக்கும் பொது மயக்கம் அளிக்கப்படுவது இல்லை
  • அப்படியெல்லாம் இல்லை. 
  • இப்பொழுதும் சிலருக்கு பொது மயக்கம் அளிக்கப்படுகிறது (அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றை பொருத்து)
மூட நம்பிக்கை 5 :  சிசேரியன் செய்தால் தாய்ப்பாலில் அளவு குறைவாக இருக்கும்
  • தாய்ப்பாலின் அளவிற்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
  • சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் அளவு ஒன்றுதான். Quantity is the same
மூட நம்பிக்கை 6 :  சிசேரியன் செய்தால் தாய்ப்பால் சிக்கிரம் வற்றி விடும்
  • தாய்ப்பாலின் அளிக்கும் நாட்களுக்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
  • சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் சுரப்பது என்பதும் ஒன்று தான் Duration of Lactation is the same
பால் சுரக்கும் அளவிலோ வேறுபாடு இல்லை, அளிக்கக்படும் நாட்களிலோ வேறுபாடு இல்லையென்றால் சிசேரியனுக்கும் தாய்ப்பாலுக்கும் சம்மந்தமே கிடையாதா
இல்லை ஒரு சம்பந்தம் இருக்கிறது.
  • சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்க தேவையான ஆக்ஸிடோசின் இரத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்து விடும்
  • அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்பு காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்து விடும்
ஆனால் இந்த வித்தியாசம் initiationக்கு தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது

அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் : குழந்தை பிறந்த உடன் குழந்தையை தாய்ப்பால் தர வேண்டும்


மூட நம்பிக்கை 7 :  ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த முறை கட்டாயம் சிசேரியன் தான்
  • பல வகை காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுகிறது. 
  • இதில் சில காரணங்கள் அடுத்த முறையும் வரலாம். Recurrent causes
  • வேறு சில காரணங்கள் அடுத்த பிரசவத்தில் திரும்ப இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை Non Recurrent 
  • எனவே அடுத்த பிரசவம் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 
  • இதில் பொது விதி கிடையாது
மூட நம்பிக்கை 8 :  சிசேரியன் செய்தால் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கும் !!
  • இதை யார் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாக கூறப்படுகிறது :( :(
  • இதில் பிரச்சனை என்னவென்றால் இதுவரை இதை யாரும் மறுத்து ஆராய்ச்சி கட்டுரை எழுதவில்லை 
சந்தேகங்களை கேட்கலாம். பதிலளிக்கத்தயார் :) :)

கண்புரை நோயும், பிற பார்வை குறைபாடுகளும் - சில கருத்துக்கள்

உங்களுக்கு தெரியுமா
  1. இந்தியாவில் பார்வைக்குறைபாடுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 68 லட்சம்
  2. இதில் 63 சதம் பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்
  3. மேலும் 19 சதம் பேர் தூரத்து பார்வை / கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்ணாடி மூலம் சரிசெய்யலாம்
  4. இது தவிர பார்வைக்குறைபாடு / பார்வையிழப்பிற்கான பல காரணங்களை தடுக்கலாம் அல்லது சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்
தூரத்து பார்வை குறைபாட்டை லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா?? இல்லை கண்ணாடி அணிவதுதான் தீர்வா?
லேசர் மூலம் குணப்படுத்தலாம். ஆனால் அதை விட் கண்ணாடி அளிவது எளிதானதல்லவா :) :) கிட்டப்பார்வை என்றால் தான் பெரும்பாலான நேரங்களின் கண்ணாடி அணிய வேண்டும். தூரப்பார்வை என்றால் படிக்கும் போது மட்டும் தானே கண்ணாடி

கேள்விகளை கேட்கலாம் :) :)

உங்கள் ஆர்வத்தை பொருத்து, அந்த பகுதிகளை விரிவாக எழுதுகிறேன்

Thursday, November 19, 2009

வழித்தடங்கள் : 19 நவம்பர் 2009 : தென்றல் காற்றும் வாடை காற்றும் !!

இந்த பாடல் அனைவரும் படித்திருப்பீர்கள்
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தென்ன
பவளக்கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென்திசை
குமரியாடி வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர் சக்திமுற்ற வாவியில் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த்திருக்கும் என் மனைவியைக்
கண்டு எங்கோன் மாறன் வழுதிகூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனை கண்டனும் எனமே
இதிலிருந்து தெரிவது என்னவென்று பட்டியல் போடுவோமா
  1. அந்த காலத்தில் புலவர்கள் ஏழையாக இருந்துள்ளார்கள்
  2. புலவரின் வீட்டு சுவர் ஒழுகுகிறது 
  3. புலவர் வறுமையினால் போதிய உடை இல்லாமல் இருக்கிறார்
  4. உணவு கூட குறைவுதான்
  5. நாரைகள் அந்த காலமே குளிர்காலத்தில் வடக்கிலிருந்து தெற்கு வந்துள்ளன (வேடந்தாங்கல், கூந்தன் குளம் போன்ற சரணாலயங்களுக்கு)
  6. பல்லி சத்தம் இடுவதை வைத்து நிமித்தம் பார்க்கும் வழக்கம் இருந்துள்ளது
  7. பனங்கிழங்கு உணவாக இருந்துள்ளது
இதில் இன்று என்ன மாறியுள்ளது என்று சிந்தித்தால், அன்று முதல் இன்று வரை

  • கலைஞர்களின், கவிஞர்களின், எழுத்தாளர்களின் நிலையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்
  • நாரைகள் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கின்றன
  • பல்லிகள் சத்தமிட்டு கொண்டுதானிருக்கின்றன
  • கூரைகள் ஒழுகிக்கொண்டுதானிருக்கின்றன

வேண்டுமென்றால் வழுதிகூடலில் ஆடையின்றி வாடையில் மெலிந்து என்பதற்கு பதில் திருவல்லிக்கேணி மேன்சனின் குளிப்பதற்கு தண்ணீர் இன்றி தத்தளிப்பதை எழுதலாம். பல்லி சத்தம் போடுவதற்கு பதில் செல்லிடப்பேசி...... வறுமை மாறியுள்ளதா என்ற கேள்விக்கு வரும் பதில்........... :( :(

இந்நிலை இனியாவது மாற என்ன செய்யவேண்டும் ?

-oOo-

  • தென்றல் என்றால் மிதமான ரசிக்கும் விதத்தில் வீசும் காற்று என்று பொருள் உள்ளது
  • வாடை என்றால் குளிர் என்று பொருள் உள்ளது
இந்த சொற்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று சிந்தித்து பார்த்தால், இவை பருவகாற்றின் அடிப்படையிலேயே வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

தமிழகத்தை பொருத்த வரை தெற்கிலிருந்து வீசும் காற்று என்னவென்றால் அது தென்மேற்கு பருவக்காற்று தான். பெரும்பாலும் (ஆடி மாதம் அம்மி பறப்பதை தவிர) மிதமான வேகத்தில் தான் வீசும் என்பதால் தெற்கில் இருந்து வீசும் காற்று தென்றல் ஆகியிருக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாண்மையான இடங்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று பொதிகை மலையில் இருந்து வீசுவது போல் தான் தோன்றியிருக்க வேண்டும்

அதே போல் வட கிழக்கு பருவக்காற்று வீசுவது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் - குளிர் காலங்களில்

எனவே வாடைக்காற்று என்ற வடக்கிலிருந்து வீசும் காற்றை குறிக்கும் சொல்லிலிருந்து வாடை என்ற குளிரை குறிக்கும் சொல் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

இது எனது hypothesis மட்டுமே. மாற்று கருத்து இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன். திருத்திக்கொள்கிறேன் ஏதாவது ஏடாகூட சந்தேகம் என்றால் சங்க கால பாடல் நிபுணர் பிரபல எழுத்தாளர் நர்சிம் தீர்த்து வைப்பார்

-oOo-

காம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் டிரினிடி கல்லூரியில் அவர் படித்துக்கொண்டிருந்தகாலத்தில் அந்த கல்லூரியின் நான்கு வாசல்களிலும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு நான்கு சீருந்துகள் நிற்குமாம். அந்த நாட்டு இளவரசனுக்கே ஒரு சீருந்து தானாம்.

இந்த செய்தி உண்மையா கற்பனையா என்று தெரியவில்லை, ஆனால் அந்த அளவு வசதியுள்ளவர் அவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு வசதியிருந்தும், அவர் 9 வருடங்கள் சிறையில் கழித்தார் - தனக்காக இல்லை, தனது நாட்டின் விடுதலைக்காக... சிறையில் இருந்த சமயம் அவர் எழுதிய புத்தகங்கள் அமரத்துவம் பெற்றவை 1934ல் “Glimpses of World History”, 1936 “Autobiography(சுயசரிதை)” மற்றும் 1946ல் “The Discovery of India”

அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு சின்ன உதவிக்குறிப்பு : இன்று அவரது புதல்வியின் பிறந்த நாள்

-oOo-

பதிவர் பைத்தியக்காரன் அவர்கள் 12 வருடங்களுக்கு முன்னர் குங்குமம் இதழில் எழுதிய சிறுகதை ஒன்றை அவரது பதிவில் வெளியிட்டுள்ளார். பரம்பரை வலி என்ற சிறுகதை சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கக்கூடியது. படித்து பாருங்கள்

-oOo-

சமீபத்தில் மருத்துவர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் “எனக்கு வேலை தான் முக்கியம். குடும்பம் இரண்டாம் பட்சமே” என்று கூறினார். இதற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று நான் யோசிப்பதற்குள் அருகிலிருந்த மற்றொரு மருத்துவர் உடனடியாக, “சோர்ந்திருக்கும் சமயம் வேலை வந்து தலையை கோதி விட்டு தட்டி கொடுக்குமா” என்று போட்டாரே ஒரு போடு... பல நொடிகள் அந்த இடத்தில் பயங்கர நிசப்தம். வேலை முக்கியம் என்று கூறியவர் முகத்தில் ஈயாடவில்லை :) :) :)

Wednesday, November 18, 2009

சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்

சிசேரியன் அறுவை சிகிச்சை குறித்த நம் மக்களிடம் நிலவி வரும் சில மூடநம்பிக்கைகளும், அது குறித்த மருத்துவ விளக்கங்களும்

மூட நம்பிக்கை 1 : அறுவை சிகிச்சை செய்தபின்னர் தண்ணீர் குடித்தால் புண் சீழ் பிடிக்கும் : 
  • இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைந்துவிடுகிறது.
  • தண்ணீர் குடிப்பதற்கும் புண் சீழ் பிடிப்பதற்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. 
  • அதை போல் தையல் பிரித்த பின்னர் குளிக்கலாம்
  • தாய்க்கு தண்ணீரே தராமல் இருப்பதால் வரும் பிரச்சனைகள் பல. அதில் முக்கிய பிரச்சனை தாய்ப்பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது
  • தாய் தினமும் 4 லிட்டர் தண்ணீர் (ஜூஸ், இளநீர், மோர், நீராகாராம் எதுவென்றாலும்) குடித்தால் போதும். குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும்
மூட நம்பிக்கை 2 : குளுக்கோஸ் ஏறும் போது தண்ணீர் குடிக்க கூடாது: 
  • இந்த மூட நம்பிக்கை எப்படி வந்தது என்று யூகிப்பது எளிது தான்.
  • அந்தக்காலத்தில் பொதுவாக வாய் வழியாக சாப்பிட முடியாத நிலைகளிலேயே சிரைவழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும். 
  • அந்தக்காலத்தில் அதிகம் நடை பெற்றது வயிற்றுப்புண், அல்லது குடல் பூண் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சைகளே
  • எனவே அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு வாய்வழியாக உணவு அளிக்கப்பட்டிருக்காது. சிரைவ்ழி திரவங்கள் ஏற்றப்பட்டிருக்கும்
  • எனவே சிரை வழி திரவம் ஏற்றினாலே வாய்வழியாக உணவு உட்கொள்ளக்கூடாது என்ற மூட நம்பிக்கை வந்து விட்டது.
  • ஆனால் இன்றோ பல மருந்து பொருட்களும் சிரை வழி ஏற்றப்படுகிறது 
  • அப்படி இருக்கும் போது அதை கூட சிரை வழி திரவம் என்று நினைத்துக்கொண்டு, தாயை பட்டினி போடும் “புத்திசாலிகள்”  பலர் இருக்கிறார்கள்
  • சிரை வழி திரவங்கள் ஏறிக்கொண்டிருந்தாலும் கூட, மருத்துவர் அனுமதித்தால், சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்திற்கு பிறகு தாராளமாக தண்ணீர் குடிக்கலாம். - 
மூட நம்பிக்கை 3 : சிசேரியன் பண்ணியதும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் மயக்க நிலையிலேயே இருப்பார்கள்.
  • அதெல்லாம் அந்த காலம். 
  • இப்பொழுது எல்லாம் உடனடியாக நினைவு திரும்பி விடும். 
  • அதுவும் பொது மயக்கம் இல்லாமல் முதுகில் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்தால் மயக்கமே இல்லை
மூட நம்பிக்கை 4 :  எல்லாருக்குமே இப்போது தண்டுவட ஊசிதான். யாருக்கும் பொது மயக்கம் அளிக்கப்படுவது இல்லை
  • அப்படியெல்லாம் இல்லை. 
  • இப்பொழுதும் சிலருக்கு பொது மயக்கம் அளிக்கப்படுகிறது (அவர்களின் உடல்நிலை, நோய் ஆகியவற்றை பொருத்து)
மூட நம்பிக்கை 5 :  சிசேரியன் செய்தால் தாய்ப்பாலில் அளவு குறைவாக இருக்கும்
  • தாய்ப்பாலின் அளவிற்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
  • சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் அளவு ஒன்றுதான். Quantity is the same
மூட நம்பிக்கை 6 :  சிசேரியன் செய்தால் தாய்ப்பால் சிக்கிரம் வற்றி விடும்
  • தாய்ப்பாலின் அளிக்கும் நாட்களுக்கும் சிசேரியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
  • சுகப்பிரசவம் என்றாலும் அறுவை சிகிச்சை என்றாலும் தாய்ப்பாலின் சுரப்பது என்பதும் ஒன்று தான் Duration of Lactation is the same
பால் சுரக்கும் அளவிலோ வேறுபாடு இல்லை, அளிக்கக்படும் நாட்களிலோ வேறுபாடு இல்லையென்றால் சிசேரியனுக்கும் தாய்ப்பாலுக்கும் சம்மந்தமே கிடையாதா
இல்லை ஒரு சம்பந்தம் இருக்கிறது.
  • சுகப்பிரசவம் என்றால் பால் சுரக்க தேவையான ஆக்ஸிடோசின் இரத்தில் இருப்பதால் உடனடியாக பால் சுரக்க ஆரம்பித்து விடும்
  • அறுவை சிகிச்சை என்றால் குழந்தை மார்பு காம்பில் வாய் வைத்தவுடன் சுரக்க ஆரம்பித்து விடும்
ஆனால் இந்த வித்தியாசம் initiationக்கு தானே தவிர வேறு எந்த வித்தியாசமும் கிடையாது

அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் : குழந்தை பிறந்த உடன் குழந்தையை தாய்ப்பால் தர வேண்டும்


மூட நம்பிக்கை 7 :  ஒரு முறை சிசேரியன் செய்தால் அடுத்த முறை கட்டாயம் சிசேரியன் தான்

  • பல வகை காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படுகிறது. 
  • இதில் சில காரணங்கள் அடுத்த முறையும் வரலாம். Recurrent causes
  • வேறு சில காரணங்கள் அடுத்த பிரசவத்தில் திரும்ப இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை Non Recurrent 
  • எனவே அடுத்த பிரசவம் சுகப்பிரசவமா, அறுவை சிகிச்சையா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 
  • இதில் பொது விதி கிடையாது
மூட நம்பிக்கை 8 :  சிசேரியன் செய்தால் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கும் !!

  • இதை யார் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை. ஆனால் பரவலாக கூறப்படுகிறது :( :(
  • இதில் பிரச்சனை என்னவென்றால் இதுவரை இதை யாரும் மறுத்து ஆராய்ச்சி கட்டுரை எழுதவில்லை 
சந்தேகங்களை கேட்கலாம். பதிலளிக்கத்தயார் :) :)




      Friday, November 06, 2009

      வழித்தடங்கள் : 06 நவம்பர் 2009 : அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சைகளும், தமிழர் வாழ்வில் திரைப்படங்களும்

      சாதனை 
      சென்ற வாரம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூளை மரணம் ஏற்பட்டவரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அவரது சிறுநீரகங்கள் இருவருக்கும் - ஒன்று அரசு பொது மருத்துவமனை பிணியாளர் ஒருவருக்கும் மற்றொன்று ஸ்டான்லி (இசுடானுலி) மருத்துவமனை பிணியாளர் ஒருவருக்கும்- பொருத்தப்பட்டு இரண்டு சிறுநீரகங்களும் நன்றாக இயங்கி வருகின்றன. கண்கள் இரண்டும் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டுள்ளன.

      இருவருக்கு பார்வையும் இருவருக்கு மறுவாழ்வும் கிடைத்திருக்கின்றன

      சென்ற வருடம் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஹிதேந்திரனின் இதயம் பெறப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

      அதே போல் இந்த முறை அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட்டு அரசு பொது மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

      ஏற்கனவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடந்து முடிந்து விட்டது. ஸ்டான்லி (இசுடானுலி) மருத்துவமனையில் மூன்று பேருக்கு கல்லீரல்மாற்று மருத்துவ சிகிச்சை நடந்து முடிந்து விட்டது

      இந்தியாவிலேயே மாநில அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை எல்லாம் நடப்பது தமிழகத்தில் தான்

      தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் இந்தியாவின் பிற மாநிலங்களை விட பல மடங்கு உயர்ந்திருப்பது நாம் அறிந்ததே. இப்பொழுது சிறப்பு சிகிச்சை அளிப்பதிலும், நாம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னேறி வருகிறோம்

      -oOo-

      திரைப்படமும் பேச்சுவழக்கு தமிழும்
      அண்மையில் ஒரு நண்பர் குறுஞ்செய்தியில் “அழைக்கலாமா” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் அந்த நேரம் பணியில் இருந்ததால், குறுஞ்செய்தி அனுப்புங்கள் என்று பதிலனுப்பினேன். அவரும் “கையில் ஆணி, என்ன செய்யலாம்” என்று அடுத்த குறுஞ்செய்தி அனுப்பினார்.

      “அலுவலகத்தில் நிறைய ஆணி பிடுங்கி விட்டீர்களா” என்று நக்கல் அடிக்கலாம் என்று நினைத்தேன். அந்த குறுஞ்செய்தியை தட்டச்சு செய்வதற்குள் ஏதோ அவசர வேலை வந்து விட்டதால் (அதாவது ஆணி பிடுங்க வேண்டியிருந்ததால்) முடியவில்லை !!

      யோசித்து பார்த்தால், தமிழ் திரையுலகம் (ஆணி பிடுங்குவது போல்) பல சொற்தொடர்களை நம்மிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறது

      தங்கமணி என்ற சொல் மனைவியை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இது எதிலிருந்து ஆரம்பித்தது. அக்னி நட்சத்திரம் படத்திலிருந்தா, அல்லது வேறு மூலமா ??

      ஏதாவது காரியத்தை “சொதப்பு”பவர்களை “மேண்டில் வேலை பார்த்துட்டான்” என்று கூறுகிறோமே…. இந்த சொல் புழக்கத்திற்கு வர காரணம் கவுண்டமணியும் செந்திலும் தானா ?? ... (படம் வைதேகி காத்திருந்தாள் என்று நினைக்கிறேன்)

      ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்தி காரியம் சாதிப்பவர்களை பார்த்து “சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறான்” என்ற சொல்லும் பழக்கம் வந்தது துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து தானா ??

      மன்னார் அண்ட் கம்பெனி என்றால் என்ன என்பது தெரியாதவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்

      இது போன்ற சொற்களின் / சொற்தொடர்களின் முழு பட்டியலை முரளி கண்ணன் விரைவில் நீரோடையில் அளிப்பார் என்று நினைக்கிறேன்

      -oOo-
      கனவு, நம்பிக்கை, நிதர்சணம்
      பலரும் இடுகை எழுதிவிட்டு கடைசியில் கவிதை ஒன்றை இணைக்கிறார்கள். எனக்கு கவிதை எல்லாம் எழுத வராததால் அதற்கு வாய்ப்பில்லை. தப்பித்தீர்கள். எனவே இலவச இணைப்பாக நான் வடிவமைத்த படங்கள் ஏதாவது சேர்த்து விடலாம் என்று நினைக்கிறேன்

      இது 2001ஆம் ஆண்டு நான் வடிவமைத்த படம் (போட்டோஷாப் 5ஆ, 6ஆ என்று சரியாக ஞாபகம் இல்லை). எங்கள் கல்லூரி ஆண்டு மலரின் முன் அட்டையில் இடம் பெற்றது




      அடுத்த படம் புத்தகத்தின் முதல் பக்கம் (அப்துல் கலாம் கனவு காண சொல்லும் முன்னரே நாங்கள் கனவு காண சொல்லிவிட்டோம் !!)



      இராபர்டு கோத்தர்தின் வரிகளுடன் நிறைவு செய்கிறேன்
      எதையும் இயலாதது என்று தீர்மானிப்பது கடினம்
      ஏனென்றால் நேற்றைய கனவுதான் இன்றைய நம்பிக்கை
      அதுவே நாளைய நிதர்சனம்

      Tuesday, November 03, 2009

      தமிழ்மணம் விருதுகள் 2009 - வெற்றி வாய்ப்புள்ள இடுகைகள் - சில கருத்துக்கள் !!

      சென்ற வருடம் நடைபெற்ற தமிழ் மணம் விருதுகள் 2008 முடிவுகளின் படி பயணங்கள் வலைப்பதிவில் இருக்கும் மூன்று கட்டுரைகள் மூன்று பிரிவுகளில் முதலிடத்தை பெற்றுள்ளன

      பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
      1. பயணங்கள் Payanangal - புருனோ Bruno : * 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க 
      2. ஸ்மைல் பக்கம் - லிவிங் ஸ்மைல் : என் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும் 


      பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
      1. பயணங்கள் - புருனோ Bruno : மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்
      2. உண்மைத்தமிழன் - உண்மைத் தமிழன் : என் இனிய சுஜாதா

      பிரிவு: தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
      1. பயணங்கள் - புருனோ Bruno : தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை
      2. பல்சுவை! - SP.VR. SUBBIAH : Star Posting செட்டிநாட்டு வீடுகள்


      அந்த சமயம், பிரபல எழுத்தாளர் பரிசல்காரன் அவர்கள் மறுமொழியில்
      வாழ்த்துகள் டாக்டர்..
      அள்ளீட்டீங்க போங்க!
      எந்தப் பிரிவுல கலந்துக்கலாம்.. எந்தப் பதிவ முன்மொழியலாம்னு எவ்ளோ தூரம் யோசிச்சிருப்பீங்கன்னு தெரியுது!
      ஒரு பதிவப் போட்டு தெரிவியுங்க,... இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்!!
      என்று கூறியிருந்தார். அப்பொழுதே எழுதவேண்டும் என்று நினைத்து பல காரணங்களால் தாமதமாகியது

      தற்சமயம் “2009 ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகள்” குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்ற வருடம் இந்த விருது வழங்கப்பட்ட போது கடை பிடிக்கப்பட்ட அதே நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளபடியால், விதிகள் குறித்து (நான் புரிந்து கொண்டவகையில்) சில கருத்துக்களை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

      தமிழ்மணம் விருதுகள் குறித்த சில விதிகளை மட்டும் எடுத்து, அது குறித்த சில கருத்துக்களை பதிகிறேன் / பகிர்கிறேன்

      பொறுப்பு துறப்பு : இது அனைத்தும் என் கருத்துக்களே. தமிழ் மண நிர்வாகத்தின் கருத்துக்கள் அல்ல. நான் தமிழ்மணம் நிர்வாகத்துடன் எனக்கு பதிவர் என்பதை தவிர எந்த சம்மந்தமும் கிடையாது


      உதாரணங்களுக்கு எனது இடுகைகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளேன்


      விதி : தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.
      • இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த விருது தனிப்பட்ட நபருக்கானது அல்ல. ஒரு வலைப்பதிவிற்கு மொத்தமாக ஆனது கிடையாது. இந்த விருதுகள் குறிப்பிட்ட இடுகைக்கு உரியதே.
      • அப்படியென்றால், உங்களது பல இடுகைகள் மொக்கையாக இருந்தாலும் கூட நன்றாக இருக்கும் இடுகைக்காக நீங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. 
      • எனவே கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். 
      • மூன்று இடுகைகளை பரிந்துரையுங்கள்.
      • வாசித்து வாக்களியுங்கள்.
      விதிமுறை : எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர் அதிகபட்சமாக மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம்.
      • மொத்தம் மூன்று இடுகைகளை பரிந்துரைக்கலாம். மூன்றும் வெவ்வேறு பிரிவாக இருக்க வேண்டும்.
      • எந்த இடுகையை பரிந்துரைப்பது என்று சிறிது சிந்தித்து பரிந்துரையுங்கள்
      • எந்த பிரிவிற்கு பரிந்துரைப்பது என்பதையும் யோசித்து பரிந்துரைக்க வேண்டும்
      • இது குறித்து மேலும் விரிவாக கீழே விலக்கியுள்ளேன்
      விதிமுறை : விருதுத் தேர்வுக் குழு (நடுவர் குழு) என்று எதுவும் இல்லை.தமிழ்மணத்தில் இணைந்துள்ள அனைத்துப் பதிவர்களும் முதற்கட்ட நடுவர்களே. ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.
      • எனவே நீங்கள் பரிந்துரைக்கும் இடுகை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமென்றால் பதிவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். (அவர்களது அறிவிற்கோ அல்லது உணர்ச்சிக்கோ அல்லது இரண்டிற்குமோ!!)
      • எனக்கு எனது / உங்களுக்கு உங்கள் அனைத்து இடுகையும் பிடித்திருக்கலாம் (காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா). ஆனால் அனைவருக்கும் நமது அனைத்து இடுகையும் பிடித்திருக்க வேண்டும் என்பது அவசியம் அல்லவே
      • ஒரு இடுகையை பரிந்துரைப்பதற்கு முன்னர், அது பதிவர்களுக்கு பிடித்த இடுகையா என்று பார்த்து விட்டு பரிந்துரைப்பது நல்லது.
      • பரிந்துரைக்கப்படும் இடுகையின் கருப்பொருள் / கூறப்படும் கருத்துக்கள் :
      • தமிழ் பதிவுலகம் என்பது ஒரே சீரான தன்மையுடையது அல்ல. பல்வேறு வகையினரு, பல்வேறு அரசியல் சார்பு நிலையுடையவர்களும், பல்வேறு பணியில் இருப்பவர்களும் நிறைந்திருக்கிறார்கள். அதே நேரம், இதில் பெரும்பாண்மை என்பது அனைத்து பிரிவிலும் இருக்கிறது. உதாரணமாக பதிவர்களில் ஆண்கள் அதிகம், பெண்கள் குறைவு. ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகம். ஆங்கிலம் தெரியாதவர்கள் குறைவு. பட்டதாரிகள் அதிகம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிகம் [அலுவலக கணினியில் பார்ப்பவர்கள் அதிகம் :) :) :) ]
      • இந்த மக்கள் வாழ்க்கைக் கணக்கியல் (டெமொகிராபி) என்பது உங்கள் இடுகைக்கு கிடைக்கும் வாக்கில் பிரதிபலிக்கும். 
        • உதாரணமாக ஆப்பிள் மரத்திற்கு என்ன உரம் வைக்க வேண்டும் என்பதை விட கணினி திரையை தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சலை தவிர்ப்பது எப்படி என்ற இடுகை அதிக வரவேற்பை பெரும் !! ஆப்பிள் மரத்திற்கு உரம் வைப்பது குறித்து எழுதுவது தவறா என்று கேட்காதீர்கள். கண்டிப்பாக எழுதுங்கள். தமிழ் வலையுலகிற்கு உங்கள் பங்களிப்பு அவசியம். அந்த இடுகை கண்டிப்பாக பலருக்கும் பயன் பெறும். ஆனால் அது பரிசு பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனது பல இடுகைகள் வெகு ஜன ரசனைக்கு வெகு தொலைவில் இருப்பவையே. நான் எழுதுவதில் தயங்குவதே இல்லை.
        • தொழில் முறை நடுவர்கள் / அல்லது அந்த துறையை சார்ந்த போட்டி என்றால் அது போன்ற இடுகைகளை சமர்ப்பிக்கலாம்.
        • இது போல் அனைவரும் வாக்களிக்கும் போட்டியில் “வெகு ஜன ரசனை”யை பிரதிபலிக்கும் இடுகைகளே வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் என்பது கசப்பான உண்மை. உண்மை கசக்கும். உண்மை சூடும் !! 
      • எனவே நீங்கள் உங்கள் இடுகையை பரிந்துரைக்கும் முன்னர் தெரிந்து கொள்ள வேண்டிய / க்வனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் :  பரிந்துரைக்கப்படும்  உங்கள் இடுகையின் கருப்பொருள் / மையக்கருத்து பலருக்கு பிடித்திருக்க வேண்டும் / பயன்பட வேண்டும் : 
        • உதாரணமாக வலைப்பதிவர்களில் அரசு ஊழியர்கள் குறைவு. எனவே எனது ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் - 5 - பயணப்படி மற்றும் தினப்படி இடுகையை நான் பரிந்துரைத்து, அதற்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்க முடியுமா. அந்த இடுகையில் இருப்பது சரியாக தகவல்கள். அந்த இடுகையை எழுதியதில் எனது உழைப்பு இருக்கிறது. ஆனால் இந்த இரு காரணங்களுக்காக அது தமிழ் பதிவர்கள் அனைவரையும் கவர வேண்டும் என்று அவசியம் இல்லையே. ஒரு வேளை அரசு ஊழியருக்களுக்கான வலைப்பதிவு போட்டி என்றால் அந்த இடுகை வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் :) :) 
      • இதே அளவு கோலை, அரசியல், திரைப்படம், சமூகம் போன்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தி பாருங்கள். (திரைப்படம் குறித்த மற்றொரு உதாரணம் கீழே உள்ளது). 
      • அடுத்து கவனத்தில் கொள்ள வேண்டியது :  காலத்தை தாண்டி நிற்கும் தலைப்புகள் / கருத்துக்கள் அதிக வரவேற்பை பெறும்  
      • அதே போல் நக்கல் / நையாண்டி இடுகைகள் என்றால் அவை பலருக்கும் புரிய வேண்டியது அவசியம் 
        • பரிந்துரைக்கும் இடுகையில் நக்கல் / நையாண்டி இருந்தால் அது பலருக்கும் (பெரும்பாண்மையானவர்களுக்கு) புரிய வேண்டியது அவசியம். கீழுள்ள இரண்டு இடுகைகளுமே நையாண்டி செய்பவை தான். இதில் எது உங்களுக்கு புரிகிறது

          • விமர்சனங்களை விமர்சிப்பவர்களை விமர்சித்தொரு விமர்சனம் !!
            • இது விமர்சிப்பவர்களை விமர்சித்தவர்களை பகடி செய்து எழுதப்பட்டது என்பதை பெரும்பாலாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.  
          • இரண்டாவது கற்பனை கதை
            • இந்த கதை எதை கூறுகிறது என்று உங்களுக்கு புரிகிறதா  (ஜிம்மி என்று பெயர் இருந்தும் கூட) இன்றைய காலகட்டத்தில் இது போன்ற இடுகைகள் பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வெல்லும் வாய்ப்பு அதிகமில்லை. இந்த இரண்டாவது இடுகையை பொருத்த வரை தமிழ்வெளி நிர்வாகம் மட்டும் நடுவர் என்றால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது வேறு விஷயம் :) :)

      • அடுத்த விஷயம், ஒரே தலைப்பில் / ஒரே விஷயம் குறித்து எழுதப்பட்ட இடுகைகளில் கூட சில இடுகைகள் அதிகம் பதிவர்களை கவரும். சிலவற்றிற்கு வரவேற்பு இருக்காது
      • ஒரு குறிப்பிட்ட இடுகை பல பதிவர்களுக்கு பிடித்ததா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றுகிறதா - வெகு எளிதான நடைமுறை உள்ளது. மறுமொழிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம். 
        • உதாரணமாக இதில் இரண்டு இடுகைகளுமே ஊர்/வாழ்வு நினைவோடைகள் என்ற பிரிவிற்கு பொருத்தமானதே. இந்த இரண்டில் எதை பரிந்துரைக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் (இது உதாரணம் மட்டும் தான். இதில் ஒரு இடுகை 2008ல் எழுதப்பட்டதால் அதை போட்டிக்கு பரிந்துரைக்க முடியாது என்பது வேறு விஷயம்)  
        • மருத்துவம் குறித்த இந்த இரு கட்டுரைகளில் (அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள் பிரிவில்) இந்த இரண்டு இடுகைகளில் எதை பரிந்துரைத்தால் வெற்றி அடுத்த கட்ட செல்ல வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறீர்கள். 
      • மேலே கூறியவை உதாரணங்கள் தான். இதிலிருந்து எந்த இடுகைகளை பரிந்துரைத்தால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்
      • ஒரு வழியாக நீங்கள் பரிந்துரைக்க வேண்டிய இடுகையை / இடுகைகளை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். சில இடுகைகளை ஒரே பிரிவில் தான் பரிந்துரைக்க முடியும். பல இடுகைகள் பல பிரிவுகளில் பரிந்துரைக்க தக்கவாறே உள்ளன. அப்படி பல பிரிவுகளுக்கு பொருத்தமான் இடுகை என்றால்... 
      • அடுத்த கேள்வி, ஒரு இடுகையை எந்த பிரிவில் பரிந்துரைப்பது என்று எப்படி முடிவு செய்வது ?? 
        • ஒரு போட்டியில் வெற்றி வாய்ப்பு என்பது அதில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமையும். ஒரு பிரிவில் இரண்டு பேர் மட்டும் பங்கு பெற்றால் கட்டாயம் பரிசு உண்டுதானே. 
        • 2008 விருதுகளின் போது பங்கு பெற்ற இடுகைகளின் எண்ணிக்கை இது தான். (புள்ளி விபரங்கள் சேர்த்து வைப்பது எப்படியெல்லாம் பயன்படுகிறது பாருங்கள் :) :) ) இந்த வருடம் எண்ணிக்கை அதிகரித்தாலும், விகிதாச்சாரத்தில் அதிகம் மாற்றம் இருக்காது என்றே எண்ணுகிறேன்
        1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை) : 150
        2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்) : 42
        3. நூல், திரைப்படம் அறிமுகம்/திறனாய்வுகள் : 54
        4. அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள் : 61
        5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் : 96
        6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் : 61
        7. அரசியல், சமூக விமர்சனங்கள் : 84
        8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள் : 25
        9. ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள் : 18
        10. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் : 40 
        11. நகைச்சுவை, கார்ட்டூன் : 58
        12. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் : 66 
      • இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் கடமை :) :) (அல்லது திறமை) குதிரையை ஆற்றங்கரை வரை தான் கொண்டு செல்ல முடியும் !! என்று ஒரு பழமொழி உள்ளது
      விதிமுறை : முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும் இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும். இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்) வாக்களிக்கலாம்.
      • பதிவர்களில் பெண்கள் குறைவு. ஆனால் வாசகர்களில் அந்த அளவு குறைவாக இருக்காது. அதே போல் வாசகர்களில் அனைத்து பிரிவினரும் உள்ளனர் (என்றே நினைக்கிறேன்)
      • எனவே உங்களது இடுகை இரண்டாவது கட்டத்திற்கு வந்த பிறகு வெற்றி பெற வேண்டுமென்றால், அது வாசகர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து பரிந்துரையுங்கள். உதாரணமாக பதிவர்களில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் குறைவு. ஆனால் வாசகர்களில் அதிகம் இருக்கலாம். எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பிடிக்காத இடுகை ஒன்று பதிவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாவது கட்டத்திற்கு வந்தாலும் வாசகர்களால் நிராகரிக்கப்படும் வாய்ப்பே அதிகம்
      • பதிவின் நீளம் : பெரும்பாலான பதிவர்கள் அனைத்து பதிவுகளையும் படிப்பதில்லை (விதிவிலக்குகளை விட்டு விடுவோம்). வாசகர்கள் அப்படி அல்ல. எனவே அவர்கள் அதிகம் இடுகைகளை படிக்க விழைவார்கள். ஆக மிகப்பெரிய்ய்ய்ய்ய்ய...... இடுகைகள் வெற்றி பெரும் வாய்ப்பு குறைவு என்றே எண்ணுகிறேன் 
      • பொதுவாகவே பதிவில் எழுதும் போது எழுத்துப்பிழை, சந்திப்பிழை போன்றவற்றை தவிர்ப்பது நலம். (இந்த அறிவுரையை கூற எனக்கு தகுதி இருக்கிறதா என்பது வேறு விஷயம் !!) குறைந்த பட்சம், பரிந்துரைக்கும் இடுகையையாவது மறுமுறை வாசித்து பார்த்து இயன்ற அளவு, பிழைகளை திருத்தலாம். நடையை சீர்படுத்த முயலலாம். 
      • சுருங்க சொன்னால், நீங்கள் பரிந்துரைக்கும் இடுகையில் பொருட்குற்றமும் இருக்க கூடாது, சொற்குற்றமும் இருக் கூடாது
      விதிமுறை : ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.
      • இதில் முக்கியமான விஷயம், நீங்கள் தமிழ்மணத்தில் இணையும் போது அளித்த மின்னஞ்சல் முகவரிக்கே அவர்கள் அனுப்புவார்கள். எனவே உங்களது மின்னஞ்சல் முகவரி மாறியிருந்தால், தமிழ்மணம் நிர்வாகத்திடம் தெரிவியுங்கள்
      இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

      தொடர்புடைய தளங்களின் தேட

      Loading...