இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, December 28, 2009

தமிழ்மணம் விருதுகள் 2009 போட்டி - வாக்கு அளிப்பது எப்படி - படங்களுடன் விளக்கம்

நீங்கள் தமிழ்மணத்தில் இணைந்த பதிவர் என்றால், Tamilmanam Awards என்ற முகவரியிலிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும்



அதிலுள்ள சுட்டியை சுட்டினால் இந்த பக்கம் திறக்கும்


நீங்கள் வாக்களிக்க விரும்பும் பிரிவிற்கு செல்லுங்கள்
உதாரணமாக நீங்கள் அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் பிரிவிற்கு வாக்களிக்க விரும்பினால் அந்த பக்கத்தின் கீழ் சென்று படத்திலிருக்கும் படி சுட்டவும்

சுட்டினால் அடுத்த பக்கம் திறக்கும்


இங்கு நீங்கள் வாக்களிக்க விரும்பும் இடுகையை தேர்ந்தெடுப்பது எப்படி.
இரண்டு வழிகள்

ஒன்று இங்கிருக்கும் அனைத்து இடுகைகளையும் வாசித்து பார்ப்பது.
அடுத்த வழி, நீங்கள் ஏற்கனவே வாசித்த இடுகை ஒன்று உங்களுக்கு பிடித்திருந்து வாக்களிக்க விரும்புவது

பயணங்கள் பதிவிற்கு வாக்களிக்க விரும்பினால் அந்த பக்கத்திலிருந்து கண்ட்ரோல் [ctrl] விசையையும் எஃப் [F] விசையையும் சேர்த்து அழுத்தினால் ஒரு சிறிய சாளரம் வரும்


நீங்கள் குரோம் பயன்படுத்தினால் அந்த சாளரம் மேலே வரலாம்

அல்லது நீங்கள் பயர்பாக்ஸ் (நெருப்பு நரி) பயன்படுத்தினால் அது கீழே வரலாம்

ஒபெரா போன்ற உலாவிகளில் தனியாகவும் வரலாம்


அதில் நீங்கள் வாக்களிக்க விரும்பும் இடுகை தலைப்பு, வலைப்பதிவு, எழுதியவர் ஏதாவது பெயரை வைத்து தேடினால் அங்கு சென்று நிற்கும்


அதன் பிறகு அங்கிருக்கும் VOTE என்ற சுட்டியை அழுத்தினால் திரும்பவும் வாக்களிக்கும் பக்கத்திற்கு வந்து விடுவீர்கள். நீங்கள் சரியான இடுகைக்குத்தான் வாக்கை செலுத்தியுள்ளிர்களா என்பதையும் சரி பார்த்துக்கொள்ளவும்



அதன் பிறகு அடுத்த பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டியது தான்







அனைத்து பிரிவுகளுக்கு வாக்கு செலுத்திய பின்னர், (நான் மேலே வாக்களித்திருப்பது 4 பிரிவுகளுக்கு மட்டும் தான். இது போல் அனைத்து பிரிவுகளுக்கும் வாக்களிக்க வேண்டும்) இறுதியாக என்ற “வாக்கை உறுதி செய்கிறேன்” என்ற சுட்டியை சுட்டினால்


என்ற பக்கம் வரும் (நான் மேலே வாக்களித்திருப்பது 4 பிரிவுகளுக்கு மட்டும் தான். இது போல் அனைத்து பிரிவுகளுக்கும் வாக்களிக்க வேண்டும்)

நீங்கள் ஏதாவது வாக்கை மாற்ற விரும்பினால் “உங்கள் தெரிவுகளை மாற்ற விரும்பினால் சொடுக்கவும்” என்ற சுட்டியை சுட்டவும்



அவ்வளவுதான் !!

எனது இடுகைகளை ஒரு உதாரணத்திற்காக மட்டுமே தந்துள்ளேன். இந்த விளக்கத்தை வைத்து நீங்கள் எந்த இடுகைக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். எனது இடுகைகளுக்கு வாக்களிக்க விரும்பினால், பயணங்கள் பதிவிலிருந்து போட்டியில் பங்கு பெறும் இடுகைகள் இவைதான்

Sunday, December 27, 2009

தமிழ்மணம் விருதுகள் 2009 போட்டி - தமிழ்மணம் விருதுகள் 2008 போட்டியுடன் ஒப்பிடல்

தமிழ்மணம் தமிழ்மணம் விருதுகள் 2009


பிரிவு
2009 போட்டியிடும் இடுகைகள்
2008 போட்டியிட்ட இடுகைகள்
வித்தியாசம்
1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
184
150
22.67 சதம் அதிகம்
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், குறும்படங்கள்)
29
42
30.95 சதம் குறைவு
3. நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்
61
54
12.96 சதம் அதிகம்
4. அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
70
2008ல் அறிவியல் பொருளாதாரம்தொழில்நுட்பம்)
14.75 சதம் அதிகம்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
98
96
2.08 சதம் அதிகம்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
68
61
11.48 சதம் அதிகம்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
87
84
3.57 சதம் அதிகம்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
28
25 (2008 பெண்கள் பிரச்னதிருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள் தலித்திய சிக்கல்கள்)
12.00 சதம் அதிகம்
9. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
8
புது பிரிவு. 2008ல் பிரிவு 8ல் இருந்தது

10. ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்
44
18
144.44 சதம் அதிகம்
11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
27
40
32.50 சதம் குறைவு
12. நகைச்சுவை, கார்ட்டூன்
57
58
1.72 சதம் குறைவு
13. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
54
66
18.18 சதம் குறைவு
14. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்
12
புது பிரிவு. 2008ல் பிரிவு 4ல் இருந்தது

15. தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்
15
புது பிரிவு. 2008ல் பிரிவு 11ல் இருந்தது
இரண்டு பிரிவுகளையும் சேர்த்து பார்த்தால் 5 சதம் அதிகம்
16. விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்
27
புது பிரிவு

மொத்தம்
869
755
15.10 சதம் அதிகம்

Tuesday, December 22, 2009

பிரபலங்கள் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து தமிழ் மணம் போட்டியில் பங்கு பெற்றால் . . . .

பிரபலங்கள் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து தமிழ் மணம் போட்டியில் பங்கு பெற்றால் . . . .

நான் வலைப்பதிவுலகிற்கு ஏதுவும் செய்யாதவனா ? வலைப்பதிவர் கூட்டம் நடக்கும் மெரினா காந்தி சிலை பகுதியை செப்பனிட்டு நீரூற்று அமைக்கவில்லையா ? மாணவர்கள் பதிவு எழுத வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கணினி வழங்கப்பட்டுளதே ! ப்ளாக்கரில் முதல் முறையாக தமிழில் எழுதியதும் நாம் தானே

-oOo-

இந்த போட்டியில் ஜனநாயகம் வெல்லாது. பணநாயகமே வெல்லும். எனவே நான் பங்கேற்றவில்லை. இணையம் மூலம் வாக்களிப்பதில் முறைகேடுகள் நடப்பதால் வாக்கு சீட்டு மூலமே வாக்களிக்க வேண்டும்

-oOo-

நாங்கள் எழுதும் இடுகையே வெற்றி பெறும். எங்களது பதிவே வெற்றிப்பதிவு
ஆனால்
இந்த முறை மட்டும் அனைவரும் 49-ஒ விற்கு ஓட்டுப்போடுங்கள் !!
[இப்ப எந்த கூட்டனின்னு தெளிவா தெரியவில்லையே. அது தான் :) :) ]

-oOo-

இந்த போட்டியில் கே.ஜி.பி சதி செய்யதிட்டமிட்டிருப்பதாக என்னிடம் ஆதாரம் இருக்கிறது. தக்க நேரத்தில் அதை டெல்லியிலிருந்து வெளியிடுவேன்.

[தமிழ்நாட்டில் எனக்கு ஒரு முறை கிடைத்த வரவேற்பை வாழ்க்கைக்கும் மறக்க முடியாதே. அது தான் டெல்லி :) :) ]


-oOo-

இந்தியாவில் 4,23,456 வலைப்பதிவுகள் இருக்கின்றன. தமிழகத்தில் 1,23,768 பதிவுகள் உள்ளன. அதில் தற்சமயம் எழுதப்படுபவை 76,142. இது தவிர இந்தியாவிற்கு வெளியில் இருந்து எழுதப்படும் தமிழ் பதிவுகள் 67,879. இதில் தமிழ் மணத்தில் இணைந்தவை 1,05,267. இதில் போட்டியில் பங்கு பெறுபவை .. . . . .
(சோடா தரும் கைத்தடி ஒருவர் மெதுவாக ...
அண்ணே, மத்திய அமைச்சராக இருந்து பதிவுலகிற்கு என்ன செய்தாங்கன்னு கேளுங்க அண்ணே...
சும்மாயிருடா... இப்படித்தான் சாலை போக்குவரத்து அமைச்சராக இருந்து என்ன செய்தீங்கன்னு கேட்டேன். மேம்பாலம் போட்டு காட்டிட்டாங்க... பட்டது போதும்)
இதில் போட்டியில் பங்கு பெறுபவை 96,234. இதில் நாங்கள் எழுதியது .. . ..

-oOo-

நான் எப்ப இடுகை எழுதுவேன். எப்படி எழுதுவேன்னு எனக்கு தெரியாது. ஆனா எழுதுவது மட்டும் நிச்சயம்
|
|
|
v
ஐயா , சாமி, பெரியவர்களே. நான் தெரியாம பேசிபுட்டேன். என்ன மன்னிச்சிருங்க. இனி நான் இப்படி பேசவே மாட்டேன். நல்ல பாடம் படிச்சிக்கிட்டேன். கெஞ்சிக்கேட்டுக்கிறேன். எப்படியாவது எனக்கு ஓட்டு போடுங்க



-oOo-

போட்டி அறிவிப்பு : சொல்லவே இல்லை….

போட்டியில் கலந்து கொள்வது பற்றி : ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி

விதிமுறைகளை படித்தவுடன் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ

பங்கு பெறுவதை பற்றி அறிவிப்பு : நானும் பதிவர் தான். நானும் பதிவர் தான் நானும் பதிவர் தான். போட்டிக்கு போறேன் போட்டிக்கு போறேன்

அனைவரும் பங்கு பெறுகிறார்கள் என்று தெரிந்தவுடன் : கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்கயா

போட்டிக்கான இடுகை தேர்வு : எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்

போட்டிக்கான மற்றவர்களின் இடுகைகளை பார்த்தபின்னர் : இப்பவே கண்ணை கட்டுதே

மற்றவர்களுக்கு அதிக வாக்கு கிடைப்பதை அறிந்தால் : வேண்டாம் வலிக்குது அழுதுடுவேன்

இரண்டாம் கட்டம் : ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு. ஆனா பினிசிங் சரியில்லை

2008 போல் முடிவுகள் தாமதமானால் : வரும் . . . ஆனா வராது !!

தேர்வாகாவிட்டால் : ஐயோ, வடை போச்சே

தேர்வானபின்னர் : ஹையோ ஹையோ. . .
-oOo-

Saturday, December 12, 2009

இயற்கை பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்

புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட பின்னர் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் வாடிக்கை தான்

புயலினால் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் விழித்து கொண்டு பரபரப்பாக, ஒழுங்கில்லாமல் அங்கும் இங்கும் ஓடுவதற்கு பதிலாக முதலிலேயே திட்டமிடும் பாணியை தற்சமயம் தமிழக அரசு செய்து வருகிறது என்பது நாகப்பட்டினம் மாவட்ட செய்தி குறிப்பில் இருந்து தெரிய வருகிறது. இயற்கை பேரிடரை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இதை தற்சமயம் எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்

தினமலர் செய்திக்குறிப்பில் இருந்து
நாகை மாவட்ட அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கலெக்டர்
நாகப்பட்டினம் : தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வார்த் புயலாக மாறியதை அடுத்து நாகப்பட்டினத்தில் 3வது வெள்ள அபாய எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வார்த் புயல் வடக்கு நோக்கு நகர்வதாலும், அது நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்பதாலும் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாகப்பட்டினம் கலெக்டர் முனியநாதன் வெளியிட்டுள்ள செய்தியில்: 
  • புயல் கரையை கடப்பதால் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்;
  • இதற்காக அரக்கோணத்தில் இருந்து இயற்கை தடுப்பு படையினர் 120 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்;
  • மேலும் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 13 பல்நோக்கு கட்டிடங்களும் மக்கள் தங்குவதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது;
  • கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து கருவூலங்கள் மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன; 
  • மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகளுக்கு விடுமுறையின்றி பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது;
  • மேலும் மக்கள் அவசர தேவைக்காக பணம் எடுப்பதற்கு வசதியாக ஸ்டேட் வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் நாளை செயல்படும்; 
  • அவசர நிலைகளில் பயன்படுத்துவதற்காக அனைத்து தாசில்தார்களிடமும் ரூ.4 லட்சம் வைப்பு நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் என்ற சொல் இருக்கும் போது கலெக்டர் என்று பயன் படுத்தும் தினமலரின் தமிழ் பற்றை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை !!!

வெள்ளம் வருமுன்னர் அணை போட நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் முனியநாதன் இ.ஆ.ப அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, December 01, 2009

உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் பதிவின் சக்தி பாரீர்

உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் பதிவின் சக்தி மற்றும் வீச்சின் முன்னர்  கூகிளும் பிளாக்கரும் கூட தப்பவில்லையா



அண்ணா, நீங்க ஏங்கையோ போயிட்டீங்கண்ணா :) :)
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...