- எழுத்தாளர் சாரு (http://www.charuonline.com/newarticls/velithirai.html)
கடந்த ஒரு ஆண்டில் விற்பனையான என் புத்தகங்களின் எண்ணிக்கை இது. இதற்கான ராயல்டி தொகையாகக் கிடைத்த 30,000 ரூபாயில்தான் நான் வெள்ளித் திரை சினிமாவைப் பார்த்தேன்.
- எழுத்தாளர் ஜெயமோகன் (http://www.jeyamohan.in/?p=5683)
லட்சம் பிரதிகளா? நக்கலா? பத்துநூலும் வருடத்திற்கு ஆயிரம் பிரதிகள் விற்றாலே எனக்கெல்லாம் கொஞ்சம் மேட்டிமைத்தனம் பேச்சு நடத்தையில் வந்துவிடும் என்று நினைக்கிறேன். சென்ற வருடம் விற்பனையில் இருக்கும் என் நாற்பத்திரண்டு நூல்களுக்காக மொத்தமாக வாங்கிய ராயல்ட்டியே பதிநான்காயிரம் ரூபாய்தான். தமிழ் நூல்களை வாங்கிப்படிப்பவர்கள் மிக மிக மிக மிகக் குறைவு. விற்பனையில் சுஜாதா, சாரு,எஸ்.ராமகிருஷ்ணன், நான் என ஒரு வரிசை இருப்பது உயிர்மையின் விளம்பரங்களில் இருந்து தெரிகிறது. எனக்கு இந்த நிலைமை என்றால் எஸ்.ராமகிருஷ்ணன் இன்னும் ஐந்து பிரதி அதிகம் விற்பவராக இருப்பார் என்று நினைக்கிறேன். உழக்குக்குள் வழக்கு.
- எழுத்தாளர் ஞாநி (http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_4548.html)
ஆனால், எழுத்தாளனுக்கு இதனால் பெரும் லாபம் வந்துவிடவில்லை. இன்னமும் ராயல்டி பத்து சதவிகிதம்தான். ராயல்டி என்பது எழுத்தாளனின் சம்பளம். நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்த கத்தை வாங்கினால், அதில் பத்து ரூபாய் எழுத்தாளனுக்கான ராயல்டி.
- எழுத்தாளர், ஆசிரியர் பாரா (http://www.writerpara.com/paper/?p=930)
- எழுத்தாளர், பதிப்பாளர் பத்ரி (http://thoughtsintamil.blogspot.com/2009/12/etc-1.html மற்றும் http://thoughtsintamil.blogspot.com/2009/12/etc-2.html)
ஒரு புத்தகம் எழுதப்படுவதில் இருந்து வாசிக்கப்படுவது வரை நடைபெறுவது, சிக்கலான, பல கூறுகளை உள்ளடக்கிய பயணம். அதை எளிதாக புரிந்து கொள்ள ஒரு கற்பனை புத்தகத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம் - விக்டோரியா மகாராணி பற்றி நான் 250 (A5) பக்கங்களுக்கு ஒரு புத்தகம் எழுதி அதை ஒரு பதிப்பகம் 100 ரூபாய் புத்தகமாக பதிப்பித்து 1000 பிரதிகள் அச்சிட்டு விற்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்
1000 பிரதிகள் x 100 ரூபாய் = 1,00,000 அதாவது 1 லட்சம்
இதில் 1 லட்சம் எப்படி பிரிகிறது என்றால்
- எழுதுபவருக்கு ரூபாய் 10,000
- A5 அளவில் 250 பக்கம் உள்ள புத்தகம் 1000 பிரதிகள் அச்சிட ஆகும் செலவு சுமார் 30,000 (அச்சு கோர்ப்பு, அட்டை, பைண்டிங் உட்பட)
- அச்சு கோர்ப்பு என்றால், கணினி வேண்டும், பிரிண்டர் வேண்டும், தாள்கள் வேண்டும், மென்பொருள் வேண்டும். அடோப் இண்டிசைன், பேஜ்மேக்கர், போட்டோ ஷாப் எல்லாம் என்ன விலை தெரியுமா :) :) :)
- அச்சு மை
- தாள்கள்,
- வண்ண அட்டை அச்சிட ஆகும் செலவு அதிகம்
- அட்டை லேமினேஷன்
- இவற்றை கட்டி, வெவ்வேறு இடங்களுக்கு அனுப்ப ஆகும் செலவு 10,000
- (கட்ட வேண்டுமென்றால் அதற்கு துணி வேண்டும், கயிறு வேண்டும், கட்ட ஆள் வேண்டும்,அவருக்கு சம்பளம் வேண்டும், அதை கொண்டு செல்லும் லாரிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்)
- இவற்றை பதிப்பகங்கள் 30 சதம் தள்ளுபடி என்ற அளவிலேயே விற்கிறார்கள். எனவே அவர்களுக்கு கிடைக்கும் தொகை 70,000
- ஆக 50,000 செலவு செய்து 70,000 பெறுகிறார்கள். இதில் 10,000 வட்டி என்று வைத்துக்கொண்டால் மீதி 10,000 பதிப்பகத்திற்கு லாபம்
- அது போக 70,000 ரூபாய்க்கு பதிப்பகத்திடமிருந்து வாங்கப்படும் புத்தகம் ரீடெயிலர் அல்லது டிஸ்டிரிபியூட்டரால் 80,000க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது
- வேர்ஹவுஸ் வாடகை, ஊழியர் சம்பளம், போக்குவரத்து செலவு
- அது 90,000 க்கு நுகர்வோரிடம் விற்கப்படுகிறது
- கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர் சம்பளம், விளம்பரம்
- கடைசி 10,000 நுகர்வோருக்கு (கழிவு ரூபத்தில் !!)
இந்த நூறு ரூபாய் எப்படி செல்கிறது என்றால்
- 10 எழுதுபவர்
- 30 அச்சு கோர்ப்பு, தாள்கள், அட்டை, அச்சு செலவு
- 10 தபால், போக்குவரத்து
- 20 பதிப்பக மார்ஜின்
- 10 ரீடெயிலர் மார்ஜின்
- 10 கடை மார்ஜின்
- 10 டிஸ்கவுண்ட்
அனைத்து புத்தகங்களுக்கும் ஒவ்வொன்றும் சரியாக 10சதம் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளடக்கம், வண்னப்புகைப்டங்கள், அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை, விற்பனை எங்கு நடைபெறுகிறது என்பதை பொறுத்து 8 முதல் 12 வரை கூட் இருக்கலாம்.
மேலுள்ள படத்தை பார்த்து விட்டீர்கள் அல்லவா
அதே படத்தை மறுபடியும் பார்ப்போமா
ஏதாவது புரிகிறதா
நூறு ரூபாய் புத்தகம் ஒன்று எழுதப்பட்டு அச்சிடப்பட்டு விற்கப்பட்டால், அதில் ஆசிரியருக்கு 10 ரூபாயும் பதிப்பாளருக்கு இருபது ரூபாயும் கிடைக்கிறது
இது தான் நிதர்சணம் !!
ஆசிரியருக்கு வெறும் பத்து ரூபாய் தானா என்று கோபப்படுபவர்கள், ஆசிரியர், பதிப்பாளர் தவிர இங்கு ஈடுபடும் பிறரை பற்றி, ஆகும் பிறச்செலவுகளை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் (சில நேரங்களில் தெரிந்து கொள்ளாமல்) மீதி 90 ரூபாயும் பதிப்பாளர் எடுத்துக்கொள்வதாக தவறாக நினைக்கிறார்கள்
இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்
70 ரூபாய் வெளியில் செல்கிறது. ஆனால் 30 ரூபாய் இருக்கிறதே. இதில் ஆசிரியருக்கு 10 கொடுத்து விட்டு பதிப்பகம் 20 எடுத்துக்கொள்வது நியாயமா ?? அதை 15 - 15 என்று வைப்பது தானே நியாயம். ஏன் அதை ஆசிரியருக்கு 20 - பதிப்பகத்திற்கு 10 என்று கூட வைத்துக்கொள்ளலாமே என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்
இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பதிப்பகம் அந்த புத்தகத்தை அச்சிட, வடிவமைக்க ஆகும் செலவை முழுவதும் ஏற்கிறது. அவர்கள் அதற்கு செலவிடும் பணத்தை 6 மாதம், அல்லது 1 வருடம் கழித்து தான் பெற முடியும். சில நேரங்களில் கிடைக்காது (புத்தகம் விற்க வில்லை என்றால்) என்பது வேறு விஷயம். இந்த பணத்தை அவர்கள் முதலீடு செய்துள்ளார்கள். வங்கியில் கடன் வாங்கினால் வட்டி கட்ட வேண்டும்
எனவே கண்டிப்பாக 10 சதம் வட்டிக்கு சென்று விடும்
பதிப்பகத்திற்கு கிடைப்பது 10 சதம் மட்டுமே
எனவே பத்து சதம் ராயல்டி என்பதில் எந்த அநியாயமும் கிடையாது. இது சரியான கணக்கே. அதனால் தான் உலகம் முழுவதும், இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கவிதை முதல் கணினி வரை, சமையல் குறிப்பு முதல் இதய அறுவை சிகிச்சை வரை நீங்கள் எதை பற்றி எழுதினாலும், எந்த மொழியில் எழுதினாலும், 10 சதம் தான் ஆதாய உரிமை. (சிட்னி ஷெல்டன், ஹெரால்ட் ராபின்ஸ் போன்ற சிலர் விதிவிலக்காக இருக்கலாம். அப்படி என்றால் கூட அது 12.5 சதம் வரை பெற்றிருக்கலாம். அல்லது அவர்கள் அட்வாண்ஸ் பெற்று விடுவார்கள் !! ).
இப்பொழுது உங்களுக்கு சில கேள்விகள் எழலாம்
- ஆசிரியர் தானே புத்தகத்தை பதிபிக்க முடியுமா ?
- அப்படி தானே பதிப்பித்தால் அதிகம் லாபம் வருமா ?
- தானே பதிப்பிக்காமல், ஒரு பதிப்பகம் மூலம் வெளியிட்டபின்னர் நூலாசிரியர் எப்படி அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் ?
- பதிப்பகங்கள் எழுத்தாளர்களை ஏமாற்றவில்லையா ?
- பதிப்பகங்கள் எழுத்தாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றன ?
- ஆசிரியரை ஏமாற்றாமல் நேர்மையாக ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகங்களை எப்படி கண்டு கொள்ளலாம்
- நீங்கள் ஆதாய உரிமை பதிப்பகங்கள் தரும் என்கிறீர்கள். ஆனால் சில “பதிப்பகங்கள்” ஆசிரியர்களிடம் பணம் பெற்று புத்தகங்களை அச்சிடுகிறார்களே !! அது என்ன கணக்கு ?
- பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்றால் என்ன
இந்த கேள்விகளுக்கான பதில்களை வரும் இடுகைகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம்
வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்- அறிந்திருந்தால் பதில் சொல்கிறேன்
- அறியவில்லை என்றால் தெரிந்து கொண்டு விடையளிக்க முயல்கிறேன்
இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
- புத்தகம், ஆதாய உரிமை, விற்பனை அதிகரிப்பது மற்றும் ”தகுந்த” பதிப்பகம் அடையாளம் காண்பது எப்படி பாகம் 3
இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகை
பின் குறிப்பு : நான் எழுதியதில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டினால், திருந்திக்கொண்டு, திருத்திக்கொள்ள தயார்


48 மறுமொழிகள்:
பத்ரி பாரா எல்லோரும் பிரித்து மேய்ந்த பிறகு,உங்கள் முறையா?
:))
இதில் இன்னொன்று இருக்கிறது..ராயல்டி அநேகமாக புத்தகம் அச்சிட்ட உடன் கொடுக்கப்பட்டு விட்டால் 10-20 என்ற சமன்பாடு நியாயம்தான்..ஆனால் பல நேரங்களில் எழுத்தாளர்கள் இந்த தொகையை(க் கூட) பெற அதிக கால அவகாசம் ஆகிறது என்று நினைக்கிறேன்..
முவ தன்னுடைய நாவல்களின் சில கதாபாத்திரங்கள் மூலம் இந்த நிலையைத் தொட்டுச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்;சாரி,படித்திருக்கிறேன்.
waiting for more...
//வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்//
எப்படி எதை பற்றியும் சரியான புள்ளிவிவரங்களோடு உங்களால் பேசமுடிகிறது. நீங்க நிஜமாகவே டாக்டர் மட்டும் தானா?
பொறாமையோடு
குசும்பன்
வலையுலகப்படைப்பாளிகள்-- தினமணி கட்டுரை
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html
டாக்டர்,
உங்கள் கட்டுரையை முழுவதும் படித்தேன்.
என்னை பொருத்தவரை வணிகம் சார்ந்த வகையில்பார்த்தால் எழுத்தாளர்க்கு 10%, வெளியிடுபவருக்கு 20%, இந்த வியாபாரத்தின் லாப வகைகள் மிக குறைவே.
இது ஒரு விதத்தில் சரிசெய்யபட வேண்டிய விசயம்.
1, அதிக லாபம்---மிதமான எண்ணிக்கையில் அச்சடிப்பு.(low volume-high margin)
2, குறைந்த லாபம்-- மிக அதிகமான எண்ணிக்கையில் புத்தகம் அச்சடிப்பு.
( high volume--low margin )
இதில் எது சாத்தியம் ?
பதிப்பகங்கள் தான் விளக்க வேண்டும்.
வலையில் இலவசமாக படிக்க அனுமதிக்கும்போதே வாசகர்கள் குறைவு.
இதில் காசு கொடுத்து வாங்கி, நேரம் ஒதுக்கிப் படித்து, அதை ஓசி கொடுக்காமல் வாங்க பரிந்துரை செய்து அவரின் அடுத்த புத்தகங்களையும் வாங்கி...,
எனக்கென்னவோ இது இளம் எழுத்தாளர்களை சோர்வடையச் செய்துவிடும் என்றே தோன்றுகிறது..,
உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பார்கள் . அதுபோல
எழுத்தாளன் கணக்குப்பார்த்தால் என்ன மிஞ்சப் போகிறது?
if writers feel that they are being cheated, they can start their own publication and earn more royalty. which publisher is blocking him not to start own publication.
These are all excuses. If their writing is good definitely people are going to buy milion copies.
If you take Stephen Covey, his writings are good and hence his books are being sold in millions and billions copies.
Our tamil writers write big things in theory (mun, pin, side naveenathuvam etc) and when it come into money they forget all isms.
சில பதிப்பகங்கள் முன்னதாகவே எழுத்தாளர்களுக்கு இத்தனை பக்கத்திற்கு இத்தனை தொகை என கொடுத்துவிடுவது உண்டு.பின்னர் எழுத்தாளருக்கு ராயல்டி என்று ஏதும் கிடையாது.
நம்ம பதிவுக்கு வாங்க..உ.த., உங்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்
பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி விற்கும் கடைகள் (ரிடேய்லர்), விற்காமல் போகும் புத்தகத்திற்கு அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்றுகொள்கிறார்களா? இல்லை, பதிப்பகத்திற்கு விற்காமல் போகும் புத்தகத்தை மறுபடியும் திருப்பிகொடுக்கப்படுகிறதா?
அருமையான தகவல்கள்.
இதோ என் கேள்வி...
ஒரு புத்தகம் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதை பதிப்பாளர், எழுத்தாளர் எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்?
//இதில் இன்னொன்று இருக்கிறது..ராயல்டி அநேகமாக புத்தகம் அச்சிட்ட உடன் கொடுக்கப்பட்டு விட்டால் 10-20 என்ற சமன்பாடு நியாயம்தான்..//
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் !! என்று புரிந்து கொள்ள முடியவில்லை. விளக்க முடியுமா
// நீங்க நிஜமாகவே டாக்டர் மட்டும் தானா?//
:) :)
காவேரி கனேஷ் சார்
சுட்டிக்கு நன்றி
//என்னை பொருத்தவரை வணிகம் சார்ந்த வகையில்பார்த்தால் எழுத்தாளர்க்கு 10%, வெளியிடுபவருக்கு 20%, இந்த வியாபாரத்தின் லாப வகைகள் மிக குறைவே.//
அது 20 சதம் அல்ல !!
திரும்ப பாருங்கள் :) :)
//1, அதிக லாபம்---மிதமான எண்ணிக்கையில் அச்சடிப்பு.(low volume-high margin)
2, குறைந்த லாபம்-- மிக அதிகமான எண்ணிக்கையில் புத்தகம் அச்சடிப்பு.
( high volume--low margin )//
நீங்கள் லாபம் என்று எதை கூறுகிறீர்கள் ??
//உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பார்கள் . அதுபோல
//
சூப்பர்
//These are all excuses. If their writing is good definitely people are going to buy milion copies.//
அரெமிக் மொஇ என்றால் கூடவா
//Stephen Covey,//
யாருங்க அது ?
அவர் நிகோபாரி மொழியில் எட்டாவது பழக்கத்தை பற்றி எழுதுவாரா
//சில பதிப்பகங்கள் முன்னதாகவே எழுத்தாளர்களுக்கு இத்தனை பக்கத்திற்கு இத்தனை தொகை என கொடுத்துவிடுவது உண்டு.பின்னர் எழுத்தாளருக்கு ராயல்டி என்று ஏதும் கிடையாது.
//
அதற்கு பெயர் ராயல்டி இல்லை தலைவரே !!
//பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி விற்கும் கடைகள் (ரிடேய்லர்), விற்காமல் போகும் புத்தகத்திற்கு அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்றுகொள்கிறார்களா?//
பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி விற்பவர்கள் முதலிலேயே காசு தருகிறார்களா
//இல்லை, பதிப்பகத்திற்கு விற்காமல் போகும் புத்தகத்தை மறுபடியும் திருப்பிகொடுக்கப்படுகிறதா?//
ஏன் !!
//ஒரு புத்தகம் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதை பதிப்பாளர், எழுத்தாளர் எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்? //
பதிப்பாளர் ஏன் உறுதிப்படுத்த வேண்டும்
பதிப்பாளர் அந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேதானே எழுத்தாளருக்கான பங்கைப் பிரித்துக்கொடுக்க முடியும்!
அதோடு, பதிப்பாளரிடமிருந்து வாங்கிய விற்பனையாளர்கள் எவ்வளவு நாட்களுக்கு ஒரு நூலை 'போணியாகிவிடும்' என்று நம்பி வைத்துக்கொண்டிருப்பார்? அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகம் 'போணியாகவில்லையென்றால்' திருப்பி அனுப்பிவிடுவாரா? அப்படியென்றால் எத்தனை நாட்களுக்குள்?
இந்தக் கேள்விகள் அதனூடே சேர்ந்து வந்துவிட்டது. Ravi Suga அவர்களின் கேள்வியாகவும் இது வருகிறது.
இந்த விசயங்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதால் LKG, UKG கேள்விகளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுமாறு டாக்டரே உங்களை வேண்டுகிறேன்.
புருநோஜி, இதில் சம்பந்தப்படாதவர்களுக்கு இவை முற்றிலும் புதிய விஷயம். அறியத்தந்ததற்கு நன்றிகள் பல.
///எனவே பத்து சதம் ராயல்டி என்பதில் எந்த அநியாயமும் கிடையாது. இது சரியான கணக்கே. அதனால் தான் உலகம் முழுவதும், இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது./// --- ஆசிரியர், விபரமில்லாமல் எவ்வளவு மொக்கையாக எழுதினாலும் அல்லது படு அறிவுப்பூர்வமாக சிந்தனையுடன் கடின உழைப்பில் நற்கருத்துச்செரிவுடன் எழுதினாலும் இதே பத்து சதம்தானாஜி?
//பதிப்பாளர் அந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேதானே எழுத்தாளருக்கான பங்கைப் பிரித்துக்கொடுக்க முடியும்!//
அது தான் அவருக்கு தெரியுமே
பிறகு ஏன் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டேன்
//அதோடு, பதிப்பாளரிடமிருந்து வாங்கிய விற்பனையாளர்கள் எவ்வளவு நாட்களுக்கு ஒரு நூலை 'போணியாகிவிடும்' என்று நம்பி வைத்துக்கொண்டிருப்பார்?//
பெரும்பாலான புத்தகங்களுக்கு நாள் கணக்கு கிடையாது
// அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகம் 'போணியாகவில்லையென்றால்' திருப்பி அனுப்பிவிடுவாரா?//
சில புத்தகங்கள் மட்டுமே திரும்பி அனுப்பப்படும்
உதாரணம் பாடப்புத்தகங்கள்
// அப்படியென்றால் எத்தனை நாட்களுக்குள்?//
இது புத்தகத்திற்கு புத்தகம் மாறும்
உதாரணம் குருபெயர்ச்சி புத்தகங்கள் அடுத்த குருபெயர்ச்சிக்கு பிறகு விற்காது (1 வருடம்) அடுத்த பெயர்ச்சிக்கான பலன் புத்தகம் வந்து விடுமே
சனி பெயர்ச்சி என்றால் இரண்டரை வருடம்
//இந்தக் கேள்விகள் அதனூடே சேர்ந்து வந்துவிட்டது. Ravi Suga அவர்களின் கேள்வியாகவும் இது வருகிறது.
இந்த விசயங்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதால் LKG, UKG கேள்விகளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுமாறு டாக்டரே உங்களை வேண்டுகிறேன்.//
புரிகிறது
இதை மேலும் விளக்க வேண்டும் என்பது தெரிகிறது
தொடர் இடுகைகளில் இதை மேலும் தெளிவாக விளக்குகிறேன்
//ஆசிரியர், விபரமில்லாமல் எவ்வளவு மொக்கையாக எழுதினாலும் அல்லது படு அறிவுப்பூர்வமாக சிந்தனையுடன் கடின உழைப்பில் நற்கருத்துச்செரிவுடன் எழுதினாலும் இதே பத்து சதம்தானாஜி?
//
ஆமாம் ஜி
ஆனால் மொக்கை ஆசிரியர் 1000 பிரதிகள் விற்கும்
நற்கருத்து செரிவுடன் எழுதினால் 10000 பிரதிகள் விற்கும்
அதைப்பொருத்து ஆசிரியருக்கு வரும் தொகை மாறும் அல்லவா
Nice bit of information. But, I do not think Charu or Jemo are claiming that the publishers are cheating them. Their gripe is with the reading (rather the lack there of) habit of our people.
Kuppan_Yahoo,
Is it a fact that people always appreciate everything that has quality? Wish it were so. But, then I think Bruno answered you with a couple of nice counter questions.
திரு புருனோ,
அருமையான விபரம்.
இவை எனக்கு புதிதல்ல என்றாலும் நீங்கள் தொகுத்த விதம் அருமை.
மின்சார செலவு என ரீடெயிலர் பகுதியில் மட்டுமே கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் பதிப்பகத்தாரும் மின்சாரம் பயன்படுத்தியே கணினி மற்று அச்சுக்கருவிகளை இயக்குவார்கள். அல்லவா?
மேலும் எனது கருத்து ஒரு பதிப்பகத்தாரே ரீடெயிலராகவும் இருந்தால் நல்ல பலன் உண்டு.
இந்தியாவில் 90% பதிப்பகங்கள் எழுத்தாளருக்கு முழுமையாக காப்புரிமையோ, அச்சு சட்டதிட்டங்களையோ முறையாக பயன்படுத்துவதில்லை.
அதே போல ரீடெயிலர்கள் பதிப்பகத்தாரை ஏமற்றும் விஷயங்கள் நடக்கிறது. இத்தனையும் மீறி ஒரு எழுத்தாளன் இயங்க வேண்டும். இதனாலேயே எனக்கு இந்திய எழுத்தாளர்கள் மேல் நல்மதிப்பு உண்டு :)
அருமையான இடுக்கை எழுதியதால் உங்களுக்கு ராயல்-டி கொடுக்கலாம் என இருக்கிறேன். இந்த சுட்டியை அழுத்தவும்.
மருத்துவரே..!
சில எழுத்தாளர்கள் படைப்பையும் கொடுத்து பின்ன காசையும் கொடுத்து பதிப்பகங்களை அச்சிட வைக்கிறார்களே..!
இவர்களுக்கும் ராயல்டி கிடைக்குமா..? யார் கொடுப்பது..?
இப்போதெல்லாம் முக்கால்வாசி இப்படித்தான் நடப்பதாக எனது பதிப்புலக நண்பர் ஒருவர் பற்ற வைக்கிறார்..
உண்மையா..?
// But, I do not think Charu or Jemo are claiming that the publishers are cheating them. Their gripe is with the reading (rather the lack there of) habit of our people.
//
நீங்கள் சொல்வதும் சரி
ஆனால் ஜெமோவின் அடுத்தடுத்த இடுகைகள் வேறு மாதிரி வருகிறதே
//மின்சார செலவு என ரீடெயிலர் பகுதியில் மட்டுமே கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் பதிப்பகத்தாரும் மின்சாரம் பயன்படுத்தியே கணினி மற்று அச்சுக்கருவிகளை இயக்குவார்கள். அல்லவா?
//
உண்மைதான் சாமி
சேர்த்துக்கொள்கிறேன்
//மேலும் எனது கருத்து ஒரு பதிப்பகத்தாரே ரீடெயிலராகவும் இருந்தால் நல்ல பலன் உண்டு.
//
உண்மைதான்
//மருத்துவரே..!
சில எழுத்தாளர்கள் படைப்பையும் கொடுத்து பின்ன காசையும் கொடுத்து பதிப்பகங்களை அச்சிட வைக்கிறார்களே..!
//
எனது ஏழாவது கேள்வியை பார்க்கவும் !!
என்ன அண்ணே. என் இடுகை சின்னது தானே. அதை முழுதும் படித்திருக்கலாமே :) :) :)
//இவர்களுக்கும் ராயல்டி கிடைக்குமா..? யார் கொடுப்பது..? //
:) :)
//இப்போதெல்லாம் முக்கால்வாசி இப்படித்தான் நடப்பதாக எனது பதிப்புலக நண்பர் ஒருவர் பற்ற வைக்கிறார்..
உண்மையா..?//
இது போன்ற நிகழ்வுகள் சில நடக்கலாம். ஆனால் முக்கால்வாசி என்பது கண்டிப்பாக கிடையாது
பதிப்பிற்கும் அளவு எழுத தரமோ, முயற்சியோ இல்லாத வயிற்றெரிச்சல் நபர் புலம்பல்கள் அவை என்று நினைக்கிறேன்
Bruno and Anonymous (in comment number 27).
if the writing's quality is good all readers will welcome (even publishers too).
10 years back, Balakumaran was literally ruling the Tamil Novel 7 Sirukathai market. I have never seen Bala complained aout Royalty % issue.
Bala helpewd lot of small publishers lik Ashokan, Chandrasekaran (I forgot this firm name). The quality was good and hence thenumber of copies sold were also big.
braiyora Mudhalaigal has done 8 or 9 times reprint, same with Inidhu Inidhu kaadhal Inidhu, en manadhu taamarai poo, vaanam enakku bodhi maram..
If the writer has real demand he can very well dictate for 15 or even 50% royalty. its all demand and supply game.
//if the writing's quality is good all readers will welcome (even publishers too).//
சரி சார். நிகோபாரி மொழியில் வரவேற்கப்படுவதும் ஆங்கில மொழியில் வரவேற்கப்படுவதும் ஒன்றா என்ற என் கேள்விக்கு நீங்கள் பதில் கூறவில்லையே
//10 years back, Balakumaran was literally ruling the Tamil Novel 7 Sirukathai market. I have never seen Bala complained aout Royalty % issue.
//
அவர் எத்தனை சதம் ஆதாய உரிமை பெற்றார் என்று தெரியுமா
தெரிந்தால் கூறவும்
// The quality was good and hence thenumber of copies sold were also big.//
எத்தனை பிரதிகள் விற்றன என்று தெரியுமா
எத்தனை பக்கங்கள். ஒரு எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டது, எத்தனை சதம் அளிக்கப்பட்டது போன்ற விபரங்கள் தெரிந்தால் கூறவும்
//If the writer has real demand he can very well dictate for 15 or even 50% royalty. its all demand and supply game.//
உங்களது மேற்கூறிய கூற்று ஏன் தவறென்று நான் இடுகையில் தெளிவாக விளக்கியுள்ளேன்
ஒரு முறை இடுகையை படித்து விட்டு நான் கூறியதில் ஏதாவது தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்
திருத்திக்கொள்கிறேன் !!
அதுவரை உங்களின் இந்த கூற்று தவறு என்பதே என் கருத்து
good one........
நல்ல பதிவு.. தேவையான ஒன்றும்..கூட..
கேபிள் சங்கர்
எப்படி தல.. உங்களால மட்டும் இப்படி முடியுது.. கலக்குறீங்க..இந்த பதிவ கொஞ்சம் படிச்சு பாருங்க
http://www.vinavu.com/2010/01/04/privatizing-health/
//செந்தழல் ரவி said...
good one........
//
நன்றி பாஸ்
//shortfilmindia.com said...
நல்ல பதிவு.. தேவையான ஒன்றும்..கூட..
கேபிள் சங்கர்
//
நன்றி பாஸ்
//Dr.ராம் said...
எப்படி தல.. உங்களால மட்டும் இப்படி முடியுது.. கலக்குறீங்க..இந்த பதிவ கொஞ்சம் படிச்சு பாருங்க
http://www.vinavu.com/2010/01/04/privatizing-health/
மறுமொழி எண் 40 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 1/05/2010 1:16 AM
//
நன்றி தல
ஆதாரமில்லாமல் எழுதும் அது போன்ற தளங்களில் நான் விவாதிப்பதில்லை :) :)
நேரம் வீண் !!
//நூறு ரூபாய் புத்தகம் ஒன்று எழுதப்பட்டு அச்சிடப்பட்டு விற்கப்பட்டால், அதில் ஆசிரியருக்கு 10 ரூபாயும் பதிப்பாளருக்கு இருபது ரூபாயும் கிடைக்கிறது.//
இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் 100 ரூபா புத்தகத்தில் 70%, 80% வீதம் செலவுகள் என்பதைக் காட்டுக்கிறது. அதே செலவான புத்தகத்தை(மக்களின் தேவை அல்லது வரவேற்பு காரணம் அறிந்து) 200 ரூபாய்க்கு விற்றால் 120% இலாபம் கிடைக்குமே! அப்படி கிடைத்தால் அதன் இலாப அறுவடைக்காரர் பதிப்பகத்தாரா? அல்லது இருவருமா?
சந்தரமுகி
//சந்தரமுகி//
உங்கள் கேள்விக்கான விடை இனி வரும் இடுகைகளில் உள்ளன
புருனோ அவர்களுக்கு, பதிவினை வாசித்தேன். எனது சில கருத்துகளை பகிர விரும்புகிறேன். எழுத்தாளர்களுக்கு 7.5% சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது. 250 பக்கங்கள் கொண்ட 1000 பிரதிக்கு கூடுதலாக செலவாகும். பெரும்பாலும் 1000 பிரதி போடப்படுவதில்லை. நூலக விற்பனை வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே 1200 பிரதி போடுகிறார்கள். பதிப்பகங்களைப் பொறுத்தவரை புத்தகம் வெளியிடுவதை விட வினியோகிப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது. புத்தக கடைகள் விற்ற பணத்தை உடனடியாக அளிப்பதில்லை. பிரபல புத்தக கடைகள் சிறிய புத்தக கடைகள் என்றில்லாம்ல் எல்லோரது மனோபாவமும் இப்படிதான் இருக்கிறது.
- பொன்.வாசுதேவன்
//புருனோ அவர்களுக்கு, பதிவினை வாசித்தேன். எனது சில கருத்துகளை பகிர விரும்புகிறேன். எழுத்தாளர்களுக்கு 7.5% சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது.//
எந்த துறையில் எந்த மொழியில் என்று குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்
நான் 10 சதத்திற்கு குறைவாக பெற்றது இல்லை !!
// 250 பக்கங்கள் கொண்ட 1000 பிரதிக்கு கூடுதலாக செலவாகும்.//
இது குறித்து உங்களது பார்வையை விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
//பெரும்பாலும் 1000 பிரதி போடப்படுவதில்லை. நூலக விற்பனை வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே 1200 பிரதி போடுகிறார்கள். பதிப்பகங்களைப் பொறுத்தவரை புத்தகம் வெளியிடுவதை விட வினியோகிப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது.//
அதைத்தான் நான் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளேன். இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகையை பார்க்கவும்
// புத்தக கடைகள் விற்ற பணத்தை உடனடியாக அளிப்பதில்லை. பிரபல புத்தக கடைகள் சிறிய புத்தக கடைகள் என்றில்லாம்ல் எல்லோரது மனோபாவமும் இப்படிதான் இருக்கிறது. //
நான் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளேன். இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகையை பார்க்கவும்
//இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் 100 ரூபா புத்தகத்தில் 70%, 80% வீதம் செலவுகள் என்பதைக் காட்டுக்கிறது. அதே செலவான புத்தகத்தை(மக்களின் தேவை அல்லது வரவேற்பு காரணம் அறிந்து) 200 ரூபாய்க்கு விற்றால் 120% இலாபம் கிடைக்குமே! அப்படி கிடைத்தால் அதன் இலாப அறுவடைக்காரர் பதிப்பகத்தாரா? அல்லது இருவருமா?
//
பதிவர் சந்திரமுகி
உங்கள் கேள்வியில் ஒரு தவறு உள்ளது
இந்த இடுகையை மீண்டும் ஒரு முறை படித்து தவறு என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்
தவறு இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகையில் அளிக்கிறேன்
Post a Comment