இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Tuesday, January 05, 2010

புத்தகம், ஆதாய உரிமை, விற்பனை அதிகரிப்பது மற்றும் ”தகுந்த” பதிப்பகம் அடையாளம் காண்பது எப்படி பாகம் 3

இந்த இடுகைத்தொடரின் முதல் இடுகை
இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
முதலிரண்டு இடுகைகளையும் வாசித்து விட்டு அதன் பிறகு இந்த இடுகையை தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்

ஆசிரியர் தானே புத்தகத்தை பதிபிக்க முடியுமா ?
கண்டிப்பாக பதிப்பிக்கலாம்

அப்படி தானே பதிப்பித்தால் அதிகம் லாபம் வருமா ?
நூலை அச்சிடுவதற்காக ஆகும் செலவானது யார் பதிப்பித்தாலும் ஏறத்தாழ ஒன்று என்றாலும் (அதில் கூட பதிப்பகம் செய்வதை விட ஆசிரியர் செய்தால் அதிக செலவு தான் ஆகும்) அதை தமிழகத்தின் கடைகோடி கிராமத்தின் பெட்டி கடை வரை கொண்டு செல்வது, இணையம் மூலம் விற்பது, வெளிநாடுகளுக்கு அனுப்புவது, தபால் மூலம் அனுப்புவது, பிற கடைகளுக்கு அனுப்புவது, பிற ஊர்களுக்கு அனுப்பவது போன்ற செயல்களை தனிநபர் செய்வது நடைமுறையில் எளிதன்று

ஆசிரியர் இதை செய்தால் இதற்கு ஆகும் நேரம் மற்றும் பொருள் செலவு பதிப்பகம் செய்வதை விட மிக அதிகம் பதிப்பகங்கள் பல நூறு புத்தகங்களை வெளியிடுகிறார்கள். எனவே அவர்களுக்கு இந்த செலவுகள் அனைத்து புத்தகங்களில் பகிர்ந்து சென்று விடும்.

ஆனால் ஒன்று அல்லது இரண்டு புத்தகம் மட்டும் வைத்துள்ளவர்களுக்கு இதில் பண விரயம் மற்றும் நேர விரயம் அதிகம் சுருங்க சொல்வதானால், இப்படி புத்தகத்தை மூட்டை கட்டி அனுப்பி, அங்கிருந்து பணத்தை வாங்கி கனக்கு பார்க்கும் நேரத்தில் அடுத்த புத்தகம் எழுதினால் அதனால் வரும் பணம் அதிகமாகவே இருக்கும் அண்ணாமலை படத்தில் வருவது போல் “கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியாத்தான் வரும்”

தானே பதிப்பிக்காமல், ஒரு பதிப்பகம் மூலம் வெளியிட்டபின்னர் நூலாசிரியர் எப்படி அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் ?
அதிக எண்ணிக்கையில் புத்தகம் விற்பதன் மூலம்

எப்படி அதிக எண்ணிக்கையில் விற்க முடியும்
  • தனது புத்தகத்தை தானே சந்தைப்படுத்துவதன் மூலம்
  • தகுந்த, திறமையான, நேர்மையான பதிப்பகத்தை தேர்வு செய்வதன் மூலம்
ஆசிரியர் எப்படி தனது புத்தகத்தை சந்தைப்படுத்தலாம்
  • புத்தகம் துறை சார்ந்தது என்றால், ஆசிரியரும் அந்த துறையில் உள்ளவர் என்றால் துறைக்குள் விளம்பரம் செய்யலாம்
  • மடற்குழுக்களில் அறிமுகப்படுத்தலாம்
  • தனது தளத்தில் விளம்பரம் போடலாம் (தமிழ் பதிவுகள் வாசிப்பவர்கள் இது குறித்து அறிந்திருப்பார்கள்
திறமையான பதிப்பகம் என்று எப்படி கண்டுபிடிப்பது
கீழ்க்கண்ட மூன்று கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தால் திறைமையான பதிப்பகங்களின் பட்டியல் கிடைத்து விடும்
  • பதிப்பகத்தின் வீச்சு (ஆங்கிலத்தில் Reach) எவ்வளவு
  • பதிப்பகத்தின் சந்தைப்படுத்தல் (ஆங்கிலத்தில் marketing) எப்படியுள்ளது
  • பிற பதிப்பகங்களுடன் புரிந்துணர்வு (ஆங்கிலத்தில் networking) எப்படியுள்ளது
பதிப்பகத்தின் வீச்சு (ஆங்கிலத்தில் Reach) எவ்வளவு என்று எப்படி கண்டுபிடிப்பது
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடியுங்கள்
  • எத்தனை ஊர்களில் அவர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன,
  • ஒரு ஊரில் எத்தனை கடைகளில்  கிடைக்கின்றன
  • இணையம் மூலம் கிடைக்குமா
  • தபால் மூலம் கிடைக்குமா
  • வெளிநாட்டில் கிடைக்குமா
பதிப்பகத்தின் சந்தைப்படுத்தல் எப்படியுள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடியுங்கள்
  • விளம்பரம் செய்வார்களா
  • மக்கள் மத்தியில் தெரிந்த பதிப்பகமா
  • புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்க வேறு ஏதாவது உத்திகள் முயற்சிக்கிறார்களா, (உதாரணம் புக் கிளப், பாட்காஸ்ட்)
  • தொடர்ந்து விளம்பரம் செய்யஅவர்களிடம் வேறு ஊடகங்கள் உள்ளனவா
பிற பதிப்பகங்களுடன் புரிந்துணர்வு குறித்து எப்படி தெரிந்து கொள்ளலாம்
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடியுங்கள்
  • பதிப்பகதுடன் பிற மொழி பதிப்பகங்கள் தொடர்பில் உள்ளார்களா
  • பதிப்பகத்துடன் பிற நாட்டு பதிப்பகங்கள் தொடர்பில் உள்ளனரா
  • வேறு மொழி புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளனரா
  • வேறு நாட்டு புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளனரா
  • தமிழ் புத்தகங்களை வேறு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளனரா
  • தமிழ் புத்தகங்களை வேறு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளனரா
பதிப்பகத்தின் நேர்மை ஏன் முக்கியம்
500 புத்தகம் விற்று 500 புத்தகத்திற்கும் 10 சதம் ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகம் சிறந்ததா, அல்லது 500 புத்தகம் விற்று 50 புத்தகத்திற்கு 40 சதம் ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகம் சிறந்ததா

பதிப்பகங்கள் எழுத்தாளர்களை ஏமாற்றவில்லையா ?
சில பதிப்பகங்கள் சில எழுத்தாளர்களை ஏமாற்றுகின்றன

பதிப்பகங்கள் எழுத்தாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றன ?
  1. பிரதிக்கான ஆதாய உரிமை தராமல் - மொத்தமாக 5000 அல்லது 10,000 என்று தந்து விட்டு, அதன் பிறகு அந்த நூலை பல ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு விற்பதன் மூலம்
  2. 1000 பிரதிகள் விற்று விட்டு, 100 பிரதிகளுக்கு பணம் தருவதன் மூலம்
ஆசிரியரை ஏமாற்றாமல் நேர்மையாக ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகங்களை எப்படி கண்டு கொள்ளலாம்
எளிதான வழி - ஏற்கனவே நூல் எழுதிய உங்களின் நண்பர்களின் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் :) :) :)

 நீங்கள் ஆதாய உரிமை பதிப்பகங்கள் தரும் என்கிறீர்கள். ஆனால் சில “பதிப்பகங்கள்” ஆசிரியர்களிடம் பணம் பெற்று புத்தகங்களை அச்சிடுகிறார்களே !! அது என்ன கணக்கு ? 

- இதற்கான பதில் இந்த இடுகைத்தொடரில் தொடர்ந்து வரும் இடுகைகளில்

இந்த இடுகைத்தொடரின் நான்காவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகை

6 மறுமொழிகள்:

Jawahar said...

ரொம்ப உபயோகமான பதிவு. சில நல்ல பதிப்பகங்களையும் சிபாரிசு செய்யலாமே? புது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பதிப்பகங்களின் முகவரி சொல்லலாமே?


http://kgjawarlal.wordpress.com
kgjawarlal@yahoo.com

புருனோ Bruno said...

//ரொம்ப உபயோகமான பதிவு. சில நல்ல பதிப்பகங்களையும் சிபாரிசு செய்யலாமே? //

பதிப்பகங்களை அடையாளம் காண்பது எப்படி என்று எழுதியுள்ளேனே :) :) :)

மீன் மட்டும் அளிக்காமல் மீன் பிடிக்க கற்று தருகிறேன் சார் !!

குசும்பன் said...

//ஆசிரியர் எப்படி தனது புத்தகத்தை சந்தைப்படுத்தலாம்//

ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியரை கண்டபடி திட்டலாம், அவரது புத்தகத்தை கிழிச்சிட்டு இது எல்லாம் ஒரு புக்குன்னு திட்டலாம்.

இதுவும் ஒருவித யுத்திதானே?

குசும்பன் said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புருனோ Bruno said...

//ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியரை கண்டபடி திட்டலாம், அவரது புத்தகத்தை கிழிச்சிட்டு இது எல்லாம் ஒரு புக்குன்னு திட்டலாம்.

இதுவும் ஒருவித யுத்திதானே? //

கண்டிப்பாக

சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள்

அல்லது அந்த சினிமாவை என் படத்தை வைத்து எடுத்து விட்டார்கள் என்று கூறலாம்

அல்லது என பெயரை முதலில் போடாமல் கடைசியில் இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என்று பிரச்சனையை கிளப்பலாம்

புருனோ Bruno said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

நான் மறுமொழி அளித்து விட்டேனே

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...