இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
- புத்தகம், ஆதாய உரிமை, விற்பனை அதிகரிப்பது மற்றும் ”தகுந்த” பதிப்பகம் அடையாளம் காண்பது எப்படி பாகம் 3
விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த போது, தெரிந்தவர் ஒருவர் கூறினார். “புருனோ, சிசேரியன் குறித்த மூட நம்பிக்கைகள் பற்றி எழுதியிருந்தது நன்றாக இருந்தது. நான் கூட செராக்ஸ் எடுத்து தங்கச்சிக்கு அனுப்பியிருக்கேன்”
வலைத்தளத்தில் இருக்கும் கட்டுரைகளை மின்னஞ்சல் அனுப்புவது தானே வழக்கம் என்பதால் செராக்ஸ் என்றவுடன் முதலில் புரியவில்லை. அதன் பிறகு விசாரித்ததில் ஒரு வெகுசன இதழில் எனது கட்டுரை வந்துள்ளது என்ற விபரம் தெரிய வந்தது
சரிதான் என்று அந்த இதழை வாங்கி படித்தால் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. வலைப்பதிவில் எழுதிய தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும் கட்டுரை வந்திருக்கிறது கட்டுரை மட்டுமல்ல, எனது பெயர் மற்றும் புகைப்படம் கூட உள்ளது. அது தவிர வாசகர் கடிதத்தில் ஒருவர் எனது மருத்துவத்தில் ரகசியங்கள் மற்றும் ரகசியங்களுக்கு விலக்குகள் குறித்த கட்டுரை நன்றாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.
ஆக அந்த ஒரு குறிப்பிட்ட வெளியீட்டில் மட்டுமல்ல, அதற்கு முன்னர் வந்த அந்த இதழின் வெளியீடுகளில் கூட என் கட்டுரைகள் பல வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. எத்தனை என்று இது வரை நான் கணக்கெடுக்கவில்லை !!
எந்த ஒரு எழுத்தாளனுக்கும் (தமிழை பொருத்த வரை நான் எழுத்தாளனா, அல்லது வெறும் எழுதுபவன் மட்டும் தானா என்பது வேறு விஷயம்) தனது எழுத்தை அச்சில் பார்ப்பது மகிழ்ச்சிதான்
அதிலும் படைப்புகளை பல பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை பிரசுரமாகுமா, ஆகாதா என்று எதிர்ப்பார்ப்புடன் தபால்காரரை எதிர்நோக்கும் சிரமம் இல்லாமல், நிராகரிப்பில்லாமல் படைப்புகள் பிரசுரமாவது கூடுதல் மகிழ்ச்சி தான்
நம் படைப்புகள் மணிகண்டன் என்றோ மணிவண்ணன் என்றோ இல்லாமல் நம் பெயரிலலேயே வெளிவருவது கண்டிப்பாக மனநிறைவு தான்
அதிலும் கூடுதலாக புகைப்படம் வேறு இடம்பெற்றிருப்பது சந்தோஷம் தான்
ஆனாலும்................
- அனுமதி பெற்று அதன் பின்னர் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
நான் ஒரு கட்டுரையை ஒரு பதிப்பகத்திற்கு அல்லது வெகுசன இதழுக்கு அளிக்கும் போது அந்த படைப்பு வேறு எங்கும் பிரசுரமாகவில்லை என்ற பண்புசார் ஒப்பந்தத்தின் (ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்) அடிப்படையிலேயெ அவர்கள் அந்த படைப்பை பிரசுரிக்கிறார்கள். நானும் (வலைப்பதிவு தவிர) வேறு எங்கும் அந்த படைப்பை அனுப்பாததால் துணிந்து அனுப்புகிறேன்.
அப்படி இருக்கும் நிலையில் இது போல் அனுமதியோ குறைந்த பட்சம் தகவலோ கூட இல்லாமல் இப்படி வலைப்பதிவுகளில் இருந்து படைப்புகளை பிரசுரிப்பதால்
- அந்த இதழின் ஆசிரியருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்
- ஆனால் பதிவு எழுதுபவருக்கு பல பிரச்சனைகள் உள்ளன
இதனால் தான் நான் ஏற்கனவே எனது வலைப்பதிவின் ஒவ்வொரு பக்கத்திலும் அடியில் தெளிவாக
இந்த தளத்திலுள்ள கட்டுரைகளை பத்திரிகைகளில், அல்லது இணைய இதழ்களில் மீள்பிரசுரம் செய்ய முன் அனுமதி பெறவேண்டும். அப்படி மீள்பிரசுரம் செய்தாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ தளத்தின் பெயரையும் (www.payanangal.in) ஆசிரியரின் பெயரையும் மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ் (Dr.J.Mariano Anto Bruno Mascarenhas) தெளிவாக குறிப்பிடவும். மறுபதிப்பு செய்தபின் அந்த விபரத்தை அந்த குறிப்பிட்ட இடுகையின் மறுமொழியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறேன்.என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட வெகுசன இதழின் ஆசிரியரிடம் தொலைபேசி மூலம் பேசும் வாய்ப்பு வந்தது !! அப்பொழுது அவரிடம் படைப்புகள் வெளிவந்தால் எழுதுபவருக்கு அந்த குறிப்பிட்ட இதழ் அனுப்பப்படும் இதழியல் நடைமுறை இங்கு பரவலாக கடைபிடிக்கப்படுவது குறித்து நினைவுபடுத்தினேன். அவரும் அனுப்புவதாக கூறுனார். நான் பேசி பல வாரங்கள் ஆகிறது
இது வரை, இந்த இடுகை வெளியிடப்படுவது வரை, எனது வீட்டிற்கு இதழ்(கள்) வந்து சேரவில்லை. அடுத்த இதழ்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்று நினைக்கிறேன் :) :)
அது சரி, அந்த கட்டுரைக்கான ஆதாய உரிமை ??
மூச் !!
ஸ்பேசிமன் காப்பியே வரல, இதுல ராயல்டி, ராயல் காபி, ராயல் ஹார்லிக்ஸ் வேறயா ... போங்க பாஸ்
-- தொடரும்
இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகை
தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
- பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
- பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்
வாக்கெடுப்பு நடைமுறைகள்
1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php
2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்
3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்
- பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
- பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.
5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.
6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்
13 மறுமொழிகள்:
//இது வரை, இந்த இடுகை வெளியிடப்படுவது வரை, எனது வீட்டிற்கு இதழ்(கள்) வந்து சேரவில்லை. அடுத்த இதழ்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்று நினைக்கிறேன் :) :)
அது சரி, அந்த கட்டுரைக்கான ஆதாய உரிமை ??
மூச் !!
ஸ்பேசிமன் காப்பியே வரல, இதுல ராயல்டி, ராயல் காபி, ராயல் ஹார்லிக்ஸ் வேறயா ... போங்க பாஸ் //
:)
அன்புள்ள மருத்துவர் ப்ருனோ
எந்த வெகுஜன இதழ் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
உங்கள் வலைப்பூவிலேயே போதுமான disclaimer இட்டிருந்த போதிலும் எந்த தகவலும் தராமல் உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரம் செய்திருக்கிறார்கள் எனும் போது இணையம் என்பது ஆற்றுத் தண்ணீர் போல என நினைக்கும் பொதுப்புத்தியை பத்திரிகைகளும் கொண்டிருக்கின்றன என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
//நம் படைப்புகள் மணிகண்டன் என்றோ மணிவண்ணன் என்றோ இல்லாமல் நம் பெயரிலலேயே வெளிவருவது கண்டிப்பாக மனநிறைவு தான்//
ஏஇகொவெ என் மேல? :(
உங்களுடைய 4 இடுக்கைகளும் அருமை பல விபரங்களை அறிந்துக் கொண்டேன்.
நான் 3 புத்தகங்கள் எழுதி உள்ளேன்....அதை எந்த பதிப்பகத்தில் கொடுக்கலாம்.? அப்படி கொடுத்தால் 3 புத்தகங்களுக்கான சிலவும் நான் கொடுக்க வேண்டுமா?
நான் சிலவு செய்து அடித்த புத்தகத்தை அந்த பதிப்பகத்தார்களே விற்பனை செய்து தருவார்களா?
இதைப்பற்றிய விபரங்கள் சொல்லுங்களேன்.
அண்ணனுக்கே ஆப்பா..?
யார் ஸார் அந்த வெகுசனப் பத்திரிகையாளர்..?
வெளிப்படையாகச் சொன்னால் போன் செய்து பாராட்டலாம்..!
தொடர்ந்த நான்கு பதிவுகளும் மிகுந்த தகவல் சேகரித்து எழுதி
இருக்கிறீர்கள்.அருமை.
அது எந்த பத்திரிக்கை என்று குறிப்பிட்டிருந்தால்
அவர்கள் லட்சணம் வாசகர்கள் அனைவர்க்கும் தெரிய உதவியாக
இருக்கும்.
ஆனாலும் இப்படி மார்க்கெட்டிங் பண்ணக் கூடாது டாக்டர்..!
நீங்க கேட்டாலும் கேட்காட்டியும் நீங்கதான் ஜெயிப்பீங்க.. அது உறுதியான விஷயம்..
அப்புறமெதுக்கு இந்த பிரச்சாரக் கூட்டம்..?
//காப்புரிமை கிலோ என்ன விலை - சொந்த / நொந்த அனுபவம் - ஆசிரியர், புத்தகம், வருமானம் : பாகம் 4//
அது காப்புரிமை இல்லை டாக்டர்!
எழுத்துக்களுக்கானது "பதிப்புரிமை".
காப்புரிமை என்பது பொருள்களுக்கானது. நாம் பயன்படுத்தும் மருந்து, மருத்துவ உபகரணங்கள் போன்ற "பொருள்"களுக்குத்தான் காப்புரிமை பதிவு செய்ய முடியும். (அதில் அறம் சார்ந்த பல கேள்விகள் இருக்கின்றன. அது வேறு விடயம்)
//அது காப்புரிமை இல்லை டாக்டர்!
எழுத்துக்களுக்கானது "பதிப்புரிமை".//
தவறுதான். மன்னிக்கவும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திக்கொள்கிறேன்
SUREஷ் சார்
கருத்திற்கு நன்றி
பயனுள்ள கட்டுரை. புத்தகம் வெளியிடுதல், பதிப்புரிமை பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். ரொம்ப நன்றி டாக்டர்.
ஹூம்!கொடுமை தான்.
உங்களை கேட்டுவிட்டு அரசாங்கமே இதை இடைத்தேர்தல் இலவசமாக கொடுக்கலாம்,மக்களாவது பயணடைவார்கள். :-)
கிரி பதிவை படிச்சிட்டு வந்த ஹேங் ஓவர் டாக்டர்.
hmm.. NOT a healthy Sign for Magazines.
Magazines are running out of ideas.
They started copying from internet as ideas and articles are more here.
NOT only health related artciles,
computer animated cartoons from other websites are re-printed as jokes in weekly magazines.
Tips and tricks published somewhere in some other sites are getting printed in magazines in our local guys names
Translated management articles or self improvement for careers artciles and Hollywood people personal secrets.
More than that, people started freely using images or pictures of someone in their advertisements( For example in Realesate - model of house,Dress materials - Babies with nice dresses.
--- So you are NOT alone :) --
but, I thought print laws are strict in India.
But again, these things ( copying from internet) will come under some e-goverance laws which are very weak.
Over night they can copy whole of your blog (rewrite some of them) and publish as their own site.:)
Content protection is must.. How about publishing your content as image.PDF or flash? People should spend some more time is copy paste.
Post a Comment