இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
- புத்தகம், ஆதாய உரிமை, விற்பனை அதிகரிப்பது மற்றும் ”தகுந்த” பதிப்பகம் அடையாளம் காண்பது எப்படி பாகம் 3
முதல் நான்கு இடுகைகளையும் வாசித்து விட்டு அதன் பிறகு இந்த இடுகையை தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்
இந்த இடுகைக்கு செல்லும் முன் ஒரு சிறிய மன்னிப்பு மற்றும் விளக்கம்
சென்ற இடுகையின் தலைப்பில் காப்புரிமை என்ற பதத்தை பயன் படுத்தியிருந்தேன். பதிவர் வழக்கறிஞர் சுந்தரராஜன் அவர்கள் அது தவறு என்று தெரியபடுத்தியுள்ளார்
அது காப்புரிமை இல்லை டாக்டர்!
எழுத்துக்களுக்கானது "பதிப்புரிமை".
காப்புரிமை என்பது பொருள்களுக்கானது. நாம் பயன்படுத்தும் மருந்து, மருத்துவ உபகரணங்கள் போன்ற "பொருள்"களுக்குத்தான் காப்புரிமை பதிவு செய்ய முடியும்.எனவே காப்புரிமை - பேட்டண்ட், பதிப்புரிமை - காப்பிரைட், ஆதாய உரிமை - ராயல்டி
தவறுக்கு வருந்துகிறேன். மன்னித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள்
நீங்கள் ஆதாய உரிமை பதிப்பகங்கள் தரும் என்கிறீர்கள். ஆனால் சில “பதிப்பகங்கள்” ஆசிரியர்களிடம் பணம் பெற்று புத்தகங்களை அச்சிடுகிறார்களே !! அது என்ன கணக்கு ?
சிலர் தங்களின் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருப்பார்கள். ஆனால் அந்த நூல் விற்குமா விற்காதோ என்று சந்தேகம் காரணமாக பதிப்பகங்கள் அதை அச்சிட தயங்குவார்கள் எனவே ஆசிரியரிடம் பணம் பெற்றுக்கொண்டு, பதிப்பகங்கள் அந்த நூலை அச்சிடுகின்றன. ஆசிரியருக்கு பணம் அளிப்பதற்கு பதில் குறிப்பிட்ட பிரதிகளை அளித்து விடுவார்கள். அதை விற்று பணம் பெற வேண்டியது ஆசிரியரின் திறமை.
இப்போதெல்லாம் முக்கால்வாசி இப்படித்தான் நடப்பதாக உண்மைத்தமிழனின் பதிப்புலக நண்பர் ஒருவர் பற்ற வைக்கிறாரே இல்லை இது காலம் காலமாக நடைபெறுவது தான் !! எனக்கு தெரிந்து கடந்த பல வருடங்களாகவே இந்த நடைமுறை உள்ளது மனைவி தாலியை விற்று புத்தகம் போட்டேன். தா_____ விசிட்டிங் கார்டு போல் ஓசி வாங்கிட்டு போறான் என்ற புலம்பல் பலரும் கேட்டது தானே எனவே இது போன்ற சில நிகழ்வுகள் நடப்பது உண்மைதானென்றாலும் முக்கால்வாசி என்பது கண்டிப்பாக கிடையாது. பதிப்பிற்கும் அளவு எழுத தரமோ, முயற்சியோ இல்லாத வயிற்றெரிச்சல் நபர்களின் புலம்பல்கள் அவை என்று நினைக்கிறேன்
சில நேரங்களில் எந்த பதிப்பகமும் ஒரு நூலை பதிப்பிக்க தயங்கினால் நூலாசிரியர் ஆதாய உரிமை கூட வேண்டாம் என்று கூட இறங்கி வர வேண்டியிருக்கும்
பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்றால் என்ன
இது குறித்து மேலும் விபரங்கள் அறிய
- http://en.wikipedia.org/wiki/Print_on_demand
- http://www.printondemand.com/
- http://www.lulu.com/
பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி விற்கும் கடைகள் (ரிடேய்லர்), விற்காமல் போகும் புத்தகத்திற்கு அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்றுகொள்கிறார்களா? இல்லை, பதிப்பகத்திற்கு விற்காமல் போகும் புத்தகத்தை மறுபடியும் திருப்பிகொடுக்கப்படுகிறதா?
பொதுவாக பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி விற்பவர்கள் (கடைக்காரர்கள்) முதலிலேயே காசு தருவதில்லை. புத்தகம் விற்றபின்னர் தான் தருகிறார்கள்
எனவே அவர்களுக்கு நஷ்டம் என்று எதுவும் கிடையாது
பொதுவாக இவர்கள் பணம் செலுத்தாமல் வாங்கி இருப்பதால் திருப்பி அனுப்புவதில்லை
சில நேரங்களில் ஒரு கடையில் விற்று தீர்ந்து விட்டது. மற்றொரு ஊரில் விற்க வில்லை என்றால் பதிப்பகம் அதை மாற்றி விடுவதுண்டு
ஒரு புத்தகம் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதை பதிப்பாளர், எழுத்தாளர் எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்?
- கடைக்காரர் சொல்வதை வைத்து பதிப்பாளர் கணக்கிடுகிறார்
- பதிப்பாளர் சொல்வதை ஆசிரியர் நம்புகிறார்
- பல நேரம் அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தான்
- ஆனால் சில பதிப்பாளர்கள் “சொந்த புள்ளி விபரங்களின்” அடிப்படையில் எழுத்தாளருக்கான பங்கை பிரிப்பது தான் பிரச்சனை !!
பெரும்பாலான புத்தகங்களுக்கு நாள் கணக்கு கிடையாது
// அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகம் 'போணியாகவில்லையென்றால்' திருப்பி அனுப்பிவிடுவாரா?//
சில புத்தகங்கள் மட்டுமே திரும்பி அனுப்பப்படும்
உதாரணம் பாடப்புத்தகங்கள்
// அப்படியென்றால் எத்தனை நாட்களுக்குள்?//
இது புத்தகத்திற்கு புத்தகம் மாறும். உதாரணமாக
- குருபெயர்ச்சி புத்தகங்கள் அடுத்த குருபெயர்ச்சிக்கு பிறகு விற்காது (1 வருடம்) அடுத்த பெயர்ச்சிக்கான பலன் புத்தகம் வந்து விடுமே
- சனி பெயர்ச்சி என்றால் இரண்டரை வருடம்
ஆமாம் ஜி
- ஆனால் மொக்கை ஆசிரியர் 1000 பிரதிகள் விற்கும்
- நற்கருத்து செரிவுடன் எழுதினால் 10000 பிரதிகள் விற்கும்
அதைப்பொருத்து ஆசிரியருக்கு வரும் தொகை மாறும் அல்லவா
அடுத்து வரும் இடுகைகளில் நாம் கீழ்க்கண்ட கருத்துக்களை விவாதிப்போம்
வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்
அடுத்து வரும் இடுகைகளில் நாம் கீழ்க்கண்ட கருத்துக்களை விவாதிப்போம்
- இணையம் எந்த வகையில் பதிப்பகங்களை பாதித்துள்ளது
- இணையத்தினால் பதிப்பகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை
- இணையத்தினால் பதிப்பகங்கள் பெற்ற பலன்கள் யாவை
- ஒருவர் எந்த நோக்கத்திற்காக புத்தகம் எழுதுகிறார்
- பதிவர் சந்திரமுகி : இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் 100 ரூபா புத்தகத்தில் 70%, 80% வீதம் செலவுகள் என்பதைக் காட்டுக்கிறது. அதே செலவான புத்தகத்தை(மக்களின் தேவை அல்லது வரவேற்பு காரணம் அறிந்து) 200 ரூபாய்க்கு விற்றால் 120% இலாபம் கிடைக்குமே! அப்படி கிடைத்தால் அதன் இலாப அறுவடைக்காரர் பதிப்பகத்தாரா? அல்லது இருவருமா?
- கிளியனூர் இஸ்மத் : நான் 3 புத்தகங்கள் எழுதி உள்ளேன்....அதை எந்த பதிப்பகத்தில் கொடுக்கலாம்.? அப்படி கொடுத்தால் 3 புத்தகங்களுக்கான சிலவும் நான் கொடுக்க வேண்டுமா?
நான் சிலவு செய்து அடித்த புத்தகத்தை அந்த பதிப்பகத்தார்களே விற்பனை செய்து தருவார்களா?
இதைப்பற்றிய விபரங்கள் சொல்லுங்களேன்.
வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்
- அறிந்திருந்தால் பதில் சொல்கிறேன்
- அறியவில்லை என்றால் தெரிந்து கொண்டு விடையளிக்க முயல்கிறேன்
--தொடரும்
தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
- பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
- பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்
வாக்கெடுப்பு நடைமுறைகள்
1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php
2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்
3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்
- பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
- பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.
5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.
6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்
10 மறுமொழிகள்:
// * குருபெயர்ச்சி புத்தகங்கள் அடுத்த குருபெயர்ச்சிக்கு பிறகு விற்காது (1 வருடம்) அடுத்த பெயர்ச்சிக்கான பலன் புத்தகம் வந்து விடுமே
* சனி பெயர்ச்சி என்றால் இரண்டரை வருடம்
//
:))
///பதிப்பிற்கும் அளவு எழுத தரமோ, முயற்சியோ இல்லாத வயிற்றெரிச்சல் நபர்களின் புலம்பல்கள் அவை என்று நினைக்கிறேன்///
எனக்கு யார் மீதும் வயிற்றெரிச்சலோ இல்லை.. புலம்பவும் இல்லை..
சத்தமே இல்லாமல் விளம்பரமே இல்லாமல் வந்து குவிந்திருக்கும் சிறு, சிறு புத்தகங்களின் எண்ணிக்கையும், ஆரவாரமாக அசத்திக் கொண்டிருக்கும் புத்தகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கால்வாசி, அரைவாசி, முக்கால்வாசி புரியும்..!
வணக்கம் சாமி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
உண்மைத்தமிழன் அண்ணே
1/03/2010 10:34 AM நீங்கள் கூறியது என்ன
மருத்துவரே..!
சில எழுத்தாளர்கள் படைப்பையும் கொடுத்து பின்ன காசையும் கொடுத்து பதிப்பகங்களை அச்சிட வைக்கிறார்களே..!
இவர்களுக்கும் ராயல்டி கிடைக்குமா..? யார் கொடுப்பது..?
இப்போதெல்லாம் முக்கால்வாசி இப்படித்தான் நடப்பதாக எனது பதிப்புலக நண்பர் ஒருவர் பற்ற வைக்கிறார்..
நான் எழுதியது என்ன
இப்போதெல்லாம் முக்கால்வாசி இப்படித்தான் நடப்பதாக உண்மைத்தமிழனின் பதிப்புலக நண்பர் ஒருவர் பற்ற வைக்கிறாரே
நீங்கள் எழுதியதைத்தானே நான் எழுதினேன் !!
அப்படி சொன்னவருக்குத்தானே பொறாமை என்றேன் !!
உங்கள் நண்
ஆனால் இப்பொழுது இந்த சிறுவன் மீது அபாண்ட பழி போடுகிறீர்களே
எனக்கு யார் மீதும் வயிற்றெரிச்சலோ இல்லை.. புலம்பவும் இல்லை..
என்ன கொடுமை சார் இது !!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
///பதிப்பிற்கும் அளவு எழுத தரமோ, முயற்சியோ இல்லாத வயிற்றெரிச்சல் நபர்களின் புலம்பல்கள் அவை என்று நினைக்கிறேன்///
எனக்கு யார் மீதும் வயிற்றெரிச்சலோ இல்லை.. புலம்பவும் இல்லை..
சத்தமே இல்லாமல் விளம்பரமே இல்லாமல் வந்து குவிந்திருக்கும் சிறு, சிறு புத்தகங்களின் எண்ணிக்கையும், ஆரவாரமாக அசத்திக் கொண்டிருக்கும் புத்தகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கால்வாசி, அரைவாசி, முக்கால்வாசி புரியும்..!
//
//புருனோ Bruno said...
உண்மைத்தமிழன் அண்ணே
1/03/2010 10:34 AM நீங்கள் கூறியது என்ன
மருத்துவரே..!
சில எழுத்தாளர்கள் படைப்பையும் கொடுத்து பின்ன காசையும் கொடுத்து பதிப்பகங்களை அச்சிட வைக்கிறார்களே..!
இவர்களுக்கும் ராயல்டி கிடைக்குமா..? யார் கொடுப்பது..?
இப்போதெல்லாம் முக்கால்வாசி இப்படித்தான் நடப்பதாக எனது பதிப்புலக நண்பர் ஒருவர் பற்ற வைக்கிறார்..
//
;););)
தொடரும் உங்கள் விளக்கங்கள் அருமை மருத்தவரே!
அத்துடன் பதிப்பகத்தார் -புத்தக்கடையினர் இடையிலான வணிகம் தொடர்பான தொடர்புகள்; புத்தகக்கடையினர் எவ்வாறு பதிப்பகங்களிடம் இருந்து புத்தகங்களைப் பெறுகின்றனர்? எடுத்துக்காட்டாக: தமிழகத்தில் ஒரு பதிப்பகத்தின் புத்தகங்கள் மலேசியாவில் இருக்கும் ஒரு புத்தகடையில் கிடைக்கிறது எனும் போது, இடையே நடக்கும் வணிக வழிமுறைகளையும் விதிமுறைகள் பற்றியும் கூறுங்கள்.
சந்தரமுகி
ஓஹோ...!
"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.
//அத்துடன் பதிப்பகத்தார் -புத்தக்கடையினர் இடையிலான வணிகம் தொடர்பான தொடர்புகள்; புத்தகக்கடையினர் எவ்வாறு பதிப்பகங்களிடம் இருந்து புத்தகங்களைப் பெறுகின்றனர்? எடுத்துக்காட்டாக: தமிழகத்தில் ஒரு பதிப்பகத்தின் புத்தகங்கள் மலேசியாவில் இருக்கும் ஒரு புத்தகடையில் கிடைக்கிறது எனும் போது, இடையே நடக்கும் வணிக வழிமுறைகளையும் விதிமுறைகள் பற்றியும் கூறுங்கள்.
சந்தரமுகி
//
தொடர் இடுகைகளில் எழுதுகிறேன்
//சிங்கக்குட்டி said...
"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
//
நன்றி சார்
Post a Comment