அப்படி பதில் வராத இடுகைகளுக்கு இந்த இடுகைத்தொடரின் அடுத்த இடுகையில் தனியா, விரிவாக பதிலளிக்கிறேன்
ஒரு ஆசிரியர் நூல் எழுதினால் அதற்கான தொகையை பதிப்பகத்திடம் இருந்து இரு விதங்களில் பெற்றுக்கொள்ளலாம்
- மொத்தமாக இவ்வளவு தொகை என்ற ரீதியில்
- விற்கப்படும் பிரதிகளை பொருத்து - அல்லது விற்கப்படுவதாக பதிப்பகம் கூறும் எண்ணிக்கையை பொருத்து
பிரதிகளை பொருத்து என்பதில் உள்ள சாதகங்கள் என்னவென்றால், நூல் அதிகம் விற்றால் அதற்கேற்ப பணமும் கிடைக்கும். இதில் உள்ள பாதகம் என்னவென்றால் நூல் குறைவாக விற்றால் பணம் குறைவாக கிடைக்கும்
இனி இந்த முறையை மேலும் ஆராய்வோம்
ஆதாய உரிமை = ஒரு நூலிற்கான பணம் x விற்கப்படுவதாக கூறப்படும் நூல்களின் எண்ணிக்கை
- இதில் ஒரு நூலிற்கான பணம் = நூலில் அட்டை விலை x ஆதாய உரிமை சதம்
- ஆக நூலின் அட்டை விலை அதிகம் இருந்தாலும் அதிகம் பணம் கிடைக்கும்.
- ஆதாய உரிமை சதம் அதிகம் இருந்தாலும் அதிக பணம் கிடைக்கும்
- அதே போல் விற்கப்படுவதாக கூறப்படும் நூல்களின் எண்ணிக்கை = உண்மையில் விற்கப்பட்ட நூல்கள் - ஆசிரியர் பணம் பெறாத நூல்கள்
- ஆக அதிகம் நூல்கள் விற்றால் அதிக பணம்
- அதாவது “திறமை”யான பதிப்பகத்தில் உங்களின் புத்தகத்தை பதிப்பித்தால் அதிக பணம்.
- அதே போல் அதிகம் நபர்கள் வாசிக்கவல்ல நூலாக இருந்தால் அதிக பணம். உதாரணமாக நீரிழிவு நோய் அல்லது குழந்தை வளர்ப்பு குறித்த நூலை எழுதுவதன் மூலம் கிடைக்கும் பணமானது கணைய புற்று நோய் குறித்து நூலை எழுதுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை விட அதிகம். அதே போல் நிகோபாரி மொழியில் எழுதப்படும் நூலை விட தமிழ் நூல் அதிகம் விற்கும் . தமிழ் நூலை விட ஆங்கில நூல் அதிகம் விற்கும். இது எளிய உண்மை. தமிழகத்தின் ஆதாய உரிமை குறித்த விவாதங்களின் போது ஆங்கில ஆசிரியர்களின் ஆதாய உரிமையைக்காட்டுவது அல்லது ஆங்கில புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கையை காட்டுவது கண்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை !!!
- ஏற்கனவே பிரபலமான ஆசிரியர் என்றால் விற்பனை அதிகம். உதாரணமாக உல்பா குறித்து நான் எழுதும் நூலை விட பா.ராகவனின் நூல் அதிகம் விற்கும்
- ஆசிரியரால் அதிக நூல்களுக்கு பணம் பெற முடியாத சூழல் இருந்தால் குறைந்த அளவு பணம் - அதாவது நேர்மையான பதிப்பகத்தில் உங்கள் புத்தகத்தை பதிப்பித்தால் அதிக பணம்
- நூலில் அட்டை விலை - அதிகம் பக்கம் உள்ள நூல்கள், அல்லது வண்ணத்தில் அச்சிடப்படும் நூலகள்
- ஆதாய உரிமை சதம்
- அந்த நூலின் தலைப்பு / கருப்பொருளுக்கான வாசகர் எண்ணிக்கை
- அந்த ஆசிரியரின் வாசகர் எண்ணிக்கை
- பதிப்பகத்தின் திறமை - இதில் அவர்களின் வீச்சு, அவர்களின் சந்தைப்படுத்துதல், அவர்களின் தொடர்பு என்று பல காரணிகள் உள்ளன. இவற்றை விரிவாக பின்னர் பார்ப்போம்
- பதிப்பகத்தின் நேர்மை
- நூலில் அட்டை விலை -
- அதிகம் பக்கம் உள்ள நூல்கள்,
- வண்ணத்தில் அச்சிடப்படும் நூல்கள்
- நல்ல தாளில் அச்சிடப்படும் நூல்கள்
- ஆதாய உரிமை சதம்
- இது இருவரும் கூட்டாக அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டியது
- பதிப்பகத்தின் திறமை
- பதிப்பகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆசிரியருக்கு உள்ளதால் இது மறைமுகமாக ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது
- பதிப்பகத்தின் நேர்மை
- பதிப்பகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆசிரியருக்கு உள்ளதால் இது மறைமுகமாக ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது
- ஆதாய உரிமை சதம்
- இது இருவரும் கூட்டாக அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டியது
- பதிப்பகத்தை தேர்வு செய்யும் உரிமை
- பதிப்பகத்தின் திறமை -
- இதில் அவர்களின் வீச்சு
- எவ்வளவு கடைகளின் அவர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன,
- எத்தனை ஊர்களில் கிடைக்கின்றன
- இணையம் மூலம் கிடைக்குமா
- தபால் மூலம் கிடைக்குமா
- வெளிநாட்டில் கிடைக்குமா
- அவர்களின் சந்தைப்படுத்துதல்
- விளம்பரம் செய்வார்களா
- மக்கள் மத்தியில் தெரிந்த பதிப்பகமா
- புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்க வேறு ஏதாவது உத்திகள் முயற்சிக்கிறார்களா,
- அவர்களின் தொடர்பு
- மொழிபெயர்க்க முடியுமா
- பதிப்பகதுடன் பிற மொழி பதிப்பகங்கள் தொடர்பில் உள்ளார்களா
- பதிப்பகத்துடன் பிற நாட்டு பதிப்பகங்கள் தொடர்பில் உள்ளனரா
- பதிப்பகத்தின் நேர்மை
- 500 புத்தகம் விற்று 500 புத்தகத்திற்கும் 10 சதம் ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகம் சிறந்ததா, அல்லது 500 புத்தகம் விற்று 50 புத்தகத்திற்கு 40 சதம் ஆதாய உரிமை அளிக்கும் பதிப்பகம் சிறந்ததா
- ஆதாய உரிமை சதம்
- இது இருவரும் கூட்டாக அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டியது
- அந்த நூலின் தலைப்பு / கருப்பொருளுக்கான வாசகர் எண்ணிக்கை
- எனவே எவ்வகை நூல்களை வெளியிட்டால் அதிகம் பேர் வாசிப்பார்கள் என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம்
- அதில் சேர்க்கப்பட வேண்டியவை எவை
- அதில் தவிர்க்கப்பட வேண்டியவை எவை
- இது ஆசிரியரின் உரிமை என்றாலும், ஆசிரியரை விட பதிப்பகங்கள் சந்தையின் போக்கை அதிகம் அறிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் சேர்ந்து முடிவெடுப்பது நல்லது
- அந்த ஆசிரியரின் வாசகர் எண்ணிக்கை
வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்
- அறிந்திருந்தால் பதில் சொல்கிறேன்
- அறியவில்லை என்றால் தெரிந்து கொண்டு விடையளிக்க முயல்கிறேன்
- புத்தகம், ஆதாய உரிமை, விற்பனை அதிகரிப்பது மற்றும் ”தகுந்த” பதிப்பகம் அடையாளம் காண்பது எப்படி பாகம் 3
இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகை
13 மறுமொழிகள்:
Present sir
வாங்க சார்
good going thala...very useful series of posts.
//விற்கப்படுவதாக பதிப்பகம் கூறும் எண்ணிக்கையை பொருத்து//
பதிப்பகங்கள் எத்தனைப் பிரதிகள் விற்றன என்பதை பொருத்தே ஒரு எழுத்தாளருக்கான தொகை நிர்னயிக்கப்படுகிறது என்றாலும், பதிப்பகங்கள் 1000 விற்று 10 எனும் போது; உண்மையில் விற்கப்பட்ட எண்ணிக்கை எத்தனை என்பதை ஒரு எவ்வாறு எழுத்தாளர் எவ்வாறு அறிந்துக்கொள்ளலாம்?
அதற்கான வழிமுறைகள் அல்லது விதிமுறைகள் ஏதும் உள்ளனவா?
சந்தரமுகி
எழுத்தாளர் ஏமாறுவதற்கான வழியும், பதிப்பகத்தார் ஏமாற்றுவதற்கான வழியும் தான் தெரிகிறது. குறிப்பாக நீங்கள் உங்கள் நூல்களின் விற்பனையில் எவ்வாறான அனுகுமுறைகளை பதிப்பாகத்தாரோடூ வைத்துள்ளீர்கள்?
உங்களுக்கு தெரிய பதிப்பகங்களால் நீங்கள் ஏமாற்றப்பட்ட நிகழ்வுகள் உள்ளனவா?
சந்திரமுகி
முன்பு மடற்குழுக்களில் பத்ரி ராயல்டி பற்றி எழுதினார், கிழக்கு உதித்தது. இப்போ நீங்க ;-)
//good going thala...very useful series of posts.//
நன்றி பாஸ்
////விற்கப்படுவதாக பதிப்பகம் கூறும் எண்ணிக்கையை பொருத்து//
பதிப்பகங்கள் எத்தனைப் பிரதிகள் விற்றன என்பதை பொருத்தே ஒரு எழுத்தாளருக்கான தொகை நிர்னயிக்கப்படுகிறது என்றாலும், பதிப்பகங்கள் 1000 விற்று 10 எனும் போது; உண்மையில் விற்கப்பட்ட எண்ணிக்கை எத்தனை என்பதை ஒரு எவ்வாறு எழுத்தாளர் எவ்வாறு அறிந்துக்கொள்ளலாம்?
அதற்கான வழிமுறைகள் அல்லது விதிமுறைகள் ஏதும் உள்ளனவா?
சந்தரமுகி
//
உங்கள் கேள்விக்கான விடை இனி வரும் இடுகைகளில் உள்ளன
//எழுத்தாளர் ஏமாறுவதற்கான வழியும், பதிப்பகத்தார் ஏமாற்றுவதற்கான வழியும் தான் தெரிகிறது. //
அன்னப்பறவை பாலை பிரித்து எடுத்துக்கொள்ளும்மாம்
அனானிப்பறவை பாலை விட்டு விட்டு நீரை மட்டும் பிரித்து எடுத்து பருகுமாம
//முன்பு மடற்குழுக்களில் பத்ரி ராயல்டி பற்றி எழுதினார், கிழக்கு உதித்தது. இப்போ நீங்க ;-)
//
நான் ஏற்கனவே பதிப்பாளர் தான் :) :)
அன்பான புருனோ,
மறுக்கவியலாத கட்டளைத் தொனியில் இருந்தாலும் தெளிவான நடையில் உங்கள் கட்டுரை இருக்கிறது. சொல்லப்பட்ட விவரங்களில் பெரும்பாலும் ஆரம்ப நிலை படைப்பாளிகள் மற்றும் புதிதாக புத்தகம் போட நினைக்கும் எழுத்தாளர்கள் ஆகியவர்களை குறிவைத்தே கருத்துகள் இருப்பது கட்டுரையின் நோக்கத்தை சிதைக்கிறது. முதலில், இது யாருக்கான கட்டுரை என்பதில் குழப்பம் உள்ளது. பொதுவாக பதிப்பாளர்/ எழுத்தாளர் இவர்களுக்குரியதா அல்லது புதிதான எழுத்தாளர்களுக்குரியதா என்பதா என்பதே அது. புதிய எழுத்தாளர்களை வெளியிடும் பெரும்பாலான பதிப்பகங்கள் காப்புரிமை தரத் தயங்குகின்றன அல்லது தருவதே இல்லை. அவர்களை ஊக்கவிக்க விரும்புவதும் இல்லை. பதிப்பாளர்களின் தனிப்பட்ட விருப்பு சார்ந்தே பதிப்பகங்கள் அவர்களை தேர்வு செய்கிறார்கள்.
000
கட்டுரை வாசிக்க சிரமின்றி நகர்கிறது சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
- பொன்.வாசுதேவன்
//அன்பான புருனோ,
மறுக்கவியலாத கட்டளைத் தொனியில் இருந்தாலும் தெளிவான நடையில் உங்கள் கட்டுரை இருக்கிறது.//
நன்றி
//சொல்லப்பட்ட விவரங்களில் பெரும்பாலும் ஆரம்ப நிலை படைப்பாளிகள் மற்றும் புதிதாக புத்தகம் போட நினைக்கும் எழுத்தாளர்கள் ஆகியவர்களை குறிவைத்தே கருத்துகள் இருப்பது கட்டுரையின் நோக்கத்தை சிதைக்கிறது.//
கட்டுரை நோக்கத்தை சிதைக்கிறது என்ற உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை
// முதலில், இது யாருக்கான கட்டுரை என்பதில் குழப்பம் உள்ளது. பொதுவாக பதிப்பாளர்/ எழுத்தாளர் இவர்களுக்குரியதா அல்லது புதிதான எழுத்தாளர்களுக்குரியதா என்பதா என்பதே அது.//
எழுத்தாளர்கள் / பதிப்பகங்கள் / எழுதலாமா என்று நினைப்பவர்கள் / பதிப்பிக்கலாமா என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் தான்
// புதிய எழுத்தாளர்களை வெளியிடும் பெரும்பாலான பதிப்பகங்கள் காப்புரிமை தரத் தயங்குகின்றன அல்லது தருவதே இல்லை.//
ஏன்
// அவர்களை ஊக்கவிக்க விரும்புவதும் இல்லை.//
ஏன்
//பதிப்பாளர்களின் தனிப்பட்ட விருப்பு சார்ந்தே பதிப்பகங்கள் அவர்களை தேர்வு செய்கிறார்கள். //
!!!
//கட்டுரை வாசிக்க சிரமின்றி நகர்கிறது சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.//
நன்றி
அப்பனே முருகா..
இந்த டாக்டர்கிட்ட ஆபரேஷன்னு போய் நின்னா என்னாகும்..?
பேசியே கொலை பண்ணிருவாரு போலிருக்கு..!
Post a Comment