இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

முதல் பட்டதாரிகளின் தொழிற்கல்வி செலவை அரசே ஏற்கும் - சரித்திரம் படைக்கும் அறிவிப்பு

காட்சி 1 :

அப்பா, அம்மா இல்லாத திவ்யா தாத்தாவின் பொறுப்பில் வளர்ந்தார். செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமம். தாத்தாவுக்கு பென்ஷன் மட்டுமே வருமானம். உணவுக்கு கூட அக்கம்பக்கம் இருப்பவர்கள் உதவவேண்டிய நிலை. வாடகை வீடு. வீட்டு உரிமையாளர் மிக நல்லவர். இவர்களது நிலையறிந்து, குறைந்த வாடகை வாங்கினார்.

சூழல்தான் இப்படியே தவிர, திவ்யா படுப்பில் படுசுட்டி. அவர் படித்த மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிர்வாகம், திவ்யாவுக்கு ஒரு சலுகை தர முன்வந்தது. மெட்ரிக்குலேஷனில் ஏதாவது ஒரு பாடத்தில் ’செண்டம்’ எடுத்தாலும் போதும். +1, +2 படிப்பை இலவசமாகவே வழங்குகிறோம் என்றது. திவ்யா மூன்று பாடத்தில் ‘செண்டம்’ எடுத்தார்.

+2வில் 1200க்கு 1142 மதிப்பெண். என்ஜினியரிங் படிக்க ஆசை. இவரது மதிப்பெண்ணுக்கு முன்னணிக் கல்லூரிகள் கூப்பிட்டு சீட்டு தர தயாராகவே இருந்தார்கள். ஆனால் திவ்யாவுக்கோ வயதான தாத்தாவை விட்டு, விட்டு தூரமாகச் சென்று படிக்க முடியாது. அவர் வசித்த பகுதிக்கு அருகிலேயே ஒரு தனியார் கல்லூரி இருந்தது. ஆனால் செலவு அதிகம். கையைப் பிசைந்துகொண்டு கலங்கினார் திவ்யா.

காட்சி 2 :

போடிநாயக்கனூர் கார்த்திக் கடுமையான ஏழ்மையிலும் செம்மையாக படித்தார். அவரது அப்பா சமோசா வியாபாரி. தள்ளு வண்டியில் தெரு தெருவாக சென்று சமோசா விற்பார். அப்பாவுக்கு உதவியாக கார்த்திக்கும் விடுமுறை நாட்களில் சமோசா விற்கச் செல்வதுண்டு.

+2வில் கார்த்திக்கின் மார்க் 1200க்கு 1080. இவருக்கும் என்ஜினியரிங் படிக்கவே ஆசை. சமோசா விற்று கிடைக்கும் வருமானம் வயிற்றுக்கும், வாய்க்குமே சரியாகப் போகிறது. எங்கிருந்து மகனை என்ஜினியரிங் படிக்கவைப்பது என்று யோசித்தார் அவரது அப்பா. பேசாமல் ஒரு வண்டி வாங்கி, நாமும் சமோசா வியாபாரத்தில் இறங்கி விடலாமா என்று மனதை கல்லாக்கிக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தார் கார்த்திக்.

மேற்கண்ட இரு காட்சிகளிலும் சொல்லப்பட்டதைப் போல நம் நாடெங்கும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான திவ்யாக்களும், கார்த்திக்குகளும் இருக்கிறார்கள். காசில்லை என்பதற்காக கல்வியை கைவிடுவது எவ்வளவு கொடுமையானது?

காட்சி 1 மற்றும் காட்சி 2 இரண்டும் கற்பனையில்லை. இது நடந்து கொண்டிருப்பது தான். மேலும் விபரங்களுக்கு பதிவர் யுவகிருஷ்ணாவின் http://www.luckylookonline.com/2010/01/blog-post_02.html இடுகையை பார்க்கலாம்

ஆனால் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் இந்த நிலை இருக்காது. இந்த வருட ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகளில் சமூக வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டியது இது தான்

27. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண்மைக் கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களில் – அவர்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையானால்; அந்த மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக, சாதிப்பாகுபாடின்றியும் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

பாராட்டப்படவேண்டிய விஷயம்.

--


தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
முதல் கட்டத்தில் வாக்களித்தது போலவே இம்முறையும் வாக்களிக்க வேண்டுகிறேன்

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

24 மறுமொழிகள்:

மறுமொழி எண்
யாத்ரீகன் said...

i feel its a very good scheme, to spread education to a wider spectrum.Providing opportunity is what it counts. apart from free education,more help like extra coaching facilities on lang & subject needs 2be extended.need 2build confidence

மறுமொழி எண்
அறிவன்#11802717200764379909 said...

{7. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண்மைக் கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களில் – அவர்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையானால்; அந்த மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக, சாதிப்பாகுபாடின்றியும் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.}

மிக அருமையான செய்தி.மிகவும் பாராட்டப் பட வேண்டிய செயல்.

{சாதிப்பாகுபாடின்றியும்}
இதுவும் மிகச் சரி.

{வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும்}
ஆனால் இது தவறல்லாவா? இத்திட்டத்தின் அபயோகத்திற்கு-misuse- இது வழி வகுக்காதா?

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//பெருமையாக இருக்கிறது. தமிழக அரசின் தலை சிறந்த திட்டம்.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//இத்திட்டத்தின் அபயோகத்திற்கு-misuse- இது வழி வகுக்காதா?//

எப்படி misuse என்று நினைக்கிறீர்கள்

தமிழகத்தில் பட்டப்படிப்பு படிக்காமல் வருமான வரி கட்டுபவர்கள் எத்தனை பேர் என்று நினைக்கிறீர்கள்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

தமிழகத்தில் பட்டப்படிப்பு படிக்காமல் வருமான வரி கட்டுபவர்கள் எத்தனை பேர் என்று நினைக்கிறீர்கள்

அவர்களில் எத்தனை பேருக்கு இன்று கல்லூரி செல்லும் வயதில் குழந்தைகள் உள்ளன என்று நினைக்கிறீர்கள்

மறுமொழி எண்
சுவாசிகா said...

நல்ல திட்டம்தான்..

இதுக்கென்று ஒரு துறையை திறமையான IPS ஆபிஸர் தலைமையில் போட்டு அரசியல் குறுக்கீடு அதிகம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இத்திட்டத்தால் நிறைய பேர் பயனைடவார்கள்..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

மறுமொழி எண்
அறிவன்#11802717200764379909 said...

{தமிழகத்தில் பட்டப்படிப்பு படிக்காமல் வருமான வரி கட்டுபவர்கள் எத்தனை பேர் என்று நினைக்கிறீர்கள்

அவர்களில் எத்தனை பேருக்கு இன்று கல்லூரி செல்லும் வயதில் குழந்தைகள் உள்ளன என்று நினைக்கிறீர்கள்}
எத்தனையோ பேர் இருக்கலாம்,வட்டம்,மாவட்டம் போன்றவர்களில் எனக்குத் தெரிந்தே இரண்டு மூன்று பேர் வருகிறார்கள்..

மறுமொழி எண்
Sammy said...

வரவேற்க வேண்டிய சூப்பர் திட்டம்.... ஏனோ மற்ற இலவச திட்டங்களுடம் ஒப்பிட்டு பார்க்கும் போது ரொம்ப தாமதமா வந்த திட்டம் மாதிரி இருக்கு.....இந்த ஒரு திட்டத்தில் தி.மு.க வை வெளிப்படையாவே பாராட்டலாம் போல இருக்கு.

அரசியல் ரீதியா எதிர்க்க தான் செய்வார்கள்,ஆட்சி மாறினால் குப்பையிலும் போடலாம்...என்ன பன்னுவது நம்நாட்டு அரசியல் அப்படி

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//இதுக்கென்று ஒரு துறையை திறமையான IPS ஆபிஸர் தலைமையில் போட்டு அரசியல் குறுக்கீடு அதிகம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இத்திட்டத்தால் நிறைய பேர் பயனைடவார்கள்..
//

IPS ஏன்
IAS தானே வேண்டும்

மறுமொழி எண்
புருனோ Bruno said...

அறிவன் சார்

//எத்தனையோ பேர் இருக்கலாம்,வட்டம்,மாவட்டம் போன்றவர்களில் எனக்குத் தெரிந்தே இரண்டு மூன்று பேர் வருகிறார்கள்..
//

மாவட்டத்திற்கு மூன்று பேர் என்றால் த்மிழகம் முழுவதும் 100 பேர்

வட்டத்திற்கு மூன்று பேர் என்றால் த்மிழகம் முழுவதும் 100 பேர்

ஆக ஏழு கோடி பேருக்கு பயனளிக்கும் இந்த திட்டத்தில் கூட 1000 பேர் வசதியிருந்தும் இலவசமாக கல்வி பெற போகிறார்கள்

இதில் என்ன தவறு

அடுத்த கேள்வி

வசதியே இருந்தாலும் இலவச கல்வியில் என்ன தவறு ?

இதற்கு பதில் கூற முடியுமா

மறுமொழி எண்
அறிவன்#11802717200764379909 said...

{இதில் என்ன தவறு

அடுத்த கேள்வி

வசதியே இருந்தாலும் இலவச கல்வியில் என்ன தவறு ?

இதற்கு பதில் கூற முடியுமா}

நிச்சயம் முடியாது!

Misuse செய்வதில் என்ன தவறு என்று கேட்பதற்கும் டி.ஆர்.பாலு ஆம்,நான்தான் கேட்டேன் என்று பாராளுமன்றத்தில் சொன்னதற்கும் வித்தியாசம் இல்லை.

இரண்டாவதாக நான் சொன்னது என் ஒருவருக்குத் தெரிந்த எண்ணிக்கை.அது தமிழ்நாடு மொத்தத்திற்குமான எண்ணிக்கையாக 'புள்ளி விவரம்' தரும் உங்கள் திறமையை வியக்கிறேன் !

மறுமொழி எண்
புருனோ Bruno said...

//Misuse //

அரசு இலவசமாக கல்வி தந்தால் அதை USE செய்வதில் என்ன தவறு என்பது தான் என் கேள்வி

இதற்கு உங்களின் பதில் என்ன

USEக்கும் MISUSEக்கும் நிறைய வித்தியாசம் உண்டு நண்பரே

சமூக ரீதியாக பின் தங்கியவர்கள் கல்வி கற்பது கூட உங்கள் கண்களுக்கு misuse ஆக் தெரிகிறதா

//இரண்டாவதாக நான் சொன்னது என் ஒருவருக்குத் தெரிந்த எண்ணிக்கை.அது தமிழ்நாடு மொத்தத்திற்குமான எண்ணிக்கையாக 'புள்ளி விவரம்' தரும் உங்கள் திறமையை வியக்கிறேன் !//

நீங்கள் புள்ளி விபரம் தந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன்

அந்த புள்ளி விபரம் மூலம் எனது கருத்து தவறு என்று தெரியவந்தால் திருத்திக்கொள்ளவும் தயார் !!

அதாவது தமிழகத்தில் பட்டப்படிப்பு படிக்காமல் வருமான வரி கட்டுபவர்களில் கல்லூரி செல்லும் வயதில் குழந்தைகள் உள்ளவர்கள் தமிழகத்தில் பல லட்சஙகள் என்று நீங்கள் நிருபித்தால் எனது கருத்தை திருத்திக்கொள்ள தயார் !!

மறுமொழி எண்
venkatramanan said...

டாக்டர்!
இது பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்த ஐயம் இது:
பெற்றோர் இருவரும் பட்டதாரிகள் இல்லை என்பதற்கு எந்தச் சான்றிதழ் அத்தாட்சியாகக் கொள்ளப்படும்?! இது பற்றி இந்த ஆணை (அல்ல்து அறிக்கையில்) ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா?!

மற்றபடி இது மிக அருமையான தொலைநோக்குள்ள திட்டம் என்பதில் இரண்டாம் கருத்திற்கே இடமில்லை!

அன்புடன்
வெங்கட்ரமணன்

மறுமொழி எண்
Maruthiah V said...

நான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. நான் 1996 இல் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த படித்த போதே பாதி கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.. அரசு கல்லூரில் இடம் கிடைத்தும் நான் சேராமல் விட்டதற்கு காரணம் என் குடும்பத்தால் வெளியூர் சென்று படிக்கும் செலவை தாங்க முடியதலால். அந்த திட்டம் அடுத்து வந்த அரசினால் எடுத்து விட்டதாக ஞாபகம். இந்த திட்டமும் அப்படி அடுத்த வரும் அரசினால் எடுக்காமல் இருந்தால் நல்லது..

இன்று நான் படித்திருந்தால் என் குடும்பத்தால் அது முடிந்திருக்குமா என்று ஒரு கேள்வி... இன்று படிப்பு மிகவும் வியாபாரமா மாற்ற பட்டதில் எனக்கு வருத்தமே... அதை தடுக்கலாம் இந்த அரசு...

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...