இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Friday, February 05, 2010

வழித்தடங்கள் 04 பிப்ரவரி 2010 : தமிழ்மணம் விருதுகள் 2009. நன்றி மற்றும் சில கருத்துக்கள் தெரிவித்தல்

தமிழ்மணம் 2009 போட்டியில் போட்டியிட்ட இரு பிரிவுகளிலும் வெற்றி பெற வைத்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் போட்டியை நடத்திய தமிழ்மண நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் :
இடுகை : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
பரிசு : முதல் பரிசு




பிரிவு : அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் :
இடுகை : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
பரிசு : இரண்டாம் பரிசு


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

-oOo-

போட்டியில் வெற்றி பெற்ற கோவி.கண்னன் கூறியதை போல் புதியவர்களுக்கு மேலும் வழிவிட அடுத்த (இந்த) ஆண்டு போட்டி நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

-oOo-

இந்த நேரத்தில் தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு சில ஆலோசனைகள் :

1. நான் முதலில் எதிர்ப்பார்த்தபடியே ஒருவர் இரு பிரிவுகளில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற விதியினால் எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை.
எனவே அந்த விதியை நீக்கிவிட்டு ஒருவர் எத்தனை பிரிவுகளில் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம் என்று மாற்றம் செய்ய வேண்டும்
அதே நேரம்

2. ஒரு முறை வெற்றி பெற்ற ஒருவரை மீண்டும் போட்டியிடவிடாமல் தடை செய்வது என்பது சரியா என்பது விவாதத்திற்குரிய கேள்வியே

ஆனால் அவர் அந்த பிரிவில் போட்டியிடக்கூடாது என்று சட்டம் கொண்டு வருவது தவறில்லை என்றே நினைக்கிறேன்
ஒரு முறை ஒரு பிரிவில் முதல் பரிசு பெற்றவர், அதன் பிறகு அந்த பிரிவில் போட்டியிடுவதற்கு தமிழ்மணம் தடை விதிக்க வேண்டும் 
மீதியிருக்கும் பிரிவுகளில் போட்டியிடலாம்

இதன் மூலம் சில பிரிவுகளில் சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என்று நினைக்கிறேன்

3. டிசம்பர் மாதம் எழுதப்படும் இடுகைகளை போட்டியில் இணைக்க முடியவதில்லை. ஏன் அந்த மாதம் மேல் ஓரவஞ்சனை :) :)
அடுத்த வருட போட்டிக்கு டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 30, 2010 வரை உள்ள இடுகைகள் தகுதி பெறும் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
-oOo-

தென்னைமரங்களிலும் பனைமரங்களிலும் குலை தள்ளும் போது அதைச்சுற்றி வலைமாதிரி தென்படுவதை கிராமப்புறங்களில் பன்னாடை என்றழைக்கிறார்கள். 

இந்த பன்னாடையை இயற்கை படைத்த நோக்கம் வேறு. ஆனால் நம் மக்கள் அதை வடிகட்டியாகவே (பில்டர்) பயன் படுத்தி வந்தார்கள். (முக்கியமான கள் இறக்கும் போது, அதை வடிகட்ட இது பயன் பட்டது
  • ஆக வடிகட்டிமுடித்த பின்னர் அழுக்குகள், கசடுகள் பன்னாடையில் தங்கி விடும். அதாவது தேவையானவற்றை விட்டு விட்டு தேவையில்லாதவற்றை தக்க வைப்பதே பன்னாடையின் குணம்
  • ஆனால் முறம் இதற்கு நேர் எதிர். அது தேவையில்லாதவற்றை விட்டு விட்டு தேவையானதை தக்க வைத்துக்கொள்ளும்
-oOo-

2009 வரை மாத வருமானம் 1999 வரை உள்ளவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாதவருமானம் 2000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பணம் செலுத்த வேண்டும்.

இதனால் நீரிழிவு நோய்க்கு வழங்கப்படும் இன்சுலின் ஊசி பெற வேண்டுமென்றால் வருவாய் துறையினரிடம் சென்று சான்றிதழ் பெற வேண்டும் என்று சில மருத்துவமனைகளில் கூறியதாக தெரிகிறது. அதை விட கொடுமை, யாரையாவது நாய் கடித்து விட்டால் அவரிடம் கூட வருமான சான்றிதழ் பெற்றுக்கொண்டே ஊசி போடுவேன் என்று சில இடங்களில் வலியுறுத்தியுள்ளார்கள்

இந்த விதி மாற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.  சந்தேகமிருந்தால் மேலும் விபரங்களுக்கு http://www.tn.gov.in/tamiltngov/policynotes/announcements/health_t.pdf கோப்பினை பார்க்கவும்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாத வருமானம் ரூ.1999-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் வருமான வரம்பின்றி அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
தமிழின் முக்கிய வெகுஜன ஊடகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது தான், ஊடகத்துறையில் இருக்கும் பலருக்கே இந்த மாற்றம் குறித்து தெரியவில்லை என்பதை அறிந்து கொண்டேன் !! 

மருத்துவமனைக்கு பின்னால் குப்பை கொட்டி கிடக்கிறது போன்ற புகார்களை பூதகரமாக எழுதுபவர்கள் இது போன்ற நல்ல விஷயங்களுக்கும் சிறு இடம் ஒதுக்கினால் கூட அனைவரும் பயன் பெறுவார்கள்

ஆனால் அப்படி செய்வதில்லை ! தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி பெரிதாக்கி அரசின் நல்ல திட்டங்களை, மக்களுக்கு பயன் பெறும் விஷயங்களை இருட்டடிப்பு செய்கிறார்கள் ! ஏன் ?

ஊடக்த்துறையிலும், வலைப்பதிவிலும் முறங்கள் குறைவாகவும், பன்னாடைகள் அதிகமாகவும் உள்ளதே காரணம்.

நீங்கள் முறமா, பன்னாடையா ?

28 மறுமொழிகள்:

T.V.ராதாகிருஷ்ணன் said...

அப்பாடா..மருத்துவரின் இடுகை நீண்ட நாட்களுக்குப் பிறகு..

வாழ்த்துகள்

ரவிசங்கர் said...

இந்தப் போட்டிகளில் இருந்து விலகுவது, தடை செய்வது ஆகியவை சரியா? சச்சின் ஏன் இந்திய அணியில் இருந்து விலகிக் கொள்ளக்கூடாது என்பதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் நினைவுக்கு வருகிறது :)

(புது வார்ப்புரு சரி இல்லையே. நல்ல அகலமான, கருப்பு - வெள்ளை வார்ப்புரு நல்லா இருக்கும்)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//ஊடக்த்துறையிலும், வலைப்பதிவிலும் முறங்கள் குறைவாகவும், பன்னாடைகள் அதிகமாகவும் உள்ளதே காரணம்.//

ஆஹா...,

நர்சிம் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் தலைவரே

பதிவுக்கு நன்றிகள்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

புதிய வார்ப்புரு

அசத்தல்

அட்டகாசம்

காவேரி கணேஷ் said...

விருதுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

டிவிட்டரில் கலக்குறீங்க.

மாதேவி said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அப்ப நான் பண்ணாடையா..?

வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

உங்களிடமிருந்து இது போன்ற வசவுகளை நான் எதிர்பார்க்கவில்லை..!

செய்தது, செய்யாதது இரண்டையும்தான் சம அளவில்தான் பலர் எழுதி வருகிறார்கள்.. கட்சி சார்பான பத்திரிகைகள் தவறுகளை மட்டுமே குறிப்பிடுகின்றன.. அதற்காக நிறைகளை மட்டுமே சொல்ல வேண்டும். குறைகளைச் சொல்லக் கூடாது என்பதா..?

ஜால்ராவுக்கு ஒரு அளவில்லையாண்ணே..!

தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக முனைவது பண்ணாடைத்தனம் இல்லீங்கண்ணே..!

மாசா மாசாம் சம்பளத்தை வாங்கிட்டு செய்ற வேலைக்கு தனியா எனக்கு நன்றி சொல்லு.. எனக்கு நன்றி சொல்லுன்னு வார்த்தைகளை லஞ்சமாக கேட்பதுதான் பண்ணாடைத்தனம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வலைத்தளத்தின் புது வடிவமைப்பு நன்றாக இல்லை.. திறப்பதற்கு வெகுநேரமாகிறது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நானும் அதனை சரி பார்த்துக் கொண்டேன்.. தகவலுக்கு மிக்க நன்றி..!

twitter_karthi_kamahade said...

வாழ்த்துக்கள் Dr. Can you try using entire screen while displaying Blog post ?

புருனோ Bruno said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
அப்பாடா..மருத்துவரின் இடுகை நீண்ட நாட்களுக்குப் பிறகு..

வாழ்த்துகள்
//

நன்றி சார்

புருனோ Bruno said...

//சச்சின் ஏன் இந்திய அணியில் இருந்து விலகிக் கொள்ளக்கூடாது என்பதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் நினைவுக்கு வருகிறது :)
//

இந்திய அணியில் ஆறு இடங்கள் உள்ளன. ஆனால் இங்கோ முதலிரண்டு இடங்களுக்கு மட்டும் தான் பரிசு

இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளதே

--

அடுத்து அணியின் தேர்வு என்பது விளையாட.

ஒரு வேளை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ரஜினி படத்திற்கும் வசனம் எழுதும் வாய்ப்பு உண்டு என்றால் நான் கட்டாயம் தொடர்ந்து போட்டியிடுவேன் !!!

//(புது வார்ப்புரு சரி இல்லையே. நல்ல அகலமான, கருப்பு - வெள்ளை வார்ப்புரு நல்லா இருக்கும்)
//

மாற்றி விட்டேன்

புருனோ Bruno said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//ஊடக்த்துறையிலும், வலைப்பதிவிலும் முறங்கள் குறைவாகவும், பன்னாடைகள் அதிகமாகவும் உள்ளதே காரணம்.//

ஆஹா...,
//

ஹி ஹி

புருனோ Bruno said...

//நர்சிம் said...
விருதுக்கு வாழ்த்துக்கள் தலைவரே

பதிவுக்கு நன்றிகள்.
//

:) :)

புருனோ Bruno said...

//காவேரி கணேஷ் said...
விருதுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

டிவிட்டரில் கலக்குறீங்க.
//

நன்றி சார்

புருனோ Bruno said...

//மாதேவி said...
தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்.
//

நன்றி மேடம்

புருனோ Bruno said...

//அப்ப நான் பண்ணாடையா..?

வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

உங்களிடமிருந்து இது போன்ற வசவுகளை நான் எதிர்பார்க்கவில்லை..!

செய்தது, செய்யாதது இரண்டையும்தான் சம அளவில்தான் பலர் எழுதி வருகிறார்கள்.. கட்சி சார்பான பத்திரிகைகள் தவறுகளை மட்டுமே குறிப்பிடுகின்றன.. அதற்காக நிறைகளை மட்டுமே சொல்ல வேண்டும். குறைகளைச் சொல்லக் கூடாது என்பதா..?

ஜால்ராவுக்கு ஒரு அளவில்லையாண்ணே..!

தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக முனைவது பண்ணாடைத்தனம் இல்லீங்கண்ணே..!

மாசா மாசாம் சம்பளத்தை வாங்கிட்டு செய்ற வேலைக்கு தனியா எனக்கு நன்றி சொல்லு.. எனக்கு நன்றி சொல்லுன்னு வார்த்தைகளை லஞ்சமாக கேட்பதுதான் பண்ணாடைத்தனம்..!
//

வேறு எங்கோ எழுத வேண்டியதை இங்கு எழுதி விட்டீர்களா

தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை

---

பின் குறிப்பு : நான் முறம். தேவையில்லாதவற்றை ஒதுக்கி விடுவேன் :) :)

புருனோ Bruno said...

//வலைத்தளத்தின் புது வடிவமைப்பு நன்றாக இல்லை.. திறப்பதற்கு வெகுநேரமாகிறது..!
//

நன்றி. மாற்றி விட்டேன்

பின் குறிப்பு : நான் முறம். தேவைப்படும் அறிவுரைகளை வைத்துக்கொள்வேன்

புருனோ Bruno said...

//twitter_karthi_kamahade said...
வாழ்த்துக்கள் Dr. Can you try using entire screen while displaying Blog post ?
//

வார்ப்புருவில் சிறிது மாறுதல் செய்ய வேண்டியுள்ளது. செய்து விடுவோம் :)

sundarms74 said...

நான் டாக்டர் மீனாக்ஷி சுந்தரம்.உங்கள் வெற்றிக்கு நன்றியும் பாராட்டுகளும்.நீங்கள் சொல்லிய வருமான வரம்பு பற்றிய தகவல் நடைமுறையில் உள்ளதா?ஏன் என்றால் அதற்கு அரசாணை இன்னும் வரவில்லை என்று நிர்வாக ஊழியர்கள் சொல்கிறார்களே

gulf-tamilan said...

விருதுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!.

சாமுவேல் | Samuel said...

there should be overall winners selected.

that way we know, importantly who is real no 1 and 2. (or is it already available there ?)

and why did i got so many reminder mails to vote for contestants...and not a single mail for announcing winners.

புருனோ Bruno said...

//gulf-tamilan said...
விருதுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!.

மறுமொழி எண் 22 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 2/12/2010 2:07 AM
//

நன்றி சார்

புருனோ Bruno said...

//sundarms74 said...
நான் டாக்டர் மீனாக்ஷி சுந்தரம்.உங்கள் வெற்றிக்கு நன்றியும் பாராட்டுகளும்.நீங்கள் சொல்லிய வருமான வரம்பு பற்றிய தகவல் நடைமுறையில் உள்ளதா?ஏன் என்றால் அதற்கு அரசாணை இன்னும் வரவில்லை என்று நிர்வாக ஊழியர்கள் சொல்கிறார்களே

மறுமொழி எண் 21 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 2/10/2010 9:42 PM
மறுமொழி எண் 22//

அரசின் இணைய தளத்திலேயே வந்து விட்டதே

அதன் பிறகு இவர்களுக்கு தனியாக வர வேண்டுமா :) :)

இன்னமும் புறா காலில் கட்டி வந்தால் தான் நம்புவார்களா

புருனோ Bruno said...

//சாமுவேல் | Samuel said...
there should be overall winners selected.

that way we know, importantly who is real no 1 and 2. (or is it already available there ?)
//

புரியவில்லை !!

//and why did i got so many reminder mails to vote for contestants...and not a single mail for announcing winners.
//

:) :) :)

சாமுவேல் | Samuel said...

if CNN IBN selects poltician of the year, sportsperson of the year, business men of the year, entertainment award for the year.

after announcing winners in each category, they also announce overall winner amongst the winners in each category.
which incidentally went to a.r.rahman. :-))

so there is a conclusion that, this year entertainment played a important role in influencing people, than other categories.

let me know if my comment looked understandable atleast this time.

புருனோ Bruno said...

//if CNN IBN selects poltician of the year, sportsperson of the year, business men of the year, entertainment award for the year.

after announcing winners in each category, they also announce overall winner amongst the winners in each category.
which incidentally went to a.r.rahman. :-))

so there is a conclusion that, this year entertainment played a important role in influencing people, than other categories.

let me know if my comment looked understandable atleast this time.

மறுமொழி எண் 27 அளிக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் 2/15/2010 8:50 PM //

புரிந்தது !!

மிக்க நன்றி

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...