மருத்துவத்துறையில் வேலை பார்க்க என்ன படிப்புகள் உள்ளன ?
- MNA / FNA : ஆன் செவிலிய உதவியாளர் / பெண் செவிலிய உதவியாளர் : 9 மாதம் முதல் ஒரு வருடம்
- ANM / VHN : துனை செவிலிய மாது / கிராம சுகாதார செவிலியர் : 18 மாதம்
- GNM : செவிலியர் (பட்டயம்) : 3 1/2 வருடம் ஆதாரம் : http://www.indiannursingcouncil.org/types-nursing-programs.asp
- B.Sc Nursing : செவிலியர் (பட்டம்) : 4 வருடம் ஆதாரம் : http://www.indiannursingcouncil.org/types-nursing-programs.asp
- B.Pharm : மருந்தாளுனர் : 4 வருடம்
- MBBS : மருத்துவ இளங்கலை : 5 1/2 முதல் ஆறு வருடம் (ஆடுமாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் படிப்பு ஐந்து வருடம்)
ஆமாம் இந்த செய்திக்குறிப்பில் உள்ளபடி
- 8 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லை.
- அதே நேரம் 39 % ஆரம்ப சுகாதாரம் நிலையங்கள் ஆய்வக உதவியாளர் இல்லை.
- மேலும் 17.7 சதவித நிலையங்களில் மருந்தாளுனர் இல்லை.
- இது தவிர சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை மேலும் அதிகமாக உள்ளது 59.4% அறுவை சிகிச்சை நிபுணர்களின் பணியிடம் காலியாக உள்லது. 45% மகப்பேறு நிபுணர்களின் பணியிடங்கள், 61.1 % பொது மருத்துவ நிபுணர்களின் பணியிடங்கள், 53.8 % குழந்தை மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
- மொத்தத்தில் சிறப்பு மருத்துவர்களின் மொத்த பணியிடங்களில் 70.2% சதம் காலியாக உள்ளது
- சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் தான் அதிகம் காலியிடம் உள்ளது
- சிறப்பு மருத்துவ படிப்பிற்கான இடங்களை அதிகப்படுத்துவன் மூலம்
- தேர்வாணையங்கள் மூலம் தேர்வு நடத்தினால், அந்த இடங்களுக்கு ஆட்களை நிரப்பலாம்.
- ஆதாரமில்லாத பொய் குற்றச்சாட்டு. தேர்வாணையத்தின் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு வேலை அளித்தால் அவர்கள் வேலையில் சேர தயாராகவே உள்ளனர்
- நகர மக்களுக்கு வைத்தியம் பார்க்க ஆறு வருடம் படிக்க வேண்டும்
- ஆடு மாடுகளுக்கு வைத்தியம் பார்க்க ஐந்து வருடம்
- கிராம மக்களுக்கு என்றால் மூன்று வருடம் போதுமா
நகரத்தில் செவிலியர் வேலைக்கும் தேவைப்படும் நான்கு வருட படிப்பை விட கிராமத்தில் டாக்டர் வேலைக்கு குறைந்த படிப்பு போதுமென்று கூறுவது எவ்வளவு பெரிய அக்கிரமம்
கிராமங்களில் காலியிடங்கள் உள்ளனவே ? அதை நீங்கள் மறுக்கிறீர்களா
காலியிடங்களின் எண்ணிக்கையை மறுபடியும் பார்த்தீர்களா !! கிராமங்களில் மருத்துவர் காலியிடங்களை விட மருந்தாளுனர் மற்றும் ஆய்வக உதவியாளர் காலியிடங்கள் அதிகம் உள்ளனவே. மருத்துவத்துறை மட்டுமல்ல, எந்த துறை என்றாலும், அது பள்ளிக்கூடமாகட்டும், வருவாய்த்துறையாகட்டும், தொலைபேசி துறை, அஞ்சல் துறை, வங்கிகள் என்று எந்த துறை என்றாலும் எந்த பணியிடம் என்றாலும், நகரங்களை விட கிராமங்களில் காலியிடங்கள் அதிகமாகவே உள்ளன.
இந்த ஒரு காரணத்தை (காலியிடம்) வைத்து
- நகர டாக்டர் : கிராம டாக்டர்
- நகர பொறியாளர் : கிராம பொறியாளர்
- நகர வங்கி ஊழியர் : கிராம வங்கி ஊழியர்
மருத்துவர்கள் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்வதாக குற்றச்சாட்டு உள்ளதே
மருத்துவர்களில் சிலர் வெளிநாடு செல்வது உண்மைதான். ஆனால் படித்து முடிப்பவர்களில் வெளிநாடு செல்பவர்களில் சதவிதம் மிக மிக குறைவு. சொல்லப்போனால் வெளிநாடு செல்லும் செவிலியர்களின் சதவீதத்தை விட வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் சதவீதம் குறைவுதான். சந்தேகம் இருந்தால் சம்மந்தப்பட்ட துறையில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் நீங்களே கேட்டு தெளிவு பெறலாம்.
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய மருத்துவர்கள் உள்ளனர். செவிலியர்கள் இல்லை . ஆதாரம் : http://www.hindu.com/2010/02/22/stories/2010022255590700.htm
அடிப்படை சுகாதாரம், குடும்ப நலன், சிறுநோய் வைத்தியம் ஆகியவற்றை செய்ய மருத்துவ இளங்கலை MBBS படித்த மருத்துவர் தேவையில்லை என்பதால் தான் இந்த கிராமப்புற மருத்துவர் திட்டம் என்கிறார்களே
அடிப்படை சுகாதாரம், குடும்ப நலன், சிறுநோய் வைத்தியம் ஆகியவற்றை செய்ய மருத்துவ இளங்கலை MBBS படித்த மருத்துவர் தேவையில்லை என்பது சரியான கருத்து தான். அதற்கு கிராம சுகாதார செவிலியர்கள் / செவிலியர்களே போதுமானது.
அதாவது ஏற்கனவே பணியில் இருக்கும் கிராம சுகாதார செவிலியர்களே போதுமானது. அப்படி இருக்க ஏன் புதிதாக ஒரு படிப்பு என்பது தான் இங்கு பிரச்சனையே
இங்கு 9 மாதம் முதல் ஒரு வருடம் வரை படித்த செவிலிய உதவியாளர்கள் பலர் இருக்கிறார்கள். 18 மாதம் படித்த துனை செவிலிய மாதுகள், 18 மாதம் படித்த கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளனர். நான்கு வருடம் BSc Nursing படித்த ஏகப்பட்ட nurseகள் இருக்கிறார்கள். அவர்களை பணியில் அமர்த்தலாமே
ஏன் புது படிப்பு என்ற கேள்விக்கு யாரிடமாவது விடை உள்ளதா
நகர மக்களுக்கு முழு டாக்டர் கிராம மக்களுக்கு அரை டாக்டர் என்ற மாற்றந்தாய் திட்டத்தை வரவேற்பவர்களுக்கு கிராம மக்கள் மேல் என்ன விரோதம் என்று தெரியவில்லை
கிராம மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது
- இது புதிய படிப்பு மட்டும் அல்ல
- இது பாதி படிப்பு
கிராமப்புறங்களில் மின் விநியோகத்தை செயல்படுத்த ஒரு வருடம் படித்த பொறியாளர் போது என்றால் உங்கள் கருத்து என்ன
இன்றைய தேதியில் கிராமங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை. அங்கு மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
- அதிகம் மருத்துவக்கல்லூரிகளை உருவாக்க வேண்டும்
- இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் MBBS இடங்களை உருவாக்க வேண்டும்
புதிதாக அரைவேற்காடு மருத்துவர்களை உருவாக்க ஆகும் பணம் தானே இங்கும் ஆகும். சொல்லப்போனால் அதை விட குறைவாகத்தான் ஆகும். அல்லது ஏற்கனவே இருக்கும் படிப்புகளான செவிலிய உதவியாளர், துனை செவிலிய மாது, கிராம சுகாதார செவிலியர், செவிலியர் ஆகிய படிப்புகளின் இடங்களை அதிகரிக்கலாம்.
நீங்கள் ஒரு தொழிற்சாலையில் தினமும் 100 வண்ன தொலைக்காட்சியும் 100 வானொலிகளும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை 200 வண்ண தொலைகாட்சிகளுடன் 100 வானொலிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற ஆகும் செலவு (100 வண்ண தொலைகாட்சிகளுடன் 200 வானொலிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற ஆகும் செலவு) அதிகமா, அல்லது 100 தொலைகாட்சிகள் மற்றும் 100 வானொலிகளுடன் மேலும் 100 கருப்பு வெள்ளை தொலைகாட்சிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற உள்கட்டமைப்பு வசதிகள அமைக்க ஆகும் செலவு அதிகமா
அது தான் பொறியியல் துறையில் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் எல்லாம் உள்ளனவே. பிறகு மருத்துவத்துறையில் மட்டும் மூன்று வருடம் என்றால் ஏன் எதிர்ப்பு
நல்ல கேள்வி ? ?
நீங்களே நன்றாக பாருங்கள். ஐடிஐயில் படிப்பவர்கள் பெறும் பட்டம் என்ன. கிராமப்புற பொறியாளர் Bachelor of Rural Engineering என்றா பட்டம் அளித்து நகரங்களுக்கு 4 வருடம் படித்த பொறியாளர், கிராமங்களுக்கு பொறியாளர் என்றால் இரண்டு வருடம் போதும் ஏன்றா சொல்கிறார்கள். இது வரை சொல்லவில்லை
ஆனால் இந்த Bachelor of Rural Medicine and Surgery அனுமதிக்கப்பட்டால், அனைத்து துறைகளிலும் (காலியிடங்கள் இருக்கும் அந்த சப்பை காரணத்தை காட்டி) இரு தரங்கள் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது. அனைத்திலும் கிராம மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை தடுக்க முடியாது
இன்று படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் செவிலியர்கள் மருந்தாளுனர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என்று ஏகப்பட்டவர்களை நியமிக்காமல் ஒரு புது படிப்பு - அதிலும் இவர்களை விட தகுதி குறைவான ஒரு புது படிப்பு - தேவையா
சீனாவில் வெறுங்கால் மருத்துவர்கள் என்ற முறை உள்ளதாமே ??
சீனாவில் Barefoot doctors (chìjiǎo yīshēng) என்ற திட்டம் 1968ல் நடைமுறைப்படுத்தப்பட்டது உண்மை தான். ஆனால் அந்த திட்டம் 1981 நிறுத்தப்பட்டது !!
யார் இந்த வெறுங்கால் மருத்துவர்கள். இவர்கள் எத்தனை வருடம் படித்தார்கள் ?
அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் கல்லூரி சென்று படிக்கவில்லை. விவசாசியகளுக்கு குறைந்த பட்ச மருத்துவ மற்றும் முதலுதவி குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் அடிப்படை சுகாதாரம், மற்றும் குடும்ப நலன் மற்றும் சிறுநோய் சிகிச்சை மட்டுமே அளித்தார்கள்
இந்த திட்டத்தை இங்கு இந்தியாவில் நடைமுறைப்படுத்த ஏன் எதிர்க்கிறீர்கள்
இந்த திட்டம் - இதை விட நல்ல திட்டம் - ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது !! யாரும் எதிர்க்க வில்லை
கிராமங்களில் இருக்கும் அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் இதே பயிற்சி பெற்றவர்கள்தான். சொல்லப்போனால் கிராம சுகாதார செவிலியர்களின் பயிற்சி மற்றூம் பணியானது இந்த வெறுங்கால் மருத்துவர்களை விட் அதிகமானதே
தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் ஆஷா திட்டம் இந்த வெறுங்கால் மருத்துவர்கள் போன்றதே. மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டிகளை பார்கக்வும்
மருந்து அளிக்க (Prescribe செய்ய) மருத்துவர்கள் கட்டாயம் தேவையென்றும் செவிலியர்களுக்கு மருந்தை prescribe செய்ய உரிமையில்லை என்றும் அதனால் தான் இந்த புதிய அரைவேற்காடு படிப்பு ஆரம்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே
முழுப்பொய் !!
மருந்துக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றை ஒழுங்கு படுத்தி வெவ்வேறு பிரிவுகளாக வைத்துள்ளனர்.
- இதில் சில மருந்துக்களை எந்த க்டையிலும் விற்கலாம்.
- சில மருந்துக்களை மருந்து கடையில் மட்டுமே விற்க முடியும்.
- மேலும் சில மருந்துபொருட்கள் மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே விற்க முடியும்.
BRMS படித்த ஒருவர் செய்யும் அனைத்து வேலைகளையும் தற்சமயம் ஏற்கனவே பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்களும், செவிலியர்களும் செய்கிறார்கள் என்றால், பிறகு, தற்சமயம் செவிலியர்களின் படிப்பு காலமான 4 வருடத்தை விடு குறைவான காலத்திற்கு ஒரு புதிய படிப்பு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கம் தான் என்ன
அது தான் திரும்ப திரும்ப கூறிவிட்டோமே. நகரத்தில் இருப்பவர்களுக்கு செவிலியராக இருக்க படிக்கும் அளவை விட குறைவாக படித்தாலே கிராமத்தில் இருப்பவர்களுக்கு டாக்டர் ஆகி விடலாம் என்று கிராம மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த தான்.
இந்த படிப்பு தமிழகத்தில் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்தது ஏன் ?
- தமிழக கிராம மக்களுக்கு, நகர மக்களுக்கு கிடைக்கும் அதே தர மருத்துவ கவனிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக
- தமிழக கிராம மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படக்கூடாது என்பதற்காக
21 மறுமொழிகள்:
குழப்ப வாதிகளில் குயிக்தி எண்ணத்தில் உதித்திட்ட குளறுபடி கோர்ஸ்
தனியார் கிளினிக்குகள் கிராமங்களில் உருவாக ஏற்படும் இடையூறுகள் சில
இங்கே
இங்கே
அய்யப்பாடுகளைப் போக்கிய அருமையான பதிவு.
நன்றி
dear bruno,
one more effect this course will demoralize the existing doctors those working in Villages.
Don't know how law makers thinking.
But u have agree that there is still no permanent solution to doctors in village. May be u need to wear their shoes.
Agree that this course will not be solution.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுரேஷ்
// தமிழ் ஓவியா said...
அய்யப்பாடுகளைப் போக்கிய அருமையான பதிவு.
நன்றி
//
நன்றி சார்
//dear bruno,
one more effect this course will demoralize the existing doctors those working in Villages.
Don't know how law makers thinking.
But u have agree that there is still no permanent solution to doctors in village.//
தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேனே :) :) அதில் சந்தேகமே கிடையாது
// May be u need to wear their shoes.
Agree that this course will not be solution.//
இதை தெளிவு படுத்தத்தான் இந்த இடுகை
இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையைத் தமிழகம் எதிர்ப்பது வரவேற்கத்தக்கது
தமிழகத்தில் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது நல்ல சேதி.
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடாது என்ற பேச்சும் இந்திய அளவு சட்டமா? தமிழகத்தில் மட்டுமே? இது குறித்த உங்கள் உளறல் தள இடுகையையும் இங்கு இடலாமே.
அருமையான இடுகை தல.
கிராமத்து மக்களை ரட்சிக்க வந்த நல்ல திட்டம் இது என்பதுபோல போலியான நம்பிக்கையை உருவாக்கி அவர்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்க இந்த திட்டம் அரசாங்கதாலேயே உருவாக்கபடுகிறது என்பது வேதனைதான்..
போலி டாக்டர்களை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கமே போலி டாக்டர்களை உருவாக்குகிறது.. சபாஷ்..
கிராம மக்களின் பால் உள்ள அக்கறையினால் இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை என்பது உண்மையே. அதே போல ஆரம்ப சுகாதர நிலையங்களின் பற்றாக்குறையும் கண்டு கொள்ளாமல் புறக்கணிப்படுவதும் உண்மையே.
ஆனால் கிராமங்களிலும், சிறுநகரங்களிலும் ஏதேனும் மருத்துவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் அந்த அனுபவத்தை வைத்து தனியாக கிளினிக் நடத்துவதும் மக்கள் அவர்களை டாக்டர் என்று அழைத்து செல்வதும் இங்கே சகஜமான ஒன்று. இதற்கு தோதாக மருத்துவர்கள் அதாவது அரசு வேலையின்றி தனியாக பிராக்டீஸ் செய்பவர்கள் கிராம்ப்புறங்களை புறக்கணிப்பது என்பதும் யதார்த்தம்தானே?
நகரங்களில் பிராக்டீஸ் செய்யும் மருத்துவர் ரூ.50 அல்லது ரூ.100 இல்லை அதற்கும் மேல் கட்டணம் வாங்கும் போது கிராமங்களில் அப்படி வாங்க முடியாது என்பதாலேயே மருத்துவர்கள் அப்படி புறக்கணிக்கின்றனர். இங்கு தொழில் என்பதோடு கூடுதலாக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் தேவைப்படுகிறது. இதை எப்படி சாத்தியப்படுத்துவது?
கிராமப்புற மருத்துவ தேவைகளுக்காக நாம் அரசை பணியவைத்து போராடுவது என்பது ஒன்று. கூடவே தனியார் மருத்துவர்களும் கிராமப்புறங்களுக்கு சேவை எண்ணத்துடன் செல்ல வேண்டிய தேவையும் இருக்கிறது. முன்னதை மக்கள் போராடினால் சாத்தியப்படுத்தலாம். பின்னது அப்படி நடப்பதற்கு மருத்துவர்கள் முன்வரவேண்டும். வருவார்களா?
//KVR said...
இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையைத் தமிழகம் எதிர்ப்பது வரவேற்கத்தக்கது
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//ரவிசங்கர் said...
தமிழகத்தில் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது நல்ல சேதி.
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடாது என்ற பேச்சும் இந்திய அளவு சட்டமா? தமிழகத்தில் மட்டுமே? இது குறித்த உங்கள் உளறல் தள இடுகையையும் இங்கு இடலாமே.
//
மேலும் சில கருத்துக்கள் சேர்த்து தனி கட்டுரையாக எழுதலாம் என்று நினைக்கிறேன்
//Dr.ராம் said...
அருமையான இடுகை தல.
கிராமத்து மக்களை ரட்சிக்க வந்த நல்ல திட்டம் இது என்பதுபோல போலியான நம்பிக்கையை உருவாக்கி அவர்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்க இந்த திட்டம் அரசாங்கதாலேயே உருவாக்கபடுகிறது என்பது வேதனைதான்..
போலி டாக்டர்களை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கமே போலி டாக்டர்களை உருவாக்குகிறது.. சபாஷ்..
//
வாங்க பாஸ் :) :) தேர்வு எழுதினீர்களா
//அதே போல ஆரம்ப சுகாதர நிலையங்களின் பற்றாக்குறையும் கண்டு கொள்ளாமல் புறக்கணிப்படுவதும் உண்மையே.//
தற்சமயம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 சதத்திற்கும் குறைவாகவே காலியிடங்கள் உள்ளன என்பதை அறிவீர்களா தோழரே :)
//இதற்கு தோதாக மருத்துவர்கள் அதாவது அரசு வேலையின்றி தனியாக பிராக்டீஸ் செய்பவர்கள் கிராம்ப்புறங்களை புறக்கணிப்பது என்பதும் யதார்த்தம்தானே?//
இல்லை. யார் யாரை புறக்கணிக்கிறார்கள் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன
மருத்துவர் சுரேஷ் இது குறித்து விரிவாகவே எழுதியுள்ளார். (சுட்டி மேலே அவரது மறுமொழியில் உள்ளது)
வாசித்து பாருங்கள்.
பிரச்சனை உள்ளது. அதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கு மருத்துவர் மட்டுமே காரணம் அல்ல. மருத்துவரால் மட்டுமே அது தீராது
//நகரங்களில் பிராக்டீஸ் செய்யும் மருத்துவர் ரூ.50 அல்லது ரூ.100 இல்லை அதற்கும் மேல் கட்டணம் வாங்கும் போது கிராமங்களில் அப்படி வாங்க முடியாது என்பதாலேயே மருத்துவர்கள் அப்படி புறக்கணிக்கின்றனர். //
இல்லை
கட்டணம் / பணம் காரணமே கிடையாது
சொல்லப்போனால் நகரத்தை விட கிராமத்தில் தான் அதிகம் சம்பாதிக்கலாம் !!
அப்படியிருந்தும் தனியார் கிளினிக்குகள் கிராமங்களில் உருவாக ஏற்படும் இடையூறுகள் சில
இந்த சுட்டியிலும்
இந்த சுட்டியிலும்
உள்ளன
//இங்கு தொழில் என்பதோடு கூடுதலாக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் தேவைப்படுகிறது.//
இதை ஏற்றுக்கொள்கிறேன்.
//இதை எப்படி சாத்தியப்படுத்துவது?//
கிராமங்களில் கிளினிக் ஆரம்பிக்கும் மருத்துவர்களுக்கு, ஊர் பெரியவர்கள் சிறிது காலம் (அதாவது போலிகளின் தொல்லை முடியும் வரை) பாதுகாப்பாக இருக்க வேண்டும்
சில நாட்களுக்கு பிறகு, மருத்துவர் ஊராரின் நம்பிக்கையை பெற்ற பிறகு பிரச்சனை வராது
இந்த முதல் படிக்கட்டு தான் சிரமம்.
மருத்துவரின் வண்டியை பஞ்சராக்குவது, பெயர்பலகையை உடைப்பது, வீட்டில் பெண்கள் தனியாக இருந்தால் தொலைபேசியில் மிரட்டுவது போன்ற காரியங்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது
அதனால் தான் பலரும் வந்த வேகத்தில் ஓடி விடுகிறார்கள்
--
அடுத்த முக்கியமான விஷயம்
மருத்துவத்துறையை பொருத்த வ்ரை தமிழகத்தில் நிலை மற்ற மாநிலங்களின் நிலையை விட பல மடங்கு முன்னேறியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் தானே !!
// கூடவே தனியார் மருத்துவர்களும் கிராமப்புறங்களுக்கு சேவை எண்ணத்துடன் செல்ல வேண்டிய தேவையும் இருக்கிறது.//
முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்
// முன்னதை மக்கள் போராடினால் சாத்தியப்படுத்தலாம். பின்னது அப்படி நடப்பதற்கு மருத்துவர்கள் முன்வரவேண்டும். வருவார்களா?
//
மருத்துவர்கள் முன் வரத்தயார். ஆனால் சில நாட்களுக்கு / வாரங்களுக்கு அவர்களுக்கு “பாதுகாப்பு” அளிக்க ஊரி பெரியவர்கள் தயாரா...
தயாரில்லை என்றால் தயார்படுத்த வேண்டும்
ஒன்றினைந்து செயல்படுவோம்
nice explanation,,,association of doctors all over india should oppose
this wont come in to force i believe.it s a very good analysis, if seriously they want rural postings then there are plenty of ayurveda, siddha, homeo ,unani drs,without proper income already with qualification, may be another 6 months of practical training in allopathic set up will be enough .
Post a Comment