நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்திருக்கிறது.
அதாவது சித்தா, ஆயூர்வேதம், யுனானி, ஹோமியோபதி முறை மருத்துவம் கற்றவர்கள் அலோபதி முறையிலுள்ள மருத்துவம், அறுவை சிகிச்சை, பெண்கள் சிறப்பு சிகிச்சை, மகப்பேறு, கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்பதே அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ( Siddha, Ayurveda, Homoeopathy and Unani, who are also eligible to practice modern scientific medicine, including surgery, gynaecology, obstetrics, anaesthesiology, ENT and ophthalmology)
இவ்வளவு நாளாக அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை நாங்கள் குணமாக்குகிறோம் என்று புருடா விட்டு நோயாளிகளிடமிருந்து பணம் பறித்து வந்தவர்களின் நிலை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிறது
அலோபதி மருந்துகள் பக்க விளைவு, எங்கள் மருந்தில் பக்க விளைவே கிடையாது என்று ஊரை ஏமாற்றியவர்களும், அவர்களுக்கு ஆதரவாக எழுதிவந்த பதிவர்கள் சிலரும் இப்பொழுது முகத்தை எங்கு வைத்து கொள்ள போகிறார்கள் என்று அறிய ஆவல்
உடனடியாக தோன்றும் கேள்விகள் இவை
- “அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை மாற்று மருத்துவத்தில் குணமாக்க முடியும்” என்பது உண்மையென்றால் எங்களை அலோபதி முறையில் வைத்தியம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏன் உயர் நீதிமன்றத்தில் கெஞ்ச வேண்டும்
- “அலோபதி மருந்தில் பக்க விளைவு உணடு, எங்கள் மருந்தில் பக்க விளைவு கிடையாது” என்று இவர்கள் கூறுவது உண்மையென்றால் ஏன் அலோபதி மருந்துக்களை பரிந்துரைக்க அனுமதி கேட்கிறார்கள்
- இவர்கள் படிப்பது ஆயுர்வேதம், ஆனால் சிகிச்சை அளிப்பது அலோபதி முறையில் என்றால், ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் தேவையா. அவற்றை எல்லாம் மூடி விட்டு அவற்றையும் அலோபதி மருத்துவகல்லூரிகளாக மாற்ற வேண்டியது தானே
துனை கேள்விகள் : இப்படி எங்கள் மருத்துவமுறை பலனற்றது. எனவே எங்களை அலோபதி முறையில் சிகிச்சை அளிக்க அனுமதியுங்கள் என்று சிலர் வழக்கு தொடுத்ததில் மாற்று மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் உடன்பாடு உண்டா அல்லது இது ஒரு சிலரின் வேலை ??
இப்படி அலோபதியே மேலானது, எங்கள் மருத்துவமுறை பலனற்றது என்று இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அனைத்து சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா
102 மறுமொழிகள்:
டாக்டர்ண்ணே,
இப்பவும் எனக்கு தலைவலின்னா கசாயம் குடிச்சாத்தான் உடனே சரியாகுது.அதுக்காக உடலில் எதேனும் கட்டி என்றால் சித்த மருத்துவம் தேடிக்கொண்டு இருக்க முடியாது.அறுவை சிகிச்சைதான். மருத்துவம் என்பதே நம்பிக்கையின்பார்ப்பட்ட விஷயம்தானே?? இதில் எந்த முறையை மனம் நம்புகின்றதோ அதுவே சிறந்த முறை. இல்லையா??
//இப்பவும் எனக்கு தலைவலின்னா கசாயம் குடிச்சாத்தான் உடனே சரியாகுது.//
நான் கூட புண்ணுக்கு மருந்து கட்டுவதற்கு தேனைத்தான் பயன்படுத்துகிறேன்.
இங்கு விவாதம் அதுவல்ல அண்ணா !!!!
//இதில் எந்த முறையை மனம் நம்புகின்றதோ அதுவே சிறந்த முறை. இல்லையா??//
அனைத்து முறைகளும் சிறந்தவைதான். இதில் ஏற்ற இறக்கம் கிடையாது
எங்கள் பேராசிரியர் ஒருவர் கூறுவார், அலோபதி, ஹோமியோபதி எல்லாவற்றையும் விட நோயாளிக்கு முதல் தேவை சிம்பதி (அனுதாபம், அக்கறை, நேசம்) தான் !!
எனக்கோர் ஐயம். //...to practice modern scientific medicine, including surgery,..// எப்படி மற்ற மருத்துவர்களை surgery செய்யவும் நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றது. அவர்களுக்கு செய்முறை அனுபவம் கல்லூரியில் படிக்கும்போது இருக்காதே ..! நமது மேல் hand on experience செய்து பழகுவார்களோ?!
நான் இந்த தீர்ப்பை வேறு விதமாக அணுகுகிறேன், நீங்கள் வேறு விதமாக அணுகுகிறேர்கள். (interpretation of the judgement is totally different, please see the spirit of the judgement, not the letters)
உதாரணம்: எனக்கு சளி இருமல் மிக கடுமையாக உள்ளது. அருகில் உள்ள சித்தா மருத்துவரிடம் செல்கிறேன்,. அவருக்கு தெரியும் கண்டங்கத்திரி+ தூதுளை கசாயம் அறுபது நாட்கள் சாப்பிட்டால் இந்த இருமல் திரும்ப வரவே வராது என்று.
ஆனால் உடனடியாக எனது வலியை, எரிச்சலை குறைக்க க்ளைகொடின் அல்லது பெநேட்ரில் மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும் என்றும் அவருக்கு தெரிகிறது . இந்த சூழ்நிலையில் அவர் ஆங்கில மருந்தை ஒரு தற்காலிக தீர்வாக பரிந்துரை செய்யலாம்.
எனவே சித்த மருத்துவர்களும் தற்காலிக தீர்வாக ஆங்கில மருந்துகளையும், நிரந்தர தேர்விற்கு சித்த மருந்துகளையும் பரிந்துரை செய இந்த தீர்ப்பு உதவி செய்கிறது.
ஆங்கில மருத்துவர்களும் சித்த , யுனானி மருந்துகள் பரிந்துரை செய்ய வும் உயர் நீதிமன்றம் அனுமதிக்கலாம். இப்போதே அந்த அனுமதி உள்ளதா என்று எனக்கு தெரிய வில்லை.
இரு வித மருத்துவர்களும் இனைந்து செயல்பட்டு மருத்துவத்தில் அடுத்த முன்னேற்றம் என்ன என்று யோசிக்க வேண்டும், அதை விடுத்து நான் இந்தியா நீ பாகிஸ்தான் என்பது போல
மல்லு கட்டுதல் அழகு அல்ல
//நமது மேல் hand on experience செய்து பழகுவார்களோ?!
//
good pointout.
//நான் இந்த தீர்ப்பை வேறு விதமாக அணுகுகிறேன், நீங்கள் வேறு விதமாக அணுகுகிறேர்கள். (interpretation of the judgement is totally different, please see the spirit of the judgement, not the letters)//
நானும் நீங்கள் அணுகுவது போலவேத்தான் அணுகுகிறேன்
என் கேள்விகளுக்கு நேரடியாக விடையளித்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியும்
//உதாரணம்: எனக்கு சளி இருமல் மிக கடுமையாக உள்ளது. அருகில் உள்ள சித்தா மருத்துவரிடம் செல்கிறேன்,.//
அந்த மருத்துவருக்கு கடுமையான சளி இருமலுக்கு சித்த வைத்தியம் தெரியுமா அல்லது தெரியாதா
கடுமையான சளி இருமலுக்கு சித்த வைத்தியம் தெரியுமென்றால் பிரச்சனை இல்லை
தெரியாதென்றால் அவர் முறையான வைத்தியம் தெரிந்த ஒரு வைத்தியரிடம் தான் உங்களை அனுப்ப வேண்டுமே தவிர அவரே தெரியாத வைத்தியத்தை பயன்படுத்துவது எப்படி முறையாகும்
அந்த மருந்தின் பின் விளைவுகளை பற்றி அறியாதவர் அதை பயன்படுத்தலாமா
//அவருக்கு தெரியும் கண்டங்கத்திரி+ தூதுளை கசாயம் அறுபது நாட்கள் சாப்பிட்டால் இந்த இருமல் திரும்ப வரவே வராது என்று.//
திரும்ப வரவே வராதா
அப்படி என்றால் பல்ஸ் போலியோ போல் ஒரு முறை அனைவருக்கும் இதை தந்து விடுவோம்
பிறகு உலகில் இருந்து இருமலும் சளியும் அறவே அழிந்து விடும் அல்லவா
(பெரியம்மையும் நரம்பு சிலந்தியும் அழிந்தது போல்)
ஏன் சார் இப்படி அருமையான விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் வைத்திருக்கிறீர்கள்
//ஆனால் உடனடியாக எனது வலியை, எரிச்சலை குறைக்க க்ளைகொடின் அல்லது பெநேட்ரில் மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும் என்றும் அவருக்கு தெரிகிறது.//
ஏன்
சித்த வைத்தியத்தில் அதற்கான மருந்து இல்லையா
அப்படி என்றால் உங்களை அவர் அலோபதி வைத்தியரிடம் அனுப்புவது தான் முறையே தவிர அவரே மருந்து அளிப்பது எப்படி முறையாகும்
இதற்கு ஏன் அவர் சித்த மருத்துவம் படிக்க வேண்டும். நேரடியாக அலோபதியே படித்தால் போதுமே என்பது தான் என் கேள்வி. அதற்கு உங்களிடம் விடை உள்ளதா
// இந்த சூழ்நிலையில் அவர் ஆங்கில மருந்தை ஒரு தற்காலிக தீர்வாக பரிந்துரை செய்யலாம்.//
இதற்கு ஏன் அவர் சித்த மருத்துவம் படிக்க வேண்டும். நேரடியாக அலோபதியே படித்தால் போதுமே என்பது தான் என் கேள்வி. அதற்கு உங்களிடம் விடை உள்ளதா
அது சரி
அந்த மருந்தின் பின் விளைவுகள் பற்றி அவருக்கு எப்படி தெரியும்
//எனவே சித்த மருத்துவர்களும் தற்காலிக தீர்வாக ஆங்கில மருந்துகளையும், நிரந்தர தேர்விற்கு சித்த மருந்துகளையும் பரிந்துரை செய இந்த தீர்ப்பு உதவி செய்கிறது.//
ஒரு முறை நிரந்தர தீர்வு பரிந்துரை செய்து விட்டால் அடுத்த முறை தற்காலிக தீர்விற்கு அவசியம் ஏது
எனவே சித்த வைத்தியத்திலும் தீர்வு தற்காலிகம் தான். அலோபதியுலும் தற்காலிகம் தான்
//உதாரணம்: எனக்கு சளி இருமல் மிக கடுமையாக உள்ளது. அருகில் உள்ள சித்தா மருத்துவரிடம் செல்கிறேன்,.//
அந்த மருத்துவருக்கு கடுமையான சளி இருமலுக்கு சித்த வைத்தியம் தெரியுமா அல்லது தெரியாதா
கடுமையான சளி இருமலுக்கு சித்த வைத்தியம் தெரியுமென்றால் பிரச்சனை இல்லை
தெரியாதென்றால் அவர் முறையான வைத்தியம் தெரிந்த ஒரு வைத்தியரிடம் தான் உங்களை அனுப்ப வேண்டுமே தவிர அவரே தெரியாத வைத்தியத்தை பயன்படுத்துவது எப்படி முறையாகும்
அந்த மருந்தின் பின் விளைவுகளை பற்றி அறியாதவர் அதை பயன்படுத்தலாமா
//அவருக்கு தெரியும் கண்டங்கத்திரி+ தூதுளை கசாயம் அறுபது நாட்கள் சாப்பிட்டால் இந்த இருமல் திரும்ப வரவே வராது என்று.//
திரும்ப வரவே வராதா
அப்படி என்றால் பல்ஸ் போலியோ போல் ஒரு முறை அனைவருக்கும் இதை தந்து விடுவோம்
பிறகு உலகில் இருந்து இருமலும் சளியும் அறவே அழிந்து விடும் அல்லவா
(பெரியம்மையும் நரம்பு சிலந்தியும் அழிந்தது போல்)
ஏன் சார் இப்படி அருமையான விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் வைத்திருக்கிறீர்கள்
//ஆனால் உடனடியாக எனது வலியை, எரிச்சலை குறைக்க க்ளைகொடின் அல்லது பெநேட்ரில் மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும் என்றும் அவருக்கு தெரிகிறது.//
ஏன்
சித்த வைத்தியத்தில் அதற்கான மருந்து இல்லையா
அப்படி என்றால் உங்களை அவர் அலோபதி வைத்தியரிடம் அனுப்புவது தான் முறையே தவிர அவரே மருந்து அளிப்பது எப்படி முறையாகும்
இதற்கு ஏன் அவர் சித்த மருத்துவம் படிக்க வேண்டும். நேரடியாக அலோபதியே படித்தால் போதுமே என்பது தான் என் கேள்வி. அதற்கு உங்களிடம் விடை உள்ளதா
// இந்த சூழ்நிலையில் அவர் ஆங்கில மருந்தை ஒரு தற்காலிக தீர்வாக பரிந்துரை செய்யலாம்.//
இதற்கு ஏன் அவர் சித்த மருத்துவம் படிக்க வேண்டும். நேரடியாக அலோபதியே படித்தால் போதுமே என்பது தான் என் கேள்வி. அதற்கு உங்களிடம் விடை உள்ளதா
அது சரி
அந்த மருந்தின் பின் விளைவுகள் பற்றி அவருக்கு எப்படி தெரியும்
//எனவே சித்த மருத்துவர்களும் தற்காலிக தீர்வாக ஆங்கில மருந்துகளையும், நிரந்தர தேர்விற்கு சித்த மருந்துகளையும் பரிந்துரை செய இந்த தீர்ப்பு உதவி செய்கிறது.//
ஒரு முறை நிரந்தர தீர்வு பரிந்துரை செய்து விட்டால் அடுத்த முறை தற்காலிக தீர்விற்கு அவசியம் ஏது
எனவே சித்த வைத்தியத்திலும் தீர்வு தற்காலிகம் தான். அலோபதியுலும் தற்காலிகம் தான்
//ஆங்கில மருத்துவர்களும் சித்த , யுனானி மருந்துகள் பரிந்துரை செய்ய வும் உயர் நீதிமன்றம் அனுமதிக்கலாம். இப்போதே அந்த அனுமதி உள்ளதா என்று எனக்கு தெரிய வில்லை.//
ஏன் அப்படி என்றால் அவர் ஏன் அலோபதி படிக்க வேண்டும்
நேரடியாக யுனானி படித்தால் போதுமே
//இரு வித மருத்துவர்களும் இனைந்து செயல்பட்டு மருத்துவத்தில் அடுத்த முன்னேற்றம் என்ன என்று யோசிக்க வேண்டும்//
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அவரவர் அவரவர் முறையை ஒழுங்காக பயன்படுத்தினால் போதும்
தான் ஒழுங்காக கற்காத, முறையான பயிற்சி இல்லாத முறையை எடுத்து ஏன் அடுத்தவரின் உயிருடன் விளையாட வேண்டும் என்பதே இங்கு முக்கிய கேள்வி
//அதை விடுத்து நான் இந்தியா நீ பாகிஸ்தான் என்பது போல
மல்லு கட்டுதல் அழகு அல்ல//
ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்க அறிவோ திறமையோ இல்லை என்றால் அதற்குரிய மருத்துவரிடம் ஒரு நோயாளியை பரிந்துரைப்பதே சிறந்தது. அதை விடுத்து அரைகுறை வைத்தியம் பார்த்து நோயாளியுன் உயிருடன் விளையாடுவது கொலைக்கு சமம்
எந்த ஒரு மருத்துவரையுமே அனைத்து நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் படி யாரும் எதிர்பார்ப்பது கிடையாது
அவரவர் எந்த முறையில் / துறையில் பயிற்சி பெற்றுள்ளனரோ அதை பயன்படுத்துவதை விடுத்து பயிற்சி இல்லாத முறையை பயன் படுத்துவது எப்படி நியாயமாகும்
கடுமையான சளிக்கு வைத்தியம் பார்க்க தெரியாத வைத்தியர், வைத்தியம் பார்க்க தெரிந்தவரிடம் பரிந்துரைப்பது சரியா, அல்லது தானை ஒரு நோயாளியை சோதனைக்கூட எலியாக மாற்றி முயற்சிப்பது சரியா
ஒரு வேளை அந்த கடுமையான இருமல் LVFவினால் என்று வைத்துக்கொள்வோம். அதற்கும் பெநேட்ரில் அளித்தால் என்னவாகும்
LVFவினால் வரும் இருமலுக்கும் சளி இருமலுக்கு வித்தியாசம் கண்டுபிடிக்காமல் ஒரே வைத்தியம் பார்ப்பது முறையா
அலோபதிக்கு இருக்கும் முறையான படிப்பும், பயிற்சியும் மற்றவைகளுக்கு இல்லை..
தருமி ஐயா சொல்வதுபோல் நம்மளை வச்சுதான் கத்துக்குவாங்க...
இனிமே அங்கங்க போர்டு மாட்டி வைத்துகொண்டு வியாபாரம் நடக்கும்...
இந்த தீர்ப்பே முட்டாள்தனமானது.
முதலில் அந்த தீர்ப்பளிக்கும் நீதிமான்களுக்கு மருத்துவ அறிவு இருக்கிறதா என பார்க்க வேண்டும். காரணம் இது வாய்க்கால் வரப்பு தகராறு பற்றிய தீர்ப்பல்ல. மனித சமூதாயத்தை பாதிக்கும் தீர்ப்பு.
எந்த மருத்துவ முறை சிறந்தது என்பது தர்க்கம் அல்ல. மருத்துவ முறை எதுவானாலும் நோயாளி மற்றும் நோயின் கால தேச வர்த்தமானத்தை பொருத்து ஒரு மருத்துவ முறை ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
//எங்கள் பேராசிரியர் ஒருவர் கூறுவார், அலோபதி, ஹோமியோபதி எல்லாவற்றையும் விட நோயாளிக்கு முதல் தேவை சிம்பதி //
உண்மையில் இந்த தீர்ப்பை பார்த்தால் சிம்பதி கிடைக்குமோ இல்லையோ திருப்பதியே கிடைக்கும்.
கோவிந்தா...கோவிந்தா..!
தலைவா உங்க அலோபதி சிறந்ததுதான் ஆனா இன்னும் நம்ப வல்லரசு இந்திய கிராமங்களுக்கு தேவையான மருத்துவ வசதி இன்னும் கிடைக்க வில்லை.
அதுபோல் தலைநகரங்களில் பல தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொள்ளைகள் உங்களுக்கு தெரியாதது இல்லை.
நான் தீர்ப்பை ஆதரிக்கவில்லை ஆனா உங்க மன நிலையில் அவர்களை குறைவாக மதிப்பிடுவதை ஏற்று கொள்ளமுடியவில்லை.
Bruno,
vazhakkam pola oru news ah etho oru pulliyil pidithu, ungal karuthukku vasathiyaga pesukireerkal!
"b.s.m.s"=bachelor of siddha medicine and surgery,
"b.a.m.s" =bachelor of ayurvedic medicine and surgery,
enave alternative medicine padippavarkalum surgery padikirarkal, degree vazhanguvathu dr.mgr medical university,
http://www.tnmmu.ac.in/degoffered.htm
judgement ivarkalukkanathu.
neengal oru dr bsms,bams padippu pathi theriyatha?
Kuruttam pokkil adithu viduvathu yen?
Surgery enpathu allopathikku mattum sontham alla, read about "sushruthar" antha kalathile plastic surgery seythavar.
எனக்கு இது சரினு படவில்லை.பொது ஜனத்தோட health ஐ மட்டுமல்ல மாற்று மருவத்தில் பயிற்சி பெற்ற திறமையான ஒரு டாக்டரோட profession ஐ யும் compromise செய்யும் unless they are well trained in the area of phamacokinetics and theraputics and found qualified. clientsக்கு மாற்று மருத்துவ முறைகளை சூஸ் பண்ண ரைட் கட்டாயம் உண்டு.ஆனா நான் அதை கலக்க அனுமதி தருவதில்லை, More so in the area of oncology and paediatrics and peri operative medicine இப்போ medical practice is mainly EVIDENCE BASED. Research , intense retraining in the area of allopathic medicine , particularly in Pathology , pharmocology and public health would be an added advantage to these doctors.
சேவை மனப்பான்மை உள்ள அலோபதி மருத்துவர்கள் ஒரு சதவீதம் கூட தேற மாட்டார்கள்.அவர்கள் அடிக்கும் கொள்ளை
பாவப்பட்டவர்களை இந்த பக்கம் தள்ளுகிறது.உங்களுக்கு மனசாட்சி இருப்பின்,அந்த ஒரு விழுக்காட்டில் நீங்கள் ஒருவராக இருந்தால் இதைப்பற்றி எழுதலாமே?
நீதிமன்றத் தீர்ப்பை விடுங்கள்!
மருத்துவம் என்பது, பல வடிவங்களில் ஆதி நாட்களில்இருந்தே செய்யப்பட்டு வந்துகொண்டு தான் இருக்கிறது. அனுபவ வைத்தியம், பாட்டி வைத்தியம் என்றெல்லாம் சொல்வதில்லையா?
உங்களுடைய வாதத்தில், சம்பந்தமில்லாத விஷயங்களை எடுத்துக் கொண்டு, சம்பந்தமே இல்லாத முடிவுகளுக்கு எப்படி வருகிறீர்கள் என்ற லாஜிக் எனக்குப் புரியவில்லை.
மாற்று மருத்துவம் என்பது ஏதோ ஆலோபதியை ஒழித்துக் கட்டிவிட்டு அதனிடத்தில் தான் உட்கார்ந்து கொள்ளத் தவிப்பது போல ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்களே ஏன்?
உங்களுக்காக ஸ்வைன் ப்ளூ பற்றி, மூன்று வீடியோக்களை ஏன் பதிவில், உங்கள் பின்னூட்டக் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவும் எனது பதிவில் தந்திருக்கிறேன்.
http://consenttobenothing.blogspot.com/2010/08/physician-heal-thyself.html
உங்களை மறுத்துச் சொல்பவர்கள், உங்களைப் போல அலோபதி மருத்துவர்கள் தான்! ஆராய்ச்சியாளர்களுமே கூட!
விஞ்ஞானப் பார்வை எதில் இருக்கிறது என்பதைத் தான் கொஞ்சம் பார்ப்போமே!
//அலோபதிக்கு இருக்கும் முறையான படிப்பும், பயிற்சியும் மற்றவைகளுக்கு இல்லை..//
அவர்கள் அவர்களின் துறையில் முறையாக பயிற்சி பெற்றவர்களே.
//தலைவா உங்க அலோபதி சிறந்ததுதான் ஆனா இன்னும் நம்ப வல்லரசு இந்திய கிராமங்களுக்கு தேவையான மருத்துவ வசதி இன்னும் கிடைக்க வில்லை.//
ஆமாம் பாஸ். அமெரிக்காவில் கூட போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவிலும் இருக்கிறார்கள். இதற்கும் இந்த தீர்ப்பிற்கும் சம்மந்தம் இல்லையே
//அதுபோல் தலைநகரங்களில் பல தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொள்ளைகள் உங்களுக்கு தெரியாதது இல்லை.//
இதில் அலோபதி மருத்துவமனைகளும் அடங்கும், சித்த ஆயுர்வேத மருத்துவமனைகளும் அடங்கும் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து உள்ளதா
//நான் தீர்ப்பை ஆதரிக்கவில்லை ஆனா உங்க மன நிலையில் அவர்களை குறைவாக மதிப்பிடுவதை ஏற்று கொள்ளமுடியவில்லை.//
மன்னிக்கவும்
நான் குறைத்து மதிப்பிடவில்லை
அவர்களாகவே அவர்களை தரம் தாழ்த்திக்கொள்கிறார்கள்
என் கடைசி கேள்வியை பாருங்களேன்
//Surgery enpathu allopathikku mattum sontham alla, read about "sushruthar" antha kalathile plastic surgery seythavar. //
நீதிக்கும் நேர்மைக்கும், உண்மைக்கும் உரிய வவ்வால் அவர்களே
அவர்களின் படிப்பில் அறுவை சிகிச்சை உள்ளது. அதை அவர்கள் கடைபிடிப்பதில் எந்த பிரச்சனையில் இல்லை
உங்களை போன்ற அதி மேதாவிகளுக்காகவே நான் அந்த செய்தியை அப்படியே தந்துள்ளேன்
எதையும் முறையாக வாசிக்காமல் உளறிக்கொட்டுவது உங்களுக்கு புதிதல்ல. எனவே முறையாக வாசித்து பாருங்கள்
also eligible to practice modern scientific medicine, including surgery,
அவர்கள் ஆயுர்வேத அறுவை சிகிச்சையை கடைபிடிக்கலாம். அது அவர்களின் பாடத்தில் உள்ளது.
ஆனால் அவர்கள் கற்காத நவீன அறுவை சிகிச்சைகளை செய்யும் உரிமையை அவர்கள் கோரியுள்ளனர்
இது தான் பிரச்சனை
Jayashree மேடம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//சேவை மனப்பான்மை உள்ள அலோபதி மருத்துவர்கள் ஒரு சதவீதம் கூட தேற மாட்டார்கள்.//
இது உங்கள் கருத்து
அதை நான் மதிக்கிறேன், ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாது
//அவர்கள் அடிக்கும் கொள்ளை பாவப்பட்டவர்களை இந்த பக்கம் தள்ளுகிறது.//
மாற்று மருத்துவர்கள் அனைவரும் இலவசமாகவா வைத்தியம் பார்க்கிறார்கள்.
ஒரே நோய்க்கு ஏ கிரேடு, பி கிரேடு என்றெல்லாம் கூறுபவர்களை நீங்கள் பார்த்தே கிடையாதா
அதுசரி
சித்த மருத்துவர்கள் அலோபதி மருந்து பரிந்துரைத்தால் இந்த பிரச்சனை தீருமா, அதிகரிக்குமா
இதை கூட சிந்தித்து பார்க்க விடாமல் உங்களை தடுத்தது எது ???? உங்களுக்கு அலோபதி மருத்துவர்களின் மேல் உள்ள ஆழ்மன பொறாமையா
//உங்களுக்கு மனசாட்சி இருப்பின்,அந்த ஒரு விழுக்காட்டில் நீங்கள் ஒருவராக இருந்தால் இதைப்பற்றி எழுதலாமே? //
என் இடுகைகளை வாசித்து விட்டு இது போன்ற கேள்விகளை கேட்கவும்
//மருத்துவம் என்பது, பல வடிவங்களில் ஆதி நாட்களில்இருந்தே செய்யப்பட்டு வந்துகொண்டு தான் இருக்கிறது. அனுபவ வைத்தியம், பாட்டி வைத்தியம் என்றெல்லாம் சொல்வதில்லையா?//
ஆமாம்
//உங்களுடைய வாதத்தில், சம்பந்தமில்லாத விஷயங்களை எடுத்துக் கொண்டு, சம்பந்தமே இல்லாத முடிவுகளுக்கு எப்படி வருகிறீர்கள் என்ற லாஜிக் எனக்குப் புரியவில்லை.//
எது சம்மந்தமில்லை என்று விளக்கவும்
//
மாற்று மருத்துவம் என்பது ஏதோ ஆலோபதியை ஒழித்துக் கட்டிவிட்டு அதனிடத்தில் தான் உட்கார்ந்து கொள்ளத் தவிப்பது போல ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்களே ஏன்?//
மன்னிக்கவும்
இங்கு நடக்க இருப்பது அதுவல்ல
சித்த மருத்துவர்கள் சித்த மருந்தை பரிந்துரைக்காமல் அலோபதி மருந்தை பரிந்துரைத்தால் ஒழியப்போவது சித்த மருத்துவமே தவிர அலோபதி அல்ல
இந்த எளிய உண்மை கூட உங்களுக்கு புரியவில்லை
இந்த இடுகையின் கடைசி வரியை மீண்டும் பார்க்கவும்
இந்த தீர்ப்பின் மூலம் அலோபதி சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளை விழுங்கி விடும் என்ற எளிய உண்மையை நீங்கள் மறுக்கிறீர்களா
என் பெயரை வெளியிட முடியாமல் போனதுக்கு மன்னிக்கனும்.. சூழ்நிலை..
இது மிகவும் முட்டாள்தனமான தீர்ப்பு.. ஜட்ஜ்க்கு என்ன தெரியும் மருத்துவத்தைப் பத்தி? அலோபதி மருத்துவம் படிக்காமல், அந்த மருந்துகளால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி, drug interactions பற்றி எதுவுமே தெரியாமல், இவங்க மருந்து கொடுத்தா நிலைமை என்னாவது தோழரே?
ஜட்ஜ் இப்ப என்ன சொல்ல வரார்? அவங்களும் சிசேரியன் பண்ணலாம்ன்னா? நல்ல வேளை.. அங்கிருந்து தப்பி வந்தோம் என்று தோன்றுகிறது.. :)
வெரி ஸ்டுப்பிட்.. though i am not actually against any of these alternate medicines..
இங்கு கருத்து சொல்லியுள்ள கந்தசாமிகளை பாருங்க.. நிலைமையே புரியாமல், சொல்லிப் போயிருக்காங்க... எனக்கும் சளி பிடித்தால் மிளகு ரசம் தான் குடிப்பேன்.. அதுக்காக, சித்த மருத்துவரிடம் போய் அலோபதி மருந்து வாங்கி வர மாட்டேன்.. they cannot/should not prescribe or do something that they haven't learnt by supervised training from experienced people.. they can practice what they have learnt - i am ready to get a herbal medicine from them for my knee pain.. not an intra articular steroid injection!!
அந்தந்த துறைகளை மேம்படுத்தாமல், நீயும் இந்தக் குட்டையில போய் மீன் பிடி என்று சொல்லியனுப்பியதைப் போலுள்ளது.. ஜட்ஜை ஏதும் சரி கட்டியிருப்பாங்களோ? we should fight against this..
பதிவின் கடைசி வரிகளை மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வந்த உங்களுடைய பின்னூட்டங்களையும் சேர்த்துப் படித்துப் பாருங்கள்! எது எதற்குச் சம்பந்தமுள்ளது? எதை வைத்து என்ன சொல்ல வருகிறீர்கள்?
நான் உங்களிடம் விவாதிக்க எடுத்துக் கொண்டது இந்த நீதிமன்றத் தீர்ப்பை அல்ல! என்னுடைய பதிவில் மாற்று மருத்துவம், மாற்றுச் சிந்தனைகளைப் பற்றி எழுதியதில், நீங்களும், பதிவில் கார்டியன் பத்திரிகையில் சுட்டியிருந்த ஒரு தரப்பைப் போல மாற்று மருத்துவத்தை நிராகரிக்கிற மாதிரி அல்லது நீங்கள் ப்ராக்டிஸ் செய்யும் அலோபதி வைத்திய முறைக்கு வக்காலத்து வாங்குகிற மாதிரி வக்காலத்து வாங்குகிற மாதிரி எழுதியிருந்த பின்னூட்டங்களைத் தொட்டுத் தான்!
அதைத் தொடர்ந்து இங்கே உங்கள் பதிவிலும் கூட, இந்த நீதிமன்றத் தீர்ப்பை வைத்து எதை நிறுவ முயல்கிறீர்கள்?
கடைசி வரியில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி-யாரோ வந்து ஒப்புக் கொண்டதசல் அல்லது மறுப்பதால் மட்டுமே இந்தத் தீர்ப்பு சரியானது என்று சொல்லி விட முடியுமா என்ன!
/ஊரை ஏமாற்றியவர்களும், அவர்களுக்கு ஆதரவாக எழுதிவந்த பதிவர்கள் சிலரும்.../
ஒரு மருத்துவராக உங்களுடைய தொழில் ஞானத்தை வைத்து
/இப்பொழுது முகத்தை எங்கு வைத்து கொள்ள போகிறார்கள் என்று அறிய ஆவல்/
என்று தான் சொல்ல முடிகிறது என்றால், நீங்கள் இதுவரை கேள்விப்பட்டே இருக்காத ஒரு விதமான தர்க்கப் பிறழ்வைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்!
It makes no sense!
//அலோபதியே மேலானது, எங்கள் மருத்துவமுறை பலனற்றது என்று இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை//
இப்படி எங்கே சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
ஓமியோபதி மருத்துவம் வெறும் ஹம்பக், சாராயம் தான் அதில் இருக்குன்னு யூ.க்கேல அதை பேன் செய்துட்டாங்க என்று கேள்விப்பட்டேன் உண்மையா ?
http://www.1023.org.uk/
ஆனால் முறையான மருத்துவ வசதியற்ற கிராமங்களில் சிறிய அளவில் சுரம் காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கு ஆங்கில மருந்து கொடுத்தாலே அவர்களை போலி டாக்டர் என்று கைது செய்வதை இந்த தீர்ப்பு தடுக்கும் என்பது என்னுடைய பார்வை.
எனக்கு தெரிந்து ஒரு கிராமத்தில் பி.டி.எஸ் மருத்துவர், வேறு ஆங்கில மருத்துவர் இல்லாத நிலையில், அவரே ஊசி போடுகிறார், மாத்திரை தருகிறார் ( சர்ஜரி எல்லாம் செய்வதில்லை) , அது பற்றி உங்கள் கருத்து என்ன ?
டாக்டர் ப்ருனோ!
செந்தழல் ரவி கொடுத்திருக்கும் சுட்டியைக் கொஞ்சம் பாருங்கள்! என்னுடைய பதிவில் கார்டியன் இதழில் வந்திருந்த ஒரு கட்டுரையில் வந்திருந்த மாதிரியே, மாற்று மருத்துவத்தைக் குறிப்பாக ஹோமியோபதி மருத்துவத்தைக் குறிவைத்து ஒரு இயக்கம் இங்கிலாந்தில் இந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவது புரியும்!
இந்த இயக்கத்தில் உள்ள பூனைக் குட்டிகள் அடிக்கடி வெளியே வந்து விடுகின்றன என்பது தான் கூடுதல் சுவாரசியம்.
இவர்கள் எல்லாம், அலோபதி வைத்திய முறைக்கு, குறிப்பாக தடுப்பு ஊசிகளுக்கு ஆதரவாகக் கொடி உயர்த்திக் கொண்டு வக்காலத்து வாங்குகிறவர்கள்!
தடுப்பு ஊசிகளால் நோயாளிக்கு பயன், குணம் இருக்கிறதோ இல்லையோ, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொள்ளை லாபம் தான் என்பதை உறுதி செய்கிற வகையில்தான் இந்த இயக்கங்கள் இருக்கின்றன.
பின்னூட்டங்களில் அனைவரும் அழகாக விளக்கி உள்ளனர். நீங்கள் எனது, பிறரது பின்னூட்டத்திலும் வார்த்தைகளை அதன் எழுத்து அற்தத்தில் மட்டுமே எடுத்து கொள்கிறீர்கள், வார்த்தைகளின் பின்னால் புதைந்து இருக்கும் நோக்கத்தை விட்டு விடுகிறீர்கள் (taking the letters not the spirit).
சுருக்கமகா சொல்கிறேன், ஆங்கிலத்தில் இரண்டு விளையாட்டுகள், நிலைப்பாடுகள் உள்ளது- ஜீரோ சம் கேம் (zero sum game) (ஒருவர் ஜெயிப்பார், ஒருவர் தோற்பார், இருவரது பைன்ட், மதிப்பெண் கூடுதல் ஜீரோ (1+(-1)=0)
இன்னொரு விளையாட் வின் வின் WIN WIN, இருவரும் வெற்றி பெறுவது
so Let Anglo medicine people + Siddha people work together so that both will be winners.(mutual benefit- in fact the 3rd and main winner is the patient)
//அதைத் தொடர்ந்து இங்கே உங்கள் பதிவிலும் கூட, இந்த நீதிமன்றத் தீர்ப்பை வைத்து எதை நிறுவ முயல்கிறீர்கள்?//
இன்னுமா புரியவில்லை
ஆனால் இந்த தீர்ப்பினால் 20 முதல் 30 சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் முழுவதும் அழிந்து விடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன (ஹோமியோபதி பிற நாடுகளில் இருப்பதால் தப்பித்துக்கொள்ளும்) என்பதையும்
இந்த தீர்ப்பினால் மிகுந்த பலன் அடையப்போவது அலோபதி மருந்து நிறுவனங்கள் என்பதையும்
நிறுவ முயல்கிறேன்
புரியவில்லையா
//இங்கு கருத்து சொல்லியுள்ள கந்தசாமிகளை பாருங்க.. நிலைமையே புரியாமல், சொல்லிப் போயிருக்காங்க... எனக்கும் சளி பிடித்தால் மிளகு ரசம் தான் குடிப்பேன்.. அதுக்காக, சித்த மருத்துவரிடம் போய் அலோபதி மருந்து வாங்கி வர மாட்டேன்.. they cannot/should not prescribe or do something that they haven't learnt by supervised training from experienced people.. they can practice what they have learnt - i am ready to get a herbal medicine from them for my knee pain.. not an intra articular steroid injection!!//
அப்படி போடுங்க சார் அருவாளா !!
இதைத்தான் நான் சொல்கிறேன். பலரும் தூங்குவது போல் நடிக்கிறார்கள் :) :)
//இப்படி எங்கே சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? //
முழு வரியையும் தருகிறேன்
அலோபதியே மேலானது, எங்கள் மருத்துவமுறை பலனற்றது என்று இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அனைத்து சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்களா
//ஆனால் முறையான மருத்துவ வசதியற்ற கிராமங்களில் சிறிய அளவில் சுரம் காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கு ஆங்கில மருந்து கொடுத்தாலே அவர்களை போலி டாக்டர் என்று கைது செய்வதை இந்த தீர்ப்பு தடுக்கும் என்பது என்னுடைய பார்வை.//
ரவி சார்
காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க fever treatment depots, drug deliver centres என்று அரசாங்கமே கிராமங்களில் நிறுவியுள்ளது
அரசு தரும் மாத்திரைகளை நோயாளிக்களுக்கு அளிப்பது அங்குள்ளவர்களின் வேலை
இதற்கு சம்பளம் கிடையாது. தன்னார்வல பணி இது
இன்று பல கிராமங்களிலும், முக்கியமாக மலேரியா அதிகம் இருக்கும் இடங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது
இதற்கு தேவையான அடிப்படை படிப்பு : 10ஆம் வகுப்பு
இதில் drug delivery centre என்றால் (குளோரோகுவின் மற்றும் பாராசிட்டமால்) மாத்திரை மட்டும் கொடுத்தால் போதும்
fever treatment depot என்றால் அந்த தன்னார்வலர் பயிற்சி எடுத்து இரத்த தடவல் எடுத்து விட்டு மாத்திரை தருவார்
--
அதே போல்
1. வயிற்றுப்போக்கு
2. சளி, இருமல்
3. பால்வினை நோய்கள்
ஆகியவற்றிற்கு syndromic management என்று அறிமுகப்படுத்தியுள்ளார்கள்
இந்த நோய்களுக்கான ஒரு முறை மருந்திற்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே மருந்து உட்கொள்ளலாம். அதன் பிறகு மருத்துவரை பார்த்தால் போதும்
--
பல மாநிலங்களில் ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி (சித்த மருத்துவம் பிற மாநிலங்களில் அதிகம் கிடையாது) மருத்துவர்களுக்கு மூன்று முதல் ஆறு மாதம் வரை பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் குறிப்பிட்ட சில அலோபதி மருந்துக்களை பரிந்துரைக்க அனுமதி உள்ளது
--
ஆனால் பயிற்சி எதுவும் பெறாமல் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி என்பது ....... ????
--
இங்கு பிரச்சனை அவசர சிகிச்சையோ அடிப்படை சிகிச்சையோ அல்ல
சித்த மருத்துவர்கள் சித்த மருந்தை தராமல் அலோபதி மருந்தை தருவதினால் சித்த மருத்துவம் வளருமா தேயுமா
ஆயுர்வேத மருத்துவர்கள் ஆயுர்வேத மருந்தை தராமல் அலோபதி மருந்தை தருவதினால் ஆயுர்வேத மருத்துவம் வளருமா தேயுமா
இதனால் தான் நான் இந்த தீர்ப்பு சாவு மணி என்று குறிப்பிட்டிருந்தேன்
//ஆனால் முறையான மருத்துவ வசதியற்ற கிராமங்களில் சிறிய அளவில் சுரம் காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கு ஆங்கில மருந்து கொடுத்தாலே அவர்களை போலி டாக்டர் என்று கைது செய்வதை இந்த தீர்ப்பு தடுக்கும் என்பது என்னுடைய பார்வை.//
ரவி சார்
காய்ச்சலுக்கு ஒரு முறை மட்டும் பாராசிட்டமாலும் குளோருகுவினும் தர MBBS தேவையில்லை
பத்தாவது வகுப்பு போதும் !!
இன்று மலேரியா பாதிப்பு அதிகம் உள்ள பல கிராமங்களிலிலும் Drug Distribution Centres (DDCs) எற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் வந்தால் உடனடியாக பாராசிட்டமாலும், குளோரோகுவினும் அளிக்கப்படுகிறது.
அதில் காய்ச்சல் சரியில்லை என்றால் மருத்துவரை பார்க்க வேண்டும்
Fever Treatment Depots (FTDs) என்ற இடங்களில் இரத்த தடவல் கூட எடுக்கப்படுகிறது
//ஆனால் முறையான மருத்துவ வசதியற்ற கிராமங்களில் சிறிய அளவில் சுரம் காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கு ஆங்கில மருந்து கொடுத்தாலே அவர்களை போலி டாக்டர் என்று கைது செய்வதை இந்த தீர்ப்பு தடுக்கும் என்பது என்னுடைய பார்வை.//
அதே போல் சில நோய்களுக்கு syndromic management என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
காய்ச்சல்
வயிற்றுப்போக்கு
சளி/இருமல்/நிமோனியா
இங்கு எல்லாம் சிகிச்சையை ஆரம்பிக்க / முதலுதவி செய்ய ஒருவர் MBBS ஆக இருக்க வேண்டும் என்று இல்லை
சொல்லப்போனால் பால்வினை நோய்களுக்கு கூட தற்சமயம் syndromic management தான்
//ஆனால் முறையான மருத்துவ வசதியற்ற கிராமங்களில் சிறிய அளவில் சுரம் காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கு ஆங்கில மருந்து கொடுத்தாலே அவர்களை போலி டாக்டர் என்று கைது செய்வதை இந்த தீர்ப்பு தடுக்கும் என்பது என்னுடைய பார்வை.//
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி / இருமல் / நிமோனியா, பால்வினை நோய்கள் ஆகியவற்றிக்கு syndromic management படி சிகிச்சை அளித்தால் அந்த நபரை கைது செய்ய முடியாது
syndromic management என்றால் ஒரு குறிப்பிட்ட நிலை வரை சிகிச்சை அளிக்கலாம். அதை விட நோய் தீவிரமானால் உடனடியாக அலோபதி மருத்துவரிடம் பரிந்துரைக்க வேண்டும். இறுதி வரை சிகிச்சை அளிக்க உரிமை இல்லை !!
//எனக்கு தெரிந்து ஒரு கிராமத்தில் பி.டி.எஸ் மருத்துவர், வேறு ஆங்கில மருத்துவர் இல்லாத நிலையில், அவரே ஊசி போடுகிறார், மாத்திரை தருகிறார் ( சர்ஜரி எல்லாம் செய்வதில்லை) , அது பற்றி உங்கள் கருத்து என்ன ? //
பி.டி.எஸ் சின் பாடத்திட்டத்தில் அலோபதி மருத்துவத்தின் உடற்கூறியல், உடலியக்கவியல், உயிர்வேதியல், நோய்குறியியல், நுண்கிருமியியல், மருந்தியல் ஆகிய பாடங்களை கற்கிறார்கள்
எனவே அவர்கள் அலோபதி மருந்தை பயன்படுத்துவதில் தவறில்லை
அவர்களுக்கு Surgery என்று பாடம் உள்ளது. அதற்கு தேர்வும் உள்ளது
எனவே முகத்தில் (ஒரு அளவு வரை கழுத்திலும் கூட) அறுவை சிகிச்சை செய்ய அவர்களுக்கு அனுமதி உள்ளது
தாடை பல் சீரமைப்பு உட்பட்ட பல அறுவை சிகிச்சைகளை அவர்கள் சட்டப்படியே செய்யலாம்
//மாற்று மருத்துவத்தைக் குறிப்பாக ஹோமியோபதி மருத்துவத்தைக் குறிவைத்து ஒரு இயக்கம் இங்கிலாந்தில் இந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவது புரியும்!//
எஸ். கிருஷ்ணமூர்த்தி சார்
ஹோமியோபதி மருந்தில் ஸ்டிராய்டு கலக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்தென்ன
மற்றவர்களை விட ஹோமியோபதி மருந்து சாப்பிடுபவர்களுக்கு கண்புரை நோய அதிகம் வருவதும், சிக்கலாக வருவதும், இளம் வயதில் வருவதும் குறித்து உங்கள் கருத்தென்ன
//தடுப்பு ஊசிகளால் நோயாளிக்கு பயன், குணம் இருக்கிறதோ இல்லையோ,//
மன்னிக்க வேண்டும்
தடுப்பூசியினால் நோயாளிக்கு பயன் இருக்கிறது என்பதும், குணம் இருக்கிறது என்பதும் பல முறை நிருபிக்கப்பட்ட உண்மை
இதில் எந்த சந்தேகமும் கிடையாது
இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா
// மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொள்ளை லாபம் தான் என்பதை உறுதி செய்கிற வகையில்தான் இந்த இயக்கங்கள் இருக்கின்றன. //
மன்னிக்க வேண்டும். இது ஆதாரமில்லாத கூற்று.
--
அது சரி
சித்த மருத்துவர்கள் அலோபதி மருந்து பயன்படுத்தினால் மருந்து நிறுவனங்களுக்கு லாபமா, நஷ்டமா
சித்த மருத்துவர்கள் அலோபதி மருந்தை பயன்படுத்துவதை ஆதரிப்பவர்கள் (நீங்கள் அந்த பட்டியலில் உண்டா தெரியவில்லை ) அனைவரும் மருந்து நிறுவன அல்லக்கைகளா
:) :)
//so Let Anglo medicine people + Siddha people work together so that both will be winners.(mutual benefit- in fact the 3rd and main winner is the patient) //
இதைத்தானே நானும் சொல்கிறேன்
ஆனால் அலோபதி மருத்துவரும் அலோபதி மருந்து தருவார்
சித்த மருத்துவரும் அலோபதி மருந்து தான் தருவார்
என்பது
எப்படி வின் வின் ஆகும் என்று நீங்கள் தான் விளக்க வேண்டும்
விளக்குங்களேன் பார்க்கலாம்
என் சிற்றறிவிற்கு எட்டியவரை இது அலோபதி 2 : சித்தா 0 என்ற அளவிலேயே உள்ளது !
//பின்னூட்டங்களில் அனைவரும் அழகாக விளக்கி உள்ளனர்.//
எந்த பின்னூட்டத்தில் யார் விளக்கியுள்ளார்கள்
நான் ஐந்து கேள்விகளை கேட்டுள்ளேன். அதற்கு நீங்கள் உட்பட யாரும் பதிலளிக்கவில்லை
ஆனால் அழகாக விளக்கியுள்ளது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கூறியுள்ளீர்கள்
நான் கேட்ட கேள்விகளுக்கு விடையளியுங்கள்
// நீங்கள் எனது, பிறரது பின்னூட்டத்திலும் வார்த்தைகளை அதன் எழுத்து அற்தத்தில் மட்டுமே எடுத்து கொள்கிறீர்கள், வார்த்தைகளின் பின்னால் புதைந்து இருக்கும் நோக்கத்தை விட்டு விடுகிறீர்கள் (taking the letters not the spirit).//
சரி சார்
எனக்கு தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்
நீங்கள் அந்த கேள்விகளின் பின்னால் புதைந்திருக்கும் நோக்கத்தை வைத்து ஐந்து கேள்விகளுக்கு பதிலளியுங்கள்
எப்படி spiritஐ எடுத்து கொள்ள வேண்டும் என்று உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன் :) :)
answers please
டாக்டர் ப்ருனோ!
புரிந்துகொண்டுதான் விவாதம் செய்கிறீர்களா? நீங்கள் கேட்ட கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை எண்டு குறைப்பட்டுக் கொள்கிறீர்களே, நீங்கள் எவருடைய கேள்விக்காவது முழுமையாக பதில் சொல்ல முயற்சியாவது செய்திருக்கிறீர்களா?
"This is without question one of the scariest books I’ve read in recent times. Ethan Watters, a San Francisco-based journalist and author who explores social trends for publications such as Wired and The New York Times Magazine, has written a chilling book on how multinational pharmaceutical companies export ideas about mental illnesses common in the US to make a killing from marketing the drugs for such conditions in countries which had no concept of such things as depression.
Mental illnesses popular in the US, such as post-traumatic stress disorder (PTSD), anorexia and depression, in particular, are now spreading across the world with the speed of contagious diseases, says Watters, who went about investigating why this was happening although different cultures view mental illnesses through a complex prism of religious, scientific and social attitudes. In short, the West, primarily the US, has been homogenising the way the world goes mad."
Even if you’ve read The Truth About the Drug Companies, The $800-Million Pill or Selling Sickness, Watters’ book comes as an eye-opener. Among the more disturbing disclosures is his detailing of GSK’s dishonesty on Paxil. In-house assessments of the drug that have come to light through lawsuits and government inquiry reports show the drug has not been effective. He quotes a company memo that reported that results of Paxil were “insufficiently robust” and urged GSK to “effectively manage the dissemination of these data in order to minimise any potential commercial impact”.
நீங்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் கிளாக்சோ ஸ்மித் கிளீன் தயாரிப்பைப் பற்றிய ஒரு புத்தக விமரிசனத்தில் இருந்து ஒரு பகுதி மேலே.
முழுவதும் படிக்க இங்கே
http://www.business-standard.com/india/storypage.php?autono=395350
மாற்று மருத்துவத்தைக் குடைவது ஒருபக்கம் இருக்கட்டும்! முதலில் உங்களுடைய வைத்திய முறை ஒழுங்காக இருக்கிறதா?
பக்க விளைவுகளைப் பற்றிப் பரிந்துரை செய்யும் மருத்துவருக்கே முழு விவரங்களை மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்கின்றனவா?
நோயாளியின் நலனை விட, மருந்து நிறுவனம் தரும் ஊக்கத் தொகைக்கு முக்கியத்துவம் கொடுக்காத மருத்துவர்களாக இருக்கிறீர்களா?
கலப்படம், காலாவதியாகிப் போன மருந்து, தரமில்லாத தயாரிப்புக்களை எதிர்த்துக் குரல் எழுப்பும் தைரியம் உள்ளவர்களாக அலோபதி மருத்துவர்கள் இருக்கிறீர்களா?
எல்லாவற்றையும் விட, ஏழை எளிய மக்களும் வாங்கிப் பயன் படுத்துகிற கட்டுபடியாகக் கூடிய விலையில், அலோபதி மருந்துகளும், மருத்துவ சேவைகளும் கிடைக்கிறதா?
நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியுமா?
இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கின்றன!
//நீங்கள் எவருடைய கேள்விக்காவது முழுமையாக பதில் சொல்ல முயற்சியாவது செய்திருக்கிறீர்களா?//
கண்டிப்பாக முயற்சி செய்திருக்கிறேன். கூறியிருக்கிறேன்
அப்படி பதில் கூறாத கேள்விகளை கேளுங்கள். பதில் கூறத்தயார்
அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று பின்னூட்டத்தில் இருந்து வார்த்தைகளை வெடி ஒட்டி அதற்குப் பதில் சொல்வதற்குப் பெயர் முழுமையாகப் பதில்கள் அல்லது பதில் சொல்ல முயற்சித்திருப்பதாக உங்களுக்குத் தோன்றுமானால், உங்களுடைய பதில்களையும், பின்னூட்டத்தில் எழுப்பப்பட்டவைகளையும் எடுத்துக் கொண்டு நீங்களே ஒருதரம் சரிபார்த்துக் கொள்வது நல்லது!
பிசினெஸ் ஸ்டாண்டர்ட் லிங்கில் வியாதியை ஏற்றுமதி செய் கொள்ளை லாபத்தைக் கொள்ளையடி என்ற தலைப்பில் அந்தப் புத்தக விமரியானத்தையாவது, முழுமையாகப் படிக்க முயற்சி செய்தீர்களா?
//மாற்று மருத்துவத்தைக் குடைவது ஒருபக்கம் இருக்கட்டும்! முதலில் உங்களுடைய வைத்திய முறை ஒழுங்காக இருக்கிறதா?//
ஒழுங்காக இருக்கிறது
பக்க விளைவுகள் பற்றிய தெளிவு இருக்கிறது
ஆனால் பக்க விளைவுகள் பற்றிய தெளிவு இல்லாத மருத்துவ முறைகள் பல உள்ளன
//பக்க விளைவுகளைப் பற்றிப் பரிந்துரை செய்யும் மருத்துவருக்கே முழு விவரங்களை மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்கின்றனவா?//
சொல்கின்றன
மருந்துடன் இருக்கும் விளக்கக்குறிப்பில் அவை தெளிவாகவே இருக்கும்
//நோயாளியின் நலனை விட, மருந்து நிறுவனம் தரும் ஊக்கத் தொகைக்கு முக்கியத்துவம் கொடுக்காத மருத்துவர்களாக இருக்கிறீர்களா?//
இருக்கிறார்கள்
தனியாக பிராக்டிஸ் செய்யாமல் அரசு பணியில் மட்டும் இருக்கும் மருத்துவர்களே இதற்கு சாட்சி
//கலப்படம், காலாவதியாகிப் போன மருந்து, தரமில்லாத தயாரிப்புக்களை எதிர்த்துக் குரல் எழுப்பும் தைரியம் உள்ளவர்களாக அலோபதி மருத்துவர்கள் இருக்கிறீர்களா?//
இருக்கிறார்கள். ஆனால் தங்கள் முறையை நம்பாமல் அடுத்த முறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சும் அலோபதி மருத்துவர்கள் கிடையாது :) :)
//எல்லாவற்றையும் விட, ஏழை எளிய மக்களும் வாங்கிப் பயன் படுத்துகிற கட்டுபடியாகக் கூடிய விலையில், அலோபதி மருந்துகளும், மருத்துவ சேவைகளும் கிடைக்கிறதா?//
கிடைக்கின்றன.
//நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியுமா?//
சொல்ல முடியும்
//இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கின்றன! //
கேளுங்கள். விடையளிக்கத்தயார்.
அப்படியே உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் நான் கேட்ட கேள்விகளுக்கும் விடையளிக்க முயலுங்கள். இல்லை என்றால் பரவாயில்லை :) :)
//அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று பின்னூட்டத்தில் இருந்து வார்த்தைகளை வெடி ஒட்டி அதற்குப் பதில் சொல்வதற்குப் பெயர் முழுமையாகப் பதில்கள் அல்லது பதில் சொல்ல முயற்சித்திருப்பதாக உங்களுக்குத் தோன்றுமானால், உங்களுடைய பதில்களையும், பின்னூட்டத்தில் எழுப்பப்பட்டவைகளையும் எடுத்துக் கொண்டு நீங்களே ஒருதரம் சரிபார்த்துக் கொள்வது நல்லது!//
சரி பார்த்து விட்டேன்
என் கேள்விகள் இங்குள்ளன
உங்கள் விடைகளை தெரிந்து கொள்ளலாமா
//பிசினெஸ் ஸ்டாண்டர்ட் லிங்கில் வியாதியை ஏற்றுமதி செய் கொள்ளை லாபத்தைக் கொள்ளையடி என்ற தலைப்பில் அந்தப் புத்தக விமரியானத்தையாவது, முழுமையாகப் படிக்க முயற்சி செய்தீர்களா? //
முயற்சி செய்தேன்
என் கேள்விகளுக்கு விடையளிக்க நீங்கள் முயற்சி செய்தீர்களா
//♠புதுவை சிவா♠ said...
தலைவா உங்க அலோபதி சிறந்ததுதான் ஆனா இன்னும் நம்ப வல்லரசு இந்திய கிராமங்களுக்கு தேவையான மருத்துவ வசதி இன்னும் கிடைக்க வில்லை.//
அதனால் அலோபதி மருத்துவம் பயிலவில்லை என்றாலும் சரி .. யார் வேண்டுமானாலும் அலோபதி மருத்துவம் செய்யலாம் என்பதுதான் தங்களின் கருத்தா சிவா சார்
//நான் தீர்ப்பை ஆதரிக்கவில்லை ஆனா உங்க மன நிலையில் அவர்களை குறைவாக மதிப்பிடுவதை ஏற்று கொள்ளமுடியவில்லை. //
நாங்கள் குறைவாக மதிப்பிடவில்லை.. அவர்களை அவர்களாகவே குறைவாக மதிப்பிட்டு கொள்கிறார்களே என்பதுதான் இந்த கட்டுரையின் சாராம்சம்..
//வவ்வால் said...
"b.s.m.s"=bachelor of siddha medicine and surgery,
"b.a.m.s" =bachelor of ayurvedic medicine and surgery,//
welcome sir.. we know that.. but they have to use their own medicines.. do u agree or not.. but the verdict is based on that they want to do practice allopathic medicine and surgery based on modern medicine..
do u know mbbs (bachelor of medicine and surgery) but mbbs doctor wont do any surgery without the help of a qualified(MS) surgeon.. becoz even mbbs doctor wont have adequate training to do a major surgery..
how it is possible to do a surgery by BSMS, BAMS doctors..
this verdict will legalise quacks to do surgery which will be dangerous to patients..do u want this to be happened?
//இங்கு கருத்து சொல்லியுள்ள கந்தசாமிகளை பாருங்க.. நிலைமையே புரியாமல், சொல்லிப் போயிருக்காங்க... எனக்கும் சளி பிடித்தால் மிளகு ரசம் தான் குடிப்பேன்.. அதுக்காக, சித்த மருத்துவரிடம் போய் அலோபதி மருந்து வாங்கி வர மாட்டேன்//
வழிமொழிகிறேன்
//they cannot/should not prescribe or do something that they haven't learnt by supervised training from experienced people.. they can practice what they have learnt - i am ready to get a herbal medicine from them for my knee pain.. not an intra articular steroid injection!!//
வழிமொழிகிறேன்
டாக்டர் ராம். சரியாக சொன்னீர்கள். இந்த தீர்ப்பினால் தெருவுக்கு ரெண்டு சர்ஜன் கிளம்பவும் வாய்ப்பு உண்டு. உண்மையில் அலோபதி மருத்துவர்கள் சங்கம் இதனை நீதிமன்றத்தில் எதிர்க்கவேண்டும் !!!
நன்றி ப்ருனோ சார், Blogger செந்தழல் ரவி சார்,
இது தொடர்பான எனது பதிவு இங்கே
http://sakalakaladr.blogspot.com/2010/08/blog-post.html
செந்தழல் ரவி, டாக்டர் ராம்!
உங்களுடைய பின்னூட்டங்களுக்குப் பதிலாக, தொடர்புடையதாகவும்....
/அலோபதி மருத்துவர்கள் மீதான காழ்புணர்ச்சியின் காரணமாகவே பெரும்பாலான பின்னூட்டங்கள் இடப்பட்டு உள்ளது/
மிகத் தவறான அணுகுமுறை! எந்த அலோபதி வைத்தியருடனும் பின்னூட்டம் எழுதியவர்களுக்கு வாய்க்கால் வரப்புத் தகராறு இருக்க சந்தர்ப்பமே இல்லை. ஆனாலும், மறுத்துக் கருத்துக்கள் வருகிறதென்றால், அதற்கு மருத்துவர் ப்ருனோ, தன்னுடைய பின்னூட்டங்களில் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் மாதிரி ஒருதலைப் பட்சமாகவே அல்லது திசைமாறி எழுதிய ஒன்று தான் காரணம்.
அலோபதி மருத்துவத்தின் மிகப் பெரிய பலவீனம் எது என்றால், அது மருத்துவனை, மருத்துவ முறையை மையம் கொள்ளாமல், கொள்ளை லாபம் சம்பாதிக்கப் புறப்படும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிடியில் சிக்கி இருப்பது தான்.
இந்தப் போக்குக்கு எதிராக, அலோபதி மருத்துவர்களே, ஆராய்ச்சியாளர்களே போர்க்கொடி தூக்கி வரும் செய்திகளை, ப்ருனோவின் இரண்டு பதிவுகளிலும் சுட்டி கொடுத்துப் பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்.
முதலில் தினத்தந்தி ரகத்தில் தலைப்புக் கொடுத்திருக்கும் இந்தப்பதிவுக்கு எனது கருத்தாக,
ஒன்று, எந்த நீதிமன்றமும், வழக்கில் உள்ள எந்த முறைக்கும் சாவுமணி அடித்து விட முடியாது. தலைப்பே அதீதக் கற்பனை.
அடுத்து, போலி மருத்துவம் என்ற வார்த்தை. அதன் மேல் நடத்திய ரைடு என்பதும், மிகைப் படுத்தப்பட்ட ஒன்று. இதே கேள்விய்சைக் கொஞ்சம் திருப்பிப் போட்டுக் கேட்கலாமா?
சில மாதங்களுக்கு முன்னாள், போலி மருந்து விவகாரத்தில், சில கைதுகள் தமிழகத்தில் நடந்தன. காலாவதியாகிப் போன மருந்துகளை, சென்னையில் உள்ள சில மருத்துவர்களே விநியோகம் செய்த செய்தியும் வந்தது. மத்திய அரசின் சுகாதாரத்துறை மருத்துவ மனைகளில், ஆந்திராவில், கர்நாடகத்தில் சிபிஐ நடத்திய சோதனைகளில், கலப்படம் செய்யப்பட்ட, தரக்குறைவான,காலாவதியாகிப்போன மருந்துகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும் செய்தியாக வந்தது.
இப்போது குதிக்கும் எந்த அலோபதி ஆதரவாளரும், விழிப்போடு குரல் கொடுத்ததாகவோ, போலிகள் ஜாக்கிரதை என்று தங்களுக்குள்ளேயே சுயபரிசோதனை செய்து கொண்டதாகவோ தெரியவில்லை.
இதைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது, எங்களுக்கு சம்பந்தமே இல்லை என்று அலோபதி மருத்துவர்கள் சொல்வதை ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொண்டாலுமே, இதைப் பற்றிய முழுமையான ஞானமோ,தேர்ச்சியோ அலோபதி மருத்துவர்களுக்கே இல்லை என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
மருந்துக் கம்பனிகள் பிரபலமானவை என்றால், ஆராய்ச்சி, தயாரிப்புத் தரம் எல்லாமே நன்றாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே மருத்துவர்கள் அவற்றைப் பரிந்துரை செய்கிறார்கள். போதாக்குறைக்கு, மருந்து நிறுவனங்கள் அளிக்கும் அன்பளிப்புக்கள், அவர்களை அதைத் தாண்டிப் போக விடுவதில்லை.
மூன்றாவதாக, முக்கியமானதும் கூட-மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள்,ஒரு தயாரிப்பை ஒரு காலம் வரை சந்தையில் வைத்திருந்து, புதிய ஆராய்ச்சி, புதிய தயாரிப்பு என்று அறிமுகப்படுத்தும்போதே, பழைய மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அல்லது பீதியைக் கிளப்புகிற விதத்திலேயே சந்தைப் படுத்திக் கொண்டிருப்பதும் கொஞ்சம்விவர அறிந்த எவருக்கும் தெரிந்த விஷயம்.
மாற்று மருத்துவத்தை அழித்து விடும் இந்தத் தீர்ப்பு என்று ப்ருனோ தன்னுடைய பதிவில் பின்னூட்டங்களில் மாறி மாறிப் பேசுகிறார். அது தனி விஷயம்.
அலோபதி மருத்துவம், முதலில் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு பேசட்டும் என்று சொல்ல வைக்கிற அளவுக்கு நீங்கள் மேற்கோள் காட்டிய இரண்டு பதிவுகளில் நடந்த விவாதம் இருக்கிறது.
மேல்விவரங்கள் என்னுடைய தளத்தில் குறைந்தது ஆறு பதிவுகளில் இருக்கின்றன.
http://consenttobenothing.blogspot.com
மருந்தா எமனா என்ற குறியீட்டுச் சொல்லில் தேடிப்பாருங்கள்!
//
மிகத் தவறான அணுகுமுறை! எந்த அலோபதி வைத்தியருடனும் பின்னூட்டம் எழுதியவர்களுக்கு வாய்க்கால் வரப்புத் தகராறு இருக்க சந்தர்ப்பமே இல்லை. //
ஆனால் உங்கள் இடுகைகளும், மறுமொழிகளும் வேறு மாதிரி தோற்றத்தை தருகின்றன சார்
//ஆனாலும், மறுத்துக் கருத்துக்கள் வருகிறதென்றால், அதற்கு மருத்துவர் ப்ருனோ, தன்னுடைய பின்னூட்டங்களில் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் மாதிரி ஒருதலைப் பட்சமாகவே அல்லது திசைமாறி எழுதிய ஒன்று தான் காரணம்.//
நான் திசை மாறி எழுதியது எது என்று சுட்டிக்காட்டவும்
இது போல் பொத்தாம் பொதுவாக கூறுவது அழகன்று
//
அலோபதி மருத்துவத்தின் மிகப் பெரிய பலவீனம் எது என்றால், அது மருத்துவனை, மருத்துவ முறையை மையம் கொள்ளாமல், கொள்ளை லாபம் சம்பாதிக்கப் புறப்படும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிடியில் சிக்கி இருப்பது தான்.//
சரி
ஆனால் இப்பொழுது சித்த மருத்துவர்களும் இந்த சுழலில் சிக்கும் படி ஒரு தீர்ப்பு வருகிறது
அந்த தீர்ப்பினால் சித்த மருத்துவம் அழிவை நோக்கி போகும் என்றும் அலோபதி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் லாபம் என்றும் நான் கூறுகிறேன்
அதை நீங்கள் மறுக்கிறீர்கள்
இந்த முரண்பாடு ஏன்.
அலோபதி மருத்துவர்களை திட்ட வேண்டும் என்பதற்காக மாற்று மருத்துவத்தின் மீது அக்கறை உள்ளது போல் காட்டும் நீங்கள் மாற்று மருத்துவமே அழிந்தாலும் பரவாயில்லை என்று அந்த தீர்ப்பு விவகாரத்தில் நடந்து கொள்வது ஏன்
என்ன காரணம்
அதைத்தான் ஒருவர் இப்படி கூறுகிறார்
/அலோபதி மருத்துவர்கள் மீதான காழ்புணர்ச்சியின் காரணமாகவே பெரும்பாலான பின்னூட்டங்கள் இடப்பட்டு உள்ளது/
//
இந்தப் போக்குக்கு எதிராக, அலோபதி மருத்துவர்களே, ஆராய்ச்சியாளர்களே போர்க்கொடி தூக்கி வரும் செய்திகளை, ப்ருனோவின் இரண்டு பதிவுகளிலும் சுட்டி கொடுத்துப் பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்.//
சுட்டிகளுக்கு நன்றி ஐயா
அலோபதியின் மிகப்பெரிய பலம் என்னவென்றால் அந்த முறையில் இருக்கும் குறைகளை அம்முறை மருத்துவர்களே வெளிப்படையாக தெரிவிப்பார்கள்
ஆவணப்படுத்துவார்கள்
மூடி மறைக்க மாட்டார்கள்
பிறகு அந்த குறைகளை களைய நடவடிக்கை எடுப்பார்கள்
இப்படி தவறுகளை / குறைபாடுகளை வெளிப்படையாக தெரிவிப்பது தான் அலோபதியின் பலம். காரணம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடிகிறது
//
ஒன்று, எந்த நீதிமன்றமும், வழக்கில் உள்ள எந்த முறைக்கும் சாவுமணி அடித்து விட முடியாது. தலைப்பே அதீதக் கற்பனை.//
இது உங்கள் கருத்து.
//அடுத்து, போலி மருத்துவம் என்ற வார்த்தை. அதன் மேல் நடத்திய ரைடு என்பதும், மிகைப் படுத்தப்பட்ட ஒன்று. இதே கேள்விய்சைக் கொஞ்சம் திருப்பிப் போட்டுக் கேட்கலாமா? //
தாராளமாக
//சில மாதங்களுக்கு முன்னாள், போலி மருந்து விவகாரத்தில், சில கைதுகள் தமிழகத்தில் நடந்தன. காலாவதியாகிப் போன மருந்துகளை, சென்னையில் உள்ள சில மருத்துவர்களே விநியோகம் செய்த செய்தியும் வந்தது.//
ஆமாம் சார்
அலோபதி மருந்துக்களின் அட்டையில் காலவதி தேதி தெளிவாக போடப்பட்டிருக்கும். அதனால் காலவதியானது தெளிவாக தெரியும்
// மத்திய அரசின் சுகாதாரத்துறை மருத்துவ மனைகளில், ஆந்திராவில், கர்நாடகத்தில் சிபிஐ நடத்திய சோதனைகளில், கலப்படம் செய்யப்பட்ட, தரக்குறைவான,காலாவதியாகிப்போன மருந்துகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும் செய்தியாக வந்தது.//
ஆமாம் சார்
குறைகளை கண்டுபிடித்து, அதை ஆவணப்படுத்தி, அது மீண்டும் நடைபெறாமல் இருப்பதில் அலோபதிக்கு நிகர் அலோபதி தான்
//இப்போது குதிக்கும் எந்த அலோபதி ஆதரவாளரும், விழிப்போடு குரல் கொடுத்ததாகவோ, போலிகள் ஜாக்கிரதை என்று தங்களுக்குள்ளேயே சுயபரிசோதனை செய்து கொண்டதாகவோ தெரியவில்லை. //
குரல் கொடுத்தார்கள்
சுய பரிசோதனை செய்து கொண்டார்கள்
என்று உறுதியாக கூறலாம்
உங்களுக்கு தெரியவில்லை என்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும
//இதைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது, எங்களுக்கு சம்பந்தமே இல்லை என்று அலோபதி மருத்துவர்கள் சொல்வதை ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொண்டாலுமே, //
அப்படி யாரும் கூறவில்லை. எனவே நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை
//இதைப் பற்றிய முழுமையான ஞானமோ,தேர்ச்சியோ அலோபதி மருத்துவர்களுக்கே இல்லை என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.//
தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் பொய் வாக்கியம்
//மருந்துக் கம்பனிகள் பிரபலமானவை என்றால், ஆராய்ச்சி, தயாரிப்புத் தரம் எல்லாமே நன்றாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே மருத்துவர்கள் அவற்றைப் பரிந்துரை செய்கிறார்கள்.//
இது உங்கள் கருத்து
// போதாக்குறைக்கு, மருந்து நிறுவனங்கள் அளிக்கும் அன்பளிப்புக்கள், அவர்களை அதைத் தாண்டிப் போக விடுவதில்லை.//
இது உங்கள் கற்பனை
//மூன்றாவதாக, முக்கியமானதும் கூட-மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள்,ஒரு தயாரிப்பை ஒரு காலம் வரை சந்தையில் வைத்திருந்து, புதிய ஆராய்ச்சி, புதிய தயாரிப்பு என்று அறிமுகப்படுத்தும்போதே, பழைய மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அல்லது பீதியைக் கிளப்புகிற விதத்திலேயே சந்தைப் படுத்திக் கொண்டிருப்பதும் கொஞ்சம்விவர அறிந்த எவருக்கும் தெரிந்த விஷயம்.//
ஐயா
ஒரு மருந்து பயன்படுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனபிற்கு, முறையான ஆராய்ச்சிகள் தொடர்வதால், பின் விளைவுகள் தெரியவரும்
அந்த பின்விளைவுகள் இல்லாத மருந்து வேறு இருந்தால் அதை பரிந்துரைக்கலாம்
ஆனால் இது அனைத்து மருந்துக்களுக்கும் பொருந்தாது
உதாரணமாக பெனிசிலின், சல்பா ஆகிய மருந்துக்கள் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன
மற்றொரு உதாரணம் ஆஸ்பிரின்
இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்
//மாற்று மருத்துவத்தை அழித்து விடும் இந்தத் தீர்ப்பு என்று ப்ருனோ தன்னுடைய பதிவில் பின்னூட்டங்களில் மாறி மாறிப் பேசுகிறார். அது தனி விஷயம்.//
நான் மாறி மாறி பேசவில்லை.
ஒரே போல் தான் பேசுகிறேன்
நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் இதுவரை விடையளிக்க வில்லை
அளித்தால் எது உண்மை என்று உங்களுக்கே புரியும்
நீங்கள் பேசியது சரியா என்பது உங்களுக்கும் பிறருக்கும் புரியும்
//அலோபதி மருத்துவம், முதலில் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு பேசட்டும் என்று சொல்ல வைக்கிற அளவுக்கு நீங்கள் மேற்கோள் காட்டிய இரண்டு பதிவுகளில் நடந்த விவாதம் இருக்கிறது.//
அலோபதி மருத்துவம் தன்னை தொடர்ந்து தூய்மை படுத்திக்கொண்டே இருக்கிறது
அதில் எந்த சந்தேகமும் இல்லை
அதனால்தான் அது வளர்கிறது
செழுமையடைகிறது
பிற மருத்துவ முறைகளை கற்றோரும் இம்முறையை பயன்படுத்த ஆசைப்படுகிறார்கள்
புரிகிறதா
வரிசையாக நீங்கள் அளித்திருக்கும் அத்தனை பின்னூட்டங்களுக்கும், கேள்விகளுக்கும் ஒரே பதில் பொருந்துகிறது.
சொல்லப் பட்ட அத்தனையும் மரு.ப்ருனோவின் சொந்தக் கருத்து.
அவ்வளவுதான்!
என்னுடைய கருத்துக்களைத் தீர விசாரித்து, படித்து, சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்ட பிறகே எழுதுகிறேன்.
புரிகிறதா என்பதை என்னிடம் கேட்பதைவிட உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
என்னுடைய பதிவில் உங்களுடைய பின்னூட்டங்களுக்குப் பதில் சொன்ன தருணங்களிலேயே, என்னுடைய நண்பர்களில் அலோபதி மருத்துவர்களும் இருக்கிறார்கள், ஒருபக்கச் சார்பான நிலை எடுப்பதில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
//
சொல்லப் பட்ட அத்தனையும் மரு.ப்ருனோவின் சொந்தக் கருத்து.
//
அறிவில் சிறந்தவரே
தகவல் என்பது வேறு
கருத்து என்பது வேறு
நான் தகவல்களும் தந்திருக்கிறேன்
கருத்துக்களும் தந்திருக்கிறேன்
நீங்கள் தகவல்களும் தந்திருக்கிறீர்கள்
கருத்துக்களும் தந்திருக்கிறீர்கள்
--
நீங்கள் தந்த தகவல்கள் எதையுமே நான் மறுக்க வில்லை
அதே போல் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தவறு என்றும் கூறவில்லை
எனவே
//
சொல்லப் பட்ட அத்தனையும் மரு.ப்ருனோவின் சொந்தக் கருத்து.
//
என்ற உங்கள் கருத்து முற்றிலும் தவறானது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
புரிகிறதா
இதுவரை புரியவில்லை என்றால், தகவல்/ கருத்து / நம்பிக்கை குறித்து அடுத்து ஒரு மறுமொழியில் விளக்கியுள்ளேன்
படித்து விட்டு புரிந்ததா என்று கூறவும்
//என்னுடைய கருத்துக்களைத் தீர விசாரித்து, படித்து, சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்ட பிறகே எழுதுகிறேன். //
நன்றி ஐயா
நீங்கள் தீர விசாரிப்பவர் என்று தெரியும்
சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டவர் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி
அப்படியே எங்களது சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நான் கேட்ட கேள்விகளுக்கு தயவு செய்து விடையளித்தால் இங்குள்ள பலரின் சந்தேகமும் தீரும் அல்லவா
//புரிகிறதா என்பதை என்னிடம் கேட்பதைவிட உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.//
ஐயா
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்து விட்டேன்
அந்த பதில் புரிகிறதா என்று கேட்டேன்
இது தவறா
புரிகிறதா என்று கேட்டது தவறென்றால் மிகவும் வருந்துகிறேன்
புரிகிறதா என்று கேட்டது தவறென்றால் நிபந்தையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
அதே நேரம்
//புரிகிறதா என்பதை என்னிடம் கேட்பதைவிட உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.//
என் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே ஐயா
நீங்கள் என் கேள்விகளுக்கு நீங்கள் பதலளித்தால் தானே எனக்கு புரியும்
எனவே தயவு செய்து இந்த கேள்விகளுக்கும் மற்றும் இந்த கேள்விகளுக்கும் பதில் கூறுங்கள். உங்கள் கருத்தையே உத்தரவாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் பதில் கூறியபின்னர், உங்கள் பதில் புரிகிறதா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்
பதில் கூறுங்கள் ஐயா
//என்னுடைய பதிவில் உங்களுடைய பின்னூட்டங்களுக்குப் பதில் சொன்ன தருணங்களிலேயே, என்னுடைய நண்பர்களில் அலோபதி மருத்துவர்களும் இருக்கிறார்கள், ஒருபக்கச் சார்பான நிலை எடுப்பதில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். //
நன்றி ஐயா
நான் என் பதிவில் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிவிடுங்கள். ஒரு சார்பான நிலை எடுக்காத நீங்கள் பதில் கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்
தயவு செய்து பதில் கூறுங்கள்
எங்கள் சந்தேகங்களை தீர்த்து வையுங்கள்
கேள்விகள் இங்கும் மற்றும் இங்கும் உள்ளன
எது பொருளோ அதை விட்டு விட்டு, வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் எனக்கு விருப்பமில்லை.
என்னுடைய கருத்தில், எழுதியதில் உறுதியாக இருக்கிறேன்.
விவாதமாகத் தொடங்க முயற்சித்தது வாக்குவாதமாக மாறிப்போனதை படிப்பவர்களே எது எப்படி என்று முடிவு செய்து கொள்ளட்டும்!
தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)
தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.
உதாரணம் :
சரியான தகவல் – பெட்ரோல் விலை 50 ரூபாய்
தவறான தகவல் – பெட்ரோல் விலை 25 ரூபாய்
கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்
ஒரு கருத்து – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
வேறு ஒரு கருத்து – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.
இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.
அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது
ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம்.
அப்ப நம்பிக்கை -
உதாரணம்
நம்பிக்கை 1 – பெட்ரோல் விலை குறையும்
நம்பிக்கை 2 – பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
நம்பிக்கை 3 – பெட்ரோல் விலை கூடும்
நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது
படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது :) :) :)
--
சித்த மருத்துவம் சிறந்தது என்பது ஒருவரின் கருத்து
அலோபதி மருத்துவம் சிறந்தது என்பது அடுத்தவரின் கருத்து
இதில் இரண்டுமே சரியாக இருக்கலாம்
--
ஆனால் சித்த மருந்துக்களுக்கு பக்க விளைவுகள் கிடையாது என்பது தவறான தகவல்
சிறியா நங்கை சாப்பிட்டால் பாம்பின் விஷம் முற்றிலும் முறிந்து விடும் என்பது தவறான தகவல்
இங்கு தான் பிரச்சனை
தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)
தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.
உதாரணம் :
சரியான தகவல் – பெட்ரோல் விலை 50 ரூபாய்
தவறான தகவல் – பெட்ரோல் விலை 25 ரூபாய்
கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்
ஒரு கருத்து – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
வேறு ஒரு கருத்து – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.
இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.
அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது
ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம்.
அப்ப நம்பிக்கை -
உதாரணம்
நம்பிக்கை 1 – பெட்ரோல் விலை குறையும்
நம்பிக்கை 2 – பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
நம்பிக்கை 3 – பெட்ரோல் விலை கூடும்
நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது
படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது :) :) :)
சித்த மருத்துவம் சிறந்தது என்பது ஒருவரின் கருத்து
அலோபதி மருத்துவம் சிறந்தது என்பது அடுத்தவரின் கருத்து
--
ஆனால் சித்த மருந்துக்களுக்கு பக்க விளைவுகள் கிடையாது என்பது தவறான தகவல்
சிறியா நங்கை சாப்பிட்டால் பாம்பின் விஷம் முற்றிலும் முறிந்து விடும் என்பது தவறான தகவல்
இங்கு தான் பிரச்சனை
நாட்டில் கருத்து சுதந்திரம் தான் உள்ளது
தவறான தகவல்களை பரப்பும் சுதந்திரம் யாருக்கும் கிடையாது !!!
//என்னுடைய கருத்தில், எழுதியதில் உறுதியாக இருக்கிறேன்.//
சரி சார்
என் கேள்விகளுக்கு விடையளிக்கலாமே :) :) ஏன் விடையளிக்க தயக்கம்
நீங்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியது வெட்ட வெளிச்சமாகிவிடும் என்ற பயமா :) :)
//விவாதமாகத் தொடங்க முயற்சித்தது வாக்குவாதமாக மாறிப்போனதை படிப்பவர்களே எது எப்படி என்று முடிவு செய்து கொள்ளட்டும்!//
நீங்கள் விடையளித்தால் புரிந்து கொள்வது எளிதாகிவிடுமே :) :) :)
//எது பொருளோ அதை விட்டு விட்டு, வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் எனக்கு விருப்பமில்லை.
//
சரி ஐயா
பொருள் எதுவோ அதையே முதன்மைபடுத்தி என் கேள்விகளுக்கு விடையளியுங்கள்
//என்னுடைய கருத்தில், எழுதியதில் உறுதியாக இருக்கிறேன்.//
நல்லது ஐயா
எங்களுக்கு புரியும் படி விளக்கினால் நாங்களும் உங்கள் கருத்தில் உறுதியாக இருக்க வாய்ப்புள்ளதே
அதனால் தான் சந்தேகங்களை கேட்டேன் !!
//எஸ். கிருஷ்ணமூர்த்தி said... மிகத் தவறான அணுகுமுறை! எந்த அலோபதி வைத்தியருடனும் பின்னூட்டம் எழுதியவர்களுக்கு வாய்க்கால் வரப்புத் தகராறு இருக்க சந்தர்ப்பமே இல்லை. //
நீங்கள் தொடர்ந்து தமிழ் பதிவுகளை வசிப்பவராக இருந்தால் ஒன்றை நன்றாக கவனிக்கலாம் .. எங்கு அலோபதி மருத்துவர்களை பற்றிய விவாதங்கள் எழுந்தாலும் தனிப்பட்ட தாக்குதலை முன்னிறுத்தியே பின்னூட்டங்கள் இடப்படுகிறது ..
இது காழ்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன..
மேலும் இங்கு விவாதத்தில் ஈடுபடும் எந்த மருத்துவரும் எதிர்கருத்தை சொல்பவரிடம் தனிப்பட்ட தாக்குதலில் இறங்குவதில்லை..
ஆனால் மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட இடுகைகள் அனைத்திலும் தொடர்ச்சியாக சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே நியாயமான விஷயங்களை சொன்னாலும் எதிர்க்கின்றனர் .. இந்த பதிவிலும் அப்படித்தானே..
அதாவது மாற்று மருத்துவர்கள் அவர்களது மருத்துவத்தை practice செய்யலாம்..ஆனால் ஏன் அலோபதி மருத்துவம் செய்ய அனுமதி கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள் என்பதுதான் கேள்வி..
இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் இங்கு பெரும்பாலான பின்னூட்டங்கள் அலோபதி மருத்துவர்களை பற்றியும் அதில் உள்ள குறைபாடுகளையும் மட்டுமே திரும்ப திரும்ப சொல்வதை தங்கள் கவனிக்கலாம். இதற்கு என்ன காரணம்..
//எஸ். கிருஷ்ணமூர்த்தி said... அலோபதி மருத்துவத்தின் மிகப் பெரிய பலவீனம் எது என்றால், அது மருத்துவனை, மருத்துவ முறையை மையம் கொள்ளாமல், கொள்ளை லாபம் சம்பாதிக்கப் புறப்படும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிடியில் சிக்கி இருப்பது தான்.//
இதனை வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் அந்த பலவீனத்தில் சிக்க அதாவது அலோபதி மருத்துவத்தை செய்ய அனுமதி கேட்டு ஏன் மாற்று முறை மருத்துவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பதுதான் இங்கு விஷயம்
//எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
அடுத்து, போலி மருத்துவம் என்ற வார்த்தை. அதன் மேல் நடத்திய ரைடு என்பதும், மிகைப் படுத்தப்பட்ட ஒன்று. //
அதன் தொடர்ச்சியாகத்தான் எங்களையும் அலோபதி மருத்துவம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாற்று முறை மருத்துவர்களின் ஒரு சங்கம் இந்த வழக்கையே தொடர்ந்தது..
//சில மாதங்களுக்கு முன்னாள், போலி மருந்து விவகாரத்தில், சில கைதுகள் தமிழகத்தில் நடந்தன. காலாவதியாகிப் போன மருந்துகளை, சென்னையில் உள்ள சில மருத்துவர்களே விநியோகம் செய்த செய்தியும் வந்தது//
மன்னிக்கவும்.. எந்த ஒரு அலோபதி மருந்துபட்டையிலும் உற்பத்தி செய்யப்பட தேதி மற்றும் காலாவதி ஆகும் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பது தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் .இந்த போலி மருந்து விவகாரத்தில் மருத்துவரல்லாத ஒரு நபர் தனது சுய லாபத்துக்காக காலாவதியான மருந்துகளை அழிப்பதாக மருந்து கம்பெனிகளிடமிருந்து ஒப்பந்தம் எடுத்து ,காலாவதி ஆகும் தேதியை போலியாக அச்சடித்து அதன் உறைகளையும்(label ) மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.. தங்கள் சொன்னபடி காலாவதி மருந்து என்று தெரிந்து எந்த அலோபதி மருத்துவரும் பரிந்துரைக்கவில்லை..இங்கு பொதுமக்களுடன் சேர்ந்து மருத்துவர்களும் ஏமாற்றப்பட்டுள்ளோம்.. தாங்கள் கூறியது போல் அல்ல.. பழைய செய்திகளை நன்கு படித்து பார்க்கவும்..
மேலும் தற்போதைய தீர்ப்பின்படி அனைவரும் அலோபதி மருந்தை பரிந்துரைக்க ஆரம்பித்தால் இதுபோன்ற போலிகள் பெருகும் என்பதுதான் உண்மை நிலை..இதற்கு உங்கள் பதில் என்ன
//இப்போது குதிக்கும் எந்த அலோபதி ஆதரவாளரும், விழிப்போடு குரல் கொடுத்ததாகவோ, போலிகள் ஜாக்கிரதை என்று தங்களுக்குள்ளேயே சுயபரிசோதனை செய்து கொண்டதாகவோ தெரியவில்லை. //
சுய பரிசோதனை செய்ததாலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது..உதாரணமாக போலி சான்றிதழ்கள் கொடுத்து மாணவர்கள் கல்லூரியில் சேர முயன்ற விவகாரம் தற்போது வந்துள்ளது .. இதே போன்ற மோசடிகள் கடந்த வருடங்களிலும் நடந்ததாக கூறப்படுகிறது.. அதனால் போலி சான்றிதழ்கள் விவகாரம் அனைத்து துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிந்துதான் நடந்தது என்று கூற முடியுமா.. இதைப் பற்றிய முழுமையான ஞானமோ,தேர்ச்சியோ துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் இல்லை என்று தான் முடிவு செய்ய முடியுமா?
உயர்நீதிமன்றம் அளித்த ஆணை மாற்று மருத்துவர்கள் பொருளீட்டப் பயன்படலாம். ஆனால், தொலைநோக்கில் மாற்று மருத்துவத்தை அலோபதி மருந்துகளின் சந்தையாக்குவதிலும் மாற்று மருத்துவத்தின் தனித்தன்மையை இழப்பதிலும்தான் முடியும்.
நோய் என்றால் என்ன? என்பதிலிருந்து தொடங்கும் மாற்று மருத்துவங்களின் தனித்தன்மைகள் எண்ணற்றவை. அவற்றை மருந்துக்கம்பெனிகளின் லாபங்கள் அழித்தொழித்துவிடும். நீதிமன்ற ஆணை மாற்று மருத்துவத்திற்கு விடப்பட்ட முதல் எச்சரிக்கை மணி.
அனைத்து மருத்துவங்களையும் இணைத்து 'ஒருங்கிணைந்த மருத்துவம்' உருவாக்கப்படுவதே சிறந்தது. அதுவரை மாற்று மருத்துவங்கள் தனித்தன்மையை இழக்காமலிருக்கவேண்டும் என்பது நம் அவா.
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்துக்கள்தான் எனது கருத்தும். மேலும் சில கேள்விகள்:
1) Dr.புருனோவின் பதிவில் அவர்கொடுத்த தலைப்பு 'மாற்றுமருத்துவமுறைகளுக்கு சாவுமணி அடிக்கும் உயர்நீதிமன்றத்தீர்ப்பு' என்பது.
அடுத்த வரியிலேயே இதனை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்கிறார்.
ஆக மாற்றுமருத்துவத்துக்கு சாவுமணி அடிக்கும் தீர்ப்பு அவருக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றதென்றால் அவரது மனப்போக்கு என்ன?
2)Dr.ராம் சொல்வது போல அலோபதி முறையை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் அனைவரும் மாற்றுமருத்துவர்களா? இல்லை பொதுஜனங்களும் உண்டா?
பொது ஜனங்களும் உண்டெனில் அவர்களது காழ்ப்புக்கு என்ன காரணம்?
3)மருந்து நிறுவனங்களிடமும், ஸ்கேனிங் மற்றும் சோதனைக்கூடங்களிடமும் 'அன்பளிப்பு' பெறாத அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை மெஜாரிட்டியா? மைனாரிட்டியா?
4)அரசு சுகாதார நிலையங்களில் தமது பொறுப்பின் மகத்துவம் உணர்ந்து செயல்படும் அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை மெஜாரிட்டியா? மைனாரிட்டியா?
5)MBBS படிப்புக்கு பல லட்சங்களில் நன்கொடை பெறப்படுவது தனக்குத் தெரியாது என்று எனது பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார் மரு.புருனோ. நடுநிலைவாதிகளே! நீங்கள் இதை நம்புகிறீர்களா?
இன்னும் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. பதிவில் ஒரு தொனியிலும் பின்னூட்டங்களில் வேறொரு தொனியிலும் பேசும் மரு.புருனோ அவர்கள் தனது பக்கம் திறந்த மனதுடன் விவாதத்துக்கு தயாராக இருப்பாரேயானால்....பேசலாம்....நான் மாற்று மருத்துவத்துறையைச் சேர்ந்தவனல்லன். எனவே நான் இந்த விவாதத்துக்காக சற்று கடுமையாக உழைக்கவேண்டியிருந்தாலும் கூட..
//
1) Dr.புருனோவின் பதிவில் அவர்கொடுத்த தலைப்பு 'மாற்றுமருத்துவமுறைகளுக்கு சாவுமணி அடிக்கும் உயர்நீதிமன்றத்தீர்ப்பு' என்பது.
அடுத்த வரியிலேயே இதனை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்கிறார்.
ஆக மாற்றுமருத்துவத்துக்கு சாவுமணி அடிக்கும் தீர்ப்பு அவருக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றதென்றால் அவரது மனப்போக்கு என்ன?//
ஏன் இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று அதற்கடுத்த வரிகளில் தெளிவாகவே கூறியுள்ளேன்
இவ்வளவு நாளாக அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை நாங்கள் குணமாக்குகிறோம் என்று புருடா விட்டு நோயாளிகளிடமிருந்து பணம் பறித்து வந்தவர்களின் நிலை இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிறது என்பதாலேயே இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
அலோபதி மருந்துகள் பக்க விளைவு, எங்கள் மருந்தில் பக்க விளைவே கிடையாது என்று ஊரை ஏமாற்றியவர்கள் தற்சமயம் வெளிபடுவதால் இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
//2)Dr.ராம் சொல்வது போல அலோபதி முறையை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் அனைவரும் மாற்றுமருத்துவர்களா? இல்லை பொதுஜனங்களும் உண்டா?
பொது ஜனங்களும் உண்டெனில் அவர்களது காழ்ப்புக்கு என்ன காரணம்?//
காழ்ப்புடன் இருப்பவர்களால் தான் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும். இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் :) :) :)
காழ்ப்புடன் இருப்பவர்களிடம் கேளுங்கள் :) :)
//3)மருந்து நிறுவனங்களிடமும், ஸ்கேனிங் மற்றும் சோதனைக்கூடங்களிடமும் 'அன்பளிப்பு' பெறாத அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை மெஜாரிட்டியா? மைனாரிட்டியா?//
அன்பளிப்பு என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை
அது பணம் என்றால் --> பெறாதவர்களே 99.99 சதம்
--
இல்லை பேனா, லெட்டர் பேட், ஸ்டிக்கர், டெபிள் வெயிட், டெலிபோன் புக், போன்ற பொருட்களை நீங்கள் “அன்பளிப்பு” என்று குறிப்பிட்டுருந்தால் --> இதை பெறாத மருத்துவர்களே கிடையாது என்று கூறலாம்
இது மட்டும்மல்ல
அலோபதி மருத்துவர்கள் ஆரெம்கேவியிலோ போத்தீசிலோ ஜவுளி வாங்கினால் அங்கு தரும் துணிப்பை / அல்லது பிக் ஷாப்பர் பையை கூட அன்பளிப்பாக பெறுவதுண்டு
அப்புறம், அருண் பனிக்கூழகத்தில் (ஐஸ்கிரீம் பார்லரில்) ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று ஒரு பனிக்கூழ் காசு கொடுத்து வாங்கினால் மற்றொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது
அப்படி நான் சாப்பிட்டிருக்கேன் போதுமா :) :)
நீங்கள் இதுவரை துணிக்கடையில் இருந்து எந்த அன்பளிப்பும் பெறாதவர் என்றும், உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து நாட்காட்டிகளும் (காலண்டர்களும்), நாட்குறிப்பேடுகளும் (டைரிகளும்) நீங்கள் காசு கொடுத்து வாங்கியது என்று தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
//4)அரசு சுகாதார நிலையங்களில் தமது பொறுப்பின் மகத்துவம் உணர்ந்து செயல்படும் அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை மெஜாரிட்டியா? மைனாரிட்டியா?//
99 சதம்.
அதனால் தான் தமிழகம் பொது சுகாதாரத்தில் முதலிடத்தில் இருக்கிறது
பொது சுகாதார துறையில் இருக்கும் மருத்துவர்கள் வாரம் 100 மணி நேரம் வரை உழைப்பதால் தான் உங்கள் குழந்தைக்கு போலியோ தாக்காமல் இருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு
//5)MBBS படிப்புக்கு பல லட்சங்களில் நன்கொடை பெறப்படுவது தனக்குத் தெரியாது என்று எனது பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார் மரு.புருனோ.//
வன்மையாக மறுக்கிறேன். நீங்கள் புரிவது திரிப்பு வாதம்
நீங்கள் முதலில் கூறியது
(MBBS சீட்டுக்கு 50-100 லட்சங்களில் நன்கொடை??)
இதற்கு நான் கூறிய பதில்
MBBS சீட்டிற்கு 100 லட்சம் எந்த கல்லூரி என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அது குறித்து கருத்து கூற இயலவில்லை. எந்த கல்லூரி என்று நீங்கள் கூறினால் கருத்து கூறத்தயார்
ஆனால் நீங்கள் இப்பொழுது கூறுவது வேறு
// நடுநிலைவாதிகளே! நீங்கள் இதை நம்புகிறீர்களா?//
விந்தை மனிதனின் தவறான தகவலை மருத்துவர் ராம் அதே பதிவில் தெளிவுபடுத்திவிட்டார். நடுநிலைவாதிகள் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம்
அதற்கடுத்து விந்தை மனிதன் கேட்ட கேள்வி
அதுசரி மருத்துவரே! MBBS, MD, MS (MD,MS போன்ற உயர்படிப்பு படித்தால்தான் மருத்துவத்துறையில் நிற்க முடியும் என்று உங்கள் பழைய பதிவில் சொல்லியிருக்கின்றீர்கள்) ஆகிய படிப்புக்களுக்கு இன்று ஆகும் செலவென்ன?
இதற்கும் நான் ஏற்கனவே தெளிவாக
பதிலளித்துள்ளேன்
நடுநிலைவாதிகள் இங்கு பார்த்தால் விந்தை மனிதனின் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு கூட நாங்கள் சரியாகவே பதிலளித்துள்ளது தெரியும்
//இன்னும் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. //
கேளுங்கள் சார்
பதிலளிக்கத்தயார்
அதே போல் நான் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளியுங்கள்
உண்மை என்னவென்று அனைவரும் அறிந்து கொள்வார்கள்
என் கேள்விகள் இங்கும் மற்றும் இங்கும் உள்ளன
//பதிவில் ஒரு தொனியிலும் பின்னூட்டங்களில் வேறொரு தொனியிலும் பேசும் மரு.புருனோ அவர்கள் தனது பக்கம் திறந்த மனதுடன் விவாதத்துக்கு தயாராக இருப்பாரேயானால்....//
நான் திறந்த மனதுடன் விவாதத்திற்கு தயாராகவே உள்ளேன்
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கு தெளிவாகவே பதிலளித்து உள்ளேன்
நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் உண்மை என்னவென்று உங்களுக்கும் அனைவருக்கும் எளிதாகவே விளங்கும்
தயவு செய்து பதிலளியுங்கள். திறந்த மனதுடன் பதிலளியுங்கள். ஏன் பதிலளிக்காமல் நழுவுகிறீர்கள்
//..பேசலாம்....நான் மாற்று மருத்துவத்துறையைச் சேர்ந்தவனல்லன். எனவே நான் இந்த விவாதத்துக்காக சற்று கடுமையாக உழைக்கவேண்டியிருந்தாலும் கூட.. //
நான் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தால் இந்த பிரச்சனையின் முழு விபரங்களும் உங்களுக்கு எளிதாக புரிந்து விடும்
நீங்கள் கடுமையாக உழைக்க தேவையில்லை
என் கேள்விகள் அப்படி பட்டவை. :) :) :)
New Delhi, July 27: While healthcare as an industry is being termed as a sunrise sector, public health is still a neglected area in both urban and rural areas. The allopathic doctor-population ratio at present stands at 1:1,722, according to the Medical Council of India.
Taking into consideration other streams of Indian medicine systems as well as the practice of homeopathy in India, the doctor-population ratio comes to 128 doctors per lakh of population, according to minister of state for health and family welfare Panabaka Lakshmi.
சீனா 1000 பேருக்கு 106 டாக்டர்
இந்தியா 1000 பேருக்கு 60 டாக்டர்கள்
பாகிஸ்தான் 1000 பேருக்கு 74டாக்டர்கள்
ஆஸ்திரேலியா-1000:
இந்திய மருத்துவர்களின் வேலைப்பளு அதிகமாக இருக்கிறது.
The distribution of practitioners is heavily skewed toward urban areas. The Center for Enquiry into Health and Allied Themes estimates the urban physician-to-population ratio at almost six times the rural concentration of physicians. India’s allopathic physicians practice largely as private fee-for-service (FFS) practitioners among the urban middle class—some 250,000,000 people—meaning that the effective physician-to-population ratio among India’s better-off citizens is about 200 per 100,000, approximately the physician concentration in the United Kingdom. This analytic perspective explains why some observers report that “India has enough physicians,” while many Indians, in fact, never receive the services of allopathic physicians at all.
Link:
http://india-reports.in/transitions/global-skills/doctors-per-one-hundred-thousand-people-in-india/.
//அலோபதியில் குணமாக்க முடியாத நோய்களை மாற்று மருத்துவத்தில் குணமாக்க முடியும்” என்பது உண்மையென்றால் எங்களை அலோபதி முறையில் வைத்தியம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏன் உயர் நீதிமன்றத்தில் கெஞ்ச வேண்டும்'----//
அது மட்டும் அல்ல போஸ்ட்மார்டம் செய்யும் உரிமையும் சித்த மருத்துவர்களுக்கு உண்டு என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வர வாய்ப்பு உண்டு. ஏன் என்றால் சித்த மருத்துவத்திற்காண Tamilnadu Dr. M.G.R. Medical University- யின் Syllabus -ல் உள்ள பாடபிரிவுகள்
1. History and Basic Principles of Siddha Medicine
2. Bio-Chemistry
3. Anatomy - Part-I
4. Anatomy - Part-II
5. Physiology - Part-I
6. Physiology - Part-II
7. Medicinal Botany
8. Basic Principles of Pharmacy
9. Plant Kingdom
10. Metals, Minerals and
Animal Kingdom
11. Micro Biology
12. Siddha Pathology
13. Modern Pathology
14. Hygiene and Community
Medicine
15. Forensic Medicine and
Toxicology
16. General Medicine(siddha)
17. Special Medicine including
Yoga & Varma
18. Surgery including Bone
Setting and Dental Diseases
19. Obstetrics &Gynaecology
20. Paediatric Medicine
இவை 6 செமஸ்டராக பிரிக்கபட்டு 41/2 வருடம் படிப்பு
1 வருடம் மருத்துவ
பயிற்சி.
தகுதியின் அடிப்படையிலே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
தகுதியின் அடிப்படையிலே உரிமையை பெற்று பயன்படுதுவதும் பயன்படுத்தாமல் விடுவதும் அவர்கள் விருப்பம்.
உயர் நீதிமன்றத்தில் கெஞ்சினால்
சாதகமான திர்ப்பு கிடைக்கும் என்று இந்திய இறையான்மையை கேலிகூத்தாக்காதிர்கள்.
ஏன் சித்தா,ஆயுற்வேத மருத்துவர்கள் அலோபதியை நாடவேண்டும். அலோபதி மருத்துவத்தால் சித்தா,ஆயுற்வேத மருத்துவத்தில் ஏற்பட்ட அழிவுகள் என்ன என்பதை எனது blog_ல் எழுதி தங்களது பார்வைக்கு கொண்டுவருகிறேன்.
//அது மட்டும் அல்ல போஸ்ட்மார்டம் செய்யும் உரிமையும் சித்த மருத்துவர்களுக்கு உண்டு என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வர வாய்ப்பு உண்டு. //
நல்லது தானே !!
சரி சார்
நீங்கள் குறிப்பிட்ட இந்த பாடங்களில் எத்தனை சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்து மற்றும் எத்தனை அலோபதி மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது என்று நீங்கள் விளக்குங்கள்
எனக்கு தெரிந்து நீங்கள் குறிப்பிடும் 20 பாடங்களில் 12 பாடங்களில் அலோபதி தான்
அதாவது 60 சதம் அலோபதி
இது உண்மை தானா
--
1. History and Basic Principles of Siddha Medicine
2. Bio-Chemistry
3. Anatomy - Part-I
4. Anatomy - Part-II
5. Physiology - Part-I
6. Physiology - Part-II
7. Medicinal Botany
8. Basic Principles of Pharmacy
9. Plant Kingdom
10. Metals, Minerals and
Animal Kingdom
11. Micro Biology
12. Siddha Pathology
13. Modern Pathology
14. Hygiene and Community
Medicine
15. Forensic Medicine and
Toxicology
16. General Medicine(siddha)
17. Special Medicine including
Yoga & Varma
18. Surgery including Bone
Setting and Dental Diseases
19. Obstetrics &Gynaecology
20. Paediatric Medicine
//நீங்கள் குறிப்பிட்ட இந்த பாடங்களில் எத்தனை சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்து மற்றும் எத்தனை அலோபதி மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது என்று நீங்கள் விளக்குங்கள்
எனக்கு தெரிந்து நீங்கள் குறிப்பிடும் 20 பாடங்களில் 12 பாடங்களில் அலோபதி தான்
அதாவது 60 சதம் அலோபதி
இது உண்மை தானா//
உண்மை தான்.....
சித்த மருத்துவதில் 60% என்றால்
இந்த 60% பாடதிட்டம்தான் அலோபதியில் 85% என்று நினைக்கிறேன்.சரியா?
இந்த 60% பாடதிட்டமும் அலோபதி மருத்துவத்திற்கு மட்டும் தனிப்பட்ட சொந்தம் என்று என்னுகிறிற்களா?....
//உண்மை தான்.....//
நன்றி சார்
//சித்த மருத்துவதில் 60% என்றால்
இந்த 60% பாடதிட்டம்தான் அலோபதியில் 85% என்று நினைக்கிறேன்.சரியா?//
முற்றிலும் தவறு
இந்த பாடத்திட்டங்கள் அலோபதியில் உண்டு ஆனால் இந்த பாடத்திட்டங்கள் அலோபதியில் 10 சதமே
அதை விட அழமானது அலோபதி பாடமுறை
சந்தேகமென்றால் BSMS மாணவர்கள் படிக்கும் உடற்கூறியல் நூல்களையும் gray's anatomyஐயும் ஒப்பிட்டுக்கொள்ளவும்
//இந்த 60% பாடதிட்டமும் அலோபதி மருத்துவத்திற்கு மட்டும் தனிப்பட்ட சொந்தம் என்று என்னுகிறிற்களா? //
கண்டிப்பாக இல்லை
நோய் முதல் நாடி என்ற வகையில் நோய் என்ன என்று கண்டுபிடித்து அதற்கு ஏற்ற வகையில் தக்க சிகிச்சை அளிப்பது தான் அலோபதியின் தனிச்சிறப்பு
ஆனால் நோய் குறிகளை மட்டும் வைத்துக்கொண்டு, நோய் என்ன வென்று கண்டு பிடிக்காமலேயே மேம்மோக்காக சிகிச்சை அளிக்கும் நடைமுறை தான் பிற மருத்துவ முறைகளில் உள்ளது
--
உதாரணமாக
மூச்சிறைப்பு என்றால் அது ஆஸ்துமாவாக இருக்கலாம், அல்லது இதய் கோளாறாக இருக்கலாம், அல்லது முதுகுத்தண்டு பிரச்சனையாக கூட இருக்கலாம், அல்லது வேறு நோயாகக்கூட இருக்கலாம்.
-
முச்சு விட சிரமம் என்பதற்கு மட்டும் வைத்தியம் பார்த்து விட்டு (symptomatic relief) அது ஏற்படக்காரணமான நோயை பெரும்பலான மாற்று வைத்திய முறைகள் கண்டுகொள்வதில்லை
காரணம் அந்த முறைகளில் anatomy, physiology, biochemistry, pathology எதுவும் கிடையாது
--
எனவே பிற மருத்துவ முறைகள் அவர்களின் முறையில் இருக்கும் குறைபாடுகளை இனங்கண்டு கொண்டு, அலோபதியின் வழியில் வருவது நோயாளிக்கு நன்மையே
//இந்த 60% பாடதிட்டமும் அலோபதி மருத்துவத்திற்கு மட்டும் தனிப்பட்ட சொந்தம் என்று என்னுகிறிற்களா? //
தங்கள் முறையில் அடிப்படைகள் இல்லாத குறையை அவர்கள் அலோபதி முறையின் விதிகளை, பாடங்களை கொண்டு சரி செய்து வெற்றிடத்தை நிரப்புவதால் நோயாளிக்கு நலமே
இதை நான் வரவேற்கிறேன்
allinall சார்
இந்த இடுகையில் எழுப்பட்ட கேள்விகளுக்கு உங்கள் விடை என்ன
Post a Comment