கிராமங்களுக்கு அரை டாக்டர் திட்டம் குறித்து மருத்துவர் அன்புமணியின் கருத்துக்கள்
இன்று இந்து நாளிதழில் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் இது குறித்து எழுதியுள்ளார்
ஒரு மத்திய அமைச்சரை போலவே நானும் சிந்தித்துள்ளேன், அதுவும் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் சிறிது நம்பிக்கையையும் அளிக்கிறது !!!
Rural MBBS என்னும் பித்தலாட்டம்
மருத்துவத்துறையில் வேலை பார்க்க என்ன படிப்புகள் உள்ளன ?
- MNA / FNA : ஆன் செவிலிய உதவியாளர் / பெண் செவிலிய உதவியாளர் : 9 மாதம் முதல் ஒரு வருடம்
- ANM / VHN : துனை செவிலிய மாது / கிராம சுகாதார செவிலியர் : 18 மாதம்
- GNM : செவிலியர் (பட்டயம்) : 3 1/2 வருடம் ஆதாரம் : http://www.indiannursingcouncil.org/types-nursing-programs.asp
- B.Sc Nursing : செவிலியர் (பட்டம்) : 4 வருடம் ஆதாரம் : http://www.indiannursingcouncil.org/types-nursing-programs.asp
- B.Pharm : மருந்தாளுனர் : 4 வருடம்
- MBBS : மருத்துவ இளங்கலை : 5 1/2 முதல் ஆறு வருடம் (ஆடுமாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் படிப்பு ஐந்து வருடம்)
ஆமாம் இந்த செய்திக்குறிப்பில் உள்ளபடி
- 8 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லை.
- அதே நேரம் 39 % ஆரம்ப சுகாதாரம் நிலையங்கள் ஆய்வக உதவியாளர் இல்லை.
- மேலும் 17.7 சதவித நிலையங்களில் மருந்தாளுனர் இல்லை.
- இது தவிர சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை மேலும் அதிகமாக உள்ளது 59.4% அறுவை சிகிச்சை நிபுணர்களின் பணியிடம் காலியாக உள்லது. 45% மகப்பேறு நிபுணர்களின் பணியிடங்கள், 61.1 % பொது மருத்துவ நிபுணர்களின் பணியிடங்கள், 53.8 % குழந்தை மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
- மொத்தத்தில் சிறப்பு மருத்துவர்களின் மொத்த பணியிடங்களில் 70.2% சதம் காலியாக உள்ளது
- சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் தான் அதிகம் காலியிடம் உள்ளது
- சிறப்பு மருத்துவ படிப்பிற்கான இடங்களை அதிகப்படுத்துவன் மூலம்
- தேர்வாணையங்கள் மூலம் தேர்வு நடத்தினால், அந்த இடங்களுக்கு ஆட்களை நிரப்பலாம்.
- ஆதாரமில்லாத பொய் குற்றச்சாட்டு. தேர்வாணையத்தின் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு வேலை அளித்தால் அவர்கள் வேலையில் சேர தயாராகவே உள்ளனர்
- நகர மக்களுக்கு வைத்தியம் பார்க்க ஆறு வருடம் படிக்க வேண்டும்
- ஆடு மாடுகளுக்கு வைத்தியம் பார்க்க ஐந்து வருடம்
- கிராம மக்களுக்கு என்றால் மூன்று வருடம் போதுமா
நகரத்தில் செவிலியர் வேலைக்கும் தேவைப்படும் நான்கு வருட படிப்பை விட கிராமத்தில் டாக்டர் வேலைக்கு குறைந்த படிப்பு போதுமென்று கூறுவது எவ்வளவு பெரிய அக்கிரமம்
கிராமங்களில் காலியிடங்கள் உள்ளனவே ? அதை நீங்கள் மறுக்கிறீர்களா
காலியிடங்களின் எண்ணிக்கையை மறுபடியும் பார்த்தீர்களா !! கிராமங்களில் மருத்துவர் காலியிடங்களை விட மருந்தாளுனர் மற்றும் ஆய்வக உதவியாளர் காலியிடங்கள் அதிகம் உள்ளனவே. மருத்துவத்துறை மட்டுமல்ல, எந்த துறை என்றாலும், அது பள்ளிக்கூடமாகட்டும், வருவாய்த்துறையாகட்டும், தொலைபேசி துறை, அஞ்சல் துறை, வங்கிகள் என்று எந்த துறை என்றாலும் எந்த பணியிடம் என்றாலும், நகரங்களை விட கிராமங்களில் காலியிடங்கள் அதிகமாகவே உள்ளன.
இந்த ஒரு காரணத்தை (காலியிடம்) வைத்து
- நகர டாக்டர் : கிராம டாக்டர்
- நகர பொறியாளர் : கிராம பொறியாளர்
- நகர வங்கி ஊழியர் : கிராம வங்கி ஊழியர்
மருத்துவர்கள் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்வதாக குற்றச்சாட்டு உள்ளதே
மருத்துவர்களில் சிலர் வெளிநாடு செல்வது உண்மைதான். ஆனால் படித்து முடிப்பவர்களில் வெளிநாடு செல்பவர்களில் சதவிதம் மிக மிக குறைவு. சொல்லப்போனால் வெளிநாடு செல்லும் செவிலியர்களின் சதவீதத்தை விட வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் சதவீதம் குறைவுதான். சந்தேகம் இருந்தால் சம்மந்தப்பட்ட துறையில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் நீங்களே கேட்டு தெளிவு பெறலாம்.
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய மருத்துவர்கள் உள்ளனர். செவிலியர்கள் இல்லை . ஆதாரம் : http://www.hindu.com/2010/02/22/stories/2010022255590700.htm
அடிப்படை சுகாதாரம், குடும்ப நலன், சிறுநோய் வைத்தியம் ஆகியவற்றை செய்ய மருத்துவ இளங்கலை MBBS படித்த மருத்துவர் தேவையில்லை என்பதால் தான் இந்த கிராமப்புற மருத்துவர் திட்டம் என்கிறார்களே
அடிப்படை சுகாதாரம், குடும்ப நலன், சிறுநோய் வைத்தியம் ஆகியவற்றை செய்ய மருத்துவ இளங்கலை MBBS படித்த மருத்துவர் தேவையில்லை என்பது சரியான கருத்து தான். அதற்கு கிராம சுகாதார செவிலியர்கள் / செவிலியர்களே போதுமானது.
அதாவது ஏற்கனவே பணியில் இருக்கும் கிராம சுகாதார செவிலியர்களே போதுமானது. அப்படி இருக்க ஏன் புதிதாக ஒரு படிப்பு என்பது தான் இங்கு பிரச்சனையே
இங்கு 9 மாதம் முதல் ஒரு வருடம் வரை படித்த செவிலிய உதவியாளர்கள் பலர் இருக்கிறார்கள். 18 மாதம் படித்த துனை செவிலிய மாதுகள், 18 மாதம் படித்த கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளனர். நான்கு வருடம் BSc Nursing படித்த ஏகப்பட்ட nurseகள் இருக்கிறார்கள். அவர்களை பணியில் அமர்த்தலாமே
ஏன் புது படிப்பு என்ற கேள்விக்கு யாரிடமாவது விடை உள்ளதா
நகர மக்களுக்கு முழு டாக்டர் கிராம மக்களுக்கு அரை டாக்டர் என்ற மாற்றந்தாய் திட்டத்தை வரவேற்பவர்களுக்கு கிராம மக்கள் மேல் என்ன விரோதம் என்று தெரியவில்லை
கிராம மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது
- இது புதிய படிப்பு மட்டும் அல்ல
- இது பாதி படிப்பு
கிராமப்புறங்களில் மின் விநியோகத்தை செயல்படுத்த ஒரு வருடம் படித்த பொறியாளர் போது என்றால் உங்கள் கருத்து என்ன
இன்றைய தேதியில் கிராமங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை. அங்கு மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
- அதிகம் மருத்துவக்கல்லூரிகளை உருவாக்க வேண்டும்
- இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் MBBS இடங்களை உருவாக்க வேண்டும்
புதிதாக அரைவேற்காடு மருத்துவர்களை உருவாக்க ஆகும் பணம் தானே இங்கும் ஆகும். சொல்லப்போனால் அதை விட குறைவாகத்தான் ஆகும். அல்லது ஏற்கனவே இருக்கும் படிப்புகளான செவிலிய உதவியாளர், துனை செவிலிய மாது, கிராம சுகாதார செவிலியர், செவிலியர் ஆகிய படிப்புகளின் இடங்களை அதிகரிக்கலாம்.
நீங்கள் ஒரு தொழிற்சாலையில் தினமும் 100 வண்ன தொலைக்காட்சியும் 100 வானொலிகளும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை 200 வண்ண தொலைகாட்சிகளுடன் 100 வானொலிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற ஆகும் செலவு (100 வண்ண தொலைகாட்சிகளுடன் 200 வானொலிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற ஆகும் செலவு) அதிகமா, அல்லது 100 தொலைகாட்சிகள் மற்றும் 100 வானொலிகளுடன் மேலும் 100 கருப்பு வெள்ளை தொலைகாட்சிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற உள்கட்டமைப்பு வசதிகள அமைக்க ஆகும் செலவு அதிகமா
அது தான் பொறியியல் துறையில் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் எல்லாம் உள்ளனவே. பிறகு மருத்துவத்துறையில் மட்டும் மூன்று வருடம் என்றால் ஏன் எதிர்ப்பு
நல்ல கேள்வி ? ?
நீங்களே நன்றாக பாருங்கள். ஐடிஐயில் படிப்பவர்கள் பெறும் பட்டம் என்ன. கிராமப்புற பொறியாளர் Bachelor of Rural Engineering என்றா பட்டம் அளித்து நகரங்களுக்கு 4 வருடம் படித்த பொறியாளர், கிராமங்களுக்கு பொறியாளர் என்றால் இரண்டு வருடம் போதும் ஏன்றா சொல்கிறார்கள். இது வரை சொல்லவில்லை
ஆனால் இந்த Bachelor of Rural Medicine and Surgery அனுமதிக்கப்பட்டால், அனைத்து துறைகளிலும் (காலியிடங்கள் இருக்கும் அந்த சப்பை காரணத்தை காட்டி) இரு தரங்கள் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது. அனைத்திலும் கிராம மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை தடுக்க முடியாது
இன்று படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் செவிலியர்கள் மருந்தாளுனர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என்று ஏகப்பட்டவர்களை நியமிக்காமல் ஒரு புது படிப்பு - அதிலும் இவர்களை விட தகுதி குறைவான ஒரு புது படிப்பு - தேவையா
சீனாவில் வெறுங்கால் மருத்துவர்கள் என்ற முறை உள்ளதாமே ??
சீனாவில் Barefoot doctors (chìjiǎo yīshēng) என்ற திட்டம் 1968ல் நடைமுறைப்படுத்தப்பட்டது உண்மை தான். ஆனால் அந்த திட்டம் 1981 நிறுத்தப்பட்டது !!
யார் இந்த வெறுங்கால் மருத்துவர்கள். இவர்கள் எத்தனை வருடம் படித்தார்கள் ?
அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் கல்லூரி சென்று படிக்கவில்லை. விவசாசியகளுக்கு குறைந்த பட்ச மருத்துவ மற்றும் முதலுதவி குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் அடிப்படை சுகாதாரம், மற்றும் குடும்ப நலன் மற்றும் சிறுநோய் சிகிச்சை மட்டுமே அளித்தார்கள்
இந்த திட்டத்தை இங்கு இந்தியாவில் நடைமுறைப்படுத்த ஏன் எதிர்க்கிறீர்கள்
இந்த திட்டம் - இதை விட நல்ல திட்டம் - ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது !! யாரும் எதிர்க்க வில்லை
கிராமங்களில் இருக்கும் அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் இதே பயிற்சி பெற்றவர்கள்தான். சொல்லப்போனால் கிராம சுகாதார செவிலியர்களின் பயிற்சி மற்றூம் பணியானது இந்த வெறுங்கால் மருத்துவர்களை விட் அதிகமானதே
தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் ஆஷா திட்டம் இந்த வெறுங்கால் மருத்துவர்கள் போன்றதே. மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டிகளை பார்கக்வும்
மருந்து அளிக்க (Prescribe செய்ய) மருத்துவர்கள் கட்டாயம் தேவையென்றும் செவிலியர்களுக்கு மருந்தை prescribe செய்ய உரிமையில்லை என்றும் அதனால் தான் இந்த புதிய அரைவேற்காடு படிப்பு ஆரம்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே
முழுப்பொய் !!
மருந்துக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றை ஒழுங்கு படுத்தி வெவ்வேறு பிரிவுகளாக வைத்துள்ளனர்.
- இதில் சில மருந்துக்களை எந்த க்டையிலும் விற்கலாம்.
- சில மருந்துக்களை மருந்து கடையில் மட்டுமே விற்க முடியும்.
- மேலும் சில மருந்துபொருட்கள் மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே விற்க முடியும்.
BRMS படித்த ஒருவர் செய்யும் அனைத்து வேலைகளையும் தற்சமயம் ஏற்கனவே பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்களும், செவிலியர்களும் செய்கிறார்கள் என்றால், பிறகு, தற்சமயம் செவிலியர்களின் படிப்பு காலமான 4 வருடத்தை விடு குறைவான காலத்திற்கு ஒரு புதிய படிப்பு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கம் தான் என்ன
அது தான் திரும்ப திரும்ப கூறிவிட்டோமே. நகரத்தில் இருப்பவர்களுக்கு செவிலியராக இருக்க படிக்கும் அளவை விட குறைவாக படித்தாலே கிராமத்தில் இருப்பவர்களுக்கு டாக்டர் ஆகி விடலாம் என்று கிராம மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த தான்.
இந்த படிப்பு தமிழகத்தில் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்தது ஏன் ?
- தமிழக கிராம மக்களுக்கு, நகர மக்களுக்கு கிடைக்கும் அதே தர மருத்துவ கவனிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக
- தமிழக கிராம மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படக்கூடாது என்பதற்காக
இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
இந்த வலைபதிவிற்கு நேரடியாக (உலாவி மூலம்) வராமல் செய்தியோடை மூலமாகவும் இடுகைகளை தொடர்ந்து வாசிக்கலாம். செய்தியோடையை பெற இங்கு சுட்டவும்
ஒரு சதவிதம் மதிப்பெண் எடுத்தாலே பொது பிரிவில் ஐ.ஐ.டியில் சேரலாம்
கணிதம் : 1 சதவிதம்
பௌதிகம் : 4 சதவிதம்
வேதியியல் : 3 சதவிதம்
அதாவது
பொது வகுப்பில் தேர்ந்தெடுக்கபபட்ட மாணவர்களில், கணக்கில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எடுத்த மதிப்பெண் 1 சதவீதம்
பொது வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில், பௌதிகத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எடுத்த மதிப்பெண் 4 சதவீதம்
பொது வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில், வேதியியல் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எடுத்த மதிப்பெண் 3 சதவீதம்
ஆனால் கணக்கில் 35, பௌதிகத்தில் 40, வேதியியலில் 50 மதிப்பெண்கள் எடுத்தாலும் நீங்கள் தேர்வாவதற்கு உத்திரவாதம் கிடையாது :) :) :) :)
மேலும் விபரங்களுக்கு
பி.கு. :
- “மெரிட்” , அதாவது இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவதாக ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., மற்றும் ஐ.ஐ.டி மாணவர்களால் கூறப்படும் மெரிட் பற்றி கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
- இடப்பங்கீட்டை கடைபிடிக்காமல் அந்த இடங்களை முற்பட்ட வகுப்பினருக்கும் அளிக்க என்ன செய்யப்படுகிறது என்பதை அறிய இந்த மறுமொழியை பார்க்கவும்
- தகவல் அறியும் சட்டம் வந்தபின்னர் ஐ.ஐ.டியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த அறிய இந்த இடுகை மற்றும் மறுமொழிகளை பார்க்கவும்
இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
இந்த வலைபதிவிற்கு நேரடியாக (உலாவி மூலம்) வராமல் செய்தியோடை மூலமாகவும் இடுகைகளை தொடர்ந்து வாசிக்கலாம். செய்தியோடையை பெற இங்கு சுட்டவும்
வழித்தடங்கள் 04 பிப்ரவரி 2010 : தமிழ்மணம் விருதுகள் 2009. நன்றி மற்றும் சில கருத்துக்கள் தெரிவித்தல்
பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் :
இடுகை : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
பரிசு : முதல் பரிசு
பிரிவு : அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் :
இடுகை : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
பரிசு : இரண்டாம் பரிசு
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-oOo-
போட்டியில் வெற்றி பெற்ற கோவி.கண்னன் கூறியதை போல் புதியவர்களுக்கு மேலும் வழிவிட அடுத்த (இந்த) ஆண்டு போட்டி நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
இந்த நேரத்தில் தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு சில ஆலோசனைகள் :
1. நான் முதலில் எதிர்ப்பார்த்தபடியே ஒருவர் இரு பிரிவுகளில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற விதியினால் எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை.
எனவே அந்த விதியை நீக்கிவிட்டு ஒருவர் எத்தனை பிரிவுகளில் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம் என்று மாற்றம் செய்ய வேண்டும்அதே நேரம்
2. ஒரு முறை வெற்றி பெற்ற ஒருவரை மீண்டும் போட்டியிடவிடாமல் தடை செய்வது என்பது சரியா என்பது விவாதத்திற்குரிய கேள்வியே
ஒரு முறை ஒரு பிரிவில் முதல் பரிசு பெற்றவர், அதன் பிறகு அந்த பிரிவில் போட்டியிடுவதற்கு தமிழ்மணம் தடை விதிக்க வேண்டும்மீதியிருக்கும் பிரிவுகளில் போட்டியிடலாம்
இதன் மூலம் சில பிரிவுகளில் சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என்று நினைக்கிறேன்
3. டிசம்பர் மாதம் எழுதப்படும் இடுகைகளை போட்டியில் இணைக்க முடியவதில்லை. ஏன் அந்த மாதம் மேல் ஓரவஞ்சனை :) :)
அடுத்த வருட போட்டிக்கு டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 30, 2010 வரை உள்ள இடுகைகள் தகுதி பெறும் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்-oOo-
- ஆக வடிகட்டிமுடித்த பின்னர் அழுக்குகள், கசடுகள் பன்னாடையில் தங்கி விடும். அதாவது தேவையானவற்றை விட்டு விட்டு தேவையில்லாதவற்றை தக்க வைப்பதே பன்னாடையின் குணம்
- ஆனால் முறம் இதற்கு நேர் எதிர். அது தேவையில்லாதவற்றை விட்டு விட்டு தேவையானதை தக்க வைத்துக்கொள்ளும்
2009 வரை மாத வருமானம் 1999 வரை உள்ளவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாதவருமானம் 2000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பணம் செலுத்த வேண்டும்.
இதனால் நீரிழிவு நோய்க்கு வழங்கப்படும் இன்சுலின் ஊசி பெற வேண்டுமென்றால் வருவாய் துறையினரிடம் சென்று சான்றிதழ் பெற வேண்டும் என்று சில மருத்துவமனைகளில் கூறியதாக தெரிகிறது. அதை விட கொடுமை, யாரையாவது நாய் கடித்து விட்டால் அவரிடம் கூட வருமான சான்றிதழ் பெற்றுக்கொண்டே ஊசி போடுவேன் என்று சில இடங்களில் வலியுறுத்தியுள்ளார்கள்
இந்த விதி மாற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. சந்தேகமிருந்தால் மேலும் விபரங்களுக்கு http://www.tn.gov.in/tamiltngov/policynotes/announcements/health_t.pdf கோப்பினை பார்க்கவும்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாத வருமானம் ரூ.1999-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் வருமான வரம்பின்றி அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
மருத்துவமனைக்கு பின்னால் குப்பை கொட்டி கிடக்கிறது போன்ற புகார்களை பூதகரமாக எழுதுபவர்கள் இது போன்ற நல்ல விஷயங்களுக்கும் சிறு இடம் ஒதுக்கினால் கூட அனைவரும் பயன் பெறுவார்கள்
ஆனால் அப்படி செய்வதில்லை ! தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி பெரிதாக்கி அரசின் நல்ல திட்டங்களை, மக்களுக்கு பயன் பெறும் விஷயங்களை இருட்டடிப்பு செய்கிறார்கள் ! ஏன் ?
நீங்கள் முறமா, பன்னாடையா ?
இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
இந்த வலைபதிவிற்கு நேரடியாக (உலாவி மூலம்) வராமல் செய்தியோடை மூலமாகவும் இடுகைகளை தொடர்ந்து வாசிக்கலாம். செய்தியோடையை பெற இங்கு சுட்டவும்




